Sunday, January 29, 2012

இருப்பே முதுமையில் சுமை!!
============================
இருப்போரில் இருவரில் இங்கே ஒருவர்
இருப்போ மறைந்துவிட்டால் ஏக்கம் வதைக்க
இருப்பவர் வாழ்க்கையே கேள்விக் குறியாகி
இருப்பே சுமையாகும் பார்.
==========================================

நெஞ்சு பொறுக்குதில்லையே!
=========================================

இலங்கைத் தமிழரைக் கொன்றால் மறப்போம்!
இலங்கைக் கடற்படைச் சுட்டால் மறப்போம்!
உலகக் கிரிக்கெட்டில் தோற்றால் கொதிப்போம்!
நிலைகெட்ட மாந்தரைப் பார்.
==============================================

கவிதைச் சரம்

இருப்பே முதுமையில் இமை! ================================ 
அருகில் இருக்கின்றாய் என்ற உணர்வும் இருப்பின் மகிழ்வில் திளைக்கும் மனமும் தருவாய்த் தழைத்துவந்த இல்லற மாண்பின் அருமை உயிர்நாடி பார். ================================================ இதுதான் திருப்தி! ================= 
முயற்சிகள் வேண்டும்! முயன்றதெல்லாம் இந்த 
உலகில் கிடைக்கவேண்டும் என்றெண்ண வேண்டாம்! 
வரவுகள் வந்தால் கிடைத்ததை வைத்தே திருப்தியுடன் வாழ்தல் சிறப்பு. ================================================= இயற்கை அழகு! ================= 
இயற்கை அழகை மெருகூட்டிப் பார்க்க செயற்கை நிறப்பொருளைப் பூசுகின்றார் நாளும்! 
செயற்கை அழகோ அழகல்ல! உன்றன் இயற்கை அழகே அழகு. =====================================================

இந்திய விடுதலையின் ஆயுதம்!
=================================
அகிம்சையை ஆயுதமாய் ஏந்தினார் காந்தி!
வெடிகுண்டுக்கில்லாத வலிமையைப் பார்த்து
நடுங்கியதே ஆங்கிலேய ஆதிக்க ஆட்சி!
விடுதலை பெற்றோம் விரைந்து.
==============================================
காந்தியே ஆவியாக வா!
============================
பண்பற்றப் போக்கில் தலைவர்கள் இங்குண்டு!
பண்பட்ட உன்னைப்போல் இங்கே வழிகாட்ட
இந்தியாவில் தேடுகின்றோம்! காந்தியே!ஆவியாக
வந்தேனும் காப்பாயா நீ?
================================================
நாங்களும் இப்படித்தான்!
=========================
காந்தி அவர்களே! நீங்கள் மறைந்தநாள்
ஆண்டுதோறும் அங்கங்கே அஞ்சலிக் கூட்டங்கள்!
வேண்டி முடித்ததும் உங்களைப் பார்க்காமல்
தாண்டியே செல்வோம் நிதம்.
=============================================

கால்களின் சிரிப்பு!

===========================
கால்களைச் சங்கிலியால் கட்டிப் பிணைத்துவிட்டு
நாலுகால் பாய்ச்சலில் ஓடும் குதிரைபோல்
காலெடுத்தே ஓடென்றால் என்செய்வோம்? என்சொல்ல?
கால்கள் சிரிப்பதைப் பார்.

Saturday, January 28, 2012

சொந்தமே சொர்க்கம்!
==========================
சொந்தத்தை நாளும் பகைத்தால் பகையொன்றே
சொந்தமாக மாறும்! பகையைப் பகைத்துவிடு!
சொந்தமோ சொர்க்கமாய் மாறித் துணையாகும்!
நிம்மதியும் சொந்தமாகும் இங்கு.
==================================================

Tuesday, January 24, 2012

நூல்களின் பயன்!
=========================
பரிசாக நூல்களை வாங்கிக் கொடுங்கள்
தரிசான மண்ணில் மழைபெய்த தைப்போல்
உளமாசு நீங்கி அறிவொளி கிட்டும்!
வளமாகும் எண்ணங்கள் செழித்து.
==========================================

நாட்டு நடப்பு!
============================
விலகித்தான் நிற்கிறதே இங்கே குடும்பம்!
கலங்கித்தான் நிற்கின்றார் நித்தம் பிரிந்தே!
உலகத்தில் இல்லறத்தில் இப்படி வாழ்ந்தால்
தளமற்றுப் போகும் தவிர்.
=========================================
கடவுளின் தூது!
====================
கடவுள் எதிர்பார்கும் பண்பை வளர்த்துக்
கடமையைச் செய்தேதான் வாழ்வை நடத்து!
கடவுளும் ஏற்பார்! குடும்பமும் போற்றும்!
கடமை! கடவுளின் தூது.
=============================================

Tuesday, January 17, 2012

கறைபடிந்து வாழாதே!
========================
களியாட்டம் போட்டுக் கறைபடிந்த வாழ்வில்
குளிக்கின்ற மாந்தர் குணக்கேடர் ஆவார்!
அளிபோல நாளும் அடிக்கடி மாறும்
தெளிவற்றோர் காண்பார் இருள்.
==========================================

நாடே நகைக்கும்!

=================
மோசடி செய்து நிலத்தை அபகரிக்கும்
நீசத் தனத்தாலே நிம்மதி போய்விடும்!
வேடம் கலைகின்ற நாள்வரும் நேரத்தில்
நாடே நகைத்திருக்கும் பார்.
========================================

நாணம்!
===================
புள்ளென்றேன்! நானோ பறந்திடுவேன் என்றுரைத்தாள்!
தள்ளென்றேன்! தள்ளிநின்றால் வாட்டுவேன் என்றுரைத்தாள்!
எள்ளென்றேன்! சீறிச் சினந்திடுவேன் என்றுரைத்தாள்!
அள்ளென்றேன்! நாணினாள் அங்கு.
============================================================

மறப்பது தீது!
==================
வாய்ப்பே கிடைக்கவில்லை என்றே அலைகின்றார்!
வாய்ப்பைக் கொடுத்ததும் முன்னேறிச் செல்கின்றார்!
வாய்ப்புக் கொடுத்தவரை வாழ்த்தி வணங்கவேண்டாம்!
வாழ்வில் மறப்பது தீது.
===================================================

தரைமீது மீன்!
=================
உளச்சலின் தாக்கம் உருகிய தேகம்!
களைப்புடன் உள்ளத்தில் சோர்வும் தளரும்
நிலைகுலைய வைத்தே மயங்கிடச் செய்யும்!
தரைமீது மீனாவார் சாற்று.
=================================================

தொட்டால் கெடுக்கும்!
====================
கள்ளோ, மதுவோ எதுவெனினும் போதைதந்து
உள்ளத்தைச் சீண்டிவிடும்! தீண்டாதே -- நல்லவரைக்
கெட்டவராய் மாற்றித் தடுமாற வைத்துவிடும்!
தொட்டால் கெடுத்துவிடும்! சொல்.
===================================================

எதுவும் சொந்தமில்லை!
=========================
நாமே நமக்கிங்கே சொந்தமில்லை! ஆனாலும்
நாமோ பொருளனைத்தும் என்சொந்தம் என்றேதான்
வீணாக சண்டையைச் சச்சரவை உண்டாக்கி
ஈனமாக வாழ்கின்றோம் பார்.
=========================================

Saturday, January 14, 2012

இது தீர்வல்ல!
=================
மனஉறவு கொண்டே இணைவதுதான் வாழ்க்கை!
மணமுறிவை ஏற்றுப் பிரிவதல்ல வாழ்க்கை!
மணவாழ்க்கை என்பது சட்டையல்ல மாற்ற!
மனக்குறைக்குத் தீர்வல்ல இஃது.

தொடுவானம்!

=========================
விண்மண் விளிம்பில் தொடுவானம்! நம்முடைய
கண்முண் தெரிந்தாலும் சென்றடையக் கூடுமோ?
என்ன நெருங்கினாலும் இன்னும் வெகுதூரம்
சென்றுவிடும் காட்சியே மெய்.

இதுமட்டும் அறிய முடியவில்லை!
===================================
விண்ணுக்குள் சென்றே நிலவை அடைந்துவிட்டோம்!
மண்ணுக்குள் சென்றும் கடலை அளந்துவிட்டோம்!
விண்மண் இரண்டுக்கும் மத்தியில் நம்வாழ்க்கை
என்னென் றறியவில்லை இங்கு.

இறுதி!
==============
இறுதியான காலகட்டம் இங்கே மனதில்
உறுதியற்ற தன்மை உறுதியாகி நிற்க
அறுதியிட்டுச் சொல்ல முடியாத ஏக்கம்
வெறுமையை ஊன்றியது பார்.

சாக்ரடீஸ்
==================
யுரேக்கா ! என்றேதான் உற்சாகமாய்க் கூவி
கிரேக்கத்தின் விஞ்ஞானியாம் சாக்ரடீஸ் அன்று
தரணியில் சாதித்த சாதனையைச் சொல்ல
தெருவிலே ஓடினார் செப்பு.

Wednesday, January 11, 2012

தேனினும் இனிய மழலை!
=========================
ஙா ஙி ஙீ ஙு என்றே குழந்தை மழழையில்
ஙூ ஙெ ஙை ஙொ என்றும் குழறிச் சிரிப்பதை
ஙோ ஙௌ எனப்பதிலாய்க் கூறித்தான் பெற்றோரும்
அங்கே குழந்தையாவார் பார்.

Tuesday, January 10, 2012

செந்தமிழ் நிலைக்கும்!
========================
கோவேந்தர் சேகரித்த செல்வங்கள் எல்லாமே
வேரேந்தி நிற்காமல் கண்முன் அழிந்துவிடும்!
பாவேந்தர் சேகரித்த செந்தமிழ்ப் பாச்செல்வம்
வேரேந்தி நிற்கும் நிலைத்து.

பொறுமைக்கும் எல்லை உண்டு!
===================================
முல்லைப் பெரியாறைத் தொல்லைப் பெரியாறாய்க்
கல்மன நாயகர்கள் சண்டித் தனம்செய்து
கல்லணை இல்லையென்றே ஆக்க முயல்கின்றார்!
எல்லையுண்டு நம்பொறுமைக்கு இங்கு.

பொறுமைக்கும் எல்லை உண்டு!
===================================
முல்லைப் பெரியாறைத் தொல்லைப் பெரியாறாய்க்
கல்மன நாயகர்கள் சண்டித் தனம்செய்து
கல்லணை இல்லையென்றே ஆக்க முயல்கின்றார்!
எல்லையுண்டு நம்பொறுமைக்கு இங்கு.

பொறுமைக்கும் எல்லை உண்டு!
===================================
முல்லைப் பெரியாறைத் தொல்லைப் பெரியாறாய்க்
கல்மன நாயகர்கள் சண்டித் தனம்செய்து
கல்லணை இல்லையென்றே ஆக்க முயல்கின்றார்!
எல்லையுண்டு நம்பொறுமைக்கு இங்கு.

வர்க்க பேதம்!
=================
நெய்யும் பருப்பும் மணக்கும் சுடுசோறும்
செல்வந்தர் வீட்டுக் குழந்தைக்காம்-- அய்யகோ!
மண்கலந்து ஈமொய்க்கும் மண்சோறு ஏழையின்
அன்புக் குழந்தைக்காம்! ஏன்?

நடிப்பா?
======================
உதடுகள் பேசும்! உறவாடிப் பார்க்கும்!
உடலும் நடித்திருக்கும்! ஆனாலும் உள்ளம்
வறட்சித் தனிமை நெருப்பில் கருகும்!
உறவே நடிப்பா? உரை.

ஊனமான பண்பாடு!
==============================================
ஆண்கள் முடிவளர்த்தும் பெண்கள் தலைமுடியை
வேண்டுமென்றே வெட்டிக் குறைத்தும் தவழவிட்டு
ஏனோ தலைவிரி கோலமாய் வாழ்கின்றார்!
ஊனமான பண்பாட்டைப் பார்.

குடும்பத்தைக் காப்பாற்று!
=========================
வீட்டின் நிலையுணர்ந்து வாழ்கின்ற பிள்ளைகள்
காட்டுகின்ற அக்கறையில் அந்தக் குடும்பமும்
நாற்றைப்போல் நாளும் வளரும் இல்லையேல்
காற்றில் சருகாகும் காண்.

குழவி

குழவி--குழவி!
==================
குழவியை இங்கே உளியாலே கொத்தி
வளப்படுத்தல் போலத்தான் கல்வி உளியால்
குழவியைக் கற்கவைத்து நேர்த்தியாக்கும் ஆசான்
உலகத்தில் சிற்பிதான் சொல்.