Tuesday, October 31, 2023

பகுத்தறிவே துணை


பகுத்தறிவே துணை!


எதிர்மறைச் சூழ்நிலையை நேர்மறையாய் மாற்றும்

மனவலிமை கொண்டேதான் வாழவேண்டும் இங்கே!

எதிர்மறைக்குத் தீர்வோ எதிர்மறை அல்ல!

பகுத்தறிதல் மாந்தரின் பண்பு.


மதுரை பாபாராஜ்

 

பெற்றோரின் கடமை உணர்வு


பெற்றோரின் கடமை உணர்வு!


அப்பாவும் அம்மாவும் பள்ளிக்குப் பிள்ளைகளை

எப்படியோ அனுப்ப பரபரப்பாய் ஓடுகின்றார்!

பெற்றோர் கடமை உணர்வுகளின் காட்சிகள்

அற்புதந்தான் காலையில் பார்.


மதுரை பாபாராஜ்

 

Monday, October 30, 2023

வாழ்க்கை வழங்கும் பாடம்


வாழ்க்கை வழங்கும் பாடம்!


அவரவர் செய்கை அவரவர்க்கு நன்றே!

அவரவர் செய்கை விளைவுகளை வாழ்க்கை

வழங்குகின்ற பாடம் உணர்த்தும் விரைவில்!

எவருமே தப்பமுடி யாது.


மதுரை பாபாராஜ்

 

திருமதி ஜோதி ராஜ்குமார் பாட்டியும்


திருமதி ஜோதி ராஜ்குமார் பாட்டியும் பேத்தியும்!


பாட்டிமீது உட்கார்ந்து பேத்தி சிரிக்கின்றாள்!

லூட்டி அடிப்பதில் பாட்டியை விஞ்சுவோமா?

பாட்டியை ஆட்டிவைத்துப் பார்ப்போமா என்றேதான்

பார்க்கின்றாள் பேத்தி ரசித்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

 

Sunday, October 29, 2023

USE AND THROW

 


தன்னலமே உயிர்மூச்சு!


USE AND THROW!


பயன்படுத்தித் தூக்கி எறிகின்ற வாழ்க்கை!

சுயநலத்தில் துள்ளிக் களிக்கின்ற மக்கள்!

விரல்விட்டே எண்ணும் அளவுக்கே நல்லோர்!

மரத்துத்தான் போகிறதே நெஞ்சு.


மதுரை பாபாராஜ்

Saturday, October 28, 2023

MR CN BIRTHDAY 28.10.23

திரு சி். நாகசுப்ரமணியன் -- FENNER

(Rtd G M FINANCE & ACCOUNTS)

திருமதி ரெங்கநாயகி (எ) ஜெயலட்சுமி இணையருக்குச் சதாபிஷேகம் விழா வாழ்த்துப்பா!


அகவைத்திருநாள் : 28.10.23


இடம் மதுரை


பிறந்து வளர்ந்து சிறந்தேதான் ஆற்றல்

முறைகளில் முன்னேறி இல்லறம் கண்டே

நிறைவாக வாழும் இணையர்! இணக்கம்

மணக்கவே வாழ்கபல் லாண்டு.


நன்றி மறவாமைப் பண்பின் குறள்களை

அன்றிங்கே வள்ளுவர் தந்ததே சிஎன்னை(CN)

எண்ணித்தான் என்றே வியக்கின்றேன்! என்தந்தை

அன்பான ஆசிகள் என்றும் இவர்களுக்கே

உண்டென்பேன்! வாழ்கபல் லாண்டு.


இப்படித்தான் வாழவேண்டும் என்ற இலக்கணத்தைக்

கற்றுத் தெளிந்தேதான் வாழ்கின்றார் வாழியவே!

சுற்றத்தார் நண்பர்கள் சூழ்ந்தேதான் வாழ்த்துகின்றார்

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


செல்வன் மகனும் அன்பு மருமகளும் 

செல்வன் மருமகனும் அன்புத் திருமகளும்

செல்லம் செழிக்கின்ற பேரக் குழந்தைகள்

இல்லறத்தை நல்லற மாக்கி மணக்கவைத்தே

உள்ளம் மகிழ்கின்றார் வாழ்த்து.


ஆசிகளை நாடும்

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்






Friday, October 27, 2023

காலைப்பொழுதில் வீடுகள்


காலைப் பொழுதில் வீடுகள்!


குக்கர் விசிலடிக்க மிக்சியோ கூவிட

அக்கறையாய்ச் சிற்றுண்டி சாப்பாடு ஏற்பாட்டை

அம்மா சமையலர் சேர்ந்து தயாரிக்க

சும்மா பரபரப்பில் காலைப் பொழுதிங்கே

அன்றாடம் போகிறது! பிள்ளைகள் பள்ளிக்குச்

சென்றதும் வீடுகளில் ஆரவாரம் ஓய்கிறது!

கண்குளிரக் காண்போம் ரசித்து.


மதுரை பாபாராஜ்

 

விடியல்


விடியல்!


விடியாதா! என்றேங்கி வாழ்வார் சிலர்தான்!

விடிகிறதே என்றஞ்சி வாழ்வார் பலர்தான்!

விடியலோ ஒன்றுதான்! தன்மைகள் வேறு!

வரவேற்பும் உண்டு! முகஞ்சுழிப்பும் உண்டு!

ஒரேவிடியல்! வாழ்க்கை இரண்டு.


மதுரை பாபாராஜ்

 

கதாநாயகனாவார் தம்பி


தம்பி கெஜராஜ் கதாநாயகனாவார்!


மருத்துவரைப் பார்த்து மருந்துகளின் மூலப்

பொருள்களை நாளும் விளக்கியே நோயை

மருந்துகள் இங்கே குணப்படுத்தும் தன்மை

இருப்பதைக் கூறும் பணியில் இருந்தார்!

மருந்து நிறுவனம் வைத்திருந்தார்! இங்கே!

பெரும்புகழ் கொண்டவரை வாழ்த்து.


அகவை அறுபதாகி நாளும் திரையில்

நடிப்பிலே ஆற்றலைக் காட்டி நடித்தார்!

படிப்படி யாகத்தான் முன்னேறி நூறு

படங்களுக்கும் மேலே நடித்துவிட்டார் தம்பி!

அகங்குளிர வாழ்த்துகிறேன் நான்.


படத்தில் கதாநா யகனாகத் தோன்றும்

நடைமுறை இங்கே விரைவில் கனியும்!

கலைத்துறை நாடுகின்ற அம்சங்கள் எல்லாம்

நிறைந்துள்ள தம்பிக்கு வாய்ப்பு கிடைக்கும்!

விரைவிலே பார்ப்போம் மகிழ்ந்து.


வாழ்த்தும் அண்ணன் 

மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

கடந்துவிட்ட காலத்தை எண்ணிக் குமுறிச்
சுணங்குதல் நேரத்தை வீண்டிக்கும் வேலை!
எதிர்காலம் இங்கே நமக்களிக்கும் வாய்ப்பை
எதிர்கொண்டே ஆய்வுசெய்து வாழ்தலே நன்று!
எதிர்காலம் நம்பிக்கை யாம்.

மதுரை பாபாராஜ்
 

Thursday, October 26, 2023

மாற்றத்தை ஏற்போம்



 மாற்றத்தை ஏற்போம்!


இன்றிருக்கும் கோலங்கள் 

நாளை மாறலாம்!

நன்மைகள் மாற்றத்தால் 

வந்து சேரலாம்!


நேர்மறை எண்ணங்கள்

என்றும் நல்லது!

எதிர்மறை எண்ணங்கள்

என்றும் கெட்டது!


எந்த ஊரும் எந்த நாடும்

நிலையில்லை இங்கே!

அமைகின்ற இடங்களிலே

வாழ்வதுதான் வாழ்க்கை!


திறமைக்கு ஏற்றாற்போல்

வாழ்க்கை ஒன்று உண்டு!

உழைப்பிற்கு ஏற்றாற்போல்

உயர்வுகளும் உண்டு!


படிக்கின்ற காலத்தில் 

படிக்கவேண்டும் இங்கே!

படிக்காமல் விட்டுவிட்டால்

காலமில்லை பின்னே!


நல்லவழி முன்னேற்றம்

நிம்மதிக்குத் தூது!

கெட்டவழி முன்னேற்றம்

வாழ்க்கைக்கே கேடு!


என்னென்ன படித்தாலும்

எந்தநிலை வந்தாலும்

அடக்கமும் பணிவுந்தான்

மதிக்கவைக்கும் நம்மை!


மரியாதை தந்தால்தான்

மரியாதை உண்டு!

ஒருவழிப் பாதையல்ல

மரியாதை இங்கே!


நல்நல்ல பண்புகளை

நாடவேண்டும் நாம்தான்!

வல்லரசாய் இந்தியாவை

மாற்றிடுவோம் நாம்தான்!


மதுரை பாபாராஜ்




பியூலா குடும்பம்


BEULA , HUSBAND, GRAND DAUGHTER AND GRAND SON


பேரனும் பேத்தியும் தாத்தாவும் பாட்டியும்

ஆர்வம் பெருமிதம் கொண்டே மகிழ்ந்திருக்க

பார்த்து ரசிக்கின்றோம் பல்லாண்டு வாழியவே!

பார்போற்ற வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

மாற்று வழிகளில் கண்டுணரும் எந்த
விளைவுகளைப் பற்றியும் ஆய்வுசெய் யாமல்
செயலை நிறைவுசெய்யும் வேகம் இருக்கும்!
மிகவும் துரிதமாக வெற்றிகர மாக
முடிப்பதற்குத் தேவைப் படும்.


மதுரை பாபாராஜ்
 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில் புத்தன் சொற்களுக்குக் கவிதை!

காண்பதற் கேற்றதை மட்டும் குறிவைக்க
வேண்டாம்! மறைந்திருக்கும் வாய்ப்பையும் பார்க்கவேண்டும்!
தேவைக் குரிய முடிவுகளைக் காணலாம்!
ஆர்வத்தின் வெற்றியே நன்று.

மதுரை பாபாராஜ்
 

சிறுகக் கட்டி பெருக வாழ்வோம்!



 சிறுகக் கட்டி பெருக வாழ்வோம்!


எடுத்தவுடன் யாரும் அகலக்கால் வைத்தால்

தடுமாறும் வாழ்க்கை! தடுமாற்றம் காணும்!

சிறுகத்தான் கட்டிப் பெருகத்தான் வாழ்ந்தால்

சிறப்பாக வாழலாம் நம்பு.


மதுரை பாபாராஜ்

Wednesday, October 25, 2023

திருமதி ரம்யா நாராயணன்


திருமதி ரம்யா நாராயணன் அனுப்பிய காணொளி!


குழந்தையின் கையில் பனிக்குழைவைக் கண்டே

துதிக்கையை நீட்டியே யானை எடுத்து

வயிற்றுக்குள் வாயால் விழுங்கிய காட்சி!

குழந்தை வியந்தது பார்.


மதுரை பாபாராஜ்

 

பக்குவம் கொள்வோம்



 பக்குவம் கொள்வோம்!


வாழ்க்கை அனுபவத்தில் குத்துகின்ற

முட்களும்

பார்த்தே ரசிக்கின்ற வண்ணமலர்க் கூட்டமும்

சூழ்நிலைக்  கேற்பவே மாறிமாறிக்

காட்சிவரும்!

சூழ்நிலையை ஒன்றாய்க் கருது.


மதுரை பாபாராஜ்

வரவணை செந்தில்


கலைஞர் செய்திகள் டிவிஅரசியல் பேட்டை!


வரவணை செந்திலே வா!

வரவணை செந்திலோ இல்லாமல் இங்கே

அரசியல் பேட்டையைப் பார்க்க மனமோ

விரும்புவ தில்லை! தவிர்க்கின்றோம் இங்கே!

வரவணை செந்திலே வா.


மதுரை பாபாராஜ்


 

சினமின்றி வாழ்வோம்


சினமின்றி வாழ்வோம்!


உடல்நலம் காக்க உடற்பயிற்சி வேண்டும்!

அடக்கம் பணிவு  உயர்வுக்கு வேண்டும்!

முரட்டுத் தனமோ சிறிதளவும் வேண்டாம்!

சினமின்றி வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

 

From Mrs Ramya Narayanan



 Video sent by Mrs.Ramya Narayanan Bengaluru


Octopus, colour fish, jelly fish

Hippocampus, Ducks,

Polar bear, whale jump, 

Man runs fearing the swirling waves, 

Row of small whales,

Flying Crane touching the waves 

What a sight!

The Dance of Nature

Full of rapture!

Grips the mind with

Awesome wonder! 

Aquatic beings thrills

With their innate movements.


Babaraj

Tuesday, October 24, 2023

திரு முத்துவீரகுமார்


திரு முத்து வீரகுமார் இணையருக்கு வாழ்த்து!


இயன்ற அளவிலே அற்புத மாக

அடுக்கிவைத்தே உள்ளம் கவர்ந்திட பக்தி

மணங்கமழச் செய்வதை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

காலத்தே செய்!

காலத்தே செய்!


TIME AND TIDE WAIT FOR NONE!


எதைச்செய்த போதிலும் காலத்தே செய்தால்

அதற்குரிய நன்மைகள்  காணலாம்! காலம்

தவறவிட்டால் சென்றகாலம் மீண்டும் வராதே!

எதையுமே காலத்தே செய்.


மதுரை பாபாராஜ்



 

தம்பி கஜராஜ் பிறந்தநாள்


தம்பி கெஜராஜ் பல்லாண்டு வாழ்க!


பிறந்தநாள்: 24.10.23


இருக்கும் இடத்தைக் கலகலப்பாய் மாற்றும்

ஒருகலை கொண்டவர் தம்பி கெஜராஜ்!

பலகலை வல்லுநராய் இன்று திகழும்

கலைத்துறை நாயகரை வாழ்த்து.


திரைத்துறையில் பல்வேறு வேடங்கள் ஏற்றே

கலைத்திறமை தன்னை வெளிப்படுத்தும் தம்பி

வளர்தமிழ்போல் வாழியவே  சுற்றங்கள் சூழ!

நலமுடன் வாழ்கபல் லாண்டு.


வாழ்த்தும் இதயங்கள்

மதுரைபாபாராஜ்--வசந்தா

குடும்பத்தார்

 

Monday, October 23, 2023

திருமதி பிருந்தா ராஜ்குமார் வீட்டுக் கொலு


திருமதி பிருந்தா ராஜ்குமார் இல்லத்தில் கொலுபொம்மை காட்சி!


தொடக்கநாள்: 15.10.23

நிறைவுநாள்:    23.10.23


கதைகளின் பின்னணியில் பொம்மைகள் தம்மை

படைவரிசை போல அடுக்கி அழகாய்

அகங்கவர வைத்த நடைமுறை நன்று!

வகைவகையாய் வண்ணவண்ண பொம்மைகள் ஆகா!

மகத்தான ஆற்றலுடன் பக்தி ரசத்தில்

உகந்தவண்ணம் வைத்தவரை வாழ்த்து.


நாள்தோறும் பூசைசெய்தே தின்பண்டம் தந்தேதான்

ஆர்வமுடன் பாடுபடும் பண்பினைப் பாராட்டு!

நேர்மறை எண்ணங்கள் ஒன்பது நாள்களும்

ஆள்கின்ற காலமென்றே வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


 

ஆடையற்ற மக்கள்

 ஆண்டியின் சொல் அரங்கில் ஏறுமா?

04.10.23

ஆடையற்ற மக்கள்!


காந்தியண்ணல் மேலாடை தன்னைக் கழற்றினார்!

போற்றிப் புகழ்கின்றோம்! வாழ்த்தும் வரலாறுதான்!

ஆனாலும் கோடிகோடி மக்கள் உடுத்திட

ஆடையின்றி வாழ்கின்றார் ஏன்?


காந்தியைப் போற்றுகின்றோம்! சாதனையை வாழ்த்துகின்றோம்!

ஆனாலும் ஏழைகள் அப்படியே வாழ்கின்றார்!

பேசுவது மில்லை! செயல்திட்டம் ஒன்றுமில்லை!

கூசாமல்  எல்லாம் விதியென்பார்! ஏற்கவேண்டும்!

பேச முடியுமா? சொல்.


மதுரை பாபாராஜ்


நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

திட்டமிடல் ஒன்றும் நடப்பதோ ஒன்றுமாய்
உண்டாகும் சூழ்நிலைகள்! உங்கள் இலக்கிற்கும்
உங்கள் குறிக்கோள் களுக்கும் எதிராக
இங்கேயோ ஆகாத மட்டுமே ஏற்கலாம்!
உங்கள் கவனம் இலக்கை அடைவதுதான்!
அந்தக் கவனமே நன்று.

மதுரை பாபாராஜ்
 

ஜிகர்தண்டா டபுள்X


ஜிகர்தண்டா டபுள்X வெற்றிபெற வாழ்த்து!


சன் டிவி நிகச்சி: 23.10.23


வெற்றிப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் குழுவினர்க்கு வாழ்த்து!


குழுவுணர்வின் பேருழைப்பால் தீபா வளிநாள்

வெளிவரும் இந்தப் படத்திற்கே வெற்றி

குவிப்பார்கள்! மக்கள் ரசிப்பார்கள் பார்த்து!

எழுச்சிமிகு வெற்றிபெற வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

Sunday, October 22, 2023

பேராசிரியர் சுபவீ அவர்களுக்கு வாழ்த்து!


பேராசிரியர் சுபவீ அவர்களுக்கு வாழ்த்து!


மணித்துளிச் செய்தி நிறைவு 2500!


மணித்துளி நேரத்தில் சான்றுடன் செய்தி

அணிவகுப்பை ஆற்றலுடன் ஆர்வமுடன் நாளும்

நடத்துகின்றார் பேரா சிரியர் சுபவீ!

தொடரட்டும் தொண்டென்றே வாழ்த்துகிறேன் இங்கு!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

Saturday, October 21, 2023

DRONE VIEW


DRONE VIEW

திருமதி ரம்யா நாராயணன் அனுப்பியதற்குக் கவிதை!


ஆளின்றிச் செல்லும் விமானத்தால் தஞ்சையின்

பேர்சொல்லும் கோயிலின் பேரழகைச்

சுற்றித்தான்

காட்டுகின்ற காட்சியைக் கண்குளிரப்

பார்த்திருந்தோம்!

ஆற்றல் அறிவிலைப் போற்று.


மதுரை பாபாராஜ்


 

வாய்மை நிலைக்கும்

 வாய்மையே வெல்லும்!


பொய்சொல்லி நற்புகழில் தற்செயலாய் வாழவேண்டாம்!

மெய்சொல்லி எப்புகழும் இல்லாமல் 

வாழலாம்!

பொய்களோ நீர்க்குமிழி போல நிலைக்காது!

மெய்களோ வெல்லும் நிலைத்து.


மதுரை பாபாராஜ்


வேடிக்கை பார்க்கின்றோம்

 வேடிக்கை பார்க்கின்றோம்!


26.09.23


அக்கா வீட்டில் எழுதியது


கண்ணீரில் தட்டுத் தடுமாறி நான்பேச

கண்ணீரில் தட்டுத் தடுமாறி மனைவிபேச

உள்ளத்தின் பரிமாற்ற எண்ணங்கள் தழுதழுக்க


இங்கேநான் அங்கே அவளும்  தேம்பியழ

எங்கள் நிலையெண்ணி வாழ்வை நொந்துகொண்டோம்!


என்று மாறுமோ? எப்படி மாறுமோ?

என்றே மணித்துளிகள் யுகமாக

செல்ல மறுக்கின்ற கோலத்தில்

வாழ்கின்றோம் நாங்கள் நாள்தோறும்!


தூக்கம் வரவில்லை சிரித்து நடிக்கின்றோம்

ஏக்கம் வலைவிரிக்க சிக்கித் தவிக்கின்றோம்


எங்களுக்கேன் சோதனையும் வேதனையும்

என்ன தவறுசெய்தோம் எங்களுக்குப் புரியவில்லை

இன்னும் எத்தனைநாள் சொல்ல வழியில்லை!


இன்றுமாறும் நாளைமாறும் என்றே வாழ்கின்றோம்

என்றுமாறும் என்றேதான்  எங்களுக்கே

தெரியவில்லை! புரியவில்லை! கலங்கித் தவிக்கின்றோம்!


முதுமைப் பருவத்தில் இத்தனை உளைச்சலா!

வேடிக்கை பார்க்கின்றோம் வேறென்ன செய்வதோ?


மதுரை பாபாராஜ்

26.09.23

ஓவியர் நிலம் துரை


ஓவியர் திருமதி நிலமங்கை துரைசாமி அவர்களுக்கு வாழ்த்து!


இன்னிசை மீட்டுகின்ற வீணையைக் கைகளில்

அன்பாய்ப் பிடித்தே அகங்குளிர வாசிக்கும்

பண்பரசி ஓவியத்தை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

படிப்பதே இலக்கு


படிப்பதே இலக்கு!


தடைகளை இங்கே விலக்கு! துணிந்து

படிப்பதே உந்தன் இலக்கு! உலகில்

படிப்பே இருளை அகற்றும் விளக்கு!

நெறிப்படுத்தி வாழவைக்கும் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

கடைத்தேற்றம் என்று?



 கடைத்தேற்றம் என்று?


படிப்பதற்கு ஆர்வம் இருந்தாலும் ஏழ்மை

படிக்க விடவில்லை என்பதைக் கேட்கும்

நொடிப்பொழுதில் உள்ளம் கலங்குதே! ஏழை

படிப்பதென்றோ? செந்தமிழே! சொல்.


கடையனுக்கும் வேண்டும் கடைத்தேற்றம் என்றான்

அடலேறு பாரதிதான் அஞ்சாமல்  அன்று!

கடைத்தேற்றம் காணாமல் தத்தளிக்கும் கோலம்

கடையனுக்கோ இன்றும் இருக்கிறதே ஏனோ?

கடைத்தேற்றம் என்றுவரும் சொல்?


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில் புத்தன் சொற்களுக்குக் கவிதை!


ஒவ்வொரு மாந்தரும் தங்களின் சிக்கலை
ஒவ்வொரு மாந்தரும் தீர்க்க முயற்சிப்பார்!
உண்மையில் நீங்கள் உதவ முடியுமானால்
முன்வந் துதவுங்கள்! மேற்கொண்டு
சிக்கலாக்கும்
வண்ணம் எதனையும் செய்யாமல் பார்ப்பதே
நன்றாகும் இங்கே உணர்.

மதுரை பாபாராஜ்

Friday, October 20, 2023

நண்பர் சேது மாதவன்


நண்பல் சேதுமாதவன் அவர்களுக்கு வாழ்த்து!


வண்ண இலையில் வழியும் மழைத்துளிகள்!

நண்பருக்கு என்னுடைய வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

மருமகன் ரவி கவிதைகள் 2


மருமகன் ரவி அனுப்பிய படம்! கவிதை 1

கீழ்த்திசையில் செங்கதிரோன் காட்சிகண்டேன்! வானத்தின்

மேலே நிலவின் விளிம்பிலே கோப்பையில்

நாவூறும் நல்ல குளம்பியும் வந்தது!

ஆகா! வணக்கத்தை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி அனுப்பிய படத்திற்குக் கவிதை 2

விண்கல மின்றியே கோப்பைக் குளம்பியை

வெண்ணிலவில் தொங்கவிட்ட காட்சி அறிவியலைக்

கண்டு ரசித்தேன் சிலிர்த்து.

மதுரை பாபாராஜ்

 

நண்பர் முரளி


நண்பர் முரளி அனுப்பிய படம்!


கூடை நிறைய பழங்கள்! இரண்டுவண்ணக்

கோப்பைக் குளம்பியும் தந்தே வணக்கத்தைக்

கூறுகின்ற நட்பினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் மலையலிங்கம்

 நண்பர் மலையலிங்கம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அன்பும் பணிவும் அடக்கமும் வாழ்க்கையின்

பண்புகளாய்க் கொண்டேதான் நாளும் உழைக்கின்றார்!

நண்பர் மலையலிங்கம் நற்றமிழ் போல்வாழ்க!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


குறள்நெறி் போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்க! மகிழ்வுடன் வாழ்க!

நிறைவுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா


நேரத்தை மாற்று

 நேரத்தை மாற்று!


மூன்று மணியளவில் முட்டைதோ சைகள்தான்

காலை உணவாகும்! நண்பகல் சாப்பாடோ

ஏழு மணியளவில் ஏற்பார்! இரவிலே

சாப்பாடு ஏற்பார் நடுநிசியில் நித்தமென்றால்

ஏற்பாடு செய்வாரோ யாருமிங்கே? இத்தகைய

சாப்பாடு நேரத்தை மாற்று.


மதுரை பாபாராசு



Thursday, October 19, 2023

பேரன் வருண்



 பேரன் வருணும் தாத்தா பாபாவும்!


தாத்தாவும் பேரனும் முட்டி விளையாடும்

காட்சியில் உள்ளம் திளைக்கிறது! தோற்கின்ற

தாத்தாவின் செல்லத்தைப் பார்.


மதுரை பாபாராஜ்

அன்பும் அரவணைப்பும் ஆசான் போல் கண்டிப்பும் ஒன்றாய் பெறுதல் பெருவரமே😍


முட்டினாலும் முனைந்தே தான்   


முத்தம் தருவார் தாத்தா 

என்பதை புரிந்தே தான் 

புன்னகை பூக்கிறான்  பேரன்😍

ரம்யா நாராயணன்

மனநிலை


மனநிலை!

யுகப்பொழுது நாளும் மணித்துளி யாக

விரைவது போல விடுமுறை நாள்கள்

விரைகிறது! பள்ளி இயங்குகின்ற காலம்

மணித்துளி கூட யுகம்போல் நகரும்!

மனநிலை போக்கினைப் பார்.


மதுரை பாபாராஜ்


 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

முடிவை எடுப்பது முக்கியம்! மேலும்
தகவலை ஆய்தல் சரியாகத் தேர்வை
எடுப்பதும் வெற்றிக்கே முக்கியம் ஆகும்!
உகந்ததைத் தேர்வுசெய் இங்கு.

மதுரை பாபாராஜ்
 

Wednesday, October 18, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சிந்தனைச் சொற்களுக்குக் கவிதை!

நமக்கிருக்கும் சிக்கலுக் குள்ள கருவி
நிலைகள் இவற்றைத் தெளிவாக இங்கே
புரிந்துகொண்டு நாமோ செயல்பட வேண்டும்!
அதனால் விழிப்புணர்வு கொண்டதான தீர்வை
விடையாகக் காணலாம் நம்பு.

மதுரை பாபாராஜ்
 

வள்ளுவத்தைப் போற்று



 வள்ளுவத்தைப் போற்று!


கிடைத்திருக்கும் வாழ்வைச் சிதைக்காமல் வாழும்

மனநிலைப் பக்குவத்தைப் பெற்றேதான் நாளும்

அனைவரும் வாழ்த்த அருமையாய் வாழ்க!

மனையறம் போற்று மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

Tuesday, October 17, 2023

வளைந்து கொடு


வளைந்துகொடு!


வளைந்திருக்கும் வீணையில் இன்னிசை கேட்கும்!

வளைந்து கொடுக்கின்ற வாழ்வில் அமைதி

இசைபொழியும் நிம்மதி நாளும் கிடைக்கும்!

வளைந்து கொடுக்கப் பழகு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் சேதுமாதவன்


நண்பர் சேதுமாதவன் அனுப்பிய படம்

காலைப் பொழுது மலர்கிறது! வாழ்க்கையின் 

சூழல் இனிமையாய் மாறட்டும்! வாழ்த்துகிறேன்!

நாள்முழுதும் இன்பமென வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

Monday, October 16, 2023

மகள் திருமதி ரம்யா நாராயணன்


 *அகவைத் திருநாள் 17.10.2023 வாழ்த்துப்பா* 


வசந்தா மழையின் தெய்வம்..

எங்கள் வீட்டின் வாழும் தெய்வமும் அவளே...!!


கருணையின் மழை,

அன்பின் மழை,

அமைதியின் மழை,

அதிர்ஷ்டத்தின் மழை,

ஆர்வத்தின் மிகை,

திறமைகளின் மிகை, 

தீர்க்கத்தின் மிகை என்று அடுக்கிக் கொண்டே போகலாம் அன்னையின் அருமைகளை...!!


வசந்தத்தின் வரவுக்காக காத்திருக்கும் 

விருட்சங்கள்  வின்வரை வளர தளிர்க்க தவித்திருக்கும்...


எங்கள் வசந்தமோ குடும்பமெனும் விருட்சம் தழைக்க வேண்டி 


நாளும் அன்பெனும்  தென்றலை வீசி மலர்கள் பூத்து கனிகள் கனிய


மனம் மகிழ்ந்து 


மனை தனை போற்றி 

மங்களமாய் வாழ்கின்றார்...🫶💖


அகம் குளிர்ந்தும்

புறம் புத்துணர்வோடும்

புன்னகை பூத்தும்

என்றென்றும் வாழ வாழ்த்துகின்றோம்🎊🎊🎊

வணங்குகின்றோம்🙏🙏


தங்கள்

ஆசிர்வாதங்களை வேண்டும் அன்பு உள்ளங்கள் 😍

நாராயணன்

ரம்யா

திவ்யஶ்ரீ❣️❣️❣️


மற்றும் குடும்பத்தார்😍

மருத்துவர் சேது


மருத்துவர் சேது அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!


அன்பாக நேசிக்க மக்கள் உருவானார்!

நன்கு பயன்படுத்த இங்கே பொருள்களை

உண்டாக்கி னார்கள்! உலகம் குழப்பத்தில் 

உள்ளதன் காரணம் என்ன? பொருள்களை

எல்லோரும் நேசிக்கின் றோம்நாம்தான்! மக்களை

எல்லோரும் இங்கே பயன்படுத்திப் பார்க்கிறோம்!

எல்லாமே நம்மால்தான் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

அன்பு, போரூர்


வசந்தாவின் மனதை, பாபாராஜின்

வசம் தந்து ,

என்றும் அதை மணக்க செய்து மகிழ்ச்சியுடன், பல்லாண்டு! பல்லாண்டு வாழ! சகோதரியை வாழ்த்துகிறோம் !

அன்பு

போரூர்


 

பேரன் நிக்கில் அபிசேக் பிறந்தநாள்


 பேரன் நிக்கில் அபிசேக் 

பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத்திருநாள்: 09.10.23


அகவை. 18


உனக்கு வயது பதினெட்டு

பொறுப்பை உணர்த்தும் படிக்கட்டு!


அன்னை தந்தை ஆசானை

வணங்கி வாழ்ந்தால் நல்லது!


நன்றாய் படித்து முன்னேறு

நாளும் உழைத்தே முன்னேறு!


திறமை உனது செல்வந்தான்

அதனை வளர்த்து முன்னேறு!


நண்பர்கள் சூழ்ந்தே வாழ்த்துகின்றோம்

உறவினர் சூழ்ந்து வாழ்த்துகின்றோம்!.


என்ன மொழிகள் படித்தாலும்

தமிழில் உணர்வு பெறுவாயே!


குறளைப் போற்றி வாழ்கவே!

குவலயம் போற்ற வாழ்கவே!


தாத்தா பாட்டி எல்லோரும்

வாழ்த்துப் பாதான் பாடுகின்றோம்!


வாழ்க வாழ்க பல்லாண்டு.

தமிழ்போல்  வாழ்க பல்லாண்டு


வாழ்த்தும் இதயங்கள்:

மதுரை பாபாராஜ்-- வசந்தா

மற்றும் குடும்பத்தார்

நடுநிலை நாயகன் சுசாந்த்


நடுநிலை நாயகன் சுசாந்த்!


வெற்றியென்றால் துள்ளிக் குதிப்பதும் தோல்வியென்றால்

முற்றும் தளர்வதும் இல்லா நடுநிலையை

கற்றுத் தெளிந்தேதான் பேரன் சுசாந்த்திங்கே

எப்போதும் ஆடுகிறான் சொல்.


மதுரை பாபாராஜ்

 

மனைவி வசந்தாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து


Vasantha birthday cake cutting 17.10.23


மனைவி வசந்தாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத் திருநாள்: 17.10.2023


புன்னகை பூத்த முகமும் களங்கமற்ற

அன்பில் கலந்த அகமும் இணையரின்

பண்பாக இல்லறத்தில் என்றும் இணக்கத்தை

உண்டாக்கி வாழ்தல் அறம்.


உனக்குநான் என்றும் எனக்குநீ என்றும்

தனிமை அரவணைக்க வாழும் இணையர்

முதுமைப் பருவத்தில் காண்கின்ற கோலம்!

மனைதோறும் இக்காட்சி உண்டு.


கடமை பொறுப்புணர்வில் நாளும் திளைத்தே

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்


அருமை

மகிழ்ச்சி

பாராட்டுக்கள்

மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம்


வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம்

இறையருளால் மனநலம் உடல்நலம் இரண்டும் நிறைவாகப் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறோம்

மலர் சி இரா குடும்பத்தினர்

பெண்கள் நாட்டின் கண்கள் மட்டுமல்ல இவ்வுலகை வழிநடத்தும் முன்னோடிகள்!

     தனிமனிதரை, நண்பர்களை, உறவுகளை, குடும்பத்தாரை, அலுவலகத்தை, நிறுவனங்களை, நாட்டை என்றெல்லாம் ஆங்காங்கே ஆட்சி நடத்துபவர்களும் பெண்களே!

      அண்ணியாரின் ஆட்சியில் தங்களின் அழகான வாழ்க்கை, அமைதியை, பொருண்மையை, முன்னேற்றத்தை, சாதனைகளைக் கண்டிருக்கும் என எண்ணுகிறேன்.

       அண்ணியாரின் பணிகள் தொடரட்டும்! வெல்லட்டும்! வெற்றி நமதே!

இராமாநுசன்

மீள்பதிவு!


அம்மா வசந்தா பிறந்தநாள் வாழ்த்து!


இல்லறத்தின் இலக்கணத்தை

இம்மியும் வழுவாமல்

நல்லறத்தை நடாத்தி

நன்மக்கள் பெற்று

தன்னோடு இருக்கின்ற

பன்முக ஆற்றல்தன்னை

பாங்காக பகிர்ந்தளித்து

பாங்குடனே வாழும்

அம்மா வசந்தாவை

அய்யா பாபாவின்

வாழ்விணையர் வசந்தாவை

வசந்தம் என்றும்வீசி

வளமான வாழ்வையென்றும்

நலமுடன் என்றும்பெற்று

நிறைவாழ்க்கை நித்தம்பெற்று

நலமுடன் என்றும்வாழ

நெஞ்சார வாழ்த்துகிறேன்!

வாழ்க! வாழ்க!

வாழ்க பல்லாண்டு!


வாழ்த்தும்

கோ.இமயவரம்பன்

வள்ளுவர் குரல் குடும்பம்

17.10.2023