Sunday, January 31, 2021

காலங்களில் அவள் வசந்தம்!


 காணொளி மனோகரன் அவர்களுக்கு வாழ்த்து.

காலங்களில் அவள் வசந்தம்!

கண்ணதாசனின் காவிய வரிகள்!


அயல்நாட்டுக் காட்சிகள் உள்நாட்டுக் காட்சி

இயற்கையின் காட்சிகள் பாட்டுக்கு ஏற்ற

நயமான பொருத்தமான காட்சிகள் என்றே

வரகவி கண்ணதாசன் நற்பெயர் இங்கே

இயற்கையுள்ள மட்டும் வழங்குமென்ற வாழ்த்தை

உரக்கவே சொல்வதை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

118 கண் விதுப்பழிதல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

118 கண் விதுப்பழிதல்

( கண் கலங்கி வருந்துதல்)

குறள் 1171:

கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்

தாங்காட்ட யாங்கண் டது.


காதலரைக் காட்டியே துன்பத்தைத் தந்துவிட்டு

வேதனையில் கண்கள் அழுவதேன் இப்போது?

சோதனைமேல் சோதனை தான்.

குறள் 1172:

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்

பைதல் உழப்ப தெவன்.


அன்று மயங்கிய கண்கள் தவிப்பதேன்

இன்று பிரிவை நினைந்து.?

குறள் 1173:

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்

இதுநகத் தக்க துடைத்து.


அன்பரைப் பார்த்துத் துள்ளிய கண்களோ 

இன்று பிரிவில் துவள்வதைக் கண்டால் என்னுள்ளே தோன்றும் சிரிப்பு.

குறள் 1174:

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா

உய்வில்நோய் என்கண் நிறுத்து.


காதலின் துன்பத்தை எனக்களித்து கண்களோ

நீர்வறண்டு வாடுவதைப் பார்.

குறள் 1175:

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக்

காமநோய் செய்தவென் கண்.


கடலளவு துன்பத்தைத் தந்துவிட்டே தூக்கம்

இழந்தே தவிக்கிறது கண்.

குறள் 1176:

ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண்

தாஅம் இதற்பட் டது.


கண்கள் எனக்களித்த துன்பத்தைத் தானுமிங்கே

நன்கு படுவதும் நன்று.

குறள் 1177:

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து

வேண்டி அவர்க்கண்ட கண்.


அன்பரைப் பார்த்தேதான் துள்ளிய கண்களே!

துன்பத்தில் தூக்கமின்றிக் கண்ணீரும் வற்றட்டும்

இன்று பிரிவேக்கத் தால்.

குறள் 1178:

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்

காணா தமைவில கண்.


உள்ளம் விரும்பாமல் சொல்லால் விரும்புகின்றார்!

துள்ளுதே பார்ப்பதற்குக் கண்.

குறள் 1179:

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன கண்.


அன்பர் வரவில்லை! கண்களோ தூங்கவில்லை!

வந்தால் பிரிவாரோ என்றெண்ணித் தூங்கவில்லை!

துன்பமெல்லாம் கண்களுக்குத் தான்.

குறள் 1180:

மறைபெறல் ஊராhக் கரிதன்றால் எம்போல்

அறைபறை கண்ணார் அகத்து.


பறையறைந்து சொல்லிவிடக் கண்கள் இருக்க

மறைப்பதேது ஊரா ரிடம்?

























நண்பர் IG சேகர் அனுப்பியது

 நண்பர் IG சேகர் அனுப்பியது


நண்பருக்கு வணக்கம்

இணக்கமாய் வாழ்தல் இணையர்க்கு அழகே!

பிணக்கின்றி வாழும் குடும்பம் அழகு!

மனத்தால் அனுசரித்து விட்டுக் கொடுத்தால்

மனையிலே அமைதி அழகு.


மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி அனுப்பியது

 வணக்கம்


சிலநேரம் பேசாமல் வேடிக்கை பார்க்கும்

நிலையே உங்களுக்கு நல்லது! உண்மை

முடிவிலே தானாக வந்துவிடும் இங்கு!

அதிகத் தலையீடு தீது.


மதுரை பாபாராஜ்😂

117 படர்மெலிந்திரங்கல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

117 படர்மெலிந்திரங்கல்

( துன்பத்தால் மெலிந்து புலம்பல்)

குறள் 1161:

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்

கூற்றுநீர் போல மிகும்.


இறைக்க இறைக்கவே ஊறிவரும் ஊற்று!

மறைக்க மறைக்க வெளிவரும் 

காதல்!

தடைகள் தடையல்ல சாற்று.

குறள் 1162:

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்

குரைத்தலும் நாணுத் தரும்.


துன்பத்தை என்னால் மறைக்க  முடியவில்லை! 

அன்பரிடம் சொல்வதற்கோ நாணம் 

தடுக்கிறது!

என்னென்பேன் என்னிலை சொல்.

குறள் 1163:

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்

நோனா உடம்பின் அகத்து.


காதலும் நாணமும் காவடித் தண்டுபோல்

ஊசலாட்டம் கொள்கிறது பார்.

குறள் 1164:

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்

ஏமப் புணைமன்னும் இல்.


காதல் கடலைக் கடப்பதற்குத்

தோதான

தோணிதான் இல்லை எனக்கு.

குறள் 1165:

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு

நட்பினுள் ஆற்று பவர்.


காதலில் உள்ளபோதே துன்பம் தருகின்றார்!

மோதலில் என்னசெய்வா ரோ?

குறள் 1166:

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது.


காதல் மகிழ்ச்சி கடல்போல் பெரிதுதான்!

வேதனைமுன் முற்றும் சிறிது.

குறள் 1167:

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்

யாமத்தும் யானே உளேன்.


காதல் கடலினை நீந்திக் கரைகாணேன்!

தூங்கவில்லை நள்ளிரவுப் போழ்து.

குறள் 1168:

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா

என்னல்ல தில்லை துணை.


உலகினைத் தூங்கவைத்தே இந்த இரவு

தனிமையில் உள்ளது! நான்தான் இதற்குத்

துணையானேன்! யாருமில்லை வேறு.

குறள் 1169:

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்

நெடிய கழியும் இரா.


இரவிங்கே நீளும் கொடுமை, தலைவன்

பிரிவுக் கொடுமைக்கும் மேல்.

குறள் 1170:

உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

நீந்தல மன்னோவென் கண்.


என்னவர் ஊருக்கோ என்மனம்போல்

கண்களும்

சென்றால்  கண்ணீர்சிந் தாது.




























116 பிரிவாற்றாமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

116. பிரிவு ஆற்றாமை

(பிரிவிற்காக வருந்துதல்)

குறள் 1151:

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை


பிரிந்துசென்றால் என்னிடம் சொல்லாதே! நீயோ

திரும்பி வரும்போது யாரிருப்பார் இங்கே?

அவரிடம் சொல்லிவிட்டுச் செல்.

குறள் 1152:

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

புன்கண் உடைத்தால் புணர்வு.

அவருடைய பார்வை மகிழ்ச்சிதான்! ஆனால்

அவர்பிரிவோ அஞ்சவைக்கும் சாற்று.

குறள் 1153:

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

பிரிவோ ரிடத்துண்மை யான்.


பிரிவுத் துயரறிந்தும் செல்லமுற் பட்டால்

அவரன்பை என்னசொல்ல நான்?

குறள் 1154:

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

தேறியார்க் குண்டோ தவறு.


பிரியமாட்டேன்! தேற்றினார்! நம்பினேன் நான்தான்!

அதுதானோ என்தவறு சொல்?

குறள் 1155:

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு.


என்னுயிரைக் காக்க பிரிவைத் தவிர்க்கவேண்டும்!

சென்றாலோ கூடல் அரிது.

குறள் 1156:

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

நல்குவர் என்னும் நசை.


பிரிவுரைக்கும் கல்நெஞ்சர் வந்துமீண்டும் அன்பில்

திளைக்கவைப்பார் என்பது வீண்.

குறள் 1157:

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை.


என்னைத் தலைவன்  பிரிவதை வளையல்கள்

முன்கழன்றே சொல்கிறதோ இங்கு?

குறள் 1158:

இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்

இன்னா தினியார்ப் பிரிவு.


உறவற்றோர் ஊர்வாழ்தல் துன்பம்! தலைவன்

பிரிவோ உறுத்துகின்ற முள்.

குறள் 1159:

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ.


நெருப்பினைத் தொட்டால் சுடுகிறது! காதல்

பிரிவில் சுடுகிறதேன் சொல்?

குறள் 1160:

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்இருந்து வாழ்வார் பலர்.


தலைவன் பிரிவைப் பொறுத்துவாழ்வோர் உண்டு!

அலையில் துரும்பானேன் நான்!





























Saturday, January 30, 2021

115 அலர் அறிவுறுத்தல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

115 அலர் அறிவுறுத்தல்

குறள் 1141:

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால்.


எங்களது காதலை ஊரார்கள் பேசுவதால்

என்னுயிர் போகவில்லை யே.

குறள் 1142:

மலரன்ன கண்ணாள் அருமை அறியா

தலரெமக் கீந்ததிவ் வூர்.


மலர்க்கண் நாயகியின் காதலறி யாமல்

அலரால் உதவுதே ஊர்.

குறள் 1143:

உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து.


காதலைப் பேசுவாரா என்றிருந்தோம்! பேசுகின்றார்!

காதல் கனிவதற்கு வாய்ப்பு.

குறள் 1144:

கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்

தவ்வென்னும் தன்மை இழந்து.


பேசுகின்றார் ஊரார்! வளர்கிறது காதல்தான்!

பேசவில்லை என்றால் இழப்பு.

குறள் 1145:

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படுந் தோறும் இனிது.


கள்ளைக் குடிக்க குடிக்க விரும்புவார்!

எல்லோரும் காதலைப் பேசும் பொழுதெல்லாம் 

உள்ளம் மகிழ்கிறது கேட்டு.

குறள் 1146:

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று.


எங்களது சந்திப்போ  கொஞ்சநேரம்! 

ஊர்ப்பேச்சோ

திங்களைப் பாம்புகொண்ட தைப்போல

ஊர்முழுதும்

சென்றதே செய்தி விரைந்து.

குறள் 1147:

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளுமிந் நோய்.


ஊர்ப்பேச்( சு) உரமாக தாய்ச்சொல் நீராக

காதல் வளர்கிறதே சாற்று.

குறள் 1148:

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்

காமம் நுதுப்பேம் எனல்.


அலர்மூலம் காதலைத் தாழிடலும் இங்கே

வளர்நெருப்பில் நெய்யிடலும் ஒன்று.

குறள் 1149:

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்

பலர்நாண நீத்தக் கடை.


பலர்நாண உன்னைப் பிரியேன்நான் என்றார்!

அலருக்கேன் அஞ்சவேண்டும் நான்?

குறள் 1150:

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

கௌவை எடுக்குமிவ் வூர்.


ஊரார் அலரெடுத்தார்! காதலர் ஏற்பதற்கோ

ஊருதவ வாய்த்தது வாய்ப்பு.
























நண்பர் IG சேகர் அனுப்பியது

 நண்பருக்கு வணக்கம்.


வேற்றுமையில் ஒற்றுமை!


பூங்கொத்தின் தூதால் வணக்கத்தைக் கூறுகின்ற

பாங்கான நட்பில் மகிழ்ந்தேன் திளைத்தேன்!

வேற்றுமையில் ஒற்றுமை என்பதையே வண்ணமலர்ப்

பூங்கொத்தில் கண்டேன் ரசித்து.


மதுரை பாபாராஜ்

VOV தமிழ்ச்செம்மல்கள்

 VOV தமிழ்ச் செம்மல்களுக்கு வாழ்த்து!


குறளினிது சோம வீரப்பன்

குறள் தூதர் அன்வர் பாட்சா

31.01.2021


குறள்நெறித் தொண்டர்கள்! பன்முக ஆற்றல்

சிறப்புகளைப் பெற்றவர்கள்! வீரப்பன்! அன்வர்

தமிழ்ச்செம்மல் என்ற அரசு விருதால்

இமையானார் செந்தமிழின் மாண்பிற்கே 

நாளும்!

தமிழ்போல வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

114 நாணுந்துறவுரைத்தல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

114 நாணுந்துறவுரைத்தல்

 ( இருவரும் நாணம் நீங்கிய நிலை)

குறள் 1131:

காமம் உழந்து வருந்தினார்க் கேம

மடலல்ல தில்லை வலி.


காதல் கனியவில்லை என்றால் மடலூர்தல்

காதலர்க்கு என்றும் துணை.

குறள் 1132:

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்

நாணினை நீக்கி நிறுத்து.


நிறைவேறாக் காதல் ! உயிரும் உடலும்

மடலேறும் நாணத்தை விட்டு.

குறள் 1133:

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்

காமுற்றார் ஏறும் மடல்.


நாணமும் ஆண்மையும் பெற்றிருந்தேன்!

இன்றோநான்

காதலால் பெற்றேன் மடல்.

குறள் 1134:

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு

நல்லாண்மை என்னும் புணை.


காதலெனும் வெள்ளமோ நாணமெனும் ஆண்மையெனும்

தோணிகளைச் சாய்த்துவிடும் சாற்று.

குறள் 1135:

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு

மாலை உழக்கும் துயர்.


மாலைத்  துயரளிக்கும் காதலையும் வெற்றிகொள்ளும் 

வேலை மடலூர்தல் என்பதையும் தந்தாளே

காதலிதான் இங்கோ எனக்கு.

குறள் 1136:

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற

படலொல்லா பேதைக்கென் கண்.


நள்ளிரவில் கூட மடலூர்தல் எண்ணுகிறேன்!

உள்ளத்துக்  காதலால் நான்.

குறள் 1137:

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணிற் பெருந்தக்க தில்.


கடலன்ன காதல்நோய் கொண்டாலும் மங்கை

மடலேறும் துன்பம் பொறுக்கும் பெருமை

உடைத்தவள் என்பதை வாழ்த்து.

குறள் 1138:

நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்

மறையிறந்து மன்று படும்.


வெள்ளந்தி என்றெல்லாம் எண்ணாமல்  காதலோ

இவ்வூர் தெரியவைக்கும் சாற்று.

குறள் 1139:

அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்

மறுகின் மறுகும் மருண்டு.


தெரியவில்லை யாருக்கும் காதலென்றே

இங்கே

தெருவெல்லாம் சுற்றுதோ சொல்.

குறள் 1140:

யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா ஆறு.


காதல்நோய் என்ன? அறியாதோர் தானே

காதல் துயர்பட்டோர் கண்டே நகைப்பார்!

காதலை ஊரறியார்! சாற்று.


















 

















VOV இராமசாமி அனுப்பியது

 VOV இராமசாமி அவர்களுக்கு வ


ணக்கம்!

மலர்ந்தும் மலராத மொட்டுகள் பூவாய்

மலர்கின்ற நம்பிக்கை

கொண்டிருக்கும் காட்சி!

புலரும் விடியலென்று நம்பிவாழும் ஏழை

எளியோர்போல் உள்ளன சொல்.


மதுரை பாபாராஜ்

Friday, January 29, 2021

பாலாவின் சங்கச் சுரங்கம் வாழ்த்து

 கவிஞர் பாலாவுக்கு வாழ்த்து

கவிஞர். பாலாவின் சங்கச்சுரங்கம்

மூன்றாம் பத்து ஆறாம் உரை! 

30.01.21

இணையவழி சொற்பொழிவு!


தலைப்பு:

செய்தி கொன்றார்க்கு உய்தி இல்.

புறநானூறு


மன்னன் வளவனிடம் பரிசுகள் பெற்றேதான்

தன்வழி செல்ல கிழார்தான் விடைபெற்றார்!

மன்னன் எனைநினைத்து மீண்டும் வருவீரா?

அன்புடன் கேட்டானாம்! செய்நன்றி கொன்றார்க்கு

எந்நாளும் உய்வில்லை! உன்னை மறவேன்நான்

என்றாராம் ஆலத் தூர்கிழார்! என்றேதான்

சங்க இலக்கியம் கூறுகின்ற நன்னெறியை

சங்கச் சுரங்கத்தில் பேசுகின்றார் பாலாதான்!

வண்டமிழ்போல் வாழ்கவென்றே வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பியது

 நண்பருக்கு வணக்கம்!

தி்மு க கொடி


தனியுடைமை நீங்கி பொதுவுடைமை தோன்றும்!

கருப்பு மறைந்தே சிவப்பாக மாறும்!

கழகக் கொடியின் உயர்ந்த கொள்கை

வழங்கும் அமைப்பே இது.


செவ்வண்ணப் புள்ளே! உனைநான்  பார்த்ததும்

என்றோ  படித்தது உள்ளத்தில் வந்தது!

நண்பர் வணக்கத்தை ஏற்கின்றேன் வாழ்த்துகிறேன்

என்வணக்கம் கூறுமாறு கேட்டு.


மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி அனுப்பியது

 மருமகன் ரவி அனுப்பியது

மொழியாக்கம்


அன்புநேசம் நேர்மை மரியாதை கண்ணியம்

பண்புகளால் பத்து மடங்கு கவர்ச்சியாக

இங்கே தெரிகின்றார்

பேரழகால் இல்லையம்மா!

பண்பே அழகென்று சாற்று.


மதுரை பாபாராஜ்


113 காதற் சிறப்புரைத்தல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

113 காதற் சிறப்புரைத்தல்

( காதலைச் சொல்லி மகிழ்தல்)


குறள் 1121:

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலேயி றூறிய நீர்.


அவளது பற்களில் ஊறிவரும் நீரோ 

சுவைப்பாலும்  தேனுமென்றும் செப்பு.

குறள் 1122:

உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொ டெம்மிடை நட்பு.


எங்கள் உறவோ உயிரும் உடம்பும்போல்

ஒன்றி இருக்கும் நிலை.

குறள் 1123:

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்

திருநுதற் கில்லை யிடம்.


கண்மணிப் பாவையே போய்விடு! என்னவள்

தங்க இடம்வேண்டும் செல்.

குறள் 1124:

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்

அதற்கன்னள் நீங்கும் இடத்து.


மாதரசி கூடினால் இன்னுயிர் சேர்ந்ததுபோல்! 

நீங்கினால் சாதலைப் போல்.

குறள் 1125:

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்

ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.


என்னவள் பண்பை  மறப்பதில்லை!

என்றுமறந்தேன்?

அன்பகத்தை நான்நினைக்க? செப்பு.

குறள் 1126:

கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்

நுண்ணியர்எம் காத லவர்.

என்னவர் கண்விட்டு நீங்கமாட்டார்! கண்ணிமைத்தால்

புண்படார்! நுட்பமான அன்பு.

குறள் 1127:

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக் கறிந்து.


கண்ணுள்ளே  அன்பருள்ளார்! மையிட்டால் போய்விடுவார்!

கண்மை போடமாட்டேன் நான்.

குறள் 1128:

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக் கறிந்து.


நெஞ்சில் இருக்கின்ற காதலரைச் சுட்டுவிடும்

என்றேதான் சூடாக உண்ண மறுக்கின்றேன்!

என்னவரைப் புண்படுத்தல் தீது.

குறள் 1129:

இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே

ஏதிலர் என்னுமிவ் வூர்.


இமைத்தால் மறைந்திடுவார்! இமைக்க மறுத்தேன்!

இதற்கவரை நோகிறதே ஊர்!

குறள் 1130:

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்

ஏதிலர் என்னுமிவ் வூர்.


இதயத்தில் வாழ்கின்றார்! ஊரார் அவரைப்

பிரிந்துவிட்டார்  என்கிறாரே ஏன்?






























Thursday, January 28, 2021

112 நலம்புனைத்துரைத்தல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

112 நலம்புனைந்துரைத்தல்

( தலைவியின் அழகைத் தலைவன் பாராட்டுதல்)

குறள் 1111:

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள்.


அனிச்சமே! நீயென்றும் மென்மைதான்! ஆனால்

தலைவிமுன் உன்மென்மை தூசு.

குறள் 1112:

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று.


மலர்கண்டு தள்ளாடும் நெஞ்சே! தலைவி

விழிகளே மற்றவர் பார்த்து மயங்கும் மலர்களென்று பார்க்கின்றா யோ?

குறள் 1113:

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.


மாமை நிறமேனி,முத்தொளிப் பற்களுடன்

மூங்கிலன்ன தோள்கள், நறுமணம், வேல்வழி

ஏந்திவரும் ஏந்திழையாள்  தான்.

குறள் 1114:

காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று.


குவளைமலர் காதலியின் கண்களைக் கண்டால்

இவள்கண்கள் போலத்தான் நாமில்லை என்றே

நிலம்நோக்கி வெட்கப் படும்.

குறள் 1115:

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு

நல்ல படாஅ பறை


அனிச்சம் பூக்காம்மை நீக்காமல் மாது

தலையிலே வைத்தாள் இடையொடிந்து வீழ

பறையொலி மங்கலம் போச்சு!

குறள் 1116:

மதியும் மடந்தை முகனும் அறியா

பதியின் கலங்கிய மீன்.


மங்கை முகத்திற்கும் அந்த நிலவிற்கும்

விண்மீன்கள் வேறுபாடு காணாமல் தத்தளித்தே

அங்குமிங்கும் பாய்கிறது பார்.

குறள் 1117:

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து.


நிலவில் தெரியும் களங்கம் தலைவி

முகத்திலுண்டோ? பார்த்துச் சொல்.

குறள் 1118:

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி.


என்காதல் வேண்டுமா? மாதின் முகம்போல

வெண்ணிலவே! தண்ணொளி வீசு.

குறள் 1119:

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

பலர்காணத் தோன்றல் மதி.


மாதரசி என்னவளின் பால்முகத்தை ஒத்திருந்தால்

பாரறிய வெண்ணிலவே தோன்று.

குறள் 1120:


அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்.


அனிச்சம்பூ, அன்னச் சிறகுகளின் மென்மை

மனவியின் காலடி மென்மைக்கு முள்ளாம்,

நெருஞ்சிக் கிணையாம் செப்பு.


மதுரை பாபாராஜ்






















1330 குறள்கள் ஓலைச்சுவடியில்


 ஓலைச்சுவடியில்

1330 குறள்களை எழுதிய பஞ்சாப் ஜஸ்வந்த்சிங் வாழ்க!

தற்போது முகப்பேர் சென்னை


ஆர்வத்திற் குண்டோ அடைக்கின்ற தாழென்றே

ஆர்வமுடன்  ஓலைச் சுவடியில் ஜஸ்வந்த்சிங் 

பாடுபட்டு நாளும் குறளை எழுதியுள்ளார்!

ஏடுபோற்ற வாழ்கபல் லாண்டு.


ஓலைச்சுவடி தயாரித்தல்!


இளம்ஓலை தன்னை எடுத்துவைத்து

ஜாதிக்காய்

நலமளிக்கும் பப்பாளி பச்சையிலை சேர்த்து

கலந்தேதான் தண்ணீரில் ஊறவைத்து

பார்த்து

நிழலிலே காயவைக்க வேண்டும்! நல்ல

பதமான பின்புதான் பாதுகாக்க வேண்டும்!

முதல்நிலை இந்த முறை.


எழுத்தாணி எழுதும் முறை:


முதலில் மணலில் எழுதிப் பழகி

பிறகு படிப்படி யாக ஓலை

இதழில் எழுதலாம்! ஆனால் எழுத்து

தெரியாது! நாமோ கரிசலாங் கண்ணி

அருமையான கீரையைக் காயவைத்து

பார்த்தே

எரித்தேதான் எண்ணெய் கலந்து கொண்டு

தெளிவாக ஓலையில் பூசவேண்டும்!

பிறகு

துணியின் துணையால் துடைத்தால் துலங்கும்

எழுத்துகள் என்கிறார் சிங்.


மதுரை பாபாராஜ்



 

நண்பர் IG சேகர் அனுப்பியது

 நண்பருக்கு வணக்கம்.


அழகாய்க் கதிரவன் வானில் எழுந்தே

உலகை உசுப்ப மலர்கள் மலர

மலர்க்கொத்து காலை வணக்கத்தைத் தந்த

வளர்நட்பை வாழ்த்தி வணங்கு.


மதுரை பாபாராஜ்

111 புணர்ச்சி பழகுதல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து!

111. புணர்ச்சி பழகுதல்

(இன்பத்தை வியத்தல்)

குறள் 1101:

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள.


பார்ப்பது கேட்பது உண்பது  தீண்டல் முகர்தலென

ஊறுகின்ற ஐம்புலன் இன்பம், வளையல்கள்

பாடுமிவள் ஏந்துகின் றாள்.

குறள் 1102:

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்னோய்க்குத் தானே மருந்து.


பாரிலுள்ள நோய்க்கு மருந்துண்டு! காதலெனும்

நோய்க்கோ இவளே மருந்து.

குறள் 1103:

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு.


தாமரைக் கண்ணான்உலகளிக்கும் இன்பமெல்லாம்

பூமகள் தோளில் துயில்கொள்ளும் இன்பத்திற் 

கீடாமோ? தேனகமே சொல்.

குறள் 1104:

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்.


நெருங்கு குளிர்வாள்! விலகு சுடுவாள்!

இருவகைத் தீபெற்ற தெங்கு?

குறள் 1105:

வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள்.


விரும்பும் பொருள்கள் விரும்பிய போது தருமின்பம் போல இவள்தோ ளிரண்டும்

தருகிற தின்பம் வளர்ந்து.

குறள் 1106:

உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்

கமிழ்தின் இயன்றன தோள்.


இவளை அணைத்தால் உயிரோ தளிர்க்கும்!

இவள்தோள் அமிழ்தமோ? கூறு.

குறள் 1107:

தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு.


பகுத்துண்ணும் இன்பம், தலைவி தழுவிப்

பகுத்திடும் இன்பத்திற் கொப்பு.

குறள் 1108:

வீழும் இருவர்க் கினிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு.


காற்று புகமுடி யாமல் தழுவுதல்

ஊற்றெடுக்கும் காதலுக்குச் சான்று.

குறள் 1109:

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன்.


ஊடலும் நாடலும் கூடலும் காதலரின்

ஈடற்ற இன்பத்தின் ஊற்று.

குறள் 1110:

அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு.


நூலைப் படிக்கப் படிக்க அறியாமை நீங்குதல்போல் மங்கையின் காதலில் கூடினால் 

காண்போமே புத்தின்பந் தான்.





























குறளினிது சோம வீரப்பன்

 குறளோடு உறவாடு!



கேட்டேன் ரசித்தேன் குறளினிது வீரப்பன்

ஆற்றலுடன் ஆர்வமாகப் பேசினார் வாழ்த்துகிறேன்!

மூவரணி முத்தமிழின் காவலணி காதலணி!

ராசேந்ரன் வள்ளுவத்தை நேசமுடன் கையாண்டார்!

போற்றும் வலைத்தமிழ் தூதர் இளங்கோவின்

ஆற்றல் மிளிர்கின்ற வள்ளுவக் கூற்றுகள்

ஏட்டில் நிலைக்குமென்று வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Wednesday, January 27, 2021

1000 காய்கறி. கீரை தோட்டம்

 பள்ளி வளாகத்தில் 1000 காய்கறி கீரைதோட்டம்!


இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து!





பள்ளி வளாகத்தில் காய்கறிகள் கீரைகள்

எல்லாம் பயிர்செய்யும் திட்டமோ அற்புதந்தான்!

பல்வகை ஊட்ட உணவுகள் உட்கொள்ள

நல்லவர்கள் காட்டும் வழி.


மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்கள்

ஆர்வமுடன் ஈடுபடும் திட்டங்கள் வெற்றிபெற

வாழ்த்தி மகிழ்கிறேன் ஆக்கபூர்வ சிந்தனையை!

வாழ்க வளர்க தொடர்ந்து.


மதுரை பாபாராஜ்

28.01.21

நுனிக்கிளையில் பறவை

 நண்பருக்கு வணக்கம்!

இயற்கையின் அமைப்பு!


கிளையின் நுனிக்கருகில் உட்கார்ந்து பார்க்கும்

அழகுப் பறவையே!

கிளயோ முறிந்தால் 

அழகுச் சிறகை விரிப்பாய் பறப்பாய்!

இயற்கை கொடுத்த அமைப்பு.


மதுரை பாபாராஜ்

110 குறிப்பறிதல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

110 குறிப்பறிதல்

(தலைவியின் குறிப்பைத் தலைவன் அறிதல்)

குறள் 1091:

இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.


பூவிழியாள் நோக்கிரண்டு! காதல்நோய்  ஒன்றுதரும்!

நோய்க்கு மருந்தளிக்கும்  ஒன்று.

குறள் 1092:

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது.


கடைக்கண் பார்வையோ பாதியல்ல, காதல்

சிறையின் பெரும்பாதி யாம்.

குறள் 1093:

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்.


நோக்கினாள்! பார்த்தேன் தலைகுனிந்தாள்! அன்பென்னும்

பாத்தியில்  ஊற்றியநீர் சாற்று.

குறள் 1094:

யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்

தானோக்கி மெல்ல நகும்.


நான்பார்க்கும் போது நிலத்தை அளக்கின்றாள்!

பார்க்காத போதென்னைப் பார்த்தே மனதிற்குள்

கோர்க்கின்றாள் முத்துநகை யை.

குறள் 1095:

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்.


என்னையோ பார்க்காமல்  கண்ணைச் சுருக்கிவைத்தே

என்னைத்தான் பார்ப்பாள் மகிழ்ந்து.

குறள் 1096:

உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்.


என்னைச் சினந்தே அயலார்போல் பேசுகின்றாள்!

அன்பை உணர்த்தும் குறிப்பு.

குறள் 1097:

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன் றுற்றார் குறிப்பு.


அனல்மொழி மற்றும் அனல்விழி எல்லாம்

மனக்காதல் தூதின் குறிப்பு.

குறள் 1098:

அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்.


பார்ப்பேன்! குறும்பாய்ச் சிரிப்பாள்! அடடா!

நேரிழையாள் ஏந்தும் அழகு.

குறள் 1099:

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள.


முன்பின் தெரியாதோர் பேசுதல்போல் காதலர்

கண்களின் தூதோ இயல்பு.

குறள் 1100:

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல.


பாயும்கண்  காதல் மொழியை உரைத்தபின்

வாய்ச்சொல்லால் என்னபயன் செப்பு?

































திருமதி நிலமங்கை துரைசாமி ஓவியம்

 திருமதி நிலமங்கை துரைசாமி


அம்மாவின் ஓவியம் அருமை!

கண்மூடிப் பற்றும் பழக்கங்கள் எல்லாமே

மண்மூடிப் போகவேண்டும் என்றார் இராமலிங்கர்!

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறினென்றார் வள்ளுவர்!

அம்மாவின் ஓவியம் நன்று.


மதுரை பாபாராஜ்

வசத்தா

109 தகையணங்குறுத்தல்


இன்பத்துப்பால் தொடக்கம்

குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து



109 தகையணங்குறுத்தல்

( தலைவியின் அழகைத் தலைவன் தனக்குள் சொல்தல்)

குறள் 1081:

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.


அழகோ! கலைமயிலோ? காதில்

குழைகள்

அசைகின்ற மங்கையோ? நெஞ்சம் மயங்கி

மலைக்கிறதே கண்ணாரக் கண்டு.

குறள் 1082:

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து.


நோக்கினாள்! நோக்கினேன்! நோக்கினாள்! சேனையுடன்

தாக்கவந்த கோலம்போல் தான்.

குறள் 1083:

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு.


கூற்றுவனைப் பார்த்ததில்லை! பெண்வடிவில் வேல்விழிகள்

ஏந்தியதைப் பார்த்தறிந்தேன் நான்.

குறள் 1084:

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக் கமர்த்தன கண்.


பெண்ணின் இயல்புக்கு மாறாக கண்களோ

இன்னுயிரைத் தாக்குவதேன் கூறு.

குறள் 1085:

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து


கூற்றமோ? கண்களோ ?பெண்மானோ?

கேள்விமூன்றைக்

கேட்கிறதே பெண்பார்வை பார்த்து.

குறள் 1086:

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

செய்யல மன்னிவள் கண்.


கொடும்புருவம்  நேராய் இருந்தால் நடுக்கிப்

படுத்தாதே துன்பத்தில் கண்.

குறள் 1087:

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில்.


தேன்மகள் மார்பகம்மேல் ஆடை, மதம்பிடித்த

யானை முகப்படாம் போல்.

குறள் 1088:

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்

நண்ணாரும் உட்குமென் பீடு.


போர்ப்பகையை அச்சுறுத்தும் ஆற்றலோ

தோற்றதே

தேரழகி நெற்றிக்கு முன்.

குறள் 1089:

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்

கணியெவனோ ஏதில தந்து.


பெண்மானின் பார்வையுடன் நாணம் இயற்கையணி

இங்கிருக்கப் பொன்னணிகள் ஏன்?

குறள் 1090:

உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று.


உண்டால் மயக்கம் கொடுப்பது கள்தான்!

கண்டால் மயக்கும்பெண் அன்பு.































பத்மஸ்ரீ _வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம்_


 நன்றி:

பத்மஸ்ரீ  _வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம்_



கூறும் பால் கதை:

கவிதை ஆக்கம் 

*ஆழாக்கு பாலைப்போல் என்னை

ஆளாக்கு ஆண்டவனே*    

🌼பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!


பசுவிற்குள் வாழ்ந்தேன்! கறந்தார்! கலத்தில்!

அடுப்பிலே வைத்தேதான் சூடாக்கி னார்கள்!

துடித்தேதான் பொங்கினேன்! என்னை இறக்கி

இணைத்தார் புளித்தமோர்!மூடினார் என்னை!

திரவம் திடமானேன்! நான்தான் தயிராம்!

கடைந்தார்கள் மத்துவைத்து! மோரானேன் நான்தான்!

திடமெடுத்து வெண்ணெய் என்றார்கள்! மீண்டும்

அடுப்பில் உருக்கினர் நெய்யென்றார் தொந்தேன்!

உருக்கிய நெய்யை ஜாடியில் ஊற்றி

தெருவோர ஜன்னலில் வைத்தனர் மக்கள்

இருபது ரூபாய்ப் பாலிங்கே மாறி

உருகிய நெய்யாய் இருநூறு ரூபா

செருக்குடன் விற்கின்றார் என்றேதான் சொன்னார்!

பாலாக உள்ளவரை என்மதிப்பும் இன்னலை

மாறிமாறி ஏற்று முடிந்ததும் என்மதிப்பும்

மாறி உயர்ந்ததை நானுணர்ந்தேன் நன்றாக! 

மாறியது வாழ்க்கை மதிப்பு.


மதுரை பாபாராஜ்




 


Tuesday, January 26, 2021

108 கயமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

108 கயமை -- பொருட்பால் நிறைவு

குறள் 1071:

மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்ட தில்.


 உருவில் மனிதர்! குணத்தில் கயவர்! 

இருவகைப் பண்புகள் ஓருரு வத்தில்

இருத்தல் மனிதரிடந் தான்.

குறள் 1072:

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத் தவலம் இலர்.


இப்படித்தான் வாழ கவலைகொள்வார் நல்லவர்கள்!

எப்படியும் எந்தக் கவலையும்  இல்லாமல்

வாழ்வோர்  கயவர்கள் இங்கு.

குறள் 1073:

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்.


விரும்பியதைச் செய்திங்கே வாழ்வதில் தேவர்,

கயவர்கள் ஒன்றாவர் சொல்.

குறள் 1074:

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்

மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.


கீழோரைக் காட்டிலும் கீழோரைக் கண்டால்

கீழோர் செருக்கடைவார் செப்பு.

குறள் 1075:

அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது.


தண்டனைக் கஞ்சி ஒழுக்கத்தைப் பேணுவார்!

தங்களாசை இங்கே நிறைவேறும் என்றாலோ

இங்கொழுங்கை ஏற்பார் நடித்து.

குறள் 1076:

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.


இரகசியம் சொன்னதும் மற்றவர்க்குச்  சொல்லும்

கயவர் பறைபோன்றோர் சொல்.

குறள் 1077:

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்

கூன்கையர் அல்லா தவர்க்கு.


கயவர் கயவர்க் குதவுவார்! ஏழைக்

குதவிட நீட்டமாட்டார் கை.

குறள் 1078:

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல

கொல்லப் பயன்படும் கீழ்.


சொன்னதும் ஈவார்கள் சான்றோர்! கரும்பைப்போல்

நன்கு பிழிந்தால் தருவார் கயவர்கள்!

பண்பற்ற கீழ்மைக் குணம்.

குறள் 1079:

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ்.


மற்றவர் உண்டால் உடுத்தால் பொறாமையில்

குற்றமாய்ப் பார்ப்பார் கயவர்.

குறள் 1080:

எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்

விற்றற் குரியர் விரைந்து.


தங்களைக் காப்பதற்குத் தங்களையே விற்கவும்

முன்வருவார் கீழோர்தான் செப்பு.



Vovramanujan:

குறள்பால் அன்புகொண்டு, அம்பெய்தி பொருட்பால் வரை கவிச்சுவைக் கனிகளைக் கொய்து வழங்கிய, தங்களின் காளமேகக் கவிதைகள் பல்லாண்டு வாழ்க!

       குறளில் நுழைந்து, பிசைந்து, முறுக்கு மிக்க கவிதைகளை தாங்கள் வழங்கிய வேகத்திற்கு உண்மையில் என்னால் படித்து முழுமை பெற முடியவில்லை. ஏனெனில் சில பாக்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து மகிழ வேண்டும் எனக் கருதிக் கொண்டிருக்கையில் அடுத்த அதிகாரம் வேகமாக வந்து குழுவில் காத்து நிற்கும். 

       இருப்பதை விடுத்து, புதியதை மடுத்து, மனதைத் தொடுத்து ஆண்டு கொள்ள முற்பட்டு விடுவேன். மகிழ்ச்சி!

       ஆனால் காமத்துப் பாலில் இத்தகைய வேகத்தைக் காட்டுவது ஆகாது. அனுப்புங்கள் பாமணிகளை! அமைதியாகப் படித்து, தமிழென்னும் அமிழ்தத்துள் தங்களின் சொல்லாடல்களை மகிழ்ந்து சுவைத்தப் பின்பே , அடுத்த பாவினைப் பார்க்கச் செல்லுவேன்.

      ஆக, அதற்காகத் தங்களின் வீச்சுதனைக் குறைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் முன்னால் சென்றால், நாம் சற்றே பின்னால் வருவோம். அம்மட்டுதான் ஐயா!

      அழகானப் பாடல்கள் பிறக்கட்டும்! வருங்கால உள்ளத்தைக் கவரட்டும்! மகிழ்ச்சி!

வாழ்த்துகளும் வணக்கமும்!


மதுரை பாபாராஜ்:

வாழ்த்தும் வணக்கமும் ராமா நுசனாரின்

ஆர்வமும்  ஊக்கச் சிறகுகளைத் தந்தன!

ஏர்பிடித்தேன் பாவயல் தன்னில் உழவுசெய்தேன்!

ஆழ உழுதேனா நான்.


மதுரை பாபாராஜ்

ஐயமில்லை ஐயா! தாங்கள் உழுது கிளப்பியப் புழுதியில்தான் நாம் உழன்று கொண்டுள்ளோம். 

      புதுமைவாணர்கள் பட்டுண்டு உலகம் சிறக்கட்டும்!

     மகிழ்ச்சி ஐயா! நலம் பெறுக!


இராமாநுசன்










































நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 வணக்கம் நண்பரே!


கிளியே! கிளியே!


சங்ககாலம் என்றால் மகரக் குழைகளைப்

பெண்கள் எறிந்தே விரட்டுவாராம் உங்களை!

பொன்விற்கும் யானை விலையிலே விட்டுவிட்டார் 

உங்களை மேய்ந்துகொள்ளத் தான். 


மதுரை பாபாராஜ்

திருமணவாழ்த்துப்பா

 திருமணவாழ்த்துப்பா


 


இணையர்:

மணமகன்:M. வினோத் ராஜா

மணமகள்:M.மோனிஷா ராகவி

திருமணநாள்: 27.01.21

குறள்நெறிப் போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.

இல்லறப் பத்து!

==================================

1.விருந்தோம்பல் 

===================

விருந்தினர் வந்து கலந்துற வாடி

பெருமிதம் கொள்வதோ அந்தவீட்டின் ஆண்பெண்

விருந்தோம்பல் பண்பின் சிறப்பினால் தானே !

விருந்தோம்பல் இல்லறத்தின் வேர்.


--------------------------------------------------------------------

2.விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை 

==================================

விட்டுக் கொடுக்கும் விவேக மனப்பாங்கைக்

கற்றுக் கொடுக்கும் இல்லறத்தைப் போற்றுங்கள்!

விட்டுக் கொடுப்பதால்  கெட்டுத்தான் போவதில்லை!

சுற்றத்தின் ஒற்றுமையே வாழ்வு.

--------------------------------------------------------------------


3.இணக்கமுடன் வாழ்க

====================

கணவன் மனைவி கருத்தொரு மித்தே

இணக்கமுடன் வாழ்ந்தால் மகிழ்ச்சிதான் என்றும்!

பிணக்கத்தை ஊடுருவ விட்டால் நாளும்

சுணக்கத்தை உண்டாக்கும் இங்கு.

--------------------------------------------------------------------

4.இருபாலரும் சமம்.

===================


மகனோ மகளோ சமமாய்க் கருது!

உகந்த உரிமைகளை நாளும் வழங்கி

அகத்திலே பேதமின்றி கல்வியைத் தந்தால்

அகங்குளிர வாழ்வார் வளர்ந்து.

--------------------------------------------------------------------

5.பண்புகளை ஊட்டுங்கள்

======================

நல்லநல்ல பண்புகளை நாள்தோறும் ஊட்டுங்கள்!

நல்லவராய் வல்லவராய் வாழ வழிவகுத்து

எல்லோரும் போற்றிடவே ஏற்றமுறச் செய்யுங்கள்!

எல்லைக்குள் வாழப் பழக்கு.

--------------------------------------------------------------------

6.குழந்தைகளின் கடமை

===========================


பெற்றோர் இமையாகிப் பிள்ளைகளைக் காப்பதுபோல்

பெற்றோர்க்கோ  இங்கே குழந்தைகள் நாள்தோறும்

உற்றதுணை யாகித்தான்  நன்றி மறவாமல்

பெற்றோரைக் காக்கவேண்டும் இங்கு.


--------------------------------------------------------------------

7.பெரியவர்களின் ஆசிகள்

=======================

அன்புடன் பண்பும் பணிவும் ஒழுக்கமும்

உண்மையும் நேர்மையும் ஒன்றிக் கலந்திட

என்றும் பெரியவர்கள் ஆசியுடன் இல்லறம்

மங்கலமாய் வாழவேண்டும் சொல்.

--------------------------------------------------------------------

8.சுற்றத்தார் வாழ்த்து

=====================

உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என்றேதான்

சுற்றம் தழைத்திட நாளும் பழகவேண்டும்!

அக்கறை காட்டி அனைவரின் வாழ்த்தையும்

பெற்றேதான் வாழ்தல் சிறப்பு.


--------------------------------------------------------------------

9.விலக்கவேண்டியவை

================= ========

கோபம்,பொறாமை,சிடுசிடுப்பு ஆகியவற்றை

வேகமாய்க் காட்டிப் பழகினால் பெற்றெடுத்த

ஈடற்ற பிள்ளைகளும் இங்கே வெறுத்திடுவார்!

நாடறிய  நல்வழி காட்டு.

--------------------------------------------------------------------

10.பெற்றோரே வழிகாட்டிகள்

===========================

அம்மாவும் அப்பாவும் தென்றல்போல் பழகவேண்டும்!

அஞ்சாமல் பிள்ளைகள் தேடிவந்து பேசவேண்டும்!

கண்டிப்பின் எல்லையைப் பெற்றோர் உணரவேண்டும்!

அன்பும் அரவணைப்பும் பிள்ளைகள் நேர்வழியில்

பண்புடன் வாழவைக்கும் கூறு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

மணநாள் வாழ்த்து


மணநாள் வாழ்த்து

27.01.2021

இணையர்:

எழிலரசன்-- சத்தியபாமா

மகன்கள்: நிகில் அபிசேக்-- வருண் ஆதித்யா

வள்ளுவத்தின் இல்லறத்தை வாழ்வியலாய்ப் போற்றுங்கள்!

நல்லறத்தை நாளும் ஒளிவிளக்காய் ஏற்றுங்கள்! 

பல்வளங்கள் பல்கிப் பெருகிடவே வாழியவே!

நல்லவராய் வல்லவராய் மைந்தர்கள் இவ்வுலகில்

கல்வியில் முன்னேறி வெற்றியுடன் வாழியவே!

எல்லோரும் வாழ்த்துகின்றோம் சூழ்ந்து.


அப்பா மதுரை பாபாராஜ்

அம்மா வசந்தா

குடும்பத்தார்

107 இரவச்சம்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

107 இரவச்சம்

குறள் 1061:

கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்

இரவாமை கோடி உறும்.


இரக்கமனம் உள்ளோரை நாடித்தான் சென்றே

இரவாமை கோடிநன்மை யாம்.

குறள் 1062:

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்.


இரந்துதான் வாழவேண்டும் என்றால் படைத்தோன்

திரிந்தேதான் கெட்டழிதல் மேல்.

குறள் 1063:

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்

வன்மையின் வன்பாட்ட தில்.


வறுமையை நாமோ இரந்துதீர்ப்போம் என்ற

கொடுமையைப் போல்வேறுண் டோ?

குறள் 1064:

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்

காலும் இரவொல்லாச் சால்பு.


வாழவழி இல்லாத போதும் இரவாமல்

வாழும் பெருமை பெரிது.

குறள் 1065:

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த

துண்ணலின் ஊங்கினிய தில்.


கஞ்சி எனினும் உழைத்த உழைப்பினால்

உண்பதே சாலச் சிறப்பு. 

குறள் 1066:

ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்

கிரவின் இளிவந்த தில்.


பசுகுடிக்கத் தண்ணீர் இரந்தாலும் அஃதோ

இழிவாகும் நாவிற் குணர்.

குறள் 1067:

இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்

கரப்பார் இரவன்மின் என்று.


இல்லையென்று சொல்வா ரிடத்திலே கேட்கவேண்டாம்

என்றேதான் கெஞ்சுகிறேன்  இங்கு.

குறள் 1068:

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும்.


தரமறுக்கும் கல்நெஞ்சம் மீதோ இரத்தல்

கலம்மோதி சேதமாகும் சொல்.

குறள் 1069:

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள

உள்ளதூஉம் இன்றிக் கெடும்.


இரத்தலை எண்ணினால் உள்ளம் உருகும்!

மறுத்தால் உடைந்திடும் நெஞ்சு.

குறள் 1070:


கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்

சொல்லாடப் போஒம் உயிர்.


கேட்டும் தரவில்லை என்றால் உயிர்த்துடிக்கும்!

தூற்றும் உயிரெங்கு போம்?


மதுரை பாபாராஜ்























Monday, January 25, 2021

106 இரவு


குறள்களுக்குக்  குறள்வடிவில் கருத்து

106 இரவு

குறள் 1051:

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்

அவர்பழி தம்பழி அன்று.


கொடுக்க முடிந்தவர்கள் கேட்பவ ருக்குக்

கொடுக்கவில்லை என்றால் பழியோ அவர்க்கே!

இரந்தவர்க் கல்ல உணர்.

குறள் 1052:

இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை

துன்பம் உறாஅ வரின்.


தருவோர் மனமுவந்து தந்தால் மகிழ்ச்சி!

இரப்பதும் இன்பந்தான் சொல்.

குறள் 1053:

கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்

றிரப்புமோர் ஏஎர் உடைத்து.


திறந்த மனதும் கடமை உணர்வும்

உறவாடும் மாந்தரிடம் சென்றே இரத்தல்

பெருமைக் குரியதே செப்பு.

குறள் 1054:

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலும் தேற்றாதார் மாட்டு.


கனவிலும் உள்ளதைக்  கூறுவோரை நாடி

இரத்தலும் ஈதலே செப்பு.

குறள் 1055:

கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்

றிரப்பவர் மேற்கொள் வது.


ஒளிவு மறைவற்றோர் உள்ளதால் சென்றே

இரக்கின்றார் நம்பிக்கை யோடு.

குறள் 1056:

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை

யெல்லா மொருங்கு கெடும்


உள்ளதை இங்கே மறைக்கின்ற நோயற்றோர்

உள்ளதால் இல்லாமை நோயழியும் சொல்.

குறள் 1057:

இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

உள்ளுள் உவப்ப துடைத்து.


இகழாமல்  கொடுப்போர் கொடுத்தால் இரப்போர்

அகம்மகிழ்வார் நன்றியுடன் தான்.

குறள் 1058:

இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

மரப்பாவை சென்றுவந் தற்று.


இரப்பவர்கள் இல்லா உலகம் வெறும்

மரப்பொம்மை வந்துபோதல் போல்.

குறள் 1059:

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்

மேவார் இலாஅக் கடை.


இரப்பவர்கள் கேட்காத வாழ்க்கையில் நாளும்

கொடுப்பவர்க்கு நற்புகழ் ஏது?

குறள் 1060:

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை

தானேயும் சாலும் கரி.


இரப்போர் சினம்கொள்ளல் தப்பு!

வறுமை

சுரப்பதே கோபத்தின் சான்று.


































குடியரசுநாள் வாழ்த்து

 குடியரசுநாள் வாழ்த்து!

72 ஆவது ஆண்டு

கொடி ஓவியம்: பேரன் வருண் ஆதித்யா


26.01.21


இந்தியாவைக் காத்திடுவோம் 


வேற்றுமையில் ஒற்றுமையைப் போற்றித்தான் வாழ்ந்திடுவோம்!

எம்மதமும் சம்மதமே எல்லோரும் இந்தியரே

இந்தியாவைக் காப்பதற்கே இமையாக மாறிடுவோம்!

எல்லைகாக்கும் வீரர்களை எந்நாளும் வணங்கிடுவோம்!


இந்திய நாட்டைச் சீர்குலைப்  பதற்கு

 எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும்

இந்திய ரெல்லாம் ஒன்றாய் நின்றே 

 இமயம் போலத் திரண்டெழுவோம் !


அந்நிய நாட்டின் துரோகச் செயல்கள் 

அனைத்தையும் இங்கே முறித்திடுவோம்!

வந்தே மாதரம்!  வந்தே மாதரம்!

என்றே முழங்கி வென்றிடுவோம்!


எரிமலை பாரதி அனல்வரிக் கவிதை 

 ஊட்டும் உணர்ச்சியை ஏந்திடுவோம்!

வரிப்புலிப் பகையோ பாய்ந்தே வரினும் 

 வாலைச் சுருட்ட வைத்திடுவோம்!


எந்தப் பக்கம் வந்தாலும் 

 எத்தனை வியூகம் வகுத்தாலும் 

இந்தியன் என்ற உணர்வுடனே 

 இந்திய நாட்டைக் காத்திடுவோம்!


                 --மதுரை பாபாராஜ்


பத்மஸ்ரீ தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு வாழ்த்து

 பத்மஸ்ரீ தமிழறிஞர் சாலமன் பாப்பையா

         அவர்களுக்கு வாழ்த்து


                     26.01.21

--------------------------------------------------------------

பட்டிதொட்டி ஊரெல்லாம் நாடு நகரெல்லாம்

பட்டிமன்றத் தேரோட வைத்தவரே! ஆசானே!

பட்டிமன்ற தென்றலே! அன்பகமே! பண்பகமே!

நற்றமிழ்போல்  வாழ்கபல் லாண்டு.


மகுடங்கள் தேடிய மாந்தர்கள் உண்டு!

மகுடங்கள் தேடிவரும் ஆசான் நீங்கள்!

நகைச்சுவை நாயகரே செந்தமிழ்போல் வாழ்க!

அகங்குளிர வாழ்கபல்லாண்டு.



105 நல்குரவு

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

105 நல்குரவு

குறள் 1041:

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது.


ஏழ்மையைக் காட்டிலும் ஏழ்மை எதுவென்றால்

ஏழ்மைதான் என்றுரைப்பார் செப்பு.

குறள் 1042:

இன்மை எனவொரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும்.


ஏழ்மை  வளைத்துவிட்டால் இப்போதும் எப்போதும்

வாழ்க்கையில் இன்பமில்லை செப்பு.

குறள் 1043:

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக

நல்குர வென்னும் நசை.


ஏழ்மையில் பேராசை வந்தால் பெருமையும்

வாழ்வின் புகழுமென்றும் பாழ்.

குறள் 1044:

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

சொற்பிறக்கும் சோர்வு தரும்.


நற்குடியில் வந்தோர்க்கோ ஏழ்மை நிலைவந்தால்

சொற்பிறழ்வைச் சோர்வு தரும்.

குறள் 1045:

நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்

துன்பங்கள் சென்று படும்.


ஏழ்மைத் துயருக்குள் பல்வேறு துன்பங்கள்

கோலோச்சிக் கொக்கரிக்கும் சொல்.

குறள் 1046:

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்.


என்னதான் நல்லது சொன்னாலும் ஏழைகள்

சொன்னால் புறக்கணிப்பார் சொல்.

குறள் 1047:

அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்

பிறன்போல நோக்கப் படும்.


ஏழ்மைப் பிடியில் அறம்பிறழ்ந்தால் 

அன்னியனாய்த்

தாயும் வெறுப்பாள் உணர்.

குறள் 1048:

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்பு.


நேற்றென்னைக் கொன்றது போன்ற வறுமைவந்து

பற்றுமோ இன்றும்? விளம்பு.

குறள் 1049:

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பா டரிது.


நெருப்புக்குள் தூங்கலாம்! ஏழ்மைத் துடிப்பில்

வருமோதான் தூக்கம்? உரை.

குறள் 1050:

துப்புர வில்லார் துவரத் துறவாமை

உப்பிற்கும் காடிக்கும் கூற்று.


ஏழை   துறவாமை, உப்புக்கும் கஞ்சிக்கும்

கேட்கும் நிலைக்காக வோ?



























104 உழவு

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

104 உழவு

குறள் 1031:

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.


தொழில்கள் செழித்தாலும் இந்த உலகம்

உழவால்தான் வாழ்கிறது! துன்பங்கள் ஏற்றும்

உழவே சிறந்த தொழில்.

குறள் 1032:

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா

தெழுவாரை எல்லாம் பொறுத்து.


தொழில்கள் எதுவெனினும் அன்னார் பசியை

உழவே தணித்தேதான் காப்பதால் இந்த

உலகுக்கச் சாணி உழவு.

குறள் 1033:

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.


உழுதுண்டு வாழ்வோர் உழவர்! அவரைத்

தொழுதுண்டு வாழ்வார் பிறர்.

குறள் 1034:

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்.


உழவர் உழைப்பால் வளமான நாட்டைப்

பலரும் விரும்பி அவர்குடைக் கீழே

நிழலில் வருவார் விழைந்து.

குறள் 1035:

இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்.


யாரிடமும் கேட்கமாட்டார் கேட்டால் கொடுத்திடுவார்

ஊராரைக் காக்கும் உழவு.

குறள் 1036:

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேமென் பார்க்கும் நிலை.


பற்றுகளைக்  கைவிட்டோர் கூட உழவர்கள்

பொற்கையை நம்பிவாழ்வார் செப்பு.

குறள் 1037:

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்


புழுதி ஒருபலம் காற்பலம் ஆக 

உழுதால் எருவோ ஒருபிடி  இன்றிச்

செழித்து வளரும் பயிர்.

குறள் 1038:

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு.


உழுவதினும் இங்கே உரமிடுதல் நன்று!

களையெடுத்தல் நீர்பாய்ச்சல் காட்டிலும் 

நாளும்

பயிர்காத்தல் சாலவும் நன்று.

குறள் 1039:

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்

தில்லாளின் ஊடி விடும்.

நிலத்தை உழவன்  கவனியாது வாழ்ந்தால்

மனைவிபோல் ஊடும் நிலம்.

குறள் 1040:

இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும்.


நிலமிருந்தும் ஒன்றுமில்லை என்றிருந்தால் அந்த

நிலமகளே பார்ப்பாள் நகைத்து.
































Sunday, January 24, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 நீறுபூத்த நெருப்பு!


மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம்

தெரிவிக்க வந்த பறவையே! இன்றும்

நெருப்பணைய வில்லையே! நீறுபூத்து நிற்கும்

ஒருநிலைதான் உள்ளதே இங்கு!



ஓவியர் திருமதி நிலமங்கை துரைசாமி அவர்களுக்கு வாழ்த்து

 ஓவியர் திருமதி நிலமங்கை துரைசாமி அவர்களுக்கு வாழ்த்து



வெய்யில் விசாகையில் சுட்டெரிக்கும் காலத்தில்

ஒய்யார மாக குடைபிடித்துச் செல்கின்றார்

நம்ம விநாயகர்! கையில் கமண்டலம்!

எங்கேயோ? காசியை நோக்கி நடைப்பயணம்?

அம்மாவின் ஆற்றலுக்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

பாலாவின் இணையவழிப் பேச்சு

 ZOOM MEETING 24.01.2021 

மாலை 7 மணி


கவிஞர் பாலாவுக்கு வாழ்த்து.

THE RISE -- எழுமின்!

தைப்பொங்கல் மாநாட்டுச் சிறப்புரை!


வள்ளுவம் காட்டும் வணிகம் தலைப்பிலே

வள்ளுவச் சாலையில் பாலாவின கம்பீரத்

தெள்ளுதமிழ்ப் பேச்சு இணையத்தில் கேட்கிறது!

சொல்விருந்து நாயகரை வாழ்த்து.


ஏழேழு சீர்களில் வெண்பாக் குறள்களில்

ஏழுகடல் ஆழக் கருத்துகளை உள்ளடக்கிப்

பார்போற்றத்  தந்த பொதுமுறை வள்ளுவத்தைப்

பார்முழுதும் பாலா முழங்குகிறார் வாழ்த்துவோம்!

ஏழுமணி இன்றுகேட்க கூடு.


மதுரை பாபாராஜ்

103 குடிசெயல் வகை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

103 குடிசெயல் வகை

குறள் 1021:

கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்

பெருமையிற் பீடுடைய தில்.


வீட்டையும் நாட்டையும் போற்றுகின்ற சூளுரைக்கு

வேறு பெருமையுண்டோ? சொல்.

குறள் 1022:

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்

நீள்வினையான் நீளும் குடி.


முயற்சி அறிவுடன் பேருழைப்பால் நாளும்

உயர்வது வீடுடன் நாடு.

குறள் 1023:

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்.


குடிமக்கள் வாழ உழைத்தால் இயற்கை

வரிந்துகட்டி வந்துதவும் செப்பு.

குறள் 1024:

சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்

தாழா துஞற்று பவர்க்கு.


குடியை உயர்த்தும் உழைப்பிற்கு ஆற்றல் 

மதித்துவரும் தானாய் விரைந்து.

குறள் 1025:

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு.


நாட்டு நலனிலே அக்கறை கொண்டோரை 

நாட்டுமக்கள் சுற்றமென்பார் சூழ்ந்து.

குறள் 1026:

நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த

இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

தன்குடியைக்  காக்கின்ற ஆற்றலின் தன்மையே ஆளுமையாம் சொல்.

குறள் 1027:

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்

ஆற்றுவார் மேற்றே பொறை.

போரின் சுமையோ வீரருக்கே! இல்லறத்தைத்

தாங்குவோர்க்கே வீட்டுச் சுமை.

குறள் 1028:

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்.


கடமைக்குக் காலநேரம் இல்லை! சோம்பல்

சுணக்கம் குடிக்கே அழிவு.

குறள் 1029:

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்

குற்ற மறைப்பான் உடம்பு.


குடும்பச் சுமைதாங்கி துன்பத்தைத் தாங்க

உடம்பிங்கே கொள்கலனோ? கூறு.

குறள் 1030:

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்

நல்லாள் இலாத குடி.


துன்பத்தைச் சந்திக்க ஆளற்ற வீடிங்கே

துன்பத்தால் சீரழியும் வீழ்ந்து









































Saturday, January 23, 2021

102 நாணுடைமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

102 நாணுடைமை

குறள் 1011:

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்

நல்லவர் நாணுப் பிற.


இழிசெயல் செய்ததற்கு நாணுதலும் 

மங்கை

இயல்பாக நாணுதலும் வேறு.

குறள் 1012:

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல

நாணுடைமை மாந்தர் சிறப்பு.


உடையுணவு எல்லாம் பொதுவாகும்! மாந்தர்

சிறப்பியல்பே நாணம் உணர்.

குறள் 1013:

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்

நன்மை குறித்தது சால்பு.


இன்னுயிரும் ஊனும் இணைந்ததுபோல் 

சான்றாண்மைப்

பண்புடன் நாணமும் இங்கு.

குறள் 1014:

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்

பிணியன்றோ பீடு நடை.


சான்றோர்க் கணிகலனே நாணந்தான்! நாணமின்றிப்

பீடுநடை போடுவது நோய்.

குறள் 1015:

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்

குறைபதி என்னும் உலகு.


பிறரின் பழிக்கும் தனது பழிக்கும்

பதறியே நாணுபவர் நாணமென்னும் பண்பின்

உறைவிட மாவார் உணர்.

குறள் 1016:

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்

பேணலர் மேலா யவர்.


பெரியவர்கள் பாதுகாப்பாய் நாணத்தை ஏற்பார்!

உலகத்தை ஏற்கமாட்டார் சாற்று.

குறள் 1017:

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்

நாண்துறவார் நாணாள் பவர்.


உயிர்காக்க நாணத்தைக் கைவிட மாட்டார்!

உயிர்விடுவார் மானத்தைக் காத்து.

குறள் 1018:

பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்

அறநாணத் தக்க துடைத்து.


பழிகளுக்கு நாணாமல் வாழ்பவரை விட்டே

விலகும் அறம்நாணித் தான்.

குறள் 1019:

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்

நாணின்மை நின்றக் கடை.


கொள்கை பிறழ்ந்தால் குடிக்கழிவு! நாணமற்ற

தன்மையோ நன்மைக்குக் கேடு.

குறள் 1020:

நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை

நாணால் உயிர்மருட்டி அற்று.


உள்ளத்தில் நாணமற்றோர்  வாழ்வும்

மரப்பொம்மை

பொம்மலாட்டக் காட்சியும் ஒன்று.
























101 நன்றியில் செல்வம்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

101 நன்றியில் செல்வம்

குறள் 1001:

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்த தில்.


பெருஞ்செல்வம் சேர்த்தும் அனுபவிக் காமல்

இறப்பதில் என்னபயன் செப்பு?

குறள் 1002:

பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு.


பொருள்களால் எல்லாம் முடியுமென்றே எண்ணித்

தராதோன் பிறவி, இழிவு.

குறள் 1003:

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்

தோற்றம் நிலக்குப் பொறை.


புகழைப் புறக்கணித்துச் செல்வத்தைச் சேர்ப்போர்

பிறப்பே நிலத்தின் சுமை.

குறள் 1004:

எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்

நச்சப் படாஅ தவன்.


எவரும் விரும்பாதோர் வாழ்ந்த பிறகு

எதுமிஞ்சும் என்றெண்ணு வார்?

குறள் 1005:

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய

கோடியுண் டாயினும் இல்.


கொடுத்து மகிழாதோர் கோடிகோடி செல்வம்

சிறைப்படுத்தி என்னபயன் சொல்?

குறள் 1006:

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்

றீத லியல்பிலா தான்.


தானும் அனுபவிக் காமல் பிறருக்கும்

ஈயாமல் செல்வத்தைக் காப்பவர் வாழ்விலே

நோயாவார் செல்வத்திற் கே.

குறள் 1007:

அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்

பெற்றாள் தமியள்மூத் தற்று.


வறியோர்க் குதவாத செல்வமோ மங்கை

தனித்திருந்து மூப்படைதல்  போல்.

குறள் 1008:

நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம்பழுத் தற்று.


ஊரார் வெறுப்பவனின் செல்வங்கள் நச்சுமரம்

ஊர்நடுவே காய்த்ததுபோ லாம்.

குறள் 1009:

அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய

ஒண்பொருள் கொள்வார் பிறர்.


அன்பை, அறவழியைத் தாண்டிக் குவித்தசெல்வம்

என்றுமே கொள்வார் பிறர்.

குறள் 1010:

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

வறங்கூர்ந் தனைய துடைத்து.


செல்வந்தர்க் கேற்படும் ஏழ்மை மழைமேகம்

பொய்ப்பதைப் போன்ற நிலை.



























Friday, January 22, 2021

100 பண்புடைமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

100 பண்புடைமை

குறள் 991:

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.


தன்னுடன் யாரும்  பழகிப் பேசுதல்

இங்கே எளிமையெனில் அத்தகைய 

நல்வழியே

பண்புடைமை யாகும் உணர்.

குறள் 992:

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.


அன்பாய்ப் பழகுதல், நற்குடி வாழ்க்கை,

பண்புடைமை என்பதற்குச் சான்று.

குறள் 993:

உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.


உறுப்புகளால் ஒத்திருத்தல் மாந்தரல்ல! பண்பால்

ஒருமித்தல் மாந்தராம் சொல்.

குறள் 994:

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புள ராட்டும் உலகு.


நேர்மை அறங்களைப் போற்றிப்  பயன்படுவார்

பண்பைப் புகழும் உலகு.

குறள் 995:

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு.


விளையாட்டாய்க் கூட இகழாதோர் மாற்றார்

உளம்நோகப் பேசமாட்டார் கூறு.

குறள் 996:

பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன்.


பண்புடையார் உள்ளதால் இவ்வுலகம் உள்ளது!

இன்றேல் புதைந்திடும் கீழ்.

குறள் 997:

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண் பில்லா தவர்.


அரம்போல கூர்மை அறிவிருந்தும் பண்பை

இழந்தோர் மரத்திற்கே ஒப்பு.

குறள் 998:

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்

பண்பாற்றார் ஆதல் கடை.


நட்பின்றி தீமையே செய்வோ ரிடத்திலும்

பண்பின்றி வாழ்தல் இழுக்கு.

குறள் 999:

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன் றிருள்.


நட்பாய்ப் பழகத் தெரியாமல் வாழ்பவர்க்குப்

பட்டப் பகலிலும் இவ்வுலகம் காரிருள்போல்

முற்றும் தெரியும் உணர்.

குறள் 1000:

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று.


பண்பிலார் செல்வமோ பாத்திரம் கெட்டதால்

வெண்பால் திரிந்ததுபோ லாம்.

























99 சான்றாண்மை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

99 சான்றாண்மை

குறள் 981:

கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.


நல்லவை  எல்லாமே சான்றோர் கடமையென்பார்!

உள்ளத்தால் ஏற்பார் உவந்து.

குறள் 982:

குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்

எந்நலத் துள்ளதூஉ மன்று.


நல்ல குணங்களே சான்றோர்க் கழகாகும்!

மற்றவை அல்ல அழகு.

குறள் 983:

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ

டைந்துசால் பூன்றிய தூண்.


அன்புடன் நாணமும் ஈகையும் கண்ணோட்டம்

உண்மை எனஐந்தும் சான்றாண்மைப்

பண்புகளை

நின்று நிலைக்கவக்கும் தூண்.

குறள் 984:

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு.


கொல்லாமை நல்லறமாம்! மாற்றார் குறையைச்

சொல்லாமை சான்றாண்மைப் பண்பு.

குறள் 985:

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை.


செயல்வீரர் ஆற்றல் பணிவாம்! அதுவே

பகவரை மாற்றும் படை.

குறள் 986:

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி

துலையல்லார் கண்ணும் கொளல்.


யாரிடமும் தோல்வியை ஏற்கின்ற பக்குவமே

சால்பின் உரைகல்லாம் சாற்று.

குறள் 987:

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு.


இன்னல்கள் செய்தவர்க்கு நன்மைகள் செய்யாத

பண்பால் பயனென்ன சான்றாண்மை கொண்டவர்க்கு?

பண்படுத்தும் ஆண்மையே சால்பு.

குறள் 988:

இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்

திண்மையுண் டாகப் பெறின்.


சான்றாண்மை என்னும் உறுதி இருப்பவர்க்கு

ஏழ்மை இழிவல்ல சாற்று.

குறள் 989:

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்

காழி யெனப்படு வார்.


ஊழிவந்து தாக்கினாலும் தான்மாறார் 

சான்றாண்மை

ஆழி எனப்படுவார் தான்.

குறள் 990:

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்

தாங்காது மன்னோ பொறை.


சான்றோரின் பண்பு குறைந்தால் உலகமோ

தாங்காது தன்பாரந் தான்.




































Thursday, January 21, 2021

98 பெருமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

98 பெருமை

குறள் 971:

ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்

கஃதிறந்து வாழ்தும் எனல்.


வாழ்வின் ஒளியாகும் ஊக்கம்! ஊக்கமின்றி

வாழ்தலே என்றும் இழிவு.

வணக்கம்.

இது சரியாக வருகிறதா 

சி ஆர்.


குறள் 972:


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.


பிறப்பால் சமந்தான்!  தொழிலின் திறத்தால்

சிறப்புகள் வேறுபடும் சாற்று.

குறள் 973:

மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர்.


மேல்நிலையில் பண்பற்றோர் தாழ்ந்தவரே! பண்புள்ளோர் 

கீழ்நிலை என்றாலும் வாழ்வில் உயர்ந்தவரே!

மேல்கீழ் அளவுகோல் பண்பு.

குறள் 974:

ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.


நெறிபிறழா வாழ்க்கையை வாழ்வோர்க்குக் கற்பில்

நெறிபிழாப் பெண்பெருமை உண்டு.

குறள் 975:

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை யுடைய செயல்.


பெருந்தடை வந்தும் செயலை முடிப்போர்

பெருமைக் குரியோராம் சாற்று.

குறள் 976:

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்

பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.


பெரியோரின் மாண்பினைக் காக்கும்

உணர்ச்சி 

சிறியோர்  மனத்திலில்லை சொல்.

குறள் 977:

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்

சீரல் லவர்கண் படின்.


சிறப்புகள் எல்லாம் தகுதியற்றோர் கொண்டால்

செருக்குடன் வாழ்வ தியல்பு.


குறள் 978:

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து.


பெருமை உடையோர் பணிவுடன் வாழ்வார்!

செருக்குடன் தன்னை வியந்தேதான் வாழ்வார்

சிறுமை உடையோர்தான் செப்பு.

குறள் 979:

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை

பெருமிதம் ஊர்ந்து விடல்.


செருக்கின்றி வாழ்தல் பெருமை! சிறுமை

செருக்கெனும் ஆணவந்தான் சாற்று.

குறள் 980:

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்

குற்றமே கூறி விடும்.


பிறர்குறை கூறாமல் வாழ்தல் பெருமை!

சிறுமை, குறைகூறும் பண்பு.




























மருமகன் ரவி அனுப்பியது

 மருமகன் ரவி அனுப்பியது

மொழியாக்கம்


ஆணவத்தின் உச்சத்தில் துள்ளித் திரியாதே!

நான்தலைவன் எப்போதும் என்றே நினைக்காதே!

ஈர்ப்புவிசை உள்ளது உலகம், மறவாதே!

மேல்நோக்கிச் செல்வது கீழ்வரும் நிச்சயமாய்!

வாழ்க்கையில் பண்பே உயர்வு.


மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 நண்பருக்கு வணக்கம்.


மலர்ந்தும் மலராத காலைப் பொழுதில்

மலர்க்கொத்தைத் தந்தே வணக்கத்தைக் கூறும்

மலர்போன்ற நட்பின் மணத்தில் திளைத்தேன்!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

97 மானம்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

97 மானம்

குறள் 961:

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்

குன்ற வருப விடல்.


செய்தாக வேண்டுமென்ற போதிலும் தன்பெருமை

குன்றுவதைச் செய்யமாட்டார் இங்கு.

குறள் 962:

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு

பேராண்மை வேண்டு பவர்.


புகழ்வேண்டும் என்றே குடும்பப் பெருமை

தடம்புரளச் செய்யும் செயலைத் தவிர்ப்பார்!

குடிப்பெருமை மானமே மூச்சு.

குறள் 963:

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு.


உயர்ந்த நிலையில் பணிவு, சரியும்

நிலையில் பெருந்தன்மை நன்று.

குறள் 964:

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை.


பெரியோர் தரந்தாழ்ந்தே மானம் இழந்தால்

தரையில் விழுந்த முடியாய் மதிப்பார்!

உயர்தரப் பண்பே மதிப்பு.

குறள் 965:

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்.


குணக்குன்றாய் உள்ளோர் இழிசெயல் தன்னை

மணியளவு செய்தாலும் தாழ்வார் நிலையில்!

குணப்பிறழ்வு வாழ்வின் சரிவு.

குறள் 966:

புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்

றிகழ்வார்பின் சென்று நிலை.


இகழ்ச்சியை ஏற்றும் மரியாதை விட்டும்

புகழ்வருமா? என்னபயன் சொல்.

குறள் 967:

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று.


மதியார்பின் சென்றேதான் வாழ்வதை விட்டே

அழிவினை ஏற்பது மேல்.

குறள் 968:

மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை

பீடழிய வந்த இடத்து.


சாவா மருந்தில்லை! நம்பெருமை விட்டேதான்

வாழ்தல் இழிவென்றே சொல்.

குறள் 969:

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.


முடிகள் உதிர்ந்தால் கவரிமா சாகும்!

மதிப்பிழந்தே மானம் இழந்தால் உயர்ந்தோர்

உயிர்நோக வாழமாட்டார் இங்கு.

குறள் 970:

இளிவரின் வாழாத மானம் உடையார்

ஒளிதொழு தேத்தும் உலகு.


மானம் இழக்கும்  இழிநிலையில் 

வாழாதோர் 

சான்றாண்மை போற்றும் உலகு.