Wednesday, November 29, 2017


அக்கறை எங்கே?

கடமைக்குச் செய்வதும் அக்கறை கொண்டே
உடன்பட்டுச் செய்வதும் வெவ்வேறாய்த் தோன்றும்!
அகத்திலே ஒன்றா? புறத்திலே ஒன்றா?
முகமே வெளிப்படுத்தும் இங்கு.

பேரன் வருண் பேகனோ!

மயிலொன்று காட்டில் குளிரில் நடுங்க
வழிவந்த பேகனோ போர்வையைத் தந்தான்!
குருவிகள் வீட்டில் குளிரில் நடுங்க
கருணையுடன் பேரன் வருணிங்கே துண்டை
குருவியின் கூண்டில் விரித்தான் இரங்கி!
கருணைமனம் வாழ்க நிலைத்து

Tuesday, November 28, 2017


வணிகர்க்குரிய  பண்புகள்!

REQUISITES OF A TRADER

அன்பு,பணிவு,கடமை உணர்வுடன்
இன்சொல், புன்னகை, கலப்படம் இல்லாமை
கொண்ட வணிகரிடம் நாளும் பொருள்வாங்க
வந்து குவிந்திடுவார் வாடிக்கை யாளர்கள்!
பண்பே வணிகத்தின் மாண்பு.


இங்கே முடியாது!

பெரியாரின் மண்ணில் மதவாத சக்தி
வரிந்துகட்டி ஊன்றத் துடிக்கிறது பாராய்!
தெரியாமல் கூட களைவளர்க்க மாட்டோம்!
தெளிவாக வாழ்வோம் உணர்.

வெண்புறா-- பெண்புறா

வேடன் வலையிலே சிக்கிய வெண்புறாவும்
வீடறிய நாளும் குடித்துவிட்டு வந்தேதான்
கூடழிய இங்கே அடிவாங்கும் பெண்புறாவும்
வேதனைக் காட்சியில் ஒன்று.

Saturday, November 25, 2017

யாரறிவார்

ஆழ்கடலின் ஆழத்தைக் காணலாம் மாதரின்
ஆழ்மன எண்ணத்தை யாரறியக் கூடுமிங்கே?
பாழ்மனமே ஏங்கித் தவிப்பதேன்? துள்ளுவதேன்?
தாழ்போட்டு நிம்மதியாய் வாழ்.



நீரோட்டம்

நீரோட்டம் தன்னை உணர்ந்து நிலத்தடியில்
பார்த்தே அளக்க கருவியுண்டு! உள்ளத்தில்
வேரோடும் மாந்தரின் எண்ணத்தைப் பார்த்தளக்க
பாரில் கருவியுண்டோ? கூறு.

தெய்வத்திரு அய்யாவுக்கு நினைவேந்தல்!
24.11.17
------------------------------------------------------------------
சிதம்பரம் அய்யாவின் ஆளுமைப் பண்பும்
சிறந்த அணுகுமுறை ஆற்றலும் அன்புச்
சிறகுக்குள் என்னை அரவணைத்த பாங்கும்
மறக்க முடியாதே இங்கு.

Thursday, November 23, 2017

துவளும் மனம்!

எடுத்த பிறவியில் இல்லறத்தில் சேர்ந்தோம்!
அடுத்தடுத்தே இன்பமும் துன்பமும் மாறி
படுத்தி எடுத்தும் மகிழ்ந்தே சிரித்தோம்!
எடுத்த பிறவி முடிக்கின்ற நேரம்
எதிலுமே சிக்கலில்லை! ஆனால் மனங்கள்
துடிக்கிறதே நாளும் துவண்டு.

சுமைதாங்கிக்கல்!(23.11.17)

எதையெதையோ தாங்கும்  சுமைதாங்கிக் கல்லாய்
நடைமுறையில் மாறி நடக்கின்றேன் நாளும்!
படைவரிசை போல உளைச்சல்கள் வந்தே

தடையின்றித் தாக்குவ தேன்?

Wednesday, November 22, 2017

Hug me and carry me!

Oh!  My tender breeze!
Hug me and carry me
To the wandering clouds!

Oh! My wandering clouds!
Carry me wherever you go!
What a beautiful sight!

Oceans! Mountains! Countries!
 Falls and Forests! Wild animals!
Who painted the landscape?

Such a Natural beauty!
With meticulous care!
I am breathless to see!

 Oh!What is that snow clad
Enchanting glittering mountain?
Clouds left me and joyously said

That it is your majestic Himalayas !
That is your nonpareil India!

Oh! My clouds! I am descending!
You have left me abruptly!

Oh! My tender breeze!
Come and hug me!
Clouds dropped me!

When the tender breeze
Hugged me and saved me!

I shouted with joy:
My India! My India!

I woke up from my sleep!
Realised it was my dream!

Madurai Babaraj
23.11.2017

Tuesday, November 21, 2017



புறவேடம்

கணவன் மனைவி கடமைகளைத் தாண்டி
மனங்களின் அன்பில் நெருக்கம் படரும்!
மனங்கள் விலகிப் புறவேடம் கொண்டால்
மணக்குமா இல்லறம் இங்கு?


உளைச்சலே துணை!

என்னதான் சொன்னாலும் எப்படித்தான் சொன்னாலும்
சொன்னதெல்லாம் காற்றோடு போகவிட்டே பார்த்திருப்பார்,!
 ஒன்றும்  நடக்காத மாதிரி தன்வழியைப்
பின்பற்றி உள்ளம் மகிழ சிரித்திருப்பார்!
என்றும் உளைச்சல் துணை.

கடமையே பக்தி!

இந்தமதம் அந்தமதம் எந்தமதம் ஆனாலும்
அங்கங்கே மக்கள் வழிபடும்  கோயில்கள்
இங்கே இருக்கிறதே! இன்னுமேன் கோயில்கள்
உண்டாக்கும் மும்முரம்? எண்ணற்ற ஏழைகள்
உண்ண உணவும்  உடுக்க உடைகளும்
தங்க இடமுமின்றி நாளும் தவிக்கின்றார்!
அன்பால் அரவணைத்தே நாளும் கடமைகள்
தொண்டுகள் செய்வதே வேடமற்ற பக்தியாகும்!
அன்பே கடவுள் அறி.

Sunday, November 19, 2017

எவரோ!

இவரும் அவரும் அவரும் இவரும்
எவரோ எனவிலகி இங்கே சிரித்தே
"இவர்தான்" அவர்சொன்னார்! இல்லை "அவர்தான்"
இவர்சொன்னார்! ஆனால் இவரும் அவரும்
எவர்தான்! வியப்புக் குறி!

Friday, November 17, 2017


பிடிசாம்பல்
உயிருள்ள மட்டும்தான் வாழ்க்கை! உணர்ச்சி!
உயிர்போனால் எங்கே உளைச்சல்? உறவு?
பயிர்வாடி மக்குவது போல மனிதன்
புவியில்  பிடிசாம்பல்! உணர்.


தவிப்பு!

பலநிகழ்வை உள்ளம் மறைத்தேதான் வைக்கும்!
சிலநிகழ்வை உள்ளம் வெளியிலே சொல்லும்!
பலநிகழ்வோ உள்ளே உளைச்சலைத் தூண்டும்!
கலங்கித் தவிக்கும் மனது.


புறநூறு

கடன்தொகை  நண்பரே! நானூறு வேண்டும்!
அகத்திலே நானூறு எண்ணுகின்றேன்! ஆனால்
புறத்திலே என்பையில் உள்ளதா என்றே
மடமட வென்றேதான் நோட்டுகளைப் பார்த்தேன்!
புறத்தில் குறுந்தொகை நூறுதான் உண்டு!
அகத்தில் நினைத்தாய்! புறத்திலே இல்லை!
புறநூறு தந்தால் மகிழ்வு.

நடுநிலைக்கே நா!

நடுநிலை யோடுநாம் பேசத்தான் வாயின்
நடுவிலே நாவோ இருக்கிறது! நாமோ
நடுநிலை விட்டே வளைத்து வளைத்துக்
கெடுநிலை கண்டதும் ஏன்

Wednesday, November 15, 2017

இணையர்
குழந்தையாய் பொம்மையாய்

கண்மணி! அந்தக் குழந்தையின் கையிலே
வண்வண்ண பொம்மை! மனம்விட்டுப் பேசியேதான்
தன்விருப்பம் போல விளையாடும் காட்சியைப்பார்!
தன்னை மறந்தேதேதான் பொம்மையை ஆட்டுவிக்கும்
அன்பில் உள்ளததன் வாழ்வு!

ஆருயிரே! நீங்கள் குழந்தை! கைகளில்
சேர்ந்திருக்கும் பொம்மைதான் நானாவேன்! உங்களின்
 ஆர்வக் கரங்கள் அசைவிற்கே ஆடுகிறேன்!
வாழ்வின் மகிழ்வே அது.

கண்மணி! நீயிங்கே ஆட்டுவிக்கும் நேரத்தில்
வண்ணபொம்மை நானாவேன்!
அக்குழந்தை நீயாவாய்!
அன்பரசன் நானிங்கே ஆட்டுவிக்கும் நேரத்தில்
வண்ணபொம்மை நீயாவாய்!
அக்குழந்தை நானாவேன்!
கூட்டுறவில் நாமோ குழந்தையாய் பொம்மையாய்
போற்றித்தான்  வாழ்கின்றோம்  இங்கு.

Tuesday, November 14, 2017


தாங்குமா?

நெஞ்சின் சுமையை இறக்கி வைக்கவைக்க
நெஞ்சில் சுமைகளை ஏற்றினால் என்செய்ய?
நெஞ்சம் கையளவே! ஆனால் கடலளவு ஊற்றெடுத்தால்
நெஞ்சந்தான தாங்குமா? கூறு.


காக்கும் கரங்களா? தாக்கும் கரங்களா?

கடலோரக் காவல் படைகளின் போக்கால்
சுடப்பட்டு வேதனைக்கே உள்ளாகி நாளும்
வதைபடும் மீனவரைக் காக்கவேண்டும்! யார்தான்
கடமையைச் செய்வாரோ வந்து?

இந்திய மற்றும் இலங்கைக் கடற்படை
அங்கங்கே மீனவரை மாறிமாறி வேதனையின்
அங்கமாக்கிப் பார்த்தால் மீனவர்கள் என்செய்வார்?
நம்புவது யாரைத்தான் சொல்.

காக்கும் கரங்களே தாக்கும் நிலையெடுத்தால்
தாக்கும் கரங்களெல்லாம் என்னென்ன செய்யுமோ?
ஏக்கத்தைத் தீர்த்துப் பாதுகாப்பாய் மீன்பிடிக்கும்
பொன்னாளை என்றுகாண்பார்? சொல்.


நடிகர்கள் நாடாளலாம்!

மக்களாட்சி நாட்டிலே தேர்தலில் நின்றவரை
மக்களிங்கே தேர்ந்தெடுத்தால் நாடாளும் வாய்ப்புண்டு!
நிற்போர் நடிகர்கள் என்றாலும் வாய்ப்பிருக்கும்!
கற்றவர்கள் கல்லாதோர் மற்றும் நடிகர்கள்
மக்கள்தான்!மக்களாட்சி நாட்டில் அனைவருமே
நிற்கலாம்! வெல்லலாம்! இங்கே உரிமையுண்டு!
மக்களுக்குள் பேதமில்லை கூறு.


வேடம்!

புறத்திலே சேர்ந்துவாழும் தோற்றம்! தமிழே!
அகத்தில் விலகிவாழும் தோற்றம்!  ஒருவர்
அகம்புறம் இப்படி வேடமிட்டால் நாளும்
புகைந்துருகும் தோற்றமே வாழ்வு.

மதிப்பிழந்த கட்டை!

பேசினால் வம்போ? கணைபறந்து சீறுமோ?
ஊசிகள் நெஞ்சிலே குத்துமோ? காதுகளை
மூடிவிடு! கண்களைப் பொத்திக்கொள்! வாய்மொழி
நாடிவந்தால் உள்ளே அடக்கு.

கடமையைச் செய்து விழிகளை மூடு!
நடப்பதை கைகட்டி வேடிக்கை பார்நீ!
வடக்கென்றால் என்ன?  தெற்கென்றால் என்ன?
சிறகிழந்த பாக்குயில் நீ.

கடமையைச் செய்தே உரிமையின்றி வாழ்ந்தால்
படபடப் பில்லை! பதற்றமும் இல்லை!
உடைமை,உறவோ எதுவுமே இல்லை!
கடைசிவரை நீமட்டுந் தான்.

என்னசொன்ன போதிலும் ஏதுசொன்ன போதிலும்
உன்சொல்லைக் கேட்பதில்லை! உன்னை மதிப்பதில்லை!
உன்னிடம் ஒன்றுமில்லை! பட்டமரம் ஆகிவிட்டாய்!
என்றும் தழைக்காது வாழ்வு.

மகள் வாரம்! DAUGHTER' S WEEK!(


மகள் வாரம்!
DAUGHTER' S WEEK!(12.11.17)

திருமதி சுபாதேவி ரவி

தாய்தந்தை என்னும் பெருமிதத்தை இல்லறத்தில் 
பூமகளாய் வந்தே  மகிழ்ச்சியுடன் தந்தவளே!
பொன்மகள் வாரமென்றே இவ்வாரம் கொண்டாடும்
அன்பில் தருகின்றோம் வாழ்த்து.



ஆமைபோல் இரு!

ஆமை உறுப்புகளை உள்ளடக்கி வாழ்வதைப்போல்
ஆனமட்டும் உந்தன் எதிர்பார்ப்பை உள்ளடக்கி
நீயுண்டு வேலையுண்டு என்றேதான் போய்வந்தால்
தேயுமா உன்மதிப்பு? செப்பு.




தோள்கொடு!

வாழ்ந்து முடித்தவர்கள் வாழ்வைத் தொடங்குவோர்க்கு
வாய்ப்பை வழங்கவேண்டும்!
முன்வந்து வாழ்த்தவேண்டும்!
வாய்ப்பை அடைக்கும் தடைக்கல்லாய் மாறாமல்
தோள்கொடுக்கும் தோழனாக மாறு.

மழைதருமோ

மழைதருமோ இம்மேகம்?
சொல்வாயா செந்தமிழே?
வான்பார்த்து வாழ்கின்றோம்!
வான்பொழிந்தால் இன்பு றுவோம்!

பெய்தமழை போதாதே!
பொய்த்துவிட்டால் தாங்காதே!
உள்ளமெல்லாம் தாகந்தான்
உடனேநீ பொழிந்துவிடு!

கூடுகின்ற மேகமே
கூடிப் பொழிந்துவிடு!
ஓடுகின்ற மேகமாய்
கூடித்தான் கலையாதே!

நாள்தோறும் ஏங்குகிறோம்!
நல்லமழை தந்துவிடு!
நீர்நிலைகள் நிரம்பட்டும்!
நிம்மதியோ நிலைக்கட்டும்!

Wednesday, November 08, 2017

சிலநேரங்களில் மனிதர்கள்

எதிரெதிரே பார்ப்பார்! தவிர்ப்பார் ஒருநாள்!
ஒதுங்கித்தான் செல்வோம்! சிரிப்பார் மறுநாள்!
கடந்துசெல்வோம் வம்படியாய் ஓடிவந்து பார்ப்பார்!
நடைமுறையில் மாந்தர்கள் காண்.

மேகமே பொழி!

தெளிவாய் இருக்கின்றாய் என்றேதான் நம்பி
வெளியேதான் சென்றோம் குடையெடுக் காமல்!
களித்துக் கருமேகம் கூடி மழையைப்
பொழிந்ததும்  நாங்கள் நனைந்தோம் மழையில்!
பொழிவில் தழைக்கும் உலகு.

Monday, November 06, 2017

Glory of Virtue

31

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
 ஆக்கம் எவனோ உயிர்க்கு.

What positive ways are there to achieve grandeur and earn wealth rather than virtuous path?

32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

There is no such way as Virtue  which ensures positive life. There is no such evil of forgetting that virtue.

33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

Whatever the good deeds you do wherever you go it should be carried out by virtuous  means without slackness.

34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

Immaculate mind is virtue.others are empty vessels.

35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

Jealousy,Avarice,Bubbling anger and taunting words are the four that tarnish the image of virtue.

36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது  பொன்றுங்கால் பொன்றாத் துணை.

Without postponing the good deeds if one  adopts virtuous path,that will be the imperishable fame even after death.

37
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

The rider of palanquin denotes the mind of virtue without oscillation whereas the bearer denotes the mind of vice considering life as burden.

38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

If one does the good deeds continuously without wasting even a single day, that deeds will act as stepping stone and not as stumbling block of life.

39
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

The renown that earned with pure mind following the virtuous life
Is happiness. Contrary to this , others are neither renown nor happiness.

40
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
 உயற்பால தோரும் பழி.

Avoiding avengeful actions and liking the virtuous deeds only will add feathers to one's glory.

MADURAI BABARAJ

நீத்தார் பெருமை

Greatness of ascetics

21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

The fame of strict disciplined ascetics who renounce the world will occupy an eminent place in the
Scriptures.

22
துறந்தார் பெருமை   துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

To estimate the greatness of ascetics is a Himalayan task like counting the number of dead in this world.

23
இருமை வகைதெரிந்து   ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

 One who analyses which is good and which is bad and adopt the positive good will be enthroned with greatness.

24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.

One who controls the five sensory organs  with the elephant goad called will power is a fitting seed for the land of renunciation.

25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
 இந்திரனே சாலுங் கரி.

Lord Indra is an example for the greatness of one who leads a disciplined life controlling his five senses.

26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

Great are those who accomplish impossible deeds.
Mean are those  who could not accomplish even the possible deeds.

27
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

World will recognise one who
 his five sensory organs without compromise.

28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

Greatness of the great glitters in their holy humble sweet words.

29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

Great people who scaled the peak of qualified characters will shed their anger at the moment itself.

30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

One who showers grace and love on all beings are called puritans whoever he may be.

Madurai Babaraj

GENEROSITY OF RAIN

குறள் 11:

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

Since rain gives life to earth,
Rain is considered as ambrosia.

குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

Rain gives food and rain becomes food.

குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

Despite the world is surrounded by ocean,if rain fails tentacles of starvation encircle all.

குறள் 14:

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

If flow of rain shrinks, Agriculture produce  will diminish.

குறள் 15:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

Absence of rain is mainstay for ruining the life of living beings
Flow of rain  brightens and shower prosperity for the ruined lot.

குறள் 16:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

Unless the rain from the sky comes
We cannot see even the tip of the grass

குறள் 17:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

If the clouds do not absorb the vaporised droplets of ocean water
and shower rain on the ocean,ocean will become dry.

குறள் 18:

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

If the rains fail to shower,then
Where will be worship and festivals for said supreme beings .

குறள் 19:

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

Philanthropy and penance will disappear from the world if the clouds fail to shower.

குறள் 20:

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

World cannot survive without water
Presence of water is impossible with absence of rain.


Sunday, November 05, 2017

THIRUKKURAL
திருக்குறள்

ஆங்கில மொழிபெயர்ப்பு முயற்சி!

GREETINGS

1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
 பகவன் முதற்றே உலகு.

Alphabet is leader of letters.
Likewise parents for our world.

2.கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
 நற்றான் தொழாஅர் எனின்.

What is the use of education
 if we lack character of humility before elders?

3.மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
 நிலமிசை நீடுவாழ் வார்.

Those  who follow  the philosopher who adorns  flower like mind.
Their glorious life will last long.

4.வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
 யாண்டும் இடும்பை இல.

Those who live without selfishness and likes and dislikes they will never have miseries.

5.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
 பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

Those who want to realise the  of God ,they will treat the good and evil at same wave length


6.பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
 நெறிநின்றார் நீடுவாழ் வார்.

Those who control the five sensory organs and follow the disciplined  path,they will have long life.

7.தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
 மனக்கவலை மாற்றல் அரிது.

Except those who follow the exemplary nonpareil personalities
The worries of minds of others cannot be changed.


8.அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
 பிறவாழி நீந்தல் அரிது.

Except those who follow the righteous great men,
others cannot swim  the ocean of miseries very easily.


9.கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
 தாளை வணங்காத் தலை.

If our five sensory organs do not function what will happen?
The same will happen to those who do not respect and bow
towards righteous great men.

10.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
 இறைவன் அடிசேரா தார்.

Those who try to conquer the ocean of birth,they should follow the prime leader.
 Otherwise they will stagger to swim across.

Saturday, November 04, 2017


சூரியனும் ஆகாயத்தாமரையும்!

ஆகாயத் தாமரை வந்தால் முகஞ்சுழிப்பார்!
ஆகாயச் சூரியனைக் கண்டால் முகம்மலர்வார்!
ஆகாயத் தாமரை இல்லாமல் வாழலாம்!
ஆகாயச் சூரியன் இல்லை, இருள்மயந்தான்!
ஆகாயச் சூரியனே வாழ்வு.

மதுரை பாபாராஜ்
04.11.17

புரிந்துகொள்!

உடலும் ஒதுக்கும்! உயிரும் ஒதுக்கும்!
அகமும்  ஒதுக்கும்! புறமும் ஒதுக்கும்!
உறவும் ஒதுக்கும்! உலகே ஒதுக்கும்!
கடைசித் தனிமை உனக்கு.


ஒதுங்கப் பழகு!

ஒதுங்கவேண்டும்! இல்லை ஒதுக்குவார் உன்னை!
ஒதுக்கினால் சோகத்தில் வாடாதே! வாழ்க்கை
புதுவரவை ஏற்கும் பழையதைத் தள்ளும்!
ஒதுங்கப் பழகுதல் பண்பு.


 புதிர்

வாழ்க்கை புதிராகும்! அந்தப் புதிரிலே
சூழ்நிலைகள் தோன்றி வியப்புக் குறிகளைத்
தேய்க்கும்! அழிக்கும்! விடைகள் தெரிவதுபோல்
காய்க்கும்! கனியாது காண்.

மதுரை பாபாராஜ்
03.11.17


மலரும் முள்ளும்

இதயத்தைப் பூக்கள் வருடினால் இன்பம்!
இதயத்தை முட்கள் உரசினால் துன்பம்!
நிகழ்வுகளின் தன்மை  உணர்த்துகின்ற காட்சி
இதமா? உரசலா? கூறு.

மதுரை பாபாராஜ்
03.11.17


ஆகாயத் தாமரையை நீக்கு

ஆகாயத் தாமரை ஏரியில் கண்டபடி
வேகமாய் நாளும் படர்ந்தே வளர்கிறது!
வேக வளர்ச்சியை வேடிக்கை பார்த்திருந்தால்
ஏரியை மூடிவிடும்! நீர்ப்பாதை மாசுபடும்!
ஏரியில் தாமரையை நீக்கு


அடிக்காதே

பெண்களை ஆண்கள் அடிப்பது குற்றந்தான்!
பெண்கள் மரியாதை தந்தே அடங்குகின்றார்!
பெண்கள் எரிமலையாய்ச் சீறி எழுந்துவிட்டால்
பெண்களைத் துன்புறுத்தும் ஆண்கள் நிலைகுலைவார்!
பெண்ணினத்தின் தாய்மையைப் போற்று!.

பெண்களும் ஆண்களை வாழ்வில் மதிக்கவேண்டும்!
கண்டபடி வாழ்வேன் என்பதும் கூடாது!
பெண்ணுரிமை என்றேதான் ஆணை மதிக்காமல்
இங்கே புறக்கணித்தல் தீது.

பெண்களும் ஆண்களும் விட்டுக் கொடுக்கவேண்டும்!
இன்முகம் இன்சொற்கள் இல்லறத்தில் போற்றவேண்டும்!
தன்னலம் விட்டுக் குழந்தைகள் வாழ்க்கைக்கே
 முன்னுரிமை தந்தேதான் வாழவேண்டும்! வாழ்வோர்க்கே!
என்றும் நிம்மதி உண்டு


அளவுமீறினால்

மச்சுவீட்டுக் காரர்கள் மாமழை போற்றுதும்!
குச்சுவீட்டின் ஏழைகள் மாமழை தூற்றுதும்!
எப்படிப் பார்த்தாலும் கொட்டி உலுக்கினால்
அப்பப்பா! நல்லமுதும் நஞ்சு.

VOV

VOICE OF VALLUVAR

வள்ளுவர் குரல் குடும்ப  நண்பர்
இராமசாமி அவர்களுக்கு
மணிவிழா வாழ்த்துப்பா!

03.11.2017

 
                           இவருக் கறுபதா? என்றே வியக்கும்
                           உருவம் இளமைப் பொலிவில் மிளிர
                          அருமை இராமசாமி வாழ்க வளர்க!
                          அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

                          திருக்குறள் வித்தகர்! நட்பிலே தென்றல்!
                          பெருந்தன்மைப் பண்பிலே அன்பின் சிகரம்!
                          பெரும்புகழ் பெற்றுக் குடும்பத்தார் சூழ
                          பெருமையுடன் வாழியவே நீடு.

                         வாழ்க்கைத் துணைவியின் மங்கல மாட்சியில்
                         நாள்தோறும் இல்லறம் இங்கே மணங்கமழ
                         வாழ்வாங்கு வாழியவே! பல்வளங்கள் சூழ்ந்திருக்க
                         ஆல்போல் வாழ்க தழைத்து.

Thursday, November 02, 2017

எதிர்மறை

எதிர்மறை எண்ணம்!

நகைச்சுவையை உள்ளம் நகைச்சுவையாய் ஏற்றால்
பகைச்சுவை தோன்றாது!  மாறாக பேச்சைப்
பகைச்சுவையாய்ச் சிந்திக்கும் எண்ணம் மனதில்
புகைச்சலை மூட்டிவிடும்!சொல்.
---------------------------------------------------------------------------------
மிகைச்சொல் அற்ற
தகைச்சொல் கவிதை
அய்யா.   

மதிவாணன் ராமலிங்கம்

மாசின்றி பாடு!

ஆசுகவி யாயிருந்தால் பாவினங்கள் துள்ளிவரும்!
காசுகவி் யானால் துதிப்பாக்கள் தேடிவரும்!
ஆசுகவி யானாலும் காசுகவி யானாலும்
மாசுகவி யாகாமல் பாடு.

11/2, 2:50 PM] Kavignarkamalkumar:
ஆகா! அருமை! உம்மை வாழ்த்தியொரு குறள் வழங்குகிறேன்.

*வீசுசொல்லால் விண்ணளக்கும் வித்தகம் கற்றநீர்*
*பேசுமொழி எல்லாம் கவி*

மைத்துனர் ஜோதிகுமாருக்கு எழுபது நிறைவு. 01.11.2017

மைத்துனர் ஜோதிகுமார்  ராஜி    
இணையர் வாழ்க வளமுடன்

மைத்துனர் ஜோதிகுமாருக்கு
எழுபது நிறைவு. 01.11.2017

எழுபதைக்  கண்டே எழுபத்து  ஒன்றில்
செழுமை  யுடனே  அடியெடுத்து  வைக்கும்
அருமையான  மைத்துனர்  ஜோதி  குமாரோ
எழுச்சி யுட னிங்கே  நூறாண்டு  வாழ்க!
தருவென  இல்லறம்  என்றும்  சிறக்க
அருமை  மனைவியாம்  ராஜி  மகிழ
மருமகள்கள்  மைந்தர்கள்  பேரனுடன்  பேத்தி
மருமகன்   அன்பு  மகளுடன்  நாளும்
பெருமையுடன்  சூழ்ந்திருக்க  பல்லாண்டு  வாழ்க!
அருட்பெருஞ்  ஜோதி  கருணை  பொழிய
அருந்தமிழ்போல்  வாழ்கபல்  லாண்டு.

வாழ்த்தும் இதயங்கள்
பாபாராஜ் வசந்தா

ஆசிகளை நாடும்
ரவி-சுபா-சுஷாந்த்

எழில்-சத்யா - நிகில்-வருண்

மணவாழ்த்து


  மணமகள்            மணமகன்
பி.கே.ராஜலக்ஷ்மி        இ.பிரதீப்

மணநாள்: 29.10.2017 ஞாயிறு

அரங்கம்:சந்த் நிரங்காரி சத்சங் பவன்

                      இருமனம் ஒன்றும் திருமண வாழ்வில்
                      கரம்பிடித்தே இல்லறத்தை ஏற்கின்ற நீங்கள்
                      நிரங்காரி வாழ்வியலைப் பின்பற்றி நாளும் .
                      அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

                      அன்பு, பணிவு, மரியாதை இம்மூன்றும்
                      நன்மதிப்பைத் தந்தே உயரவைக்கும்! உள்ளத்தால்
                      என்றும் மனிதநேயப் பண்புடன்  வாழ்ந்தால்
                      உங்களை வாழ்த்தும் உலகு.

                      மதகுருவின் ஆசியுடன் பக்திநெறி போற்றி
                      மதத்தால் கடவுளை உணர்ந்து சேவைக்
                      கடமைகளை நாளும் ஒற்றுமையுடன் செய்தே
                      அகமகிழ்ந்து வாழ்கபல் லாண்டு.

வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்
வசந்தா

புகைபிடித்தல் உயிர் குடிக்கும்
பகை எழுத்தால் தமிழ் ஒடியும்!

புகைக்கும் பழக்கமோ மேனியின் உள்ளே
பகைவடிவில் ஊடுருவி உள்ளுறுப்பைத் தாக்கிப்
படைபடையாய் நோய்களை ஏற்படுத்திக் கொல்லும்!
உடனே நிறுத்தினால் நன்று.

புகைச்சாம்பல் போல மனிதாநீ நாளை
புகைந்தேதான் போவாய்! புதைந்தேதான் போவாய்!
தகனமேடை தன்னில் ஒருபிடிச் சாம்பல்!
உடனடியாய் விட்டுவிடு  நீ.

புகையோ உயிரைக் குடிக்கும்!  தமிழே
பகையெழுத்தால் எங்கள் உயிரான  நீயோ
சடக்கென்றே இங்கே ஒடிந்திடுவாய்! உந்தன்
தடம்காக்க முன்னெழுவோம் வந்து.

வடமொழியை ஆங்கிலத்தை கூட்டிக் குழைத்து
நடைமுறையில் செந்தமிழ்ச் சொற்களுடன் தூவி
இதையே தமிழென்றே சொல்லும் இழிவை
விதைக்கின்றார் தாயே! எழு.

புகைத்தல் மக்கள் உயிரைக் குடிக்கும்!
பகைச்சொல் அருமைத் தமிழை ஒடிக்கும்!
நடைமுறை யானால் இனமே அழியும்!
பகைச்சொல்லைப் பந்தாடு நீ.

மதுரை பாபாராஜ்  30.10.2017