Tuesday, May 30, 2023

ஏன்?

 ஏன்?

தாய்தந்தை, இல்லாள், உறவினர், பிள்ளைகள்

தோளுடன் தோள்நின்ற நண்பர்கள் என்றேதான்

வாழ்வில் அனைவரையும் தூக்கி எறிந்துவிடும்

சூழ்நிலைக்கே ஆட்பட்ட தேன்?

மதுரை பாபாராஜ்

கடமை!

 கடமை!


கடமையை விட்டுக் கடவுளைத் தேடிப்

படையெடுத் தோடுதல் பக்திநெறி அல்ல!

கடமையைச் செய்வதே பக்திநெறி யாகும்!

கடமை அனைத்துக்கும் மேல்.


மதுரை பாபாராஜ்


கண்ணீர்த்துளிகள்

 கண்ணீர்த்துளிகள்!


அழவைத்துப் பார்க்கின்ற வக்கிரத்தைச்  செய்வோர்

அழுகின்ற கோலத்தை ஏற்படுத்தும் காலம்!

விழுகின்ற கண்ணீர்த் துளிகளுக் கெல்லாம்

அழவைத்துப் பார்ப்போர் பொறுப்பு.


மதுரை பாபாராஜ்



!

திருந்து

 திருந்து!


குடும்பத்தைச் சீரழித்துப் பார்க்கின்ற மாந்தர்

குடும்பமே சீரழிந்து போகும்! உணர்ந்தே

திருந்துதல் நன்று! திருந்தவில்லை என்றால்

வருந்திநிற்க வைத்திருக்கும் வாழ்வு.


மதுரை பாபாராஜ்


Sunday, May 28, 2023

மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்


மருமகள், சம்பந்தி அம்மா, மகள்கள்

இருவருடன் இல்லாள் வசந்தா ஐவராக

அருள்நாடி காமாட்சி அம்மன் கோயில்

பெருமையைக்  கூறுகின்ற கோபுரத்தின் முன்னே

அருமையாய் நின்றே ஒளிப்படம் ஏற்றார்!

அருளாசி பெற்றவரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

மணநாள் வாழ்த்துகள்








நல்வாய்ப்பை நல்கிய வாழ்க்கைக்கு நன்றி!


இன்று எங்கள் மணநாள்!


29.05.2075 -- 29.05.2023. 48


இல்லறத்தில் நாற்பத்தெட் டாண்டு நிறைவுசெய்து

உள்ளத்தால் ஒன்றிக் கடமைகள் செய்கின்றோம்!

நல்வாய்ப்பைத் தந்திருக்கும் வாழ்க்கையை எண்ணித்தான்

நன்றி நவில்கின்றோம் இன்று.


மதுரை பாபாராஜ்

வசந்தா


அன்புள்ள ஐயா,

இல்லற வாழ்வின்

48ஆண்டுவிழா கொண்டாடும் தங்களுக்கும்

தங்களுடைய துணைவியாருக்கும்வாழ்த்துக்கள்

வாழ்க பல்லாண்டு

ஐயா ராமு ஆயங்குடி

புரட்டிப் பார்த்தேன் 

சில கவிதைகள் படித்துப் பார்த்தேன் 

உங்களைப் பற்றிய கவிதை அம்மா 1975-ல் எழுதியது மிகச் சிறப்பாக இருக்கிறது 

தியாக உள்ளம்

ஈரம் நிறைந்த இதயத்தில் இருந்து வரும் இனிமையான ஆழமான எளிய சொற்கள்

வாழ்க வளமுடன் !வாழ்க பல்லாண்டு !!வாழ்க நிறைவுடன்!!!

வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம்

மலர் -சி இரா

(காலம் தான் எத்தனை விரைவாக உருண்டு ஓடுகிறது)


Good morning 

Read last late night fully 

Very nice 

Please convey my best wishes 

Wishing you both many more happy returns of the day 

💐💐💐

Bala

💐💐💐💐💐💐💐💐💐💐
உண்மை நெறியில் நின்று
          ஊர்போற்றும் இணையராய்
மண்ணில் வாழும் காலம்
          மதியூக செல்வந்தராய்
விண்ணவரெலாம் எதிர்கொளும்
         ஏற்றமிகு நல்விருந்தினராய்
வெண்ணிலவு போல வெள்ளை
     உளத்தோடு வாழ்வாங்கு வாழும்
          
திரு மதுரை பாபாராஜும் அவரது
இணையரும்
திருமண நன்னாளில் இன்று போல் என்றும்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
தமிழ்போல் இளமையுடன்
நோய்நொடியின்றி நீடூழி வாழ்க

அன்புடன் பரிமேலழகன்
29.05.2023
💐💐💐💐💐💐💐💐💐💐

திருமணநாள் நலம்மிகு நல்வாழ்த்துகள். உங்களது தமிழ், திருக்குறள் தொண்டும் உங்களது மனைவியாரின்  தமிழ், இனிமையான இசைக்குரல் தொண்டும் உங்களது மனம், உடல் நலத்திற்கு ஆக்கத்தையும் அமைதியையும் நல்கும். 

இனிய கலை இணையர் நூறாண்டுகாலம் வாழ்க வளத்துடன். 

வாழ்க வள்ளுவம்!

பொ. துரைசாமி

நிலமங்கை துரைசாமி. 

விசாகை.


அருமை ஐயா!

இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!

     ஒத்த கருத்தும், விட்டுக் கொடுக்கும் உணர்வும், தேவையற்றக் கருத்துகளைப் புறக்கணித்து, தேவையான அன்றாட நிகழ்வுகளில் கவனம் வைத்தும், கூடிய அகவையிலும் புன்சிரிப்புடன் பழகுவதும், ஒருவருக்கொருவர் மந்திரமற்றத் தலையணையாகத் தாங்கி நிற்பதும் தான் முழு வெற்றியை அடைய உதவுகின்றது.

       தங்கள் இருவரின் திருமண வாழ்க்கையிலும் இக்கருத்துகள் மிளிர்ந்திலங்கும் என எண்ணுகிறேன். வாழ்க்கையில் 'வெற்றி நமதே!' என வென்று வாழ்க பல்லாண்டு, வளமுடன்!

       வாழ்த்துகள்! வணக்கம்! நன்றி ஐயா!


VOV இராமாநுசன்


மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் பாபாஜி 👏👏👏💐💐💐

அஷ்ரப்


இல்லற வாழ்க்கையின்

       இலக்கணம் அறிந்து

வள்ளுவன் அருளிய

       வழியினில் வாழ்ந்து

நல்லறம் நடத்தும்

       நல்லவர் பாபா 

வாழ்க்கைத்துணை நலம்

       வசந்தா அம்மையார்

இருமனம் கலந்த

       திருமண நாளில்

பாரினில் சிறந்து

       பல்லோர் போற்ற

நலம்பல பெற்று

       வளமுடன் வாழி!

நெஞ்சம் இனிக்க

       நீடு வாழி!


இமயவரம்பன்


பொன் விழாவை நெருங்கும் திவ்ய தம்பதிகளுக்கு இனிய  வாழ்த்துக்கள்.அன்பு வணக்கம்🙏


ஹேமா


Happy wedding Anniversary appa,amma💐💐💐

Gowtham mother


Happy wedding anniversary Anna and akka 🙏🏻🙏🏻🙏🏻

Jain


வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன் நலமுடன்

பாவா&பின்னி

மனோகங்கா


Wish you a happy marriage day. God bless you both with good health and peace of mind.


ஜெயபிரகாஷ்


என் மீது அன்பு கொண்ட இருவருக்கும்

வாழ்த்துக்கள்


பரமசிவன்


Vovirbalakrishnan: 


உள்ளம்  ஒன்றென

ஒன்றியே ,   வரும் தலைமுறைக்கு எடுத்துக் காட்டாக, இல்லறம் எனும் நல்லறம்தனை வாழ்ந்து  காட்டிடும்  பாபாராஜ் -  வசந்தா அம்மையார் தம்பதியரின் இனிய திருமண நாளில் அவர்தம்மை வாழ்த்தி வணங்குவதில் மிக்க பெருமை கொள்கிறோம்...🙏💐

இணையர் இன்றுபோல் என்றும் சகல வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்க ...💐🙏💐🙏💐 பாலு மற்றும் குடும்பத்தார் , கோவை.

 Vovirbalakrishnan: 

இன்று உலக தம்பதியர் தினம் என்பது மேலும் ஓர் சிறப்பு... 💐💐💐🙏

தேஜு சரவணன்

கவிஞர் திரு மதுரைபாபாராஜ் அய்யா திருமதி வசந்தா பாபாராஜ் அம்மா தம்பதியருக்கு இதயம் கனிந்த திருமண நாள் நல்வாழ்த்துகள்.🌷🌷🌷🙏🙏

குடும்ப உறவுகளோடும் நட்புகளோடும் பல்லாண்டு வாழ வணங்கி மகிழ்கிறோம்.🙏🙏💐💐

மொகலீஸ்வரன் இணையர்

Congrats!! 

2 more years for golden jubilee 

God bless you both -

Long live

Venkat Dubai

அருமை பாபா அவர்களே! தங்கள் மணநாள் செய்திகண்டு மட்டில்லா மகிழ்வு கொண்டோம். 

தம்பதியர்கள் இன்று போல் என்றும் பல்லாண்டுகள் இறைவன் இன்னருளால் எல்லாம் வளமும் இனிதே பெற்று வாழ்ந்திட எங்களது இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள் 

(இன்றுதான் தகவல் பார்த்தேன்) 

இன்னவண்ணம், வீதிவிடங்கன்ஆர்.

 

கோனாட்சி

 மதுரை பாபாராஜ்:

செங்கோல் சமன்செய்து சீர்தூக்குங் கோலானால்
நன்றுதான்! இல்லையேல் தீது.

மதுரை பாபாராஜ்

கோனாட்சி  கோணலான ஆட்சியானால் தேளாட்சி!
தேனாட்சி அல்லவென்றே செப்பு.

மதுரை பாபாராஜ்

Friday, May 26, 2023

இன்றைய நிலை!

 என்வாழ்வின் நிலை இன்று!


முள்ளாய் உறுத்தும் நிகழ்வுகளின் பின்னணி

உள்ளத்தைக் கீறிக் கிழித்திருக்க செங்குருதி

வெள்ளமெனப் பாய்ந்தோடு தல்போல் உணர்விலே

செல்லரித்துப் போகின்ற வாழ்வு.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை

உங்களிடம்  திட்டமின்றி அல்லது சின்னதாய்
எந்தவிதத் திட்டமும் இல்லா திருந்தாலோ
உங்கள் செயல்களின் சாதனை மோசமாக
கண்டிப்பாய் பாதிக்கும் பார்.

மதுரை பாபாராஜ்
 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

நல்லோரைப் பார்த்தும் பழகுவதும் வாழ்விலே
நல்வாய்ப்பும் ஆசியுமே! அன்னா ருடன்பேசி
கற்றுத் தெளிதல் அறிவு.

மதுரை பாபாராஜ்
 

பிள்ளையா? தொல்லையா?


 

பிள்ளையா? தொல்லையா?


தவமென்ன செய்தார்? பாவமென்ன செய்தார்?


நேர்மறை முன்னேற்றப் பாதைப் பயணமென்றால்

வாழ்விலே  இத்தகைய பிள்ளைகளைப் பெற்றெடுக்க

மாதவம் செய்திருப்பார் பெற்றோர் எனப்புகழ்வார்

தாரணி மக்கள்தான் சாற்று.


எதிர்மறைப் பாதைப் பயணமென்றால் ஊரார்

மதிக்காமல் இத்தகைய பிள்ளைகளைப் பெற்றோர்

பெறுவதற்கு என்னபாவம் செய்தாரோ என்றே

துடிப்பார்கள் பெற்றோரைப் பார்த்து.


நல்லபிள்ளை என்றால்தான் பெற்றோர் தலைநிமிர்வார்!

கெட்டபிள்ளை என்றாலோ பெற்றோர் தலைகுனிவார்!

பெற்றோர் மகிழ்வதும் பெற்றோர் துவள்வதும்

பிள்ளைகளை் பண்பால் உணர்.


மதுரை பாபாராஜ்


Thursday, May 25, 2023

நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பிய படம்


நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மலைகளின் பின்னணி! அங்கேயோ பச்சை

இலையொன்று காற்றில் தவழும் அழகு!

மலைதொடும் வானில் பறவைகளின் கூட்டம்!

சலசலக்கும் நீரோடும் ஆறு! கரையில்

அழகாக நிற்கும் மரங்களுடன், புல்லால்

பரவிய புல்வெளி! அங்கே பறந்து

களிக்கின்ற வண்ணத்துப் பூச்சியின் காட்சி! அரங்கேற காலை வணக்கத்தை நண்பர்

வழங்கினார் நன்றியுடன் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

அக்கரைப் பச்சை!

 அக்கரைப் பச்சை!

அக்கரை பச்சைதான்! இக்கரை விட்டேதான்

அக்கரைக்குச் சென்று நெருங்கினேன்! முள்புதரில்

சிக்கித் தவித்தேன் வலியில் துடித்திருந்தேன்,!

இக்கரையே மேல்தான் உணர்.


மதுரை பாபாராஜ்


Wednesday, May 24, 2023

கடன்பட்டார் நெஞ்சம்

 கடன்பட்டார் நெஞ்சம்!


விடிந்ததே இன்று பொழுதென்றே எண்ணி

நடைவரை சென்றேன் கடன்காரர் நின்றார்!

படையெடுத்து வந்த அவமானத் தோடு

தலைகுனிந்து நின்றேன்நான் அங்கு..


மதுரை பாபாராஜ்

நண்பர் முரளிக்கு நன்றி


 குளம்பி குடிநீர் இனிப்பு வகைகளுடன் முரளியின் காலை வணக்கம் அருமை! கரங்குவித்தேன் நன்றியுடன் நான். 

மதுரை பாபாராஜ்

Monday, May 22, 2023

திருவள்ளுவர் கழகம்தென்காசி


 

Dustbin diamonds


 

Sunday, May 21, 2023

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


செயல்களோ தாறுமாறாய்த் தோன்றலாம்! ஆனால்
செயலை முடிக்கின்ற நேரம்
அனைத்தும்
குறையின்றி நேர்த்தியாய் இங்கே முடியும்!
தொடர்ச்சியான உங்கள் முயற்சியே வித்து!
பணிகளை என்றும் அமைதியாக செய்வோம்!
பதட்டம் தவிர்த்தல் நலம்.

மதுரை பாபாராஜ்

வடுக்கள்


 

செல்வமும் உணவும்


 

ஆற்றலை நம்பு


 

Saturday, May 20, 2023

பணமும் மனமும்


 

நகரத்தார் பெருமைகள்

 நகரத்தார் பெருமைகள்!


எண்ணற்ற கோயில்கள் இங்கே உருவாக

நன்னெறியில் பாடுபட்டு நாள்தோறும் வாழ்ந்திருக்கும்

பண்பட்ட பன்முக ஆற்றல் படைத்தவர்கள் 

இந்த நகரத்தார் தான்.


தமிழ்மொழி நாளும் வளமாய் வளர

அமைப்புகளை உண்டாக்கி தங்களின் மூச்சாய்த்

தமிழ்த்தொண்டில் ஈடுபட்டுத் தாய்மொழியைக் காக்கும்

இமைகள் நகரத்தார் தான்.


கல்விப் பணியிலே எல்லா தரப்பினர்க்கும்

நல்வாய்ப்பைத் தந்து மகிழ்ந்திருக்கும் நல்லோர்கள்

உள்ள சமுதாயம் இந்த நகரத்தார்

உள்ளத்தில் மாசில்லை வாழ்த்து.


மனிதநேயத் தொண்டிலே முன்னணியில் நின்று

மனங்கனிந்தே ஈடுபடும் நற்புகழைக் கொண்ட

தனவணிகர் பின்னணி கொண்டோர் இவர்கள்!

மனம்மகிழ வாழ்த்தி வணங்கு.


அடக்கம் பணிவுடன் பொங்கும் இரக்கம்

கடமை உணர்வென நற்பண்பு தன்னை

உடமைகளாய் ஆக்கித்தான் வாழ்கின்றார் இங்கு!

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வள்ளுவர் குரல் குடும்பம்


நண்பர் பழனி அவர்களின் வாழ்த்து



 


ஆற்றலே அழகு

 ஆற்றலே அழகு!

நிறங்களில் இல்லை! அழகினில் இல்லை!

சிறப்புகள் எல்லாமே ஆற்றலில் உண்டு!

முறையான ஆற்றலுக்கோ ஈடில்லை வாழ்வில்!

துறைதோறும் ஆற்றலைக் காட்டு.


மதுரை பாபாராஜ்


Friday, May 19, 2023

நண்பர் பழனி


 நண்பர், திருக்குறள் அறிஞர் மதுரை பாபாராஜ், திருக்குறளுக்கு அழகானதொரு ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளார்.

எளிமையும் இனிமையும் மொழியாக்கத்தில் கடைசிவரை கைகோர்த்து செல்கின்றன.

ஒரு உதாரணம்:

"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள"

(குறள்: 1101)

நண்பரின் ஆங்கிலம் மொழியாக்கம்:

Glancing her beauty, hearing her nectar voice,touching her tender frame and smelling her innate fragrance are the five senses blended in this bangle dangling maid.

நண்பருக்கு நமது வாழ்த்துக்களும்

பாராட்டுகளும்.

ந.பழநிதீபன், M.A.,B.L.,

தமிழர் தலைவர்.

நண்பர் பழனி தீபன் அவர்களுக்கு நன்றி:

முகநூலில் நண்பர் பழனி தனது

அகங்குளிர்ந்த பாராட்டை என்மேல் தெளித்தார்!

அகநக நட்பதே நட்பென்று காட்டிச்

சிறந்தவர் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

செல்வி நந்தினிக்குப் பிறந்தநாள்

 செல்வி் S.நந்தினி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத் திருநாள்!18.05.23


விட்டுக் கொடுக்கும் விவேகத்தை நாள்தோறும்

கற்றுக் கொடுக்கும் இல்லறத்தில் நல்லறத்தை

எப்போதும் பின்பற்றி பல்லாண்டு வாழியவே!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறமென்றே ஐயன்

தெளிவாகச் சொல்லியுள்ளார்! வாழ்விலே போற்று!

புவிபோற்ற வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

சரவணா--சித்ரா


 மணநாள் வாழ்த்து!

நாள் 19.05.23

இணையரின் இல்லற அகவை 26

சரவணா--சித்ரா


இல்லறத் தோணியில்  வெற்றிப் பயணத்தில்

நல்லறம் போற்றி இருபத்தி ஆறுதனை

உள்ளம் நிறைவாய்க் கடக்கின்ற நீங்களிங்கே

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்

வசந்தா


அந்தமான் சுற்றுப்பயணம் 2014


 வசந்தா பாபாராஜ் அந்தமான் பயணத்தில்!


அந்தமான் சுற்றுலாக் கப்பலில் உட்கார்ந்து

இந்தமான் துள்ளும் அலைகளை மெய்மறந்தே

என்னமாய் இங்கே ரசிக்கின்றார் ஒன்றித்தான்!

சிந்தனை சிற்பிதான் செப்பு.


மதுரை பாபாராஜ்

Thursday, May 18, 2023

நண்பர் இசக்கிராஜன்


நண்பர் இசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியத்தின் கவிதை!

பத்திலே பார்வை! இருபதிலே ஏற்றந்தான்!

முப்பதில் தோன்றும் முறுக்குதான்! அங்கங்கே

நாற்பதில் எல்லாம் நழுவலே! ஐம்பதில் 

தோன்றும் அசதி! அறுபதிலோ ஆட்டந்தான்!

ஏக்கம் எழுபதிலே! எண்பதில் தூக்கந்தான்!

வாழ்க்கை முடிந்துவிடும் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, May 17, 2023

ஏர்வாடி இராதாகிருஷ்ணன்


ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

அகவைத்திருநாள்:18.05.23

ஏர்வாடி யாரின் தமிழ்த்தொண்டை வாழ்த்துகிறேன்!

தேருலா போல கவிதை உலாநடத்தும்

ஏர்வாடி ராதா கிருஷ்ணன் நலமுடன்

பார்போற்ற வாழ்கபல் லாண்டு


மதுரை பாபாராஜ்

 

தென்காசி திருவள்ளுவர் கழக விழா!


தென்காசி திருவள்ளுவர் கழக விழா!

குற்றாலச் சாரலில் நாளும் குறளமுதம்
நற்றமிழ் ஆய்வாளர் ஆர்வலர் எல்லோரும்
அற்புதமாய் அள்ளித் தருவார்கள் அங்குதான்!
சுற்றமே வாழ்த்தும் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்
 

Monday, May 15, 2023

திங்கள் முதல் ஞாயிறு முடிய

 திங்கள் முதல் ஞாயிறு முடிய!


திங்கள் திருப்பு முனையென்றே வாழ்ந்திருந்தேன்!

செவ்வாய் செழிப்பென்றே எண்ணி மகிழ்ந்திருந்தேன்!

புதனோ புகழ்தரும் என்றேதான் காத்திருந்தேன்!

வியாழன் வியப்பான செய்திவரும் என்றிருந்தேன்!

வெள்ளி வெளிச்சம் தெரியவைக்கும் என்றிருந்தேன்!

சனிகண்டேன்!  ஏழரைச் சனியென்றார் என்னென்பேன்?

ஞாயிறை நம்பென்றார் ! வாரம் முடிந்ததே!

நாள்கள் நகர்ந்தன! துன்பமோ தீரவில்லை!

மதுரை பாபாராஜ்


துன்பம் தொடர்ந்தாலே
       இன்பம் தொடரும்!
இன்பமும் துன்பமும் 
       இருவேறு அல்ல!
இணைகரமாய் இல்வாழ்வில்
       இயல்பான ஒன்றே! 
ஒன்றுக் கொன்று
       என்றும் தொடர்புடைத்து!
இன்பத்தின் அளவுகோல்
       துன்பம்தான் என்று
உணர்ந்தால் என்றும்
       உவகைதான் வாழ்வில்!
இன்பமும் இன்னலும்
       இயல்புதான் என்று
தொடர்ந்து இயங்குவோம்
        தொடரட்டும் திங்கள்!

இமயவரம்பன்




அறநெறி காட்டும் கையேடு!

 


அறநெறி காட்டும் கையேடு!


THIRUKKURAL -- OPERATING MANUAL!


எங்கள் குறளே எங்கள் குரலே

எங்கள் உயிரே எங்கள் ஒளியே


இயங்க வைப்பதும் குறளே குறளே

இயக்கம் தருவதும் குறளே குறளே


நம்பிக்கை தருவது குறளே குறளே

நன்மை தருவது குறளே குறளே


மனிதனை மனிதனாய் மாற்றும் குறளே

மனிதம் தழைக்க உதவும் குறளே


ஒழுக்கப் பண்பை உரைப்பது குறளே

உழவின் பெருமை உணர்த்தும் குறளே


புறத்தின் அழுக்கைப் போக்கும் குளியல்

அகத்தின் அழுக்கை நீக்கும் குறளே


அறநெறி காட்டும் கையேடு குறளே

உலகப் பொதுமுறை குறளே குறளே!


மதுரை பாபாராஜ்

மாறும் தலைமுறை

 மாறும் தலைமுறை!


தாடியுடன் மீசை தலைமீது கூடுபோல

ஆடும் தலைமுடி கைகளால் கோதிவிட்டே

ஆடிபார்க்கும் கோலம்! இளைஞருலா இப்படித்தான்!

மாறும் தலைமுறையைப் பார்.


மதுரை பாபாராஜ்

Sunday, May 14, 2023

C.ரமேஷ்


நண்பர் C.ரமேஷ் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை:

கோடிக் கணக்கான அம்சங்கள் உன்னையோ
தேடிவந்து கீழிழுக்க காத்திருக்கும்! ஆனாலும்
நாடுகின்ற ஒன்றுமட்டும் உன்னை உயர்த்திவிடும்!
சோர்வின்றி நம்பிக்கை கொள்.

மதுரை பாபாராஜ்
 

சஞ்சய் கார்த்திகேயன்



 உபநயனம்!


பூணூல் அணியும் விழா!


நாள்: 10/11.05.23

செல்லப் பேரன் சஞ்சய் கார்த்திகேயன்


பெற்றோர்:

S. கார்த்திகேயன்--K.தேவிகாராணி


தாத்தா பாட்டிமார்:


திரு.V.சந்தானம்

திருமதி S.சாந்தி 


திரு.S.P.கஜராஜ்

திருமதி G.மல்லிகா

வரவேற்பு!

அகங்குளிரப் பார்த்து முகம்மலர பன்னீர்

தெளித்தே வரவேற்றார் நின்று.


விழா!


குளம்பி குளிர்பானம் தேடிவந்தே தந்தார்!

தரமான பல்வகை சிற்றுண்டி ஏற்றோம்!

சிரித்த முகத்துடன் அன்பாய் அளித்தார்!

வயிராற உண்டோம் விருந்து.


மேடையில் நாயகன் சஞ்சய் அமர்ந்திருக்க

தாத்தாக்கள் பாட்டிமார் சுற்றத்தார் சூழ்ந்திருக்க

ஆட்சி புரிந்ததே மங்கள இன்பந்தான்!

காட்சியைக் கண்டோம் ரசித்து.


பூணூல் அணியும் விழாவின் நிகழ்வுகளில்

கானமழை மந்திரமாய் அங்கே பொழிந்திருக்க

நாதசுரம் மற்றும் தவிலிசை மங்களமாய்

தேனிசையாய் உள்ளத்தில் எங்கள் செவிகளில்  

பாய்ந்துவர கேட்டோம் மகிழ்ந்து.


முதல்நாள் நிகழ்வும் மறுநாள் நிகழ்வும்

மகத்தாய் அமைந்தேதான் கூடத்தின் கூட்டம்

அகமலர்ந்தே பேசி மகிழ்ந்தே இருந்தார்!

திசைதோறும் பார்த்தோம் ரசித்து.


மதிய உணவு!

 

வாழை இலையில் இடமின்றி காய்கறிகள்

வாகாக வைத்தேதான் போதுமென்று சொல்லுமட்டும்

மாவிருந்து தந்தார் மனங்குளிர அன்புடனே!

ஆகா! அருமைதான் பார்.


அனைத்துவகை ஏற்பாடும் எந்தக் குறையும்

தினையளவும் இல்லாமல் செய்திருந்த நேர்த்தி

மனதைக் கவர்ந்தது! நன்றியுடன் வாழ்த்து!

அனைவரும் வாழ்கபல் லாண்டு.


வரவேற்பு முதலாய் வழியனுப்பு மட்டும்

விருந்தோம்பல் தென்றலாய் வீச திளைத்தோம்!

கருத்தாய்க் கவனித்தார் அன்பு மிளிர!

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

மாறுமா?

 மாறுமா?

சொந்தவீட்டில் அன்னியர்போல் வந்தேதான் தங்குவதும்

சொந்தக் குழந்தைகளை மூன்றாம் மனிதரைப்போல்

இங்கே அரவணைத்துப் பார்க்கின்ற

தந்தையின்

பண்பற்ற அச்செயலோ காலக் கொடுமைதான்!

இந்தநிலை மாறுவதோ என்று?


மதுரை பாபாராஜ்

தாத்தாவின் தவிப்பு

 தாத்தாவின் தவிப்பு!

பேரன்கள் தங்கள் அறைகளுக்குள்  வாழ்கின்றார்!

ஆர்வமுடன் பார்த்திருப்பார் ஊடகக் காட்சிகளை!

தாத்தாவே கேட்பார் நுழைய முடியாது!

தாத்தாவும் தன்வீட் டறையிலே ஓய்வெடுக்க

பார்ப்பார்! அறைக்குள்ளே பாட்டியோ ஊடகத்தில்

ஆர்வமுடன் காட்சிகளைப் பார்த்திருப்பார்! வீட்டுக்குள்

தாத்தா தவித்திருப்பார் அங்கு.

மதுரை பாபாராஜ்


வக்கிரம் வேண்டாம்

 வக்கிரம் வேண்டாம்!


காலத்தின் எல்லைக்குள் ஆடி அடங்குவதே
ஞாலத்தின் வாழ்க்கை உணர்த்துகின்ற  பாடங்கள்!
கோலத்தை மாற்றுகின்ற வக்கிரங்கள் இல்லாமல்
வாழ்க்கையை வாழ்தல் சிறப்பு.

மதுரை பாபாராஜ்

Saturday, May 13, 2023

மூன்று குறள்கள்

 

முத்தான மூன்று குறள்கள்!

குறள் எண்கள் 67,69,70

அதிகாரம்: 7 மக்கட்பேறு

பெற்றோர் குழந்தைக்குத் தங்கள் கடமைகளைப்

பற்றுடன் செய்யவேண்டும்! வாய்ப்பைப் பயன்படுத்தி

அற்புதமாய் மக்களும் ஆற்றலுடன்  முன்னேறி

பெற்றோர்க்கு நற்பெயரை வாங்கித் தரவேண்டும்!

பெற்ற பொழுதினும் தாயோ மகிழ்வுற

கற்றுத் தெளிந்திங்கே சான்றோராய்

ஆகவேண்டும்!

முத்தான மூன்று குறள்களில் வள்ளுவர்

எப்படிச் சொல்லிவிட்டார் பார்.


மதுரை பாராஜ்




தப்பு

 தப்பு!

நற்பெயர் வாங்கித் தரவேண்டாம்! பெற்றோர்க்கு

கெட்டபெயர் வாங்கித் தருவது நல்லதல்ல!

வெற்றிநடை போட்டிருந்த பெற்றோரை தோல்விநடை

இத்தரணி பார்க்கவைத்தல் தப்பு.


மதுரை பாபாராஜ்

Friday, May 12, 2023

வீடுகளில் காட்சி மாற்றம்!

 வீடுகளில் காட்சி மாற்றம்!


பெற்றோர் குழந்தைகள் உட்கார்ந்து பேசுகின்ற

அற்புதக் காட்சி குறைந்து வருகிறது!

இப்படி மாறவைத்த சூழலுக்கு மாறிவிட்டோம்!

அப்படி வாழ்ந்த தலைமுறையின் ஏக்கங்கள்

முற்றும் சுமையாகிப் போச்சு.

மதுரை பாபாராஜ்


மாற்றம் ஒன்றே மாறாதென்ற

தேற்றம் அறிந்த கவியே!

மாறும் இந்த மாற்றமும்

விரைந்து மாறுவோம் அதனைத் தொடர்ந்து!

இமயவரம்பன்

அமெரிக்க நாட்டில் இருந்து கவிதை அமர்க்களமாய் அனுப்பும் நண்பர் இமயம் 

மனங்குளிர வாழ்கவென்று வாழ்த்து.

மதுரை பாபாராஜ்



 மதுரை பாபாராஜ்

Tuesday, May 09, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!

சிலநேரம் நம்மனம் ஏதோ களைப்பில்
அலைந்திடும்! எண்ணமே தொந்தரவாய் மாறும்!
தெளிவடைய அந்த நிலைநீக்கும் தேவை
உளத்திற்குத் தேவைப் படுமிங்கே! மேலும்
சரியாக எண்ணம் செயல்பட நாமும்
அனுமதிக்க வேண்டும் உணர்.

மதுரை பாபாராஜ்
 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!

முடிவை எடுப்பதிலும் திட்டங்கள் தீட்டும்
துடிப்பிலும் நம்மனம் வேகத்தைக் காட்டும்!
நெறிகாட்டும் நற்பண்பை உள்ளீடு செய்க!
தெளிவான உள்ளீடு செய்தால் நமக்கு
சரியான பாதை தெரியும்! இலக்கை
சரியாக நோக்கிப் பயணிக்க லாம்நாம்!
இலக்கை குறிவைக்க முந்து.

மதுரை பாபாராஜ்
 

Monday, May 08, 2023

மனக்கவலை

 மனக்கவலை!


தலைநிமிர்ந்து வாழ்வோன் அவமானப் பட்டால்

தலைகுனிந்து வாழ்வான்! தளர்ந்தேதான் போவான்!

நிலைகுலைந்து நிற்பான்! மனதில் கவலை

அலைபாயத் தத்தளிப்பான் இங்கு.


மதுரை பாபாராஜ்


Sunday, May 07, 2023

நண்பர் பாலா


மதிப்பிற்குரிய அருண்பிரசாத் அவர்களுக்கு,

வணக்கம்.

இன்றைய இந்து தமிழ் கருத்துப் பேழை பகுதியில் பேட்டி படித்தேன்.ரசித்தேன்.

வாழ்த்துக்கவிதை:

நேர்காணல் சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் 

    

உறைபனி அல்ல நதியோட்டம் என்றே

முறைப்படி செய்த வரலாற்றின் ஆய்வை

நிறைவுடன் தந்த அறிவார்ந்த பேட்டி!

அகங்குளிர பாலாவை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

9003260981

07.05.23


 

Saturday, May 06, 2023

உளைச்சல்

 உளைச்சலே வாழ்க்கை!


திரைப்படக் காட்சி நடைமுறை வாழ்வில்

அரங்கேற்ற மானால் வாழ்க்கையே இங்கே

களர்நிலம் போல வெறிச்சோடிப் போகும்!

உளைச்சலே வாழ்க்கை உணர்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தனின் சொல்லோவியத்திற்குக் கவிதை:

வாழ்வின் மதிப்புகளைப் பாராட்ட கற்கவேண்டும்!
மாசற்ற இந்தநாளில் நாமோ ஒருவர்க் கொருவரை
நேசமுடன் பார்த்து மரியாதை செய்வதற்கு
வேடமற்ற நல்லிணக்கம்  இந்த உலகத்தில்
வேரூன்ற கற்போம் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்
 

பெங்களூரு பயணம்



 பெங்களூரு பயணம்!

அனைவருக்கும் நன்றி!

30.04.23 --- 03/04.05.23

உடன்வந்த குடும்பத்தார்:

மனைவி வசந்தா--மருமகள் சத்யபாமா

பேரன்கள்: நிக்கில் அபிசேக் -- 

வருண் ஆதித்யா

ஓட்டுநர்: திரு சீனிவாசன்


விருந்தோம்பல் அளித்தவர்கள்:

தங்கை ராஜி--

ரம்யா-- நாராயணன்-- திவ்யஸ்ரீ

ஆர்த்தி-- கோவிந்-- 

தியான் சஸ்திக்--மிருதுள்


30.04.23


காலைப் பொழுதில் மகிழுந்தில் பெங்களூரு

நோக்கிப் பயணம் புறப்பட்டோம் நாங்கள்தான்!

போகும் வழியில் மரத்தடியில் கட்டுசாதம்

ஆகாகா ! உண்டு ருசித்தோம் சுவையுடனே!

ஆசையுடன் வந்துவிட்டோம் ஊர்.


30.04.23


தங்கை, கோவிந்தன் ஆர்த்தி இணையரின் இல்லம்!


இட்லியுடன் கட்டுசாதம் எல்லோரும் சாப்பிட்டோம்!

பற்றுடன் அங்கே விருந்தோம்பல் தென்றலை

தங்கை , மகனும் மருமகளும் வீசினர்!

அன்பு மகன்களோ சுற்றியே வந்தனர்!

உள்ளம் ரசித்தது கண்டு.


தியானின் தனித்துவம்!


சாய்பாபா தாத்தா என்றேதான் தேன்மழலை

பாய்ந்துவந்தே என்னை அழைத்திருந்த இன்பத்தில்

நானும் மெய்மறந்தேன்!

பேரன் தியான்வாழ்க! 

பார்போற்ற வாழ்க வளர்ந்து.


நாராயணன் ரம்யா இல்லம்!


இரவிலே தங்கினோம்! மெய்மறந்து பேசி

சிரித்தோம்! குழந்தைகள் ஓடிவிளை யாடிக்

களித்திருந்தார்! கண்டு் ரசித்திருந்தோம்  அங்கு!

தழைத்தது நல்லுறவு தான்.


01.05.23/மைசூரு


குளம்பி அருந்தினோம்! காலை உணவாய்ச்

சுவையான  இட்லியும் சட்னியும் உண்டோம்!

மலைத்தோம் விருந்தோம்பல் கண்டு.


இரண்டு மகிழுந்தில் மைசூரை நோக்கி

நலமுடன் சென்றோம்! கடந்தஊர் பார்த்து!

முதலிலே ஸ்ரீரங்கப் பட்டினத்தைக் கண்டோம்!

உயர்ந்திருந்த கோபுரம் வானத்தைப் பார்த்தே

அழகாய் இருந்தது! பக்தர்கள் பக்தி

மழைபெய்தே நின்றார் மறந்து.

திப்பு சுல்தான் அருங்காட்சியகம்!

திப்பு பயன்படுத்தி போரிட்ட ஆயுதங்கள்

அப்படியே காட்சிப் படுத்தித்தான் வைத்திருந்தார்!

பச்சைப் பசேலென்ற புல்வெளியைப் பார்த்திருந்தோம்!

திப்புவின் வீரத்தை வாழ்த்து.

அங்கிருந்து மைசூர் அரண்மனை பார்ப்பதற்குச்

சென்றோம்! வழியில் மதிய உணவுகளை

கண்ணுங் கருத்துமாய் சாப்பிட்டோம்! நாங்கள்தான்!

அன்பு மிளிரும் உணவு.

மகள் ரம்யாவின் ஆற்றல்!

விடியல் பொழுதில் உறக்கம் கலைத்து

துடிப்புடன் தேங்காய் எலுமிச்சை சாதம்

தயிர்சாதம் வத்தல் வடகத் துவையல்

இனிமைச் சுவையுடன் மாம்பழம்  என்றே

அனைத்தையும் ரம்யா உழைப்புடன் ஆற்றல்

துணையுடன் இந்த வகைகளைச்

செய்தார்!

தனியாளாய்ச் செய்திட்டார்! சாதனையை வாழ்த்து!

மனங்குளிர வாழ்க மகிழ்ந்து.


இரவில் உணவகந் தன்னில் உணவை

அருந்தினோம் அங்கே மகிழ்ந்து.


02.05.23 வருணும் திவ்யாவும்!

விளையாட்டுக் கூடத்தில் டிராம்ப்போலைன் ஆடி

மலைப்புடன் துப்பாக்கி ஏந்தியே சுட்டார்!

சுவரேற்றம் ஏற முயற்சிகள் செய்தார்!

உவகையில் ஆடினர் அங்கு.


காலை உணவாக பூரியுடன் பொங்கலும்

ஆவலாய் உண்ண உருளைக் கிழங்கும்

நாவசைக்கும் சட்னியும் தந்தார் ரசித்துண்டோம்!

காலை அருமை உணவு.


மதியம் ஆர்த்தி வீட்டில்!

சாதமுடன் ஆகா சுவையான சாம்பாரும்

காளிபிளவர் கோசும் ரசமுடன் தயிர்தந்தார்!

ஆர்த்தியின் வீட்டில் அருணா சமையலோ

நேர்த்திதான்! உண்டோம் மகிழ்ந்து.


விஸ்வேஸ்வரையா அறிவியல் கூடம்

நிக்கில் வருண் ஓட்டுநருடன்!


உலக அறிவியல் முன்னேற்றம் கண்டோம்

மலைத்தோம்! பெயரன்கள் அங்கங்கே கண்டு

களித்தார் ஆர்வமுடன் தான்.


மகள் சுபாவின் நட்புத் தோழி வள்ளியின்  வீடு!

வள்ளியின் வீட்டு விருந்தோம்பல்

அன்பிலே

உள்ளம் மகிழத்தான் பேசி சிரித்திருந்தோம்!

வள்ளி மகளும் கணவரும் தந்தையும்

உள்ளம் திறந்து பேசினர் எங்களுடன்!

தெள்ளுதமிழ் போல்வாழ்க இங்கு.


            LIDO MALL ல் 

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் இரண்டைப் பார்த்துவந்தோம்

எல்லோரும் சேர்ந்தே ரசித்து.


03.05.23 ஆர்த்தி கோவிந் வீடு!

காலை உணவாக இட்லியும் சட்னியும்

ஆர்வமுடன் தந்தார் சுவைத்தோம்! பின்னரோ

நண்பகலில் தந்தார் குருமா, உருளைக் கிழங்குடன்

அன்பாக பீன்ஸ் பொரியல் ரசமும் தயிருந்தான்!

அன்பிலே மெய்மறந்தோம் நாம்.


மைத்துனர் ஜோதிக்குமார் நினைவிடம்!

தேடிவந்து பேசி மகிழ்பவர் தன்வாழ்வில்

ஓடி உழைத்துக் கடமைகளைச் செவ்வனே

ஈடற்ற வண்ணம் முடித்துவிட்டார் சென்றுவிட்டார்!

வாட்டுகின்ற ஏக்கமுடன் அந்த நினைவிடத்தைப்

பார்த்து வணங்கினோம் நின்று.


03.05.23/04.05.23

பெங்களூர் விட்டேதான் சென்னை நகர்நோக்கி

தங்குதடை இன்றிப் புறப்பட்டோம் நாங்கள்தான்!

வந்தடைந்தோம் சென்னை! மறுநாள் அதிகாலை!

எங்கள் நினைவில் உறவின் பிரிவுதான்!

அம்மம்மா ஏங்குகின்றோம் இங்கு.


ஓட்டுநர் திரு சீனிவாசன்!

கோபப் படாமல் நிதானமாக வண்டியை

நாசூக்காய் ஓட்டினார்! அன்பான புன்னகை 

வேடமின்றி தங்கித் தவழும் முகத்தில்!

ஈடற்ற நண்பரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்





நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

முயற்சியில் ஈடுபட்டு நாமோ பொறுமைக்
கரையிலே காத்திருக்க கற்கவேண்டும் நாளும்!
விளைவுகளை ஒவ்வோர் அடியிலும் நாமோ
எதிர்பார்த்தல் கூடாது! அந்த விளைவு
சரியான நேரத்தில் வந்துசேரும் நம்பு!
இலக்குகளை நோக்கி நட.

மதுரை பாபாராஜ்
 

Friday, May 05, 2023

ஏசியா நெட் பேட்டி


Mr.Rajkumar( jothi husband)

Good morning Sir. I saw your video just now. It was very interesting and informative. I was very happy to hear the sharings of you and aunty. Only after seeing your video did to come to know about this news channel of Asianet. 👍👍👍

நண்பர்களின் கருத்து:

FENBOSE

இன்று தான் உங்கள் நேர்காணலை கேட்டு மகிழ்ந்தேன். உங்கள் கவிதை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பி்ல் வெளியான படத்தில் இடம் பெற்றது மிக்க மகிழ்ச்சி. எனது வாழ்த்துக்கள். 
உங்கள் நேர்காணலும் சிறப்பாக இருந்தது.

06.05.23

VOV C.ANBU: 

பாட்டனி படித்துவிட்டு,

பாட்டு ,எழுதவந்தேன். அருமையான நேர்காணல் 👌👌👌🙏


Vovbalunatarajan New: 

பாட்டு நீ

என்றதோ

பாட்டனி?

🤔

தேய்பிறையை

பெத்தெடுத்தேன்..."

நெஞ்சை பிழியும் வார்த்தைகள்...

நெஞ்சில் சம்மட்டி அடி...😔

VOV C.ANBU: 

விதியை வெல்லும்

மதியும் ,

மன உறுதியும், இருக்கும்போது இறுதி கவிதைக்கு வேலை இல்லை !

 நீங்கள் சிரிக்கும், சிரிப்பில், இன்பமான கடந்த பாதை தெரிகிறது!

அதை நினைத்து பார்த்து ரசிக்கும் சுகம்,

எங்களுக்கும் புரிகின்றது!

நேருக்கு நேர் கருத்து பறிமாறிக் கொள்வதில் உங்கள் புனிதமான பந்தம் தெரிகின்றது !

 VovMogaleeswarannew: 👏👏👏💐💐

தாவரவியல் படித்தாலும் தாய்த் தமிழின் மீது தனியாக காதலால்

தொடர்ப் பணி

 தமிழ் பணி.

பெருமிதம் கொள்கிறோம் ஐயா.🙏


கவிஞர் பாபாவின் நேர்காணல்!


கார்கால மழைபோல

        நேர்மையான நேர்காணல்!மடைதிறந்த வெள்ளம்போல்

       இடைவெளி ஏதுமின்றி

இனிய நினைவுகளை

       இறுதி ஆசைகளை

இணையருடன் இணைந்து

       இயம்பிட்டார் பொறுப்பாக!

கவிபாட ஊக்குவிக்கும்

       கவிராயர் பன்முகத்தோன்!

அவரிணையர் வசந்தாவோ

       கவிபாடி  பாட்டிசைப்போர்!

மதுரகவி அய்யாபாபாவை

       மதுரமொழி அம்மாவசந்தாவை

நெஞ்சார வாழ்த்துகிறேன்!

       நெஞ்சினிக்க வாழ்த்துகிறேன்!

வாழிய வாழியவே!

       வாழ்க பல்லாண்டு!


கோ.இமயவரம்பன்.

03.05.2023

👏👏 அருமை ஐயா 👌👍. மன நெகிழ்ச்சி அடைந்தேன். இன்னும் இதுபோல் நிறைய காணொளிகள் காண விரும்புகிறேன். 🤝வாழ்த்துக்கள் 🙏

Skycleaning Thiru

 

Labels:

செல்வி திவ்யஸ்ரீ வாழ்க!



 செல்வி திவ்யஸ்ரீ வாழ்க!


பெற்றோர்:

அம்மா: திருமதி N. ரம்யா

அப்பா: திரு. J. நாராயணன்


நாள் : 02.05.23 பெங்களுரு


திவ்யா விரல்களோ வீணை நரம்பின்மேல்

துள்ளி அசைந்தாடி தேனிசையை மீட்டித்தான்

உள்ளத்தைக் கொள்ளைகொள்ள நாங்கள் ரசித்திருந்தோம்!

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


Thursday, May 04, 2023

பொம்மி பேட்டியைக் கேள்



 பேட்டியைக் கேள்!


கார்த்திக் மனைவியோ பேட்டியைக் கேட்டுவிட்டார்!

கார்த்திகேயன் இல்லக் கிழத்தியோ கேட்கவில்லை!

நேரம் ஒதுக்கியே கேட்கவேண்டும் என்றேதான்

ஆர்வமுடன் கேட்கிறேன் நான்.


பாபா நைனா

வசந்தா அம்மா

Labels:

பொருளற்ற வாழ்க்கை

 பொருளற்ற வாழ்க்கை!


நீர்த்தேதான் போகும் நிலைக்கு மனமிங்கே

நாளும் விரக்தி உளைச்சலில் வாடுமானால்

வாழ்க்கை சுமையாகிப் போகும்! பொருளற்ற

வாழ்வென்று தோன்றும் உணர்.


மதுரை பாபாராஜ்


ரம்யா நாராயணன் வீடு. பெங்களூரு



 ரம்யா நாராயணன் வீடு. பெங்களூரு


ரம்யாவின் வீட்டிலே பூத்த மலருடைய

கண்கொள்ளாக் காட்சியைக் கண்டே ரசித்திருந்தோம்!

வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

Wednesday, May 03, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


சிறிதளவு நேர்மறை கொண்ட குறிப்பும்
கவனத்தை ஈர்க்கும்! மகிழ்ந்திடுவோம்! வாழ்வில்
பெரிதளவு தாக்கத்தை உண்டாக்கும் நாளும்!
வழியாக மாறவேண்டும் நாம்.

மதுரை பாபாராஜ்
 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

முயற்சி அனைத்துமே சாதனையின் வித்து!
அளவில் சிறிதோ பெரிதோ
நிகர்தான்!
களத்திலே முக்கிய மானதோ அந்த
முயற்சியைச் செய்யும் அணுகுமுறை ஒன்றே!
முயற்சியே வெற்றி தரும்.

மதுரை பாபாராஜ்
 

நநண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்கு மொழியாக்கம்!

நிம்மதியை எல்லோரும் இங்கே விரும்புகின்றார்!
நிம்மதிக்கு மாந்தரே காரணம் என்பதை
இங்கே தவறவிட்டு வாழ்கின்றார்?
தன்னுள்ளே
நிம்மதியைத் தேடுவதை விட்டுவிட்டு மாந்தர்கள்
தன்னுள்ளே தேடினால் நல்லது!
இப்படித்
தங்களை மாற்றினால் இந்த உலகமே
நிம்மதியாய் வாழும் உணர்.

மதுரை பாபாராஜ்
 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

உன்னையிங்கே சுற்றியுள்ள ஒவ்வொரு  மாந்தரை
ஒவ்வொன்றை அங்கீ கரிக்க
முடியுமானால்
இன்பமான இவ்வுலகம் உன்னுடைய தாய்விடும்!
ஒன்றுகின்ற பண்புடன் வாழ்.

மதுரை பாபாராஜ்