Tuesday, March 31, 2020

நிக்கில் நண்பன் மோகித் அனுப்பிய படம்

நீருக் கடியிலே உள்ளங்கை வைத்தேதான்
மீன்களைத் துள்ளியாட வைக்கின்ற காட்சியுடன்
தேமதுரக் காலை வணக்கத்தைத் தூதுவிட்ட
கோலத்தை நன்றியுடன் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

கிடைப்பது வாய்ப்பு அவ்வளவே!

எவரையும் நம்பி இயக்கங்கள் இல்லை!
இவரில்லை என்றால் அவர்வருவார் இங்கே!
அவரில்லை என்றானால் வேறொருவர் வந்தே
இவரையும் அந்த அவரையும் விஞ்சி
புவியிலே சாதிப்பார் பார்.

மதுரை பாபாராஜ்

சுங்க அலுவலர் திருக்குறள் ஆர்வலர்
திரு.உன்னி கிருஷ்ணன் அவர்களுக்கு
வாழ்த்துப்பா!

உன்னி கிருஷ்ணன் பிறப்பால் மலையாளி!
செந்தமிழ்க் கோவை நகரில் பிறந்தவர்!
கண்போல் கருதிப் படித்தார் தமிழ்வழியில்!
தன்மொழி யான மலையாளம் நன்கறிவார்!
பன்மொழி ஆற்றலை வாழ்த்து!

சுங்கத் துறையில் பணிசெய்து கொண்டேதான்
அஞ்சல் வழியிலே பட்டப் படிப்புதனை
நன்கு நிறைவுசெய்தார்! சுங்க அலுவலகம்
தந்த கணினித் துறையில் பணிக்களம்!
நண்பரின் சாதனை முத்திரைக்குச் சான்றாக
இந்திய நாட்டின் ஜனாதிபதி சான்றிதழைத்
தந்தது வாழ்நாள் பெருமை மகுடமென்றே
எண்ணுகின்றார் உன்னி கிருஷ்ணன் நெகிழ்ந்தேதான்!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

வள்ளுவர் கூட்டுக் குடும்ப நெறியாளர்
வல்லவர் ராசேந்திரனார் நண்பர்! அசோகனுடன்
சுங்க முரசிதழைச் சேர்ந்து நடத்தியவர்!
பண்பட்ட கட்டுரை தந்த எழுத்தாளர்!
நம்குழுவில் சேர்ந்த திருக்குறள் ஆர்வலர்!
பண்பாளர் ஆற்றலை  வாழ்த்து.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் குறள்தான்
மனதைக் கவர்ந்த குறளாகும்! இந்தக்
குறளைத்தான் மின்னஞ்சல் தன்பெயரின் கீழே
சிறப்பாக வைத்துள்ளார் வாழ்த்து.

இல்லறத்தில் நல்லறத்தைப் போற்றும் மனைவியும்
நல்ல பொறியாளர் பட்டத்தை வென்றேதான்
தேர்ந்து தனியார் நிறுவனத்தில் சேர்ந்துள்ள
ஆர்வமிகு மைந்தனும் மங்கலமாய் வாழ்கின்றார்!
நல்லதோர் நற்குடும்பம்  பல்கலைக் கூடமாகும்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்

உன்னிகிருஷ்ணன்..

பின்புலத்தில் இருந்து செயலாற்றுபவர்...

தமிழின் மாண்பு போற்றி குறள் நெறியில் வாழ்பவர்..

நலம் விளைக... நலமே விளைக

சி ராஜேந்திரன்
மிக்க நன்றி ஐயா!

இது, ஒரு விதமான இன்ப அதிர்ச்சி!

"நானே நானோ யாரோ தானோ..."

என்னைப் பற்றி எழுதியதை, நானே படித்தல் என்பதை, தன்னை அறிவதற்கான ஒரு மாற்று வழி என்றே எண்ணுகிறேன்.

எனக்கு எழுத்து அறிவித்த்வர்களுக்கும், என் எழுத்தை அரங்கேற்றியவர்களுக்கும், என்னை அறிமுகப்படுத்தி வாழ்த்துப்பா பாடிய உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏🏻
உன்னி கிருஷ்ணன்








கொரோனாவை வீழ்த்தலாம் நாம்!

எங்கும் கொரோனா! எதிலும் கொரோனா!

தொலைக்காட்சி பார்த்தால் கொரோனா! கொரோனா!
புலனம் முகநூல் வலைதளம் எல்லாம்
கொரோனா குறித்தே அலசல்! அலசல்!
ஒரே அலசல் மயம்.

நாட்டு மருந்துகள்! வீட்டு மருந்துகள்!
பாட்டிகளின் பேட்டிகள்! என்ன விளையாட்டு
லூட்டி அடிக்கும் குழந்தை களுக்கென்று
பேட்டி! செயல்முறை! என்றே கொரோனாவைக்
கட்டுப் படுத்துகின்ற உத்தி!

ஊரடங்கு! வீடடங்கு! என்றே அரசுகள்
வீதிக்கு வந்தேதான் சொன்னாலும் கேட்காமல்
வீதிவீதியாய்ச் சுற்றுகின்ற மக்களின் வீதியுலா!
தேடிவந்து காவலர் கும்பிட்டே கேட்கின்றார்!
ஆடித்தான் போனோம் இக்காட்சி கண்டேதான்!
சாடு கொரோனாவைத் தான்.

உள்நாட்டு வைத்தியர் முதல் மருத்துவர்
தெள்ளத் தெளிவாய் கொரோனா விளக்கத்தை
அள்ளித் தெளிக்கும் தொலைக்காட்சி காட்சிகள்!
மக்கள் தொலைப்பேசி மூலமாக சந்தேகம்
என்றால் உடனே விளக்கம் தருகின்றார்!
தன்னல மற்றநல்ல தொண்டு.

கொரோனா வாட்டாமல் போவதற்கு பாட்டு!
அரங்கேற்றம் கண்ட நடனங்கள்! டிக்டாக்
சரவெடிகள் மக்களின் பங்களிப்பைக் கண்டோம்!
கொரோனா போய்விடும் நம்பு

தனிமைப் படுத்தல்! மருந்து தெளிப்பு!
கனிவான வேண்டுகோள்! கண்டிக்கும் ஆணை!
மனிதர்கள் தொண்டு,! மருத்துவர் தொண்டு!
செவிலியர் தொண்டு! அலுவலர் தொண்டு!
விழிப்பது எப்போ? தூங்குதல் எப்போ?
அலைந்தலைந்து துப்புரவு செய்வோரின்
தொண்டு!
பலரும் இழுக்கின்றார் தேர்.

அரசுடன் மக்களும் ஒத்துழைக்க வேண்டும்!
வருமுன்னே காத்தல் விவேகம் ஆகும்!
தருகின்ற எச்சரிக்கை பின்பற்றி வாழ்ந்தால்
கொரோனாவை வீழ்த்தலாம் நாம்.

மதுரை பாபாராஜ்
31.03.2020





உழை!

யாராண்டால் என்ன? எவர்வந்தால்  என்னாகும்?
நாம்வாழ நாமுழைக்க வேண்டும்! உணர்ந்துகொள்!
தேர்கள் நகராது! நாமிழுக்கப் போகவேண்டும்!
வாழ்வை இழுக்க உழை.

மதுரை பாபாராஜ்

திருக்குறள் ஆர்வலர் தனபால் அவர்களுக்கு வாழ்த்துப்பா!


நாமக்கல் ராசிபுரம் தந்த தனபால்
மாணவராய்ப் பட்டம் வனவியலில் சாதித்தார்!
காலம் குஜராத் பணிக்களத்தைக் காட்டியது!
ஆர்வமுடன் தன்கடமை நாளும் நிறைவேற்றி
வாழ்கின்றார் எல்லைக்குள் தான்.

மாவட்ட வனக்காப்பை ஏற்றார் மனமுவந்து!
போர்பந்தர் ஜாம்நகர் மற்றும் துவாரகா
தேவபூமி மாவட்ட எல்லை பசுமைமயம்
ஆக்கும் பொறுப்பையோ செவ்வனே மேற்கொள்ளும்
ஆக்கபூர்வ தொண்டில் தனபால் பரபரப்பாய்
ஊக்கமுடன் அங்கே உழைக்கின்றார் நாள்தோறும்!
ஆற்றல் தனபாலை வாழ்த்து.

அண்ணல் மகாத்மா காந்தி தடம்பதித்த
மண்ணில் பொறுப்பை நிறைவேற்றும் வாய்ப்பினை
இந்தப் பிறவியில் பெற்றவரை வாழ்த்துவோம்!
நம்குழுவின் ஆர்வலரை வாழ்த்து.

வள்ளுவர் கூட்டுக் குடும்பத்தில் தன்கருத்தைச்
சொல்கின்ற  நண்பர்! குறள்களின் ஆர்வலர்!
இல்லறத்தில் நல்லறத்தைப் போற்றும் குடும்பமுடன்
பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

தனபால்.. நேசிப்பது , சுவாசிப்பது வனப்பணி. தனபால் ஓர் உண்மையான உணர்வுள்ள அதிகாரி..

மேற்கொண்டிருக்கும் பணியை திறம்படச் செய்பவர்..

வாழ்க, வளர்க

சி.ராஜேந்திரன்
குறள்நெறிக் குரிசில்











Monday, March 30, 2020

ஆதம்பாக்கம் அரசுச் செயலகம் குடியிருப்பு!

இன்னிசை பாடும் பறவைகள்!

எங்களின்  தூக்கம் கலைவதே பூங்காவில்
அங்கங்கே உள்ள பறவைகளின் இன்னிசை
தங்கு தடையின்றி வந்துவந்து மோதுகின்ற
இன்பத்தில்தான்! வெவ்வேறு பண்ணமைத்தே வெவ்வேறு
இன்னிசை ஓசைகளைக் காற்றிலே தூதுவிட
எங்கள் செவிகளைத் தொட்டே உசுப்பிடும்!
எங்களது வீட்டுக்குப் பின்னால் அமைந்திருக்கும்
கண்கவரும் பூங்காவே புள்ளினத்தின்
தங்குமடம்!
சந்தயிசை கேட்போம் சிலிர்த்து.

மதுரை பாபாராஜ்

கொரோனா பரவலைத் தவிர்ப்போம்!

சமூக விலகலை ஏற்க மறுத்தால்
சமூகப் பரவல் தவிர்த்தல் அரிது! கொரோனா பரவாமல் வாழ்வதற்கு நாமோ
விலகிநிற்க வேண்டும் உணர்.

மதுரை பாபாராஜ்

பன்முக ஆற்றல் நாயகன் அசோகன்( எ) கவிவளவன்
அவர்களுக்கு வாழ்த்துப்பா!

திருவாரூர் மாவட்டப் பின்னணி கொண்டே
அருந்தமிழ் ஆற்றலில் முத்தமிழ் ஆற்றல்
பெருகிட வாழ்பவர்! நன்கு பழகும்
பெருந்தன்மை கொண்டே, அடக்கம் பணிவின்
இருப்பிடமாய் வாழ்பவரை வாழ்த்து.

பட்டங்கள் பலவென்றார்! சுங்கத் துறையில்
நித்தம் பணியாற்றி ஆற்றல் அலுவலராய்
சுங்க முரசுதனைக் கையெழுத்து ஏடாக்கி
தங்கத்  தமிழுக்குப் பங்களிப்பைச் செய்தவர்!
வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


பாவலர் நாவலர் மற்றும் கலைப்படைப்பில்
ஆவல் மிகுந்தவர்! எண்ணற்ற நூல்களை
ஆர்வமுடன்  இங்கே படைத்தவர்! சந்தகவி
ஆர்க்கும் கவிஞரை வாழ்த்து.

எழுத்துக் களத்தின் இணைய தளத்தில்
அருமைத் தமிழ்நூல்கள் காணலாம்,! மின்நூல்
அருமையாய் ஆக்கும் திறனுக்கு வாழ்த்து!
பெருமையுடன் தந்தையைப் போற்றிக் கவிதை
வரிகள் படைத்தவர் பெற்றோரின் ஆசி
நிழலிலே வாழ்பவரை வாழ்த்து.

ஆரூர் அசோகன்! தமிழைத் துறக்காத
பாவூர் அசோகன்! கவிவளவன் ஆகிவிட்டார்!
நாவூரில் பாவூரைக் கொண்டாடும் பாவலர்!
நாமணக்க வாழ்த்துவோம் சூழ்ந்து.

வள்ளுவர் கூட்டுக் குடும்பத்தில் சந்தங்கள்
துள்ளக் கவிதரும் பாவலரை வாழ்த்து!
இல்லறத்தில் நல்லறத்தைப் பின்பற்றும்
பண்பாளர்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்


அசோகன் இலக்கியம், கவிதை, சுங்கமுரசு, சுங்க இல்லம் என்று பல தளங்களில் இயங்கி வருகிறார்..

சுங்க இல்லத்தில் , தமிழ் முழக்கம் கேட்பதற்கு இவரும், உன்னிகிருஷ்ணன் காரண கர்த்தாக்கள்...

இலக்கியம் படிப்பவர்களுக்கு இதயம் தூய்மை என்பதற்கு இவரும் ஒரு சான்று...

வாழ்க.. வளர்க..

சி.ராஜேந்திரன்















நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

கிளியே! கிளியே!
நுனியில் அமர்ந்து
கவன மாக
கிளையைப் பிடித்து
மழலை மொழியில் வணக்கத்தைச் சொல்ல
அனுப்பிய சேகரின்
அன்பில் மகிழ்ந்தேன்!
திரும்பியே சென்றே உரை.

மதுரை பாபாராஜ்

மாண்புமிகு
பிரதமர் மோடி -- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களது  கொரோனாவைத் தடுக்கும் கடமை உணர்வுக்கு  வாழ்த்து!


நடுவண் அரசும் தமிழ்நாடும் சேர்ந்தே
முடுக்கும்  கொரோனா விழிப்புணர்வுக்
கான
நடுநிலைப் போக்கின் செயல்பாடு எல்லாம்
அடுக்கடுக்காய் நன்மை தரும்.

பாதித்த மக்களைச் சோதனை செய்வதிலும்
பாதிப்பை இங்கே தடுக்கும் முறைகளிலும்
ஈடில்லா அக்கறை கொண்டே எடுக்கின்றார்
நாடறிய திட்டமிட்டு தான்.

தொடர்வண்டி எல்லாம் மருத்துவக் கூடம்!
முகக்கவசம், மேலாடை, சோதனைப் பெட்டி
அடிப்படைத் தேவைப் பொருள்கள் விற்க
நடவடிக்கை என்றே கடமைப் பொறுப்பை
நடுவண் அரசு தலைமை அமைச்சர்
எடுப்பதை அன்புடன் வாழ்த்து.

முதலமைச்சர் நாளும் துறைதோறும் கூட்டம்
நடத்துகின்றார்! நாட்டின் நிலையை அறிந்து
நடவடிக்கை மேற்கொள்ள ஊரடங்கில் மக்கள்
நடமாட்டம் இன்றியே வீட்டுக்குள் வாழ
கடமைகள் செய்கின்றார் வாழ்த்து.

முடிந்ததை எல்லாம் நடைமுறை யாக்கி
வெறியாட்டம் போடும்  கொரோனாவின் தொற்றோ
மறைந்திட நாளும் உழைக்கின்றார் நாட்டில்!
மறையும் விரைவிலே நம்பு.

மக்கள், அரசு, அலுவலர்கள்
அக்கறையும்
எப்படியும் நாமோ கொரோனா பரவாமல்
ஒற்றுமையாய் ஒன்றாய்க் காட்டுகின்ற
ஆதரவும்
அற்புத மான கடமை, குழுஉணர்வும்
வெற்றிக்கே வித்தூன்றும் நம்பு.

மதுரை பாபாராஜ்

தளபதி ஸ்டாலினின் பங்களிப்பிற்கு வாழ்த்து!

எங்கெங்கே என்ன நடக்கிறது என்பதை
அங்கங்கே தொண்டாற்றும் சட்டமன்ற நாடாளு
மன்ற உறுப்பினரைக் கேட்டறிந்து நாள்தோறும்
என்னென்ன இந்தக் கொரோனா பரவலைத்
தன்னெழுச்சி கொண்டேதான் மக்கள் தடுப்பதற்குச்
செய்யவேண்டும் என்றேதான் ஆர்வமுடன்  கூறுகின்ற
பண்பாளர் தொண்டர் தளபதி ஸ்டாலினை
வண்டமிழ்போல் வாழ்கவென்றே வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Sunday, March 29, 2020

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

வண்டியில் பூந்தொட்டி கொண்டுவந்து நின்றது
அன்புடன் காலை வணக்கத்தை வாசலுக்கு!
நண்பரின் அன்புக்கு நன்றியும் வாழ்த்தும்
சொன்னேன் மகிழ்ந்தே தான்.

மதுரை பாபாராஜ்

நண்பர் பூரணசந்திரன் அவர்களுக்கு வயது 68. பிறந்தநாள் வாழ்த்துப்பா:


அன்பு பெருந்தன்மை நட்பைப் பேணுதல்
பண்புகளைத் தன்னுள்ளே என்றென்றும் கொண்டிருக்கும்
நண்பரே!  பல்வளங்கள் சூழ குடும்பத்தார்
என்றும் துணையிருக்க
பல்லாண்டு பல்லாண்டு
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்

பேரன் நிக்கில் நண்பன் மோகித் அனுப்பிய படம்

நகரும் படத்தில்(GIF) சுவையான தேநீர்
அகங்குளிர கோப்பை இரண்டிலே ஊற்றி
சிறப்பாய் அனுப்பிய பண்பிற்கு நன்றி!
விடியல் பொழுதுக்கு வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

மரக்கிளை தன்னில்  சுறுசுறுப்பாய் நிற்கும்
மரவண்ணப் புள்ளே!
பரபரக்கும் காலைப்
பொழுதில் அழகாய் வணக்கத்தைத் தந்தாய்!
உளங்கனிந்த நன்றியை நண்பருக்குச் சொல்லு!
வண்டமிழ் போல்வாழ்க நீடு.

மதுரை பாபாராஜ.

இயற்கை

இயற்கை இயற்கையாகவே இருக்கிறது!

இயற்கையின் வாழ்க்கை இயல்பாய் நடக்க
செயற்கைப் பிடியில் சிக்கி மனிதன்
இயல்பை மறந்தே இயற்கை துறந்தே
செயலிழந்தான் அந்தோ! தவித்து.

மதுரை பாபாராஜ்

என்ன இருந்தாலும் மானுடம் மீண்டெழும்!
அன்று புரியும் மனிதனின் பேராற்றல்!
அண்டம் முழுதும் அடங்கிக் கிடப்பவன்
அண்டம் நடுங்க சிலிர்த்தே எழுந்திடுவான்!
வென்று நிமிர்வான் விரைந்து.

மதுரை பாபாராஜ்

[3/29, 2:12 PM] Vovmanivelan: My daughter created this video

https://youtu.be/LT1X4rM6JO0


 நண்பர் மணிவேலன் மகளுக்கு வாழ்த்து!

கலையுணர்வின் ஆர்வம்! வியக்கவைக்கும் ஆற்றல்!
மலைக்கவைக்கும் வேகம்! மனங்கவரும் வண்ணம்
கலைப்படைப்பைத் தந்தார்! கலைத்தமிழ்போல்
வாழ்க!
வளர்தமிழாய் வாழ்க வளர்ந்து.

மதுரை பாபாராஜ்

நம்முடன்

செடிகள்தான் பேசும்! மரங்கள்தான் பேசும்!
பறவைதான் பேசும்! விலங்குதான்  பேசும்!
அடங்கிய மக்களோ கைபேசி யோடு
அடங்கினார் பேசுவா ரோ?

மதுரை பாபாராஜ்

Saturday, March 28, 2020

நண்பர் முருகேசன் அனுப்பிய படம்


மாடுகள் பூட்டி தனியராய்  நாற்றங்கால்
ஊடறுத்துச் சென்று உழவுக்கு உழைக்கின்றார்!
ஊரடங்கச் சொன்னாலும் கேட்காமல் ஓடுகின்றார்
கூட்டமாக! அம்மா! கொரோனாதான் தொற்றாதோ?
கேட்கும் முருகோ தலைக்கும் முகத்திற்கும்
காக்கும் கவசம் அணிந்தேதான் செல்கின்றார்!
கேட்பதைக் கேட்பதே காப்பு.

மதுரை பாபாராஜ்

பரபரப்பாய் வாழ்ந்து திரைகளில் தோன்றி
கருத்தான நாட்டுப் புறப்பாடல் பாடி
கலைத்துறையில் நற்புகழ் பெற்று மறைந்தார்!
நிலைத்த புகழின் உரு.

மதுரை பாபாராஜ்

அரண்மனையும் குடிசையும் ஒன்றே!

அரண்மனையா ஆண்டிக் குடிலா எதையும்
கொரோனாதான் பார்ப்பதில்லை! மாந்தர்
விலகிப் பழகாமல் புறக்கணித்தால் தொற்றும்!
அரசி,இளவரசன்,ஏழையெல்லாம் ஒன்றே!
வெளியில் உலவாமல் வீட்டில் இருப்போம்!
பதினைந்து நாள்கள் தனித்திருந்தே உன்னை
மதித்துவாழ்ந்தே காப்பாற்றிக் கொள்.

மதுரை பாபாராஜ்

பறவைகளும் நாமும் ஒன்று!

கொரோனா தடுப்பு நடவடிக்கை!

கிடைத்ததை உண்டுவாழும்  புள்ளினம்போல் இன்றோ
அடைபட்டே வீட்டுக்குள் வாழ்கின்ற நாமும்
கிடைத்ததை உண்டுதான் வாழ்கின்ற வாழ்க்கை!
நடைமுறை மாற்றத்தைப் பார்.

மதுரை பாபாராஜ்

மூன்றடி

மூன்றடி!

மூன்றடி வைத்தே உலகை அளந்ததாக
ஊன்றும் புராணக் கதைகளுள்ள நாட்டிலே
மூன்றடி தள்ளியே நின்றால் கொரோனாவின்
தாக்கம் இருக்காது என்ற அறிவியல்
காக்கும் முறைதந்தார் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Friday, March 27, 2020

வீரர் கழுதையைத் தன்முதுகில் ஏற்றியது
ஈரமான அன்பல்ல! கண்ணிவெடி வைத்தஇடம்!
ஆர்வக் கழுதை மிதித்துவிட்டால் அங்குள்ளோர்
சாவது நிச்சயம்! அஃதேபோல் எங்கெங்கும்
தாவும் கொரோனா பரவி இருக்கிறது!
ஏனோதான் மக்கள் வெளியில் அலைகின்றார்!
ஆனமட்டும் மீறும் கழுதையைக் காப்பாற்றும்
சேனையாய்க் காவலர் மாறுகின்றார் நாள்தோறும்!
காத்தல் நமது பொறுப்பு.

மதுரை பாபாராஜ்

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

விழித்ததும் ஆகா! குளம்பி மணத்தை
ரசித்தேன்! பருகிக் களித்தேன் மகிழ்ந்தேன்!
விடியல் பொழுதில் கோப்பைக் குளம்பி
வணக்கம் அளித்ததை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

இவர்களை வணங்குவோம் வாழ்த்துவோம்!

மருத்துவர்/ செவிலியர்!

கொரோனாவால் பாதித்த மாந்தரின் நோய்
வரம்பினை ஆராய்ந்து தக்க சிகிச்சை,
மருந்தை அளித்துப் பராமரித்து நாளும்
அருகில் இருந்து கவனிக்கும் தொண்டை
உயிரைப் பணயமாக்கி மேற்கொள்ளும் பண்பைப்
புவிமக்கள் போற்றுகின்றார் சூழ்ந்து.

காவல்துறை!

காவலர்கள் ஆடவரா இல்லை மகளிரா
கால்கடுக்க சாலைகளில் நின்றுகொண்டு சட்டத்தை
ஊரில் நடைமுறைக்குக் கொண்டுவரும் தொண்டுகளை
தங்கள் உயிரைப் பணயமாக்கிச் செய்கின்றார்!
மக்கள் கொரோனாதான் என்செய்யும் என்றெண்ணி
இப்பக்கம் அப்பக்கம் செல்கின்றார் மீறுகின்றார்!
அக்கறையாய் ஓடிஓடி வேண்டுகின்றார் நோய்காக்க!
தக்கதுணை யானவரை  வாழ்த்து.

துப்புரவாளர்!

தொற்றிப் படரும் கொரோனாதான் என்றாலும்
அக்கறையாய் நம்நாட்டைத் தூய்மையாய் இப்பொழுதும்
எவ்வித மாசுமின்றி நோய் பரவாமல்
எல்லா உதவிகளையும்  செய்யும் பெருந்தன்மை
உள்ளத்தில்  ஊன்ற உயிரைப் பணயமாக்கி
பல்வேறு துப்புரவுத் தொண்டுகளைச் செய்கின்றார்!
நல்லவரை நற்றமிழால் வாழ்த்து.

இல்லத்தரசிகள்!

நாமெல்லாம் வீட்டில் முடங்கி இருக்கின்றோம்!
ஊரை உலுக்கும் கொரோனாவோ நோக்காடோ
யாருக்கு வந்தாலும் காலைமுதல் மாலைவரை
வேளைக்குப் பசிதணிக்க சிற்றுண்டி, சாப்பாட்டை
தேர்வுசெய்து நன்கு சமைத்து வழங்குகின்ற
வேர்போன்ற இல்லத் தரசிகளை வாழ்த்துவோம்!
வாழ்க பசிப்பிணி போக்கும் மருத்துவர்கள்!
பார்போற்ற வாழ்வார் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

Thursday, March 26, 2020

நண்பர் IG. சேகர் அனுப்பிய படம்


தனித்திருந்தால் நன்று; விழித்திருந்தால் நன்று!
உணர்ந்தாய்! கொரோனா நெருங்காது உன்னை!
மனிதனோ கூட்டமாய்ச் செல்கின்றார் இன்றும்!
மனதிலே பதற்றந்தான் பார்.

மதுரை பாபாராஜ்

மிரட்டும் கொரோனா; விரட்டும் தமிழ்நாடு!

(நன்றி பாலிமர் செய்தி தொலைக்காட்சி)

கரங்கள் குவித்து வணக்கத்தைச் சொல்லு!
உரசாமல் மூன்றடிகள்  தள்ளியே நில்லு!
மிரட்டும் கொரோனா விரட்டுகின்ற நாடு!
பெயரெடுப்போம் நாம்தான் உணர்ந்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

கோப்பைக்குள் பூக்களின் கூட்டம் தொட்டிருந்தும்
பூக்களை எந்தக்  கொரோனா கிருமிகளும்
தாக்காது! மக்களை மட்டும்  கொரோனாதான்
தொற்றிப் படரும் உணர்.

மதுரை பாபாராஜ்

வீரமும் கோழைத்தனமும்!

சொல்ல முடியாத நேரத்தில்  அஞ்சாமல்
சொல்ல முடியாத தன்கருத்தைச் சொல்கின்ற
வல்லமையே வீரமாகும்! பேசும் வரலாறாய்
இவ்வுலகில் நிற்கும் நிலைத்து.

சொல்லவே கூடாத நேரத்தில் முந்திவந்தே
சொல்லவே கூடாத தன்கருத்தைச் சொல்கின்ற
புல்லறி வாண்மையே கோழைத் தனமாகும்!
எள்ளலுக்கு வித்தாகும் சொல்.

மதுரை பாபாராஜ்

பேரன் நிக்கில் நண்பன் மோகித் அனுப்பிய படம்

மணங்கமழும் ரோசா மலர்கள், அரும்பு
மனங்கவர காலை வணக்கத்தைச் சொல்லி
அனுப்பும் தகைமைக்கு
எங்களது நன்றி!
வணக்கமுடன் எங்களது வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா

குடும்ப நண்பர் காரைக்குடி தம்பா அனுப்பிய படம்

கொன்றைச் சரமோ சுவரில் தழைத்திருக்க
இன்று விடிந்ததே மங்களமாய் கண்கவர!
நன்றாய்த் தழைக்கட்டும் இந்த உலகந்தான்!
ஒன்றாய்க் கொரோனாவை வென்று நிமிர்ந்திடுவோம்!
என்றேதான் சூளுரைப்போம் நாம்.

மதுரை பாபாராஜ்

கொரோனாவை விரட்டுவோம்!

ஒருநாட்டில் வந்தது! பக்கத்து நாட்டில்
பரவியது! மேலும் பலநாட்டைத் தாக்கி
உலகை உலுக்கும் கொரோனா கிருமி
கலங்கிநிற்கச் செய்கிறதே இங்கு.

உன்னை அடக்கவேண்டும்,! நாங்கள் அடங்குகின்றோம் !
தொற்றை விலக்கவேண்டும்! நாங்கள் விலகுகின்றோம்!
தொற்றிப் படர இடங்கொடுத்தால் தொற்றுவாய்!
முற்றும் விலகிநின்றால் என்னசெய்வாய்? போய்விடுவாய்,!
ஒற்றுமையாய்ச் சாதிப்போம் பார்.

மதுரை பாபாராஜ்








கொரோனா பரவல் தடுப்பு!

கொரோனா கிருமி அழிவதற்கு ஆளில்லா
குட்டி விமானம் இயக்கி மருந்தினை
நன்கு  தெளிப்பதற்குச் சென்னையில்
நம்மரசு
அன்பான சேவையைத் தந்ததை வாழ்த்துவோம்!
மன்பதைக்கு  நோய்தவிர்க்கும் தொண்டு.

மதுரை பாபாராஜ்


Wednesday, March 25, 2020

திருமதி.மல்லிகா கஜராஜ் பிறந்தநாள

தம்பி மனைவி மல்லிகா கெஜராஜ் பிறந்தநாள் வாழ்த்து!

26.03.2020

இல்லறத்தில் நல்லறத்தைப் பின்பற்றி என்தம்பி
உள்ளத்தை ஆள்கின்றார்! என்தம்பி சாதனைக்கே
தூண்டுகோலாய் மாறித்தான் ஆதரவை
அன்புடன்
தூதுவிடும் மல்லிகாவை வாழ்த்து.

மருந்துத் துறையெனினும் இன்றிங்கே வாழும்
திரைத்துறை என்றாலும் தம்பியின் ஆற்றல்
வெளிவரும் முன்னணிக்குப் பின்னணியில் உள்ள
தளமான மல்லிகாவை வாழ்த்து.

மகளின் குடும்பம் மகனின் குடும்பம்
அகங்குளிரும் பேரனுடன் அன்புக் கணவர்
உறவுகள் சூழ்ந்திருக்க பல்லாண்டு வாழ்க!
சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.

வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ் -- வசந்தா
குடும்பத்தார்

மாண்புமிகு முதலமைச்சரின் அறவுரை!

விழித்திரு! விலகி இரு! வீட்டில் இரு!

விழிப்புணர்வு கொண்டு விழித்திரு! நம்முள்
கலக்காமல் நாளும் விலகிஇரு! யாரும்
வெளியிலே செல்லாமல் வீட்டிலிரு! மூன்றும்
தவிர்க்கும் கொரோனாவைத் தான்.

மதுரை பாபாராஜ்

களங்கப் படுத்தவேண்டாம்!

அரசியல், சாதி, மதத்தை மறந்தே
உலகிலே ஒன்றுபட்டு நிற்கின்ற வாழ்க்கைக்
களத்திற்குள் வேறுபட்டுப் பார்க்கின்ற எண்ணம்
களங்கத்தைத் தூவும் உணர்.

மதுரை பாபாராஜ்

உலகினை நாடி கதிரவன் வந்தான்!
மலர்களை நாடியது வண்ணத்துப் பூச்சி!
உலகமே காலைப் பொழுதில் இயற்கை
எழுதும் கவிதைதான் பார்.

மதுரை பாபாராஜ்

காவலர்கள் மற்றும் மருத்துவத் தொண்டர்கள்
தூய்மைப் பணியாளர்
மன்பதை ஆர்வலர்கள்
நேர்மை,கடமை உணர்வினைப் போற்றுவோம்!
நாள்தோறும் நன்றியுடன் வாழ்த்து.

மமுரை பாபாராஜ்

Tuesday, March 24, 2020

தொலைக்காட்சி செய்திக்குக் கவிதை!

குறள் 925:

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

டாஸ்மாக்கில் கூட்டமோ கூட்டம்!

இன்றி யமையாத பொருட்கள் கடைகளில்
நின்றுவாங்கும் கூட்டத்தைக் காட்டிலும்
டாஸ்மாக்கில்
நிற்கும் குடிமகன்கள் கூட்டம் அதிகமாம்!
அற்பத்தில் தள்ளாடும் நாடு.

மதுரை பாபாராஜ்

நாட்டில்  கொரோனா பரவாமல் வாழ்வதற்கு
வீட்டுக்குள் தங்கி இருங்கள் தனித்தனியாய்!
நாட்டையும் நம்மையும்
இப்படித்தான் காக்கவேண்டும்!
வேறுவழி இல்லை! உணர்.

மதுரை பாபாராஜ்

பேரன் நிக்கில் நண்பன் மோகித் அனுப்பிய படம்

கற்பிக்கும் இயற்கை!

உற்சாக மாகத்தான் பூக்கள் மலர்கின்ற
அற்புதத்தைப் பார்த்தாலே உள்ளத்தில்
 ஊற்றெடுக்கும் உற்சாகம் புத்துணர்ச்சி  சொந்தமாகும்!
கற்போம் இயற்கையைப் பார்த்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

வறுமையின் கொடுமை!

அழகாய் அடுக்கடுக்காய் யார்தந்தார் ஆடை?
இயற்கை உனக்களித்த
ஆடைகளில் ஒன்றை
எனக்களித்தால் ஆடையற்ற கோலத்தில்  உன்முன்
தினமும்நான் நிற்பேனா சொல்?

மதுரை பாபாராஜ்

செல்லப் பேரன் வருண் ஆதித்யாவுக்குப்
பிறந்தநாள் வாழ்த்து!

24.03.2020

பெற்றோர் :
 மகன்: எழிலரசன்-- மருமகள்:சத்யபாமா

இன்று உனக்குப் பிறந்தநாள்!
இன்பம் பொங்கும் சிறந்தநாள்!

அன்னை தந்தை ஆசானை
வணங்கி வாழ்ந்தால் நல்லது!

நன்றாய் படித்து முன்னேறு
நாளும் உழைத்தே முன்னேறு!

திறமை உனது செல்வந்தான்
அதனை வளர்த்து முன்னேறு!

ஓவியக் கலையில்  பிக்காசோ!
நாட்டியக் கலையில் மைக்கேல் ஜாக்சன்!

நண்பர்கள் சூழ்ந்தே வாழ்த்துகின்றோம்
உறவினர் சூழ்ந்து வாழ்த்துகின்றோம்!.

என்ன மொழிகள் படித்தாலும்
தமிழில் உணர்வு பெறுவாயே!

குறளைப் போற்றி வாழ்கவே!
குவலயம் போற்ற வாழ்கவே!

தாத்தா பாட்டி எல்லோரும்
வாழ்த்துப் பாதான் பாடுகின்றோம்!

வாழ்க வாழ்க பல்லாண்டு.
தமிழ்போல்  வாழ்க பல்லாண்டு

வாழ்த்தும் இதயங்கள்:
மதுரை பாபாராஜ்-- வசந்தா
மற்றும் குடும்பத்தார்

ஜோதி பாவா

தெய்வத்திரு.ஜோதி பாவா! அவர்களுக்கு நினைவேந்தல்!

24.03.2020

ஜோதி பாவா!
ஜோதியில் கலந்து
ஓராண்டாகியதே!
எங்களுடன் இருப்பதுபோல்
இருக்கிறதே!
உலகைவிட்டு மறைந்தாலும்
உருவம் மறைந்தாலும்
எங்கள் உள்ளங்களில் இருந்து
மறையவில்லை!
அவ்வப்போது உங்களைப் பற்றி
நீங்கள் வந்துபோனது பற்றி
அடிக்கடி பேசுகின்றோம்!
உங்கள் உறவும் பழக்கமும்
மறக்கக் கூடியதா?
உங்களை எண்ணி வணங்குகிறோம்
இன்றும் என்றும்! என்றென்றும்!

பாபாராஜ் வசந்தா
மற்றும் குடும்பத்தார்

Monday, March 23, 2020

பேரன் நிக்கில் நண்பன் மோகித் அனுப்பிய படம்

நெஞ்சை நிமிர்த்தி நடந்துவரும் சேவலே!
அஞ்சாமல் தனிமைப் படுத்தி வருகின்றாய்!
இங்கே கொரோனாதான்
தாக்காமல் வாழ்வதற்கு
உன்போல் தனிமை துணை.

மதுரை பாபாராஜ்

நேரத்தைப் போற்று!

நேரந்  தவறாமை! ஏற்ற பொறுப்புகளைக்
காரணங்கள் சொல்லாமல் நேரத்தே செய்துமுடித்தல்
இத்தகைய  நல்லொழுக்கப் பண்புகளே முத்திரை
வெற்றிக்கு வித்தாகும் இங்கு.

மதுரை பாபாராஜ்


கொரோனா விழிப்புணர்வு!

விலகிப் பழகும் விவேகமே நன்று!

வயது எழுபதா? எச்சரிக்கை தேவை!
உலவும் கொரோனா உறவாடத் தொற்றிப்
பரவத் தொடங்கும் படரவைத்துப் பார்க்கும்!
குடும்ப விழுதுகளாம்  நம்முடைய  பேரக்
குழந்தைகள் ஓடிவந்தால் தள்ளிநிற்க வேண்டும்!
விலகிப் பழகும் விவேகமே நன்று!
விலகுவோம் இன்று! தவிர்ப்போம் கொரோனா!
நலமுடன் வாழும் நிலைவரும் நாளை!
பழகலாம் அன்று துணிந்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் ராமசாமி அனுப்பியது

செம்பருத்திப் பூவின் மகரந்தக் காம்புநுனி
செங்கதிரைத் தொட்டுவிடும் காட்சி அழகினில்
மெய்மறந்தேன் நண்பர் ராமசாமி அன்புடன்
சொல்லும் வணக்கத்தை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Sunday, March 22, 2020

மாண்புமிகு அமைச்சர் காவலர்கள் மருத்துவர் செவிலியர் துப்புரவாளர்கள்
சேவை ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி!

எங்களைக் காக்கும் உங்களுக்கு
நன்றி கூறி மகிழ்கின்றோம்!

கொரோனா தொற்று வத்தாலும்
தொட்டு சிகிச்சை தருகின்றீர்!

எத்தனை பெரிய மனம்வேண்டும்!
எத்தனை பெரிய குணம்வேண்டும்.!

நாங்கள் எல்லாம் வீட்டுக்குள்!
நீங்கள் எல்லாம்  நாட்டுக்குள்!

கடமை செய்யும் வீரர்களே!
வணக்கம் கூறி வாழ்த்துகிறோம்!

சேவை உள்ளம் உங்களிடம்!
நன்றி உள்ளம் எங்களிடம்!

கைகள் தட்டி வாழ்த்துகிறோம்!
நன்றி சொல்லி வாழ்த்துகிறோம்!

மதுரை பாபாராஜ்

Saturday, March 21, 2020

குறள்தரும் எச்சரிக்கை!

அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்!
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை!

ஊரடங்கைப் போற்று! கொரானோ கிருமிகள்
ஓரளவு தாக்காது வாழ்வோம்! அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும் எச்சரிக்கை மானிடரே!
பாரில்  வருமுன்னர் காவாதான்  வாழ்க்கையோ
நேரில்  எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடுமுணர்!
கேட்பதைக் கேட்பதே நன்று.

மதுரை பாபாராஜ்

From Ashraff👍 apt Kural

குறள்தரும் எச்சரிக்கை!

அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்!
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை!

ஊரடங்கைப் போற்று! கொரோனா கிருமிகள்
ஓரளவு தாக்காது வாழ்வோம்! அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும் எச்சரிக்கை மானிடரே!
பாரில்  வருமுன்னர் காவாதான்  வாழ்க்கையோ
நேரில்  எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடுமுணர்!
கேட்பதைக் கேட்பதே நன்று.

மதுரை பாபாராஜ்


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

நீங்கள்தான் வண்ணவண்ண ஆடை அணிவீரோ?
நானணிந்த வண்ணம்போல் உங்களாடை உள்ளதோ?
நானேந்தும் கொண்டை மகளிர்க்கு தானுண்டோ?
ஏனென்றால் எல்லாம் எனக்கோ இயற்கைதான்!
மானிடரே உங்களுக்கோ எல்லாம் செயற்கைதான்!
நான்தான் இயற்கை அழகு.

மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி அனுப்பியது

அவ்வளவாய் இங்கே எவரும் பரபரப்பாய்
இல்லை! ஆர்வம் இருந்தால் அவர்களால்
நேரத்தை நாளும் உருவாக்கப் பார்க்கலாம்!
நேரமோ நம்கையில் தான்.

மதுரை பாபாராஜ்

திராவிடம் இல்லையேல் நாமில்லை!

இன்றிருக்கும் ஆத்திகமும் அன்றிருந்த ஆத்திகமும்
ஒன்றில்லை! வெவ்வேறு! ஆதிக்க சக்திகள்
தீண்டாமை மற்றும் சனாதனம்
வேற்றுமை,
நால்வருணம் என்றே சமுதாயக்
கூட்டைப்
பிரித்துவைத்த ஆவேசக் கோலங்கள்!
சாட்டை
யடிகளை விஞ்சும் கொடுமைகள்
ஆட்டிப்
படைத்தபோது தந்தை பெரியாரின்
ஆக்கபூர்வ
நேர்மறைச் சிந்தனைகள் நால்வருண
தாக்குதலைத்
தோற்கடித்த கோலம் திராவிடம்!
திராவிடம்
இல்லையெனில் நாமில்லை! ஏதுமில்லை! இன்று
திராவிடத்தை ஏசுவது எளிது.

மதுரை பாபாராஜ்




நடைமுறையே சான்று!

உடன்பட்டால் என்ன? முரண்பட்டால் என்ன?
நடப்பது நாளும் நடந்தேதான் தீரும்!
அவரவர் கொள்கை அவரவர் பாதை!
தவறா? சரியா? எனச்சொல்ல நாம்யார்?
சுழலும் நடைமுறையே சான்று.

மதுரை பாபாராஜ்

Friday, March 20, 2020

குறள்திலகம் திரு.அன்வர் பாட்சா தமிழ்போல் வாழ்க!

கோவைக் குறள்திலகம் அன்வரின் எண்ணமும்
நாவசைவும் என்றும் குறளை எதிரொலிக்கும்!
பூவின் மணம்போல் குறள்மணக்கும் அன்வரிடம்!
ஏழுசீர் நாயகனை வாழ்த்து.

ஆறு மொழிகள் அறிந்தவர்!பற்பல
ஏடுகற்றே பட்டங்கள் பெற்று மொழியாசான்
பாடுபட்டே நற்பணி யாற்றி பணிநிறைவில்
தூதுவ ரானார் குறளுக்கே! நாள்தோறும்
கூறுகின்றார் தேன்குறளை! வாழ்த்து.

நூல்கள் பலபடைத்துச் சாதனை செய்தவர்!
ஆலம் விழுதுகள்போல் பட்டம் விருதுகள்
ஞாலத்தில் பெற்றே வாழ்கின்றார்! வாழ்த்துவோம்!
மேலும் விருதுபெற வாழ்த்து.

உள்நாடு் மற்றும் வெளிநாடு வாய்ப்புகளைச்
செவ்வனே ஏற்றுக் குறள்தொண்டு செய்கின்றார்!
நம்மரசின் வள்ளுவர் நல்விருது பெற்றவர்!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

குறள் 67/70

பெற்றோர் கடமையைச் செய்தார்கள்! பிள்ளையோ
பெற்றோர்க்கு நற்பெயர் ஈட்டிக் கொடுத்துவிட்டார்!
நற்றமிழ்  அன்வரும் அன்னார் குடும்பமும்
வெற்றியுடன் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்






கவி வளத்தால்
புவி ஆளும் குறள் வளத்தால்
செவி குளிரும் சொல் வளத்தால்
கவி பாபாஜியின் நனிவாழ்த்தால்
மகிழுதே குறள் குடும்பமே...

அன்புள்ளங்களுக்கு இதயம் நிறைந்த குறள் மணக்கும் தமிழ் வணக்கம் 🙏🙏  அன்புடன் உங்கள் திருக்குறள் அன்வர் பாட்சா வாழ்த்துக்களுடன்...

நண்பர் கனகா அச்சக ராஜசேகர் மதுரை
அனுப்பிய படம்

இத்தாலி வீதிகளில் வீரநடை போட்டவர்கள்
இப்படிப் போனாரே நெஞ்சம் கனக்கிறதே!
தொற்று கரோனாவின் சாவுக் கரங்களால்
பற்றிப் பறித்தெடுத்த மக்கள் குடும்பத்தார்
இப்படி ஆகுமென்று
சற்றும் நினைத்தாரோ?
இத்தரணி வாழ்க்கை சருகு!

மதுரை பாபாராஜ்

Thursday, March 19, 2020

நண்பர் துபாய் ராஜேந்திரன் அனுப்பிய படம்

மானும் பறவைகளும் நல்லிணக்கம் போற்றினாலும்
ஏனோ மனித இனம்மட்டும் சாதிமத
வேதனைக்குள் வாழ்கிறது நல்லிணக்கம் போற்றாமல்?
பாடத்தை ஏற்றுத் திருந்து.

மதுரை பாபாராஜ்

நண்பர் IG. சேகர் அனுப்பிய படம்


மரக்கிளையில் வண்ணப் பறவை
தனியாய்
விலகி அமர்ந்திருக்கும் காட்சி! கொரோனா
பரவுமென்றே தானுமிங்கே
தன்னைத் தனிமைப்
படுத்தியதோ? நம்மைப்போல்! கூறு.

மதுரை பாபாராஜ்

நிக்கில்

பேரன் நிக்கில் நண்பன் மோகித் அனுப்பிய படம்

புல்வெளி சூழ மலர்கள் மலர்ந்திருக்க
துள்ளிவரும் நீரலைகள் கல்பாறை காட்சியுடன்  உள்ளங் கவரும் விடியல் பொழுதில்
புள்ளினத்தின்  கீச்சொலிகள் இன்னிசைப் பின்னணியில்
மெய்மறக்கச் செய்தன! வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!

கொரோனா! கனியன்பூங் குன்றன் வரிகள்
பரபரப்பாய் இவ்வுலக மாந்தரை எல்லாம்
உறவாக எண்ணிநீ தாக்குவதற் கல்ல!
மறைந்துவிடு! வந்தவழி  சென்றுவிடு!
போதும்!
பெருந்தன்மைப் பாவரியை நீயேன்
அற்பக்
கரும்புள்ளி யாக்குகின்றாய் கூறு?

மதுரை பாபாராஜ்




Wednesday, March 18, 2020

தனித்திரு

மாற்றார்  தொடர்பின்றி தன்னந் தனியாக
வீட்டில் பதினைந்து நாளிருந்தால்  தொற்றாது
சீற்றமுடன் சுற்றும் கொரோனா  கிருமிகள்!
நாட்டரசின் எச்சிரிக்கை கேள்.

மதுரை பாபாராஜ்

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பியது

கோப்பையில் ஆவி பறக்கும் குளம்பியை
ஊற்றி மணக்க மணக்க
தளும்பியது!
கோப்பையின் தட்டில் சுவையான ரொட்டியும்
ஏற்றோம் பருகினோம் பார்த்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா


அன்பு மகன் திரைப்பட  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்குப்
         பிறந்தநாள் வாழ்த்து!
--------------------------------------------------------------------
     19.03.2020
-------------------------------------------------------------------
குறும்பட வாய்ப்புகளைச் செம்மையாய் ஏற்றாய்!
எடுத்தாய் பெரும்படம் ஆற்றலைக் காட்டி
எடுப்பாக நிற்கின்றாய்! மேலும் வளர்ந்து
தொடுக்கவேண்டும்  வெற்றிகளை நீ.

பீட்சா! முதல்படத்தைப் பார்த்தவர்கள் எல்லோரும்
பாட்சா விறுவிறுப்பை உள்ளம் உணர்த்தியதால்
போற்றினார் உன்னை! உலகப் புகழ்பெற்றாய்!
ஏற்றத்தின் ஏணி அது.

ஜிகர்தண்டா! மாமதுரை பானப் பெயரை
அகங்குளிர வைத்தாய்! திருப்புமுனை கண்டே
அகவாழ்த்தை மக்கள் அளித்தார்! குவித்தார்!
படத்துறை பார்த்தார் வியந்து.

இறைவி! புதுமைக் காவிய மாக
படைத்ததைப் பாராட்டி ஏடுகள் எல்லாம்
நிறைவுடன் வாழ்த்த கலைத்துறைப் போக்கில்
முறைகளை மாற்றினாய் நீ.

மெர்குரி! வேதியல் பாதிப்பு மக்களைக்
கவ்வித்தான் ஏற்படுத்தும் கோலத்தைக் காட்டினாய்!
உள்ளம் உருகிடும்  காட்சி படைத்தளித்தாய்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

பேட்ட பராக்கென்ற ஓசை அதிர்வுகள்
நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திச் சாதனையைக்
காட்டியதோ உன்திறமை என்றே புகழ்ந்தனர்!
நாட்டிவிட்டாய் வெற்றிக் கொடி.

அடுத்த படமும் உனது குழுவின்
பொறுப்பு,கடமை உணர்வு,திறமை
தொடுக்கும் முயற்சியால் வெற்றிக் கனியைக்
கொடுப்பதற்கு வாழ்த்துகிறேன் இங்கு.

இல்லறத்தின் தென்றலே! அன்பகமே! ஆற்றலேறே!
முல்லைக் குறுநகை ஏந்தும் முகஅழகே!
தெள்ளுதமிழ் போல்வாழ்க பல்லாண்டு! பல்லாண்டு!
உள்ளத்தால் வாழ்த்துகின்றோம் சூழ்ந்து.

 பெரியப்பா          பெரியம்மா
மதுரை பாபாராஜ்-- வசந்தா
மற்றும் குடும்பத்தார்.




Labels:

மாணவ மாணவிகளே!

வாழ்க்கையைச் சந்திக்கப் பழகுங்கள்!

தேர்வுகளை நீங்கள் எழுதி, கடமையை
ஆர்வமுடன் நாளும் நிறைவேற்றி நாளைவரும்
தேர்வு முடிவுகளைப் பார்ப்பதற்குக் காத்திருக்கும்
ஆர்வம் புரிகிறது நன்கு.

எந்த முடிவெனினும் ஏற்கப் பழகவேண்டும்!
சந்தித்து வாழவேண்டும்! எல்லாமே நன்மைக்கே
என்றே நினைக்கவேண்டும்! தாழ்வு மனப்பான்மை
இன்றி நிமிர்வதே வாழ்வு.

எல்லோர்க்கும்  எப்படியும் வாழ்க்கை இருக்கிறது!
நல்லதே நாளும் நடைபெறும் நம்புங்கள்!
இவ்வுலகில் நம்பிக்கை ஒன்றேதான் ஊன்றுகோல்!
உள்ளத்தைப் பண்படுத்தப் பார்.

உனக்கென உள்ளதை யார்கெடுக்கக் கூடும்?
உனக்கில்லை என்பதை யார்கொடுக்கக் கூடும்?
மனமுவந்து நன்கு முயற்சிசெய்!  எந்த
முடிவெனினும் ஏற்கப் பழகு.

மதுரை பாபாராஜ்
18.3.20

Tuesday, March 17, 2020


பிரசாந்த்  மருத்துவமனை
மருத்துவர் மதுசூதனன்
குடும்பம் வாழ்க பல்லாண்டு!

வள்ளுவத்தின் நல்லறத்தை இல்லறத்தில் பின்பற்றி
இல்லத் தரசி, மகன்களுடன் நாள்தோறும்
பல்வளங்கள் பெற்றேதான்
பன்முக ஆற்றலுடன்
பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா

95. மருந்து அதிகாரமும் கொரோனாவும்

குறள் 941:

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

மருத்துவ நூலோர் விளக்குகின்ற வாதம்
பெருகிவரும் பித்தம்,கபமும்-- சரிசம
மின்றி விளங்கினால் நோய்களே மொய்த்திருக்கும்!
இங்கே கொரோனாவும் தான்.

குறள் 942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்.

உண்ணும்உணவுவகை உள்ளே செரித்ததும்
உண்டால் மருந்தோ உடலுக்கு--என்றுமே
வேண்டிய தில்லை! கொரோனாவும் நோய்களும்
தாண்டும் உடலைத் தவிர்த்து.

குறள் 943

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

உண்ட உணவு செரித்த பிறகுதான்
உண்ணும் உணவின் அளவறிந்தே--
உண்பதுதான்
நம்மை நெடுநாள் கொரோனாவோ நோய்களோ
அண்டாமல் வாழவைக்கும் சொல்.

 குறள் 944

அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

உண்டதை நன்கு செரித்தபின்பு தன்னுடல்
இங்கேற்கும் நல்லுணவை உண்ணவேண்டும்-- என்றும்
கொரோனாவோ மற்றெந்த நோயோ
வராமல் தவிர்க்கலாம் சொல்.

குறள் 945

மாறுபா டில்லாத உண்டிமறுத்
துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு.

ஒவ்வா தெனத்தெரிந்தால் அந்த உணவினை
எள்ளளவும் ஏற்காது,ஏற்கின்ற-- நல்லுணவை
எல்லைக்குள் உண்டால் கொரோனாவால் நோய்களால்
தொல்லைகள் இல்லை உணர்.

குறள் 946

இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

அளவாய் உணவை அருந்தினால் நோய்கள்
கரோனா களமமைத்துத் தாக்காது-- அளவுக்
கதிகமாய் உண்டாலோ உண்பவர்க்கு நோயால்
அதிகம்தான் துன்பமென்று சொல்.

குறள் 947

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.

பசியின் அளவறிந்தே உண்ணவேண்டும்! நாளும்
அதிகமாய் உண்டால் கொரோனா மற்றும்
அதுபோன்ற நோய்கள் அளவின்றி தாக்கி
முடக்கித்தான் துன்புறுத்தும் இங்கு.

 குறள் 948

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நோய்களை,காரணத்தை ஆராய்ந்து பார்த்தேதான்
நோய்தீர்க்கும் நன்முறையை ஆராய்ந்து-- சோதித்துப்
பார்த்தே கொரோனாக்கோ நோய்க்கோ சிகிச்சைகள்
நாளும் கொடுக்கவேண்டும் இங்கு.

குறள் 949

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

நோயாளிக் கென்ன வயது,நோயளவு
நோயிருக்கும் காலத்தை எல்லாம் மருத்துவர்
ஆய்ந்தே கொரோனாநோய் உட்பட நோய்களுக்குத்
தேர்ந்த சிகிச்சை தரவேண்டும்  இங்குதான்!
சீராய்க் குணமாக்கும் செப்பு.

குறள் 950

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.

நோயாளி, நோய்தீர்க்க  வல்ல மருத்துவர்
நோய்க்கு மருந்து, துணைபுரிபவர் என்றேதான்
என்றும் மருத்துவம் நான்கு வகைதானே!
இன்றைய தொற்று கொரோனா தனிமைக்குத்
தொண்டுள்ளம் கொண்ட செவிலியர் மட்டுமே
தங்கும் துணையாம் உணர்.

மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி அனுப்பிய படம்

எது நஞ்சு?

தேவைக் கதிகமாக என்ன இருந்தாலும்
வாழ்க்கையில் நஞ்சே! பதவி, வெறித்தனம்,
ஆணவம், சோம்பல்,பகட்டு,படுத்துகின்ற கோபம், பயமென மாந்தரிடம் உள்ளது
வாழ்வில் எதுவெனினும் நஞ்சு.

மதுரை பாபாராஜ்

வேந்தன் தொலைக்காட்சி மதுரையில் தோழர் பாண்டுரங்கனின் பேட்டி.
17.03.20

வேந்தன் தொலைக்காட்சி பேட்டியில் தன்கருத்தாய்
வேண்டாமே இங்கே தமுக்கம் சீரழிப்பு,
பாண்டுரங்கன் சொல்கின்றார்
பக்குவமாய் பண்புடனே!
பாண்டுரங்கன் நற்கருத்தைக் கேள்.

மதுரை பாபாராஜ்