Saturday, October 31, 2020

உறவுகள் இன்று


 

உறவுகள் இன்று!



இன்றைய நடப்பு

உறவுப் பறவை சிறகை விரி்த்துப்

பறந்து பறந்தே உயர்ந்த பொழுதில்

சிறகின் இயக்கமோ நிற்க, விழுந்தப்

பறவையோ அந்த இடத்திலே கூட்டைப்

படைத்தது வாழத் துடித்து.


இப்படித்தான் எந்தெந்த நாட்டிலோ எங்கெங்கோ

சுற்றமும் நட்பும் சிதறித்தான் வாழ்கின்றார்!

எப்படியும் பார்ப்போமா  வாழ்க்கை முடிவதற்குள்?

இப்படித்தான் நம்புகிறோம் நாம்.


முகதூல் புலனம் இணையதளம் என்றே

வகைவகை யாக தொழில்நுட்பக்  கூட்டில்

கலந்தே நிழலை உறவாடி வாழும்

நிலையிலே வாழ்கிறோம் பார்.


சொந்தநாட்டை விட்டுவிட்டே எந்தநாடோ சொந்தமாக

நம்முறவை நாம்துறந்தே அவ்வுறவை நாமேற்க

வந்தவாழ்க்கை வானத்தில் நாம்பறந்தே வாழ்கின்றோம்!

சொந்தபந்தம் கானலாகிப் போச்சு.


மதுரை பாபாராஜ்


Vovgopalpalanimuthu:

நடப்புநிலைமையை படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். அப்பா அம்மாக்கள் தவிப்பு.

ஓவியர் ரவிவர்மாவுக்கு வாழ்த்து

ரவிவர்மா ஓவியம்!

மகனுக்கு  அமுதூட்டும் ரவிவர்மா மகள்!

அமுதமொழி பேசும் ரவிவர்மா பேரன்!
அமுதூட்டும் அன்னை அவரின் மகள்தான்!
அருகில் அமர்ந்திருக்கும் நாயுடன் சேர்த்தே
இமைசிமிட்டா வண்ணம் வியப்பிலே ஆழ்த்தும்
ரவிவர்மா ஓவியத்தை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

திருமதி ஹெலினா உரை

 தமிழால் இணைவோம்

( உலகத் தமிழ்க்களம்)


தொடர் இலக்கிய நிகழ்வு 61


அந்தமான் தமிழால் இணைவோம்


நாள்31.10.20 மாலை 7 மணி


பரிமேலழகியார் தமிழ் ஹெலனா அவர்களுக்கு வாழ்த்து!


வள்ளுவர் பார்வையில் கல்வியும் அறிவும்!


தெள்ளத் தெளிவாய்த் தலைப்பில் உரையாற்றி

அள்ளித் தெளித்த கருத்துகள் அற்புதம்!

வள்ளுவம் கூறுவதை பாரதி பாவேந்தர்

சொல்லிய நற்கருத்தை ஒப்பிட்டார் நன்றாக!

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்


நம்பிக்கை வை!

 நண்பர் ராஜூ அனுப்பிய படம்

பட்டமரம் போலத்தான் தோன்றினாலும் வாழ்க்கையில்

எப்போதும் நேர்மறைச் சிந்தனைகள் ஊறிவந்தால்

பட்டமரம் கூட துளிர்க்கின்ற கோலமுண்டு!

எப்போதும் நம்பிக்கை வை.

மதுரை பாபாராஜ்

HOPE IS THE ETERNITY OF HUMAN HEART... And, so is mine too ! Baba...Thanks for the concern

RAJU

மருத்துவர் புகழகிரி


 மதுரை வடமலையான் மருத்துவ மனை மருத்துவர் புகழகிரி அனுபவம்!


இறைநம்பிக்கையும் அனுபவமும்!


1

பன்முக ஆற்றல்கள் கொண்ட மருத்துவர்

வண்டமிழ் மாமதுரை தன்னில் புகழ்மணக்கும்

பன்முக சேவை மருத்துவக் கூடத்தை

நன்கு நடத்திவரும் ஆற்றலாளர் என்றாலும்

தன்னுடல் நோய்க்குக் கோவை மருத்துவ

நண்பரின் கூடத்தில் நாளும் சிகிச்சைகள்!

பண்பாளர் மாரியம்மன் பக்தர் மனம்கசிந்தே

அங்கிருந்து வேண்டுகின்றார் தன்னூர் மதுரையில்

வண்டியூர் தெப்பக் குளமாரி யம்மனைத்தான்!

அன்பும் அருளும் துணை.


2

குடலிறக்க சிக்கல் அறுவை சிகிச்சை

தடம்மாறி தோற்க செயற்கை சுவாசம்

பொருத்த மருத்துவர்கள் முன்வந்த போது

மருத்துவரின் இல்லாள் மயங்கி  விழுந்தார்!

மருத்துவரோ தன்னிலை விட்டே ஒளியைத்

தொடர்ந்தேதான் சென்றாராம் பெற்றோரைப் பார்த்தார்!

தொடர்ந்த  அனுபவத்தைக் கேள்


3

தொடர்ந்தபோது அம்மாதான் என்னைத் திரும்பி

நடந்துபோ வந்த வழியே எனச்சொன்னார்!

நடந்துவந்தேன் மீண்டும் உடலுல் புகுந்தேன்!

செயற்கைச் சுவாசக் கருவியைக் கண்டேன்!

அயர்வில் மனைவியோ கைகூப்பிப் பார்த்தே

அழுததைப் பார்த்தபோது கண்முன்னே அங்கே

தொழுதேன்நான் மாரியம்ம னைப்பார்த்து! வாழ்க்கை

பழுதாக நொந்தேனே தந்தைபோன பின்பு!

குலக்கொழுந்தாம் பிள்ளைகள் அந்தநிலை காண

உளம்சகியேன்! என்னைக் குணப்படுத்து தாயே!

நலம்நாடி வேண்டினேன் நான்.


4.

செய்த அறுவை சிகிச்சையை தோல்வியாம்!

செய்யவேண்டும் மீண்டும் அறுவை சிகிச்சையென்றார்!

கையெடுத்துக் கும்பிட்டே இல்லாள் வேண்டினார்:

அய்யா அவரிங்கே வந்தார் நடந்தேதான்!

நல்ல முறையில் அவரைக் குழந்தைகள்

எல்லோரும் பார்க்கவேண்டும் என்றேதான் கெஞ்சினார்!

வேறோர் மருத்துவக் கூடத்தை நோக்கித்தான்

கோவையில் ஆம்புலன்சில் கொண்டுசென்றார் என்னைத்தான்!

நேரமோ என்னவோ அங்கேயும் தோல்விதான்!

மீண்டும் அறுவை சிகிச்சை எனச்சொன்னார்!

காலத்தை நொந்தோம் இணைந்து.


5

வேண்டாம் அறுவை சிகிச்சை எனச்சொன்னேன்!

நானுடனே பிள்ளைகளைப் பார்க்கவேண்டும் என்றதும்

ஆம்புலன்சில் ஏற்றி சுவாசக் கருவியுடன்

நாங்கள் மதுரைப் பயணத்தை மேற்கொண்டோம்!

நாங்கள் மதுரைமண்ணைத் தொட்டமும் என்னுள்ளே

ஏதோ இனம்புரியா நல்லுணர்வை நானுணர்ந்தேன்!

மாரியம்மன் மீனாட்சி தாயின் அருள்கிட்டும்!

ஊறியது நம்பிக்கை உள்ளத்தில் நிம்மதிதான்!

நாடினேன் எந்மன் மருத்துவக் கூடத்தை!

சூழ்ந்துநின்று எங்கள் மருத்துவர்கள் மீண்டுமங்கே

நோய்க்கு அறுவை சிகிச்சையைச் செய்தனர்!

மூன்றுநான்கு நாளாகும் என்றனர்! எல்லோரும்

தூங்காமல் கொள்ளாமல் காத்திருந்தார் சுற்றித்தான்!

ஏங்கவைத்த கோலத்தில் நான்.


6

பலநாள்கள் போராட்டம்! பிள்ளைகளைப் பார்த்த

நிலையின் திருப்தியில் வாழ்ந்தேன்! மீண்டும்

நலம்பேண வீடுவந்து சேர்ந்தேன் மகிழ்ந்து!

உளத்திலே மாரியம்மன் கோயிலுக்குச் செல்ல

விழைந்தபோது சக்கர நாற்காலி யோடு

அழைத்தேதான் சென்றார் மனைவியும் என்னை!

நுழைந்தோம் வளாகத்தில் அம்மனின் பாதம்

முதலிலே கண்களில் பட்டது! அம்மா

ககனத்தை ஆள்வதும் நீயேதான் என்றும்

அகங்குளிர ஆட்டுவித்துப் பார்ப்பதும் நீதான்

மகத்தான உன்னிடத்தில் வந்துவிட்டேன் என்றேன்!

அகம்சிலிர்த்து மெய்மறந்தேன் நான்.


7

சோதனைகள் வேதனைகள் சூழ்ந்தபோது என்மனைவி

சாதனைக்கு நம்பிக்கை தந்தே துணைநின்றார்!

தெப்பக் குளத்தின்  மாரியம்மன் பேரருளால்

நற்றமிழ் மாமதுரை மீனாட்சி பேரருளால்

திண்டுக்கல் கோட்டையின் மாரியம்மன் பேரருளால்

இங்கே உயிர்ப்பிச்சை பெற்றே எழுந்துவிட்டேன்!

தொண்டு தொடரவேண்டும் அம்மன்கள் கட்டளை!

என்றும் தொடர்ந்திருப்பேன் தொண்டு.


மதுரை பாபாராஜ்








Friday, October 30, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


 வணக்கம்.


மக்களுக்குப் பாதுகாப்பு:


 எங்களைப்போல் நீங்கள் முகக்கவசம் போடாமல்

இங்கே வெளியில் வருவதற்கு நாளாகும்!

உங்களை நாளும் கொரோனாதான்  தாக்காமல்

அண்டாமல் வாழ முகக்கவசம் போடுங்கள்!

சொன்னபடி கேட்பதே நன்று.


மதுரை பாபாராஜ்


மதுரை நினைவுகள்

 மதுரை நினைவுகள்!


யானைமலை அருமை!


இயற்கையெனும் சிற்பி வடித்த சிலைதான்!

உயரமான யானை அமர்ந்திருக்கும் கோலம்

வியக்கவைக்கும் பார்க்க! மலைக்கவைக்கும் நாளும்!

தயக்கமின்றி எத்தனை ஆண்டுகள் பார்த்தும்

சலிக்கவில்லை பார்க்க! சிறுவயதில் பார்த்தோம்!

வழியிலே போகும் பொழுதெல்லாம் பார்ப்போம்!

விழிகள் படம்பிடிக்கும் பார்த்து.


தாய்தந்தை காண்பித்தார் பார்த்தோம்! நாமிங்கே

தாய்தந்தை ஆனபின் பிள்ளைக்குக் காட்டினோம்!

சேய்களின் பிள்ளையாம் பேரனுக்கும் பேத்திக்கும்

ஓயாமல் காட்டினோம் சேர்ந்தேதான் நாம்பார்த்தோம்!

யானைமலை பார்ப்போம் ரசித்து.


மதுரை பாபாராஜ்


மதுரை நினைவுகள்

 மதுரை நினைவுகள்!

பெண்கள் பணிபுரிந்தார் அக்காலம்!


1954--1978- 


100 வயதை நெருங்கும் 

திருமதி.லிங்கம்மாள் இராமாநுசம்

நண்பர் சந்திரனின்  அம்மா,மதுரையில் இருக்கின்றார்.



ஆணுக்கு நிகர் பெண்கள்!


மதுரை மில்ஸ் தொழிற்சாலையில் பெண்கள்!


மில்லில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சான்றோராம் 

லிங்கம்மாள் ராமாநுசம் இன்றோ வயதிங்கே

நூறை நெருங்கும் உழைப்பின் சிகரமாக!

மாமதுரை யில்வாழும் அம்மாவை  வாழ்த்துவோம்!

ஆசிகளை நாடுவோம் சூழ்ந்து.


மதுரை சிறைச்சாலை வீதியில் உள்ள

மதுரைமில்ஸ் என்ற தொழிற்சாலைக் குள்ளே

மதுரையில் பொன்னகரம், ஆரப்பா ளையம்

கிருஷ்ணாபா ளையப் பகுதிகளில் உள்ள

குடும்பத்தைச் சார்ந்த மகளிரெல்லாம் இங்கே

பகல்வேலை  செல்வார்! முடித்துவிட்டு மாலை

அகம்நோக்கி வந்திடுவார் அன்று.


பக்கத்து வீடுகளில் உள்ள முதியவர்கள்

மற்றும் பணிகளுக்குச் செல்லாத பெண்களும்

அக்கறையாய்ப் பிள்ளைகளைப் பார்க்கும் பொறுப்பேற்றார்!

இத்தகைய வாழ்க்கையே பொன்.


வேலை முடித்து வெளியே வரும்பொழுது

சேலை, தலையெல்லாம் பஞ்சுகள் காணலாம்!

ஆலை உழைப்பின் அருமைக் கவித்துளிகள்!

ஆலையின் சங்கொலி மக்கள் மணிப்பொறி!

நாள்தோறும் வாழ்ந்த நினைவு.



மதுரை பாபாராஜ்


மதுரை நினைவுகள்

 மதுரை நினைவுகள் 1954--58


பதநீர்! பதநீர்!


காலைப் பொழுதில் பதநர் பதநியென்றே

சாலையில் கூவிடுவார்! வீட்டில் அழைத்திடுவார்!

ஓலை எடுப்பார்! குழியாக்கி கட்டுவார்!

ஓலைக் குழிக்குள் பதநீரை ஊற்றுவார்!

ஆவலுடன் நாங்கள் சுவைத்தே பருகுவோம்!

காலையில் வெள்ளைப் பதநீர் இனித்திருக்கும்!

தோளில் நெடுங்கம்பில் பானை இருபக்கம்!

வேகமாய் ஓடியே வந்திடுவார் வீடுவீடாய்!

தாகம் தணிப்பார் சிரித்து.


மதுரை பாபாராஜ் 


Thursday, October 29, 2020

மூச்சு விடுமா பூமி?

 [10/30, 11:44 AM] Madurai Babaraj: மூச்சுவிடுமா பூமி?


வேர்கள் நிலத்தடியில் பின்னிப் பிணைந்திருக்க 

காற்று மரங்களை முன்பின் அசைக்கின்ற

நேரத்தில் அந்த நிலமோ அசைவது

மூச்சு விடுதல்போல் காட்சிகள் தோன்றிடும்!

மூச்சுபேச்சோ இன்றித்தான் பார்.

மதுரை பாபாராஜ்

முகநூல் படம்

[10/30, 11:45 AM] Madurai Babaraj: https://www.facebook.com/story.php?story_fbid=10156161341288089&id=501698088&scmts=scwspsdd


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 நண்பர் IG  சேகர் அனுப்பிய படம்


சாண் ஏறினால் முழம் சறுக்கும்!


வணக்கத்தைச் சொல்லிப் பறக்கத் தயாராய்

மரக்கிளையில் நிற்கும் பறவையே உன்போல்

சுணக்கமின்றி இங்கே சுறுசுறுப்பாய் வாழ

நினைத்தாலும் ஏகத் தடை.


மதுரை பாபாராஜ்

மனம்போல வாழ்வு

 மனம்போல வாழ்வு

மொழியாக்கம்

யாரும் மகிழ்ச்சியுடன் இங்கே பிறப்பதில்லை!

ஆனாலும் எல்லோர்க்கும் இங்கே மகிழ்ச்சியைத்

தேனாறாய் ஓடவைக்கும் ஆற்றல் இருக்கிறது!

மானே! மனம்போல வாழ்வு.


மதுரை பாபாராஜ்

Sent by Mrs.Annette



முனைவர் சங்கர சரவணனுக்கு வாழ்த்து

 முனைவர் சங்கர சரவணன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


29.10.20


இந்திய ஆட்சிப் பணியிலே மாணவர்கள்

நன்கு பயிற்சி பெறுவதற்குக் கற்பிக்கும்

பன்முக ஆற்றல் மிளிர்கின்ற ஆசிரியர்!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


முல்லைக் குறுநகை ஏந்தி வலம்வரும்

நெல்லை சரவணன் பண்பாளர் வித்தகர்!

உள்ளத்தில் மாசற்ற ஏந்தல் மிகையில்லை!

வல்லவர் வாழ்கபல் லாண்டு.


இல்லறத்தில் வள்ளுவத்தைப் பின்பற்றி

வாழ்பவர்!

இல்லத் தரசி,  மைந்தன், குடும்பத்தார்  

எல்லோரும் வாழ்த்திசைக்க வாழ்வாங்கு வாழியவே!

பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா








Wednesday, October 28, 2020

நண்பர் ராஜேந்திர பாபுவுக்கு நன்றி

 நண்பர் ராஜேந்திர பாபு அனுப்பிய படம்



இணையருக்கு ஏற்ப இரண்டு குளம்பி

மணங்கமழத் தந்தே மலர்க்கொத்தும் வைத்து

வணக்கத்தைக் கூறுகின்ற நட்பினை வாழ்த்து!

மனங்கனிந்த நன்றியே தூது.


மதுரை பாபாராஜ்

மதுரை நினைவுகள்

 மதுரை நினைவுகள்!

இந்தக்கடை இப்போது விசுவாசபுரியில் உள்ளது.படம் அனுப்பியவர் நண்பர் முருகேசன்



ராஜூ விறகுக்கடை,மோதிலால் முக்கிய சாலை,மதுரை


1957 களில் மலரும் நினைவுகள்!


மோதிலால் முக்கிய சாலையில் அக்காலம்

ராஜூ விறகுக் கடையில் விறகுவாங்க

நான்சென்றே அங்கே குவிந்திருக்கும் சுள்ளிகளைப்

பார்த்தே விறகைப் பொறுக்கி எடைபோட்டு

வாங்கி விறகுகளை வண்டியில் ஏற்றுவேன்!

தூக்கி இழுப்பேன் வலிந்து.


மோதிலால் சாலை இரண்டில்  வீடிருக்கும்!  

ஆடி அசைந்தேதான் வண்டி இழுத்துவந்து

வீடுநோக்கி வாசலில் நிற்கவைத்தே அவ்விறகை

பாடுபட்டுக்  கையில் அடுக்கி எடுத்துவைப்பேன்!

காலியான வண்டியை மீண்டும் கடையிலே

போய்நிறுத்தி வந்திடுவேன் நான்.


மதுரை பாபாராஜ்

விறகு வாங்குவது, 

சுலபமான  பணியோ

சுவையான பணியோ

அல்ல. 

வண்டி இல்லையெனில்,

வாங்கும் எடை குறைவெனில்,

சுமக்க வேண்டும்,

சுமைதாங்கியாய்.

உடலில் களைப்பு,

உள்ளத்தில் களிப்பு,

உதவி அன்னைக்கு

என்ற  நினைப்பு. 

சுட்ட விறகென்றால்

சட்டென ஆகும்  சமையல். 

சுடாத விறகென்றால், 

சுடாது விரைவில்  அடுப்பு, 

வேகாது விரைவில்  பருப்பு,

தாமதமாகும் சமைப்பு,

கோபத்தால் கண்களில் 

நெருப்பு,

தாய் புகையில் தவிப்பு, 

காணில்நம்கண்ணில்

நீர் பெருக்கு.   

நீரும்,நெருப்பும் அதேகண்களில்,

ஒரே தருணத்தில். 

அன்றும் சுமைதாங்கி,

இன்றும்சுமைதாங்கி,

இருப்பினும்  இன்பம்,

சுகமான சுமைகளால்.

DR. சேதுராமன்

வாழ்த்து



நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 நண்பர் IG சேகருக்கு வணக்கம்



வண்ணப் பறவையே உந்தன் சிறகாலே

விண்ணை அளக்கலாம் எல்லைக்குள்!-- எங்களின் 

எண்ணப் பறவை சிறகசைந்தால் போதுமே

எங்கெங்கோ  செல்லும் தடையின்றி எல்லையின்றி!

எங்களை வெல்வாயா நீ?


மதுரை பாபாராஜ்

Tuesday, October 27, 2020

தோழர் நன்மாறன்

 விருதை வைப்பதற்கு இடமில்லாத முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் அவர்களின் வீடு!


நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.


கொடுக்கும் விருதை எடுத்துவைக்கக் கூட

இடமற்ற வாடகை வீட்டிலே வாழும்

மகத்தான நன்மாறன் சட்டமன்ற கூட்டின்

பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர் ராவார்!

பொதுநலத் தொண்டின் முத்து.


நன்மாறன் போன்றோரைப் பார்த்தே எளிமையும் 

பண்புகளைக் கற்றேதான் தன்னை உயர்த்திடும்!

அன்றாடம் நேர்மையும் ஆசானாய் ஏற்றேதான்

தன்னையும் நேர்ப்படுத்தும் செப்பு.


மதுரை பாபாராஜ்


ஒட்டகம் நுழைந்தால்

 ஒட்டகம் நுழைந்தால்


குறள் 821:


சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.


ஒட்டகம் தன்தலையை விட்டே நுழையும்!
அப்புறம் கொஞ்சம் உடலை நுழைக்கும்!
இப்படியே குன்றுபோன்ற மேனி முழுவதும்
அப்படியே வந்தவுடன் உள்ளிருக்கும் நண்பரை
முற்றும் வெளியேற்றும் காண்.

மதுரை பாபாராஜ்


மதுரை நினைவுகள்

 முறுக்கு விற்பவர்

மலரும் நினைவுகள்-- மதுரை


முறுக்கோ! முறுக்கு!


1957 களில்


மோதிலால் சாலை இரண்டிலே மாலையில் 

கூடி படியில் அமர்ந்தே பேசுவார்கள்!

ஓடியாடி நாங்கள் விளையாடும் காட்சியுண்டு!

நாடிவந்தே விற்பார் முறுக்கு.


ஒடிசலான தேகம்! உயரமான தோற்றம்!

நடையிலே  வேகம்! தலையிலே கூடை!

படைபோல பிள்ளைகள் சூழ வருவார்!

தலையில் இருக்கின்ற கூடை இறங்கும்!

அலைபாயும் உள்ளம் முறுக்குகளைக் கண்டு!

மலைப்போம் முறுக்குவகை கண்டு! 


வட்ட வடிவம் பெரிய முறுக்குகள்!

அட்டகாச முள்முறுக்கு! சாதா முறுக்குகள்!

எப்படி விற்கும் தெரியுமா? வேகமாய்

விற்றே நகர்வார் சிரித்து.


மதுரை பாபாராஜ்

Monday, October 26, 2020

பூம்பூம் மாடு

 

மதுரை நினைவுகள் படம்: பாபு டீக்காராம்


பூம் பூம் மாடு!


வீட்டுக்கு வீடுதான் நிற்கவைப்பார் பிள்ளைகள் 

கூட்டமாய்ச் சுற்றி உடன்வருவார்! நல்லகாலம்

மாட்டிடம் உண்டா எனக்கேட்பார் ஆவலுடன்

மாடும் உண்டென்று சொல்ல தலையாட்டும்!

வீடுகளில் உள்ளோர் மகிழ்வார்கள்! பூம்பூம்பூம்

மாடு நகரும் அடுத்தவீடு நோக்கித்தான்!

ஏதோ உழைப்பிலே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

திரு.சந்்்தானம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து

 

திரு.சந்தானம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


இல்லத்தரசி: திருமதி சாந்தி சந்தானம்


மகன்: ச.கார்த்திகேயன்

மருமகள்: கா.தேவிகாராணி

பேரன்: சஞ்சய்


27.10.20


பன்முக ஆற்றல் மிளிர்கின்ற வித்தகர்!

நன்னெறி போற்றியே இல்லறத்தில் நல்லறத்தைப்

பின்பற்றும் நற்குடும்பம் சூழ்ந்திருக்க

வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


பொன்மனப் பெற்றோர் ஆசியுடன் வாழியவே!

அன்பு மனைவி, மகனும் மருமகளும்

கண்மணிப் பேரனும்  என்றும் உடனிருக்க

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


வாழ்த்தும் இதயங்கள்

மதுரை பாபாராஜ்

வசந்தா

கெஜராஜ்

மல்லிகா

குடும்பத்தார்


கார்த்திக் சுப்பாராஜ்-- சத்ய பிரேமா திருமணநாள்

 திருமணநாள் வாழ்த்துப்பா!


இயக்குநர்-- மருத்துவர் இணையர்

கெ.கார்த்திக் சுப்பாராஜ்-- சத்ய பிரேமா


நாள்: 27.10.20


வெற்றி இயக்குநர் வெற்றி மருத்துவர்

முத்திரைச் சாதனை வாழ்வில் படைத்தேதான்

பத்தாண்டு காணுகின்றீர்! பெற்றோர் ஆசிகளும்

உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துகளும்

எப்போதும் சூழ்ந்திருக்க வாழ்வாங்கு வாழியவே!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


ஆற்றல் மிளிர்ந்திட வெற்றிப் படங்களை

நாட்டிலே மக்களுக்குத் தந்தேதான் வாழ்கவே!

போற்றும் மருத்துவராய்த் தொண்டுகள் செய்தேதான்

ஏற்றங்கள் பெற்றே புகழுடன் வாழியவே!

கூட்டணி வெற்றிபெற வாழ்த்து.


வாழ்த்தும் இதயங்கள்

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


Labels:

மதுரை நினைவுகள்

 சமன்செய்து சீர்தூக்கும் கோல்!

படம் பாபு டீக்காராம்


அறிவியல் தத்துவத்தை

வாழ்வியலில் நாளும்

நெறிப்படுத்தி வாழ்கின்ற பானை வணிகர்!

கடின உழைப்பாலே பானைகள் செய்தே

சமன்செய்து சீர்தூக்கும் கோலைச் சுமந்தே

மனங்குளிர வாழ்கின்றார் பார்.


மதுரை பாபாராஜ்

மதுரை நினைவுகள்

 பூவிற்கும் அம்மா!

படம் பாபு டீக்காராம்


மதுரை நினைவுகள்


பூவிற்கும் அம்மா!


மல்லிகை சாமந்தி மற்றும் கதம்பமென்று

பல்வகைப் பூக்கள் தெருதோறும் விற்பார்கள்!

மல்லிகை என்றால் மதுரை மணங்கமழும்!

எல்லோரும் வாங்குவார் நின்று.


மதுரை பாபாராஜ்


மதுரை பாபாராஜ்

மதுரை நினைவுகள்

 இயல்பான மக்கள்!

படம் பாபு டீக்காராம்



பொருட்களை வாங்கி நடந்துவரும் நேரம்

உருவான ஆயாசம் நீங்க அமர்ந்தே

தெருவோரம்  நாயிடமும் அன்புகாட்டி மக்கள்

இயல்பாக வாழ்வதைப் பார்.


மதுரை பாபாராஜ்

மதுரை நினைவுகள்

 ஐஸ்வண்டிக்காரர்!

( பனிக்குழைவு)

படம் பாபுடீக்காராம்



குச்சியில் கோப்பையில் என்றே வகைவகையாய்

எத்தனை வண்ணப் பனிக்குழைவை விற்றிருப்பார்!

கண்டதும் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள்

வந்துவந்தே வாங்கிச் சுவைக்கின்ற காட்சிகள்!

அங்கே அரங்கேறும் பார்.


மதுரை பாபாராஜ்

மதுரை நினைவுகள்

 பள்ளிக்குச் செல்கின்றார்!

படம் பாபு டீக்காராம்


பக்கத்து வீடு எதிர்வீடு என்றேதான்

சுற்றம்போல் சேர்ந்தேதான் பிள்ளைகள் பள்ளிக்குப்

பற்றுடன் செல்கின்றார்! காட்சி அருமைதான்!

 நற்றமிழே! ஒற்றுமைக்குச்  சான்று.

மதுரை நினைவுகள்

 மிதிவண்டியில் நண்பர்கள் உலா!


படம: பாபு டீக்காராம்



பள்ளிக்குச் செல்வோம்!

காய்கறி வாங்கவும் கட்சித் தலைவரின் கூட்டத்தைக் கேட்கவும்

மற்றும் அலுவலகம் என்றாலும் சுற்றவும்

எப்போதும் இந்த மதிவண்டிக் காட்சிதான்!

அக்காலம் பொற்காலந் தான்.


மதுரை பாபாராஜ்

மதுரை நினைவுகள்

 பாடுபடும் பாட்டாளி!

படம் அனுப்பியவர் பாபு டீக்காராம்


விடியல் பொழுது உசுப்பிவிட்டு நாளும்

துடிப்புடன் சேர்ந்தே விரைவார் உழைக்க!

நடக்கும் பொழுது சுமக்கும் பைகள்

சமநிலை மாறாமல் செல்லும் காட்சி!

மகிழ்ச்சியுடன் பேசிச் சிரித்தே  நடந்து

மதுரையில் செல்கின்றார் காண்.


மதுரை பாபாராஜ்

மதுரை நினைவுகள்

 பால்காரம்மா! படம் அனுப்பியவர் பாபு டீக்காராம்



காலைப் பொழுதில் பசும்பால் கறப்பதற்கு

காலிடையில் பாத்திரம் வைத்தே மடுக்காம்பை

ஆற்றல் கலையுடன்  ஆட்டியே பீச்சிடுவார்!

கூட்டமாய் நிற்பார் பசும்பால் வாங்கத்தான்!

ஊட்டமான பாலதுவே பார்.


மதுரை பாபாராஜ்

மதுரை நினைவுகள்

 நரவண்டி( ரிக்சா) படம் அனுப்பியவர் பாபு டீக்காராம்



நகருக்குள் செல்ல பயன்படும் வண்டி!

நகரவைக்க காலால் மிதித்தே உழைக்கும்

நரவண்டி ஓட்டுநர்கள் அங்கங்கே நிற்பார்!

வரவேற்பார் நாடுவோரைப் பார்த்து.


மதுரை பாபாராஜ்

மதுரை நினைவுகள்

 மதுரையில் காட்சி! படம் அனுப்பியவர் பாபு டீக்காராம்


மிதிவண்டி தன்னில் இளநிகளைக் கட்டி

மிதித்து மிதித்தே தெருவிலே விற்பார்!

வளைந்த அரிவாளைக் கொண்டேதான் வெட்டி

களைப்புதீர தந்தே மகிழ்வார்  இவர்தான்!

உழைத்தால் தானிவர்க்கு வாழ்வு.


மதுரை பாபாராஜ்

வணக்கம் ஐயா!

      நாளொரு படமும் பாடலும் போட்டு நம்மைப் போன்றவர்களைச் சிறுவர்களாக மாற்றி, உள்ளங்களைக் கொள்ளை அடிக்கின்றீர்கள்!

        மலரும் நினைவுகளில் மனத்தின் வலியும் சுகமாய் இருக்கின்றது.

      மகிழ்ச்சி!

      நெகிழ்ச்சி!

      மலர்ச்சி!

இராமாநுசன்


மதுரை நினைவுகள்

 வண்டியில் நெகிழிப் பொருட்கள்!

படம் அனுப்பியவர் பாபு டீக்காராம்

நெகிழிப் பொருள்களை வண்டியில் வைத்தே

மகிழ்ச்சியுடன் கூவி அலைந்தேதான் விற்பார்!

தகிக்கும் வெய்யில்!  நனைக்கும் மழையோ

துடிப்புடன் செல்வார் விரைந்து.


மதுரை பாபாராஜ்



மதுரை நினைவுகள்

 மதுரையில் குரங்காட்டி!

படம் அனுப்பியவர் பாபு டீக்காராம்



கோலெடுத்துக் காட்டிக் குரங்கையே தன்போக்கில்

ஆட்டுவித்தே நாளும்

குரங்குவித்தை காட்டுகின்றார்!

ஆடும் குரங்கிற்கும் ஆடை  உடுத்திவிட்டார்!

பாடுபடும் கோலத்தைப் பார்.


மதுலை பாபாராஜ்

மதுரை நினைவுகள்

 மதுரையில் அக்காலம்! படம் பாபு டீக்காராம்



சட்டிகளும் பானைகளும் செய்தே தலைமீது

சுற்றிவைத்த சும்மாடில் வைத்தே சுமந்தேதான்

விற்பதற்குச் சந்தைக்குச் செல்கின்ற காட்சியிது!

நற்கூடல் மாநகரில் அன்று.


மதுரை பாபாராஜ்

Sunday, October 25, 2020

நண்பர் IG சேகருக்கு வணக்கம்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்



 தவக்கோலம் பூண்டோர் காவியுடை ஏற்றும்

களங்கம் சிறிதளவே கொண்டால்  கருமை

உளத்தில் இருளாய்ப் படர்வதைக் காட்டும்

இருவண்ணம் கொண்டாயே நீ.


மதுரை பாபாராஜ்

மனைவி படித்த கல்லூரி

 மனைவி வசந்தா படித்த கல்லூரி


ஆண்டு 1971--1975( திருமண ஆண்டு)

படம் அனுப்பியவர்

திவ்யஸ்ரீ மும்பை



சோழ இளவரசி குந்தவை நாச்சியார்

சோழ வரலாற்றில் நற்புகழ் நாயகி!

சோழநகர் தஞ்சை

அரசினர் கல்லூரி

நேயமுடன் மங்கை பெயர்சூட்டி நன்றிசொன்னார்!

ஞாலமே வாழ்த்தும் நினைந்து.


மதுரை பாபாராஜ்

இடைவெளி நூல் வெளியீடு

 சான்றோர்த் தளம் மின்நூல்வெளியீடு


ZOOM இணையதளம்


நூல் இடைவெளி: நாள் 24.10.20


நூலாசிரியர்: 

கவிஞர் ஞால ரவிச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்து!


இடைவெளி நூலை ரவிச்சந்ரன் தந்தார்!

தழைக்கும் தமிழில் கவிக்கோ அவர்கள்

அளித்தார் அணிந்துரை வாழ்த்தினார் வந்து!

எழுச்சிக் கவிஞரை வாழ்த்து.


நூல்நயம் பாநயம் எல்லாம் மிளிர்கின்ற

நூலைக் குறித்தே அருமையாய்ப் பேசினர்!

ஞால ரவிச்சந் திரனாரை வாழ்த்துவோம்!

நூல்பல தந்துவாழ்க நீடு.


அட்டைப் படத்தில் மகளின் கலையாற்றல்

முத்திரை ஏந்தும் கலைநயம் காண்கிறோம்!

பத்துபேர் சான்றோர்கள் பங்கெடுத்து வாழ்த்தினர்! 

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


அமைச்சர்

 அமைச்சர்!


மக்கள் நினைக்காத கோணத்தில் சிந்தித்தே

சிக்கலுக்குத் தீர்வுசொல்லும் பன்முக ஆற்றலுடன்

அக்கறை கொண்டவரே நாட்டின அமைச்சராம்!

முற்போக்கால் முன்னேறும் நாடு.


மதுரை பாபாராஜ்


கோபத்தை மறந்துவிடு

 கோபத்தை மறந்துவிடு!


நேற்று சினந்ததை இன்று நினைத்துப்பார்!

நேற்று, நகைக்கும் நமைப்பார்த்தே! உள்மனம்

தேற்றும்!  இனிமேல் சினங்கொண்டு சீறாமல்

சீற்றம் தவிர்த்துப் பழகினால் எல்லோரும்

போற்றுவார் வாழ்த்துவார் என்று.


மதுரை பாபாராஜ்

Saturday, October 24, 2020

கேட்காமல் செய்யும் உதவி

 கேட்காமல் செய்யும் உதவி!


பல்லிடுக்கில் சிக்கும் துரும்பை எடுப்பதற்குத்

துள்ளிவந்தே நாக்கு துருத்தித் துருத்தியே

தள்ளி நகர்த்தி நகர்த்தி எடுத்துவிடும்!

பல்லிடுக்கு கேட்காமல் செய்யும் உதவிக்கோ

இவ்வுலகில் ஈடில்லை சாற்று.


மதுரை பாபாராஜ்


தாயும் மகளும்

 Sharing a lovely piece of poetry


தமிழாக்கம்: மதுரை பாபாராஜ்


தாயும் மகளும்!


Two women, two different roles

The one who gave birth to me

And the one I gave birth to.


பெண்கள் இருவர்! இருவேறு பங்களிப்பில்!

என்னையே ஈன்றெடுத்த அன்னை ஒருத்தியாய்!

அன்னையாய் நான்பெற்ற என்மகளாய் இன்னொருத்தி!


One gave all the love she had

The other got all the love I had


ஒருத்தியோ தன்னன்பை வாரி வழங்க

ஒருத்திக்கோ என்னன்பை வாரிக் கொடுத்தேன்!


One strived in the life chosen for her

The other - for the life she chose


ஒருத்தியோ தேர்ந்தெடுத்த வாழ்வில் உழைத்தாள்

ஒருத்தியோ தன்வாழ்வைக் காக்க உழைத்தாள்


One made sure I didn't have tears

The other ensured I face my fears


ஒருத்தியோ நான்கண்ணீர் சிந்தாமல் பார்த்தாள்

ஒருத்தியோ அஞ்சாமல் நான்வாழச் செய்தாள்


One hears my voice to know if am well

The other can read my face and tell


ஒருத்தியோ என்குரலில் என்நலம் கேட்டாள்

ஒருத்தியோ என்முகம் பார்த்தே அறிந்தாள்


One had her eyes moist as she saw me go

The other made my eyes moist as I let her go


ஒருத்தியோ நான்சென்ற தைப்பார்த் தழுதாள்

ஒருத்தியோ என்கண்ணில் நீர்வழியச்

சென்றாள்


My past and my future when shall meet

Will be a picture ever so complete

Two women, two different roles


கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் சந்திக்கும் நேரம்

முழுமை நிறைவான சித்திரம்போல் தோன்றும்

இருபெண்கள் ஏற்றார் இருவேறு கோலம்


If only I could be a little like them,

The one who gave birth to me,

And the one I gave birth to.


இவர்களைப்போல் நானும் சிறுமியாக வேண்டும்

என்னையே ஈன்றெடுத்த அன்னை ஒருத்தியாய்!

அன்னையாய் நான்பெற்ற என்மகளாய் இன்னொருத்தி


Two women, two different roles.

பெண்கள் இருவர் இருவேறு பங்களிப்பில்


மதுரை பாபாராஜ்

Friday, October 23, 2020

நண்பர் IG சேகருக்கு வணக்கம்

 நண்பர் IG சேகருக்கு வணக்கம்


நீயும் நாங்களும்!


சறுக்கும் நிலைவந்தால் நீயோ உடனே

சிறகை விரித்துப் பறந்திடுவாய் வானில்!

சறுக்கிவிழும் சூழலை வெல்ல இயற்கை

கொடுத்த அமைப்பே உனக்கு.


சறுக்கும் நிலையில் பிடிமானம் இன்றி

சறுக்கி நழுவி விழுவோம் உருண்டு!

நிறைவான  ஆற்றல் இருந்தாலும் நாங்கள்

சறுக்கி விழுதல் இயல்பு.


மதுரை பாபாராஜ்


அப்பளப்பூ மலரும் நினைவுகள்

 மலரும்நினைவுகள்!


ஆண்டு 1957 களில் 


பலகையில் அப்பளப்பூ!


மதுரையில் மோதிலால் சாலை இரண்டில்

நடுப்பகுதி வீட்டில் அப்பளம் போடும்

புதுமையைப் பார்க்கநான் செல்வேன் வியந்து!

புதுவித மாகப் பலகை இருக்கும்!

பலவித மான வடிவில் உருவம்

பலகையில் உள்ளதுபோல் காணலாம்! வீட்டார்

பலகையில் எண்ணெயைத் தேய்ப்பார்! மாவை

பலகையில் வைத்தே கரத்தாலே தேய்ப்பார்!

விதவித மான வடிவில் செய்வார்!

அகம்வியக்கப் பார்த்திருந்தேன் அன்று.


மதுரை பாபாராஜ்

அப்பளம் பூ வடிவில் சுவையோ சூப்பர்..👏

👏முருகேசன்,மதுரை



Thursday, October 22, 2020

அய்யா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படம்


அய்யா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படம்

 புல்லாங் குழலூதும் கண்ணன் படத்தருகில்

உள்ளங் கவரும் மயில்தோகைக் காட்சியில்

கண்ணன் வைணவம் வேலனோ சைவமாகும்

எல்லாமே ஒன்றே அறி.


மதுரை பாபாராஜ்


தங்கைக்குப் பிறந்தநாள் வாழ்த்து


 தங்கை திருமதி.J. ராஜபாக்யம் பிறந்தநாள் வாழ்த்து!


நாள்: 23.10.20


பெற்றோரின் பாவாவின் ஆசி பொழிந்திருக்க

உற்றார் உறவு மகன்கள் மருமகள்கள்

மற்றும் மகளும் மருமகனும் பேரன்கள் பேத்திகள்

எப்போதும் சூழ்ந்திருக்க இன்பமுடன் வாழியவே!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

அறத்துப்பால் அதிகாரங்கள்

 அறத்துப்பால்

---------------------------------------------

அதிகாரத் தலைப்புகள்

---------------------------------------------

*கடவுளை வாழ்த்தி* *வான்சிறப்பை*

படித்தே *நீத்தார் பெருமை*

நினைத்தே *அறன்வலி யுறுத்து!*

*இல்வாழ்க்கை* என்றும் சிறக்க

*வாழ்க்கைத் துணைநலம்* வேண்டும்!

*நன்மக்கட் பேறில்* தலைநிமிர்வோம்!

*அன்புடை மையை* மூச்சாக்கி

*விருந்தோம்பல்* தன்னைப் போற்றிடுவோம்!

*இனியவை கூறல்* புகழாகும்!

*செய்ந்நன்றி அறிதல்* இமையாகும்!

*நடுவு நிலைமை* விழியாகும்!

*அடக்கம் உடைமை* உயர்வாகும்!

*ஒழுக்கம் உடைமை* உயிராகும்!

*பிறனில் விழையாமை* சிறப்பாகும்!

அறத்தில் சிறந்த அறமாகும்!

பொறுமை தானே *பொறையுடைமை!*

*அழுக்கா றாமை* சான்றாண்மை!

*வெஃகா மையே* அறிவுடைமை!

*புறம்கூ றாமை* நிம்மதிதான்!

*பயனில சொல்லாமை* நற்பண்பாம்!

*தீவினை அச்சம்* வீரந்தான்!

*ஒப்புர வறிதல்* பெருந்தன்மை!

*ஈகைப் பண்பே* வள்ளன்மை!

அதனால் *புகழ்தான்* நிலைத்திருக்கும்!

*அருளுடைமை* உயர்நெறியாம்!

*புலாலை மறுத்தல்* புனிதந்தான்!

*தவமே* இல்லறம் மறவாதே!

*கூடா ஒழுக்கம்* கேடாகும்!

*கள்ளாமை* தான் ஒளிமயமாம்!

*வாய்மைப்* பண்பே தூய்மையாம்!

கோபம் தவிர்ப்பதே *வெகுளாமை!*

*இன்னாசெய் யாமை* புகழ்ப்பண்பாம்!

*கொல்லா மைதான்* மனிதந்தான்!

*நிலையா மைதான்* இவ்வாழ்க்கை!

*துறவு* ஒழுக்கச் சிகரந்தான்!

*மெய்ய்யுணர் தல்தான்* மேன்மைதரும்!

ஆசையை ஒழித்தல் *அவாஅறுத்தல்!*

*ஊழ்தான்* வாழ்வின் திசைகாட்டி!


மதுரை பாபாராஜ்


தூக்கம் எங்கே!


தூக்கம் எங்கே?

முதுமைப் பருவத்தில் தூங்க முயல்வோம்

நடுநிசி நேரமோ தானாய் விழிப்போம்!

இதுதானே நித்தம் பழகியே போகும்!

பொதுவாய் முதுமை நிலை.


மதுரை பாபாராஜ்

Wednesday, October 21, 2020

வலையபட்டி கன்னியப்பன் அய்யாவுக்கு வாழ்த்து

 வலையபட்டி கன்னியப்பன் அய்யா 

அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


17.10.20


கன்னியப்பன் அய்யாவின் கன்னித் தமிழ்க்கவிதை

இன்சுவை ஏந்தும் கனிச்சுளைகள்! நற்றமிழின்

தொன்மை இலக்கணத்தை ஏந்தும் மலர்க்கொத்து!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்க! குடும்பத்தார் சூழ

நிறைவுடன் வாழ்க! மகிழ்ச்சியுடன் வாழ்க!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்



இன்பத்துப்பால் அதிகாரங்கள்

 இன்பத்துப்பால் அதிகாரங்கள்!


109 -- 133


*தகையணங்கு றுத்தலோ* பெண்ணழகைச் சொல்லும்!

அகக்குறிப்பைத் தானே *குறிப்பறிதல்* கூறும்!

*புணர்ச்சி மகிழ்தல்* *நலம்புனைந்து சொல்தல்*

மனக் *காதல்* கொண்ட *சிறப்புரைத்தல்*  ஆகும்!

மடலேறல் *நாணுத் துறவுரைத்தல்!* காதல்

உறவு வெளிப்பட்டு சாடையாய்ப் பேசல்!

*அலராய் அறிவுறுத்தல்!* ஏக்கம் பொழியும்

*பிரிவாற்றா மைதந்தார்!* துன்பம் உருக்கப்

*படர்மெலிந் திரங்கலுடன்* கண்கள் கலங்க

*சுடர்க்கண் விதுப்பழிதல்!* மேனி முழுதும்

*பசப்புறு காணும் பருவரல்* மற்றும்

படரும் *தனிப்படர் துன்பம் மிகுதி!*

அகத்தின் தலைவர் பிரிந்ததால்  துன்பம்

மிகவே *நினைத்துப் புலம்பல்!*  *கனவு

நிலையுரைத்தல்!* மாலைநே ரம்கண்டு துன்பம்

வருத்தும் *பொழுதுகண்டே நாளும் இரங்கல்!*

பிரிவால் *உறுப்புநலன் சீரழிதல்!* நெஞ்சம்

உருக *நெஞ்சொடு ஒன்றாக கிளத்தல்!*

*நிறை அழிதல்!* *அவர்வயின்வி தும்பல்!*

*குறிப்பு அறிவுறுத்தல்* மற்றும் *புணர்ச்சி

விதும்பல்*  *நெஞ்சொடு நின்று புலத்தல்!*

உறுத்துகின்ற ஊடலைக் காட்டும் *புலவி!*

*புலவி நுணுக்கம்* அடுத்தது *ஊடல்

உவகை* யுடனிங்கே இன்பத்துப் பாலின்

அதிகாரம் எல்லாம் நிறைவு.


மதுரை பாபாராஜ்


பொருட்பால் அதிகாரங்கள்

 பொருட்பால் அதிகாரங்கள்:


39--108


*இறைமாட்சி* சொல்லும் அரசனின் மாண்பை!

முறையான *கல்விப்* பயன்களைச் சொல்லி

அறிவிலியாய் ஆக்குகின்ற *கல்லாமை*

கூறும்!

நெறியுடன் *கேள்வி* யின் நற்பயனைக் காட்டி

*அறிவுடைமைச்* செல்வமென்றார்  போற்று.


*குற்றம் கடிதலில்* குற்றத்தைச் சாடுகின்றார்!

குற்றமற்று வாழ *பெரியார் துணைவேண்டும்!*

*சிற்றினம் சேராமல்* வாழ்தலே நல்லதென்றார்!

முற்றும் *தெரிந்து செயலாற்றல்* வேண்டுமென்றார்!

இப்படி வாழ்தலே நன்று.


தன்வலிமை நன்கறிதல் தானே *வலியறிதல்!*

நன்கு செயல்புரிய *காலம் அறியவேண்டும்!*

வென்று நிமிர *இடனறிதல்* வேண்டுமென்றார்!

நம்பிக்கை கொள்ள *தெரிந்து தெளிதலென்றார்!*

நன்கு எடைபோட்டே எந்தச் செயலையார்

செய்வார் என்றே *தெரிந்து வினையாடல்*

என்றுமே காக்குமென்றார் காண்.


சுற்றத்தைப் பேணுதல் *சுற்றந் தழாலாகும்!*

சற்றும் மறக்காமல் உன்கடமை யாற்றுதலே

*பொச்சாவா மையென்றார்* வள்ளுவர் அன்புடனே!

சுற்றமே காக்குமென்றார் சொல்.


*செங்கோன்மை* இல்லாத ஆட்சி *கொடுங்கோன்மை!*

அஞ்சுவதைச் செய்யாத பண்பே *வெருவந்த

செய்யாமை!* நம்பியோர் வாழ பரிவுகாட்டும்

உள்ளமே *கண்ணோட்டம்!* என்றே

உணர்த்துகின்றார்!

எல்லாமே சான்றாண்மைப் பண்பு.


உளவாளி ஆற்றல்கள் *ஒற்றாடல்* ஆகும்!

உளங்கனிந்த *ஊக்கம் உடைமையாய்* மாறி

துளியும் *மடியின்மை* கொண்டுவாழ்தல் நன்று!

புவியில் முயற்சியே *ஆள்வினையு டைமை!*

தவிக்கவைக்கும் துன்பம் எனினும் *இடுக்கண்

அழியாமையே* என்றும் துணிவு.


*அமைச்சில்* அமைச்சரின் பண்புகள் உண்டு!

இணையற்ற *சொல்வன்மை* என்னவென்று சொல்லி

*வினைத்தூய்மை* நன்மைகள் சேர்க்குமென்றார் அய்யன்!

*வினைத்திட்பம்* கொண்டவரை மன்னர் புகழ்வார்!

*வினைசெயல்வகை* என்றால் செயலாற்றல் என்றார்!

வினைவிளக்கம் தந்தார் புகழ்ந்து.


*தூதிலே* தூதனின் பண்புகளைப் பார்க்கின்றோம்!

மேதினியில் *மன்னரைச் சேர்ந்தொழுகும்*

நேரத்தில்

நாமிங்கே நாளும் பழகும் முறைசொன்னார்!

மாற்றார் மனக்குறிப்பை இங்கே *குறிப்பறிதல்*

கற்றவர்கள் தெய்வத்திற் கொப்பு.


*அவையறிதல்* என்றால் அவையறிந்து பேசல்!

அவையிலே பேச படித்தவர்கள் நிற்றல்

*அவையஞ் சாமை*

நிலைகுலைந்தால் கற்றகல்லி வீணென்றே நாணும்

நிலையெடுத்தார் வள்ளுவர் தான்.


*நாடு* தலைப்பில் எதுநாடு? சொல்கின்றார்!

நாடுகாத்து நிற்கும் *அரணை* விளக்குகின்றார்!

தேடும் *பொருள்செயல்வகை* தன்னிலே சேர்த்துவைத்தால் 

கேடுசெய்ய முன்வந்து நிற்கமாட்டார் மற்றவர்கள்!

கோடுபோட்டுக் காட்டுகின்றார் கூறு.


*படைமாட்சி* நாட்டுப் படையின் பெருமை!

*படைச்செருக்கில்* நாட்டின் பெருமிதம் கூறி

நடைமுறையில் *நட்பு* விளக்கம் அருமை!

முறையாகத் தேர்ந்தெடுக்க *நட்பாராய் தல்பார்!*

சிறப்பான நட்பைப் *பழைமையில்* தத்தார்!

தடம்புரள வைக்கின்ற *தீநட்பைச்* சொல்லி

கறைபடிய வைக்கின்ற *கூடாநட் பென்றார்!*

இறைத்த கருத்தெல்லாம் முத்து.


*பேதைமை* மாந்தரை வாட்டுமெனக் கூறி

மேதினியில் *புல்லறி வாண்மையே* என்றும்

தீதென்றார்! *இகலாம்*  பகையைத் தவிர்த்தலே

சேதமற்ற வாழ்வென்றார்! அம்மா *பகைமாட்சி*

வேகத்தை விட்டே விவேகத்தைக் கூறும்!

போர்செய்ய என்றும் *பகைத்திறம் கண்டே*

போர்செய்தால் வெற்றிதான் உண்டு.


*உட்பகை* இங்கே உடனிருந்தே  கொல்கின்ற

முற்றிய நோய்! *பெரியாரைப் பிழையாமை*

எப்போதும் நிம்மதி! *பெண்வழிச் சேறலோ*

பித்தனாக்கும்! என்றும் *வரைவின் மகளிரோ*

நித்தமும் வேடமேந்தி மோசடி செய்பவர்கள்!

எச்சரிக்கை தந்தவர் அய்யன்!


போதை அறிவை மயக்குமென்றே மன்பதைக்குத்

தூதனுப்ப *கள்உண்ணா மைதந்தார்!*

கேட்போமே!

*சூது* பொருளை இழக்கவைத்தே பாழாக்கும்!

வேதனையே வாழ்வாகும் கேள்.


உணவே மருந்தானால் இங்கே *மருந்தே*

உணவாகும் கோலமோ அண்டாது வாழ்வோம்!

குடிமக்கள் பண்பே *குடிமையாம்* என்றார்!

நெறிபோற்றும் வாழ்விங்கே *மானமாம்* பார்!

*பெருமை* இலக்கணம் இஃதென்றார் இங்கு!

பெருமைதரும் பண்புகளே *சான்றாண்மை* என்றார்!

உயர்தரப் பண்பே *பண்புடைமை* யாகும்!

தளமாகும் வள்ளுவமே வாழ்வு.


*நன்றியில் செல்வமோ* நன்மை பயக்காது!

மன்பதையே! *நாணுடைமை* என்றால் பழிச்செயல்கள்

செய்வதற்கு நாணுதல்! *குடிசெயல்வகை*

என்றாலோ

பல்வகைப் பண்பால் குடியுயர்த்தல்  என்றாரே!

தெள்ளுதமிழ் வள்ளுவத்தை வாழ்த்து!


உலகத்தின் அச்சாணி யாகும் *உழவு!*

உழவில்லை ஒன்றுமில்லை! *நல்குரவோ* துன்பம்!

*இரவு!* பிறரிடம் கேட்டுப் பெறும்வாழ்க்கை என்றார்!

*இரவச்சம்!* மற்றவரைக் கேட்கவே அஞ்சும்

நிலைதந்த அந்தப் படைத்தவனைச் சாடும்

நிலையெடுத்தார் வள்ளுவர் தான்.


கயவரும் நல்லவரும் தோற்றத்தால் ஒன்று!

*கயமை* அதிகாரம் தெள்ளத் தெளிவாய்க்

கூறும்

விளக்கமுடன்   இந்தப் பொருட்பால் குறள்கள்

பழம்போல் கனிந்ததே பார்.


மதுரை பாபாராஜ்

பொருட்பால் அதிகாரங்கள்: ..... What a job (nee .... gr8 pleasure in the morning....!) No words to thank... Let me delve into he ocean you've given me... Didn't want to wait for translation of this into Tamil...give this message in Tamil... Koti.. Koti.. namaskarams

VovSubramanian,Thane


தயிர் வாங்கலியோ!

 தயிர்வாங்கலியோ!


மலரும் நினைவு: 1956 களில்


சேலைத் தலைப்பை மடித்து  மடித்தேதான்

மேல்தலையில் சும்மாடாய் வைத்தே அதன்மீது

பானைத் தயிரைச் சுமந்து நடந்துவந்து

கூவி "தயிரோ தயிரம்மா" என்றேதான்

மாமதுரை வீதியில் அக்காலம் விற்றதுண்டு!

நானங்கே வாங்கியதும் உண்டு.


மதுரை பாபாராஜ்


Tuesday, October 20, 2020

இப்படியும் வாழ்கின்றோம்

 வாழ்க்கை அன்றும் இன்றும்!


அப்படியும் வாழ்ந்தோம்!


அன்றாடம் மாற்றிமாற்றி ஆடை அணிந்துகொண்டு

அங்குமங்கும் ஓடி பரபரப்பாய் வேலைக்கு

வண்டிகளில் சாலை நெரிசலில் சிக்காமல்

சென்று பணியாற்றி மாலையில் வீடுகளில்

வந்தே நுழைகின்ற வாழ்விலே அப்படித்தான்

அன்றாடம் வாழ்ந்திருந்தோம் அன்று.


இப்படியும் வாழ்கின்றோம்!


எளிமையாய் ஆடை அணிந்துகொண்டு வீட்டில்

மடிக்கணினி  முன்னால் உட்கார்ந்தே வேலை

முடிக்கின்ற சூழலில் எங்குமே செல்லும்

துடிப்பின்றி ஆடை அணிகலன் எல்லாம்

மடித்துவைத்த கோலத்தில் இந்தக் கொரோனா

பிடியிலே சிக்காமல் வாழும் நிலையில்

துடித்தேதான் இப்படியும் வாழ்கின்றோம் இன்று!

முடியும் நிலைவரும் நம்பு.


மதுரை பாபாராஜ்