Thursday, April 29, 2021

மணமக்கள் R.ரித்திகா -- C. சுரேஷ்பாபு


 மணமக்கள் வாழ்க வளமுடன்!

மணமக்கள்

R.ரித்திகா -- C. சுரேஷ்பாபு

திருமண நாள்: 29.04.21

குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு.


கணவன் மனைவியை வாழ்த்தி, மனைவி

கணவனை வாழ்த்துவதே உள்ளார்ந்த அன்பின்

இணக்க உணர்வாகும்! இல்லறத்தின் வேராம்!

மனையற மாண்பிற்கு வித்து.


பெற்றோர் குழந்தைகள்மேல் அன்பைப் பொழிவதும்

பெற்றோ ரிடத்தில் குழந்தைகள் ஆசிகளைப்

பெற்றே மகிழ்வதும் இல்லற வாழ்க்கையில்

பெற்றோர் உணர்கின்ற வாழ்வு.


பெற்றோர் கடமையைச் செவ்வனே செய்வதும்

பெற்றோர்க்குப் பிள்ளைகள் நற்பண்பால் நற்பெயர்

பெற்றுத் தருவதும் இல்லற மாண்பாகும்!

பெற்றோர் திளைக்கின்ற பேறு.

வாழ்த்தும் இதயங்கள்

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்மார்

Wednesday, April 28, 2021

நண்பர் வீதிவிடங்கன் அனுப்பியது.

 நண்பர் வீதிவிடங்கன் அனுப்பியது.


தமிழாக்கம்

வாழ்க்கையும் காலமும் இவ்வுலகின் ஆசான்கள்!

வாழ்க்கையோ காலத்தை நன்கு பயன்படுத்த

நாள்தோறும் கற்றுத் தருகிறது! காலமோ

வாழ்வின் மதிப்பையே கற்றுக் கொடுக்கிறது!

காலத்தை வாழ்வை மதி.


மதுரை பாபாராஜ்

நண்பர் சுந்தரம் அனுப்பியது.

 நண்பர் சுந்தரம் அனுப்பியது.



தமிழாக்கம்


உங்கள் வலியை உணர்ந்தால் உயிருடன்

இங்கே உலவுவதாய் எண்ணலாம்! நீங்களோ

மற்றவரை வாட்டும் வலியை உணர்ந்தால்தான்

அக்கறை கொண்ட மனிதரெனப் போற்றுவார்!

மற்றவர்மேல் அக்கறை கொள்.


மதுரை பாபாராஜ்

Sunday, April 25, 2021

குழப்பாதே

 குழப்பாதே!

உரிமை, கடமை, மரியாதை மூன்றைத்

தெளிவாய்ப் புரிந்து நடந்தால் இணக்கம்

ஒளிவீசும் இல்லறத்தில்! நாளும் இணையர்

குழப்பினால் வேறுபாடு தான்.


மதுரை பாபாராஜ்

உளைச்சல் கலம் கொரோனா

 உளைச்சல் கலம்!

மலர்வாடிப் போனால் உதிர்ந்தேதான் வீழும்!

சுளைவாடிப் போனால் சுவைதானே போகும்!

உளம்வாடிப் போனால் விரக்தியே மிஞ்சும்!

உளைச்சல் கலந்தானோ? வாழ்வு.


மதுரை பாபாராஜ்


Saturday, April 24, 2021

நண்பர் வீதிவிடங்கன் அனுப்பியது


 நண்பர் வீதிவிடங்கன் அனுப்பியது!

தமிழாக்கம்

துன்பங்கள் வாழ்க்கையில் உன்னை அழிப்பதற்கு

என்றும் வருவதில்லை! உன்னுள் மறைந்திருக்கும்

பண்பட்ட  ஆற்றலைக் காட்ட உதவிசெய்ய

இங்கே வருகிறது! செப்பு.


மதுரை பாபாராஜ்

Thursday, April 22, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!

தமிழாக்கம்.

மன்னிப் பதற்கும்  மறப்பதற்கும் எப்போது

கற்கப் பழகுகின் றீர்களோ அப்போதே

வெற்றி நடைபோடும் நிம்மதி வாழ்க்கையில்

பற்றிப்  படரும் உணர்.





Wednesday, April 21, 2021

நண்பர் சுந்தரம் அனுப்பியது

 நண்பர் சுந்தரம் அனுப்பியது



தமிழாக்கம்


வழிபாடு சூழ்நிலையை மாற்றாது! ஆனால்

வழிபாடு சூழ்நிலைக் கேற்ப மனதின்

அணுகுமுறை தன்னையே மாற்றி

நமக்கு

அனைத்துவித நம்பிக்கை தந்துவிடும்!

வாழ்வில்

மலைக்கவைக்கும் மாற்றம் வரும்.


மதுரை பாபாராஜ்

Tuesday, April 20, 2021

விசாகை தமிழ்ச்சங்கச் செயலராக தேர்வான நண்பர் மொகலீஸ்வரனுக்கு வாழ்த்து!

 நமது தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்🙏🙏.பெற்றோரின் ஆசிர்வாதத்தோடு என்னை visakhapatnam steel plant தமிழ் சங்கத்தில் செயலாளர் ஆக தேர்ந்தெடுத்தார்கள். இந்த செய்தியை உங்கள் அனைவருடன் பகிந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.🙏🙏🤝🤝🤝

என்றும் அன்புடன்,

சின்னப்பன் 

 மொகலீஸ்வரன்.


விசாகை தமிழ்ச்சங்கச் செயலராக தேர்வான

நண்பர் மொகலீஸ்வரனுக்கு வாழ்த்து!



குறளார்வம் மற்றும் தமிழார்வம் தன்னை

சிறகாகக் கொண்டே மொகலீஸ்வர் தொண்டைச்

சிறப்பாய் நிறைவேற்றும் ஆற்றலைக் கண்டே

தமிழ்ச்சங்கம் போற்றும் செயலாள ராக

விசாகை நகரிலே தேர்ந்தெடுத்தார் வாழ்க!

நிறைவாக வாழ்கபல் லாண்டு.


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!

 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


தமிழாக்கம்

நம்முடைய கட்டுக்குள் இல்லாத  ஒன்றுபற்றி

இங்கேன் கவலைகொள்ள வேண்டும்? முடிந்ததை

நம்முடைய எல்லைக்குள் நின்றேதான்  செய்யவேண்டும்!

நம்புவோம் நல்லதே நாளும் நடக்குமென்றே!

நம்பிக்கை வாழ்க்கையின் வேர்.

பிள்ளைகள் மனம்

 பிள்ளைகள் மனம்!

பெற்றோர்கள் இப்படித்தான் வாழ்வோம் எனச்சொன்னால்

சுற்றிவரும் பிள்ளைகள் ஏங்கித் தவித்திருப்பார்!

உள்ளக் குமுறலை உள்ளடக்கி வாழ்ந்திருப்பார்!

சொல்ல  முடியா நிலை.


மதுரை பாபாராஜ்

கனிதல் நன்று-- கனியவைத்தல் தீது!

 கனிதல் நன்று-- கனியவைத்தல் தீது!


மனமாற்றம் பெற்றே மனங்கனிய வேண்டும்!

குணமாற்றம் ஒன்றே நிரந்தர மாகும்!

கனியெல்லாம்  தானாய்க் கனிவதே நன்று!

வலிந்து கனியவைத்தல் வீண்.

Monday, April 19, 2021

நமது மண்வாசம் இதழுக்கு வாழ்த்து!

 வணக்கம். நமது மண்வாசம் இதழுக்குத் தாங்கள் அளித்துவரும் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. பேராசிரியர் மோகன் - பேராசிரியர் நிர்மலா மோகன் இலக்கிய இணையர் அறக்கட்டளை சார்பில் நமது மண்வாசம் இதழுக்குச் சிறந்த இலக்கியச் சீரிதழ் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியினைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். தங்களைப் போன்றோரின் ஒத்துழைப்பால்தான் இது சாத்தியமாயிற்று.


நமது மண்வாசம் இதழுக்கு வாழ்த்து!


நண்பர் திருமலை உழைப்பிற்கு வாழ்த்து.


இலக்கியச் சீரிதழ்  என்ற விருதை

வழங்கிப் பெருமை படுத்திய நல்லோர்

இலக்கியச் சோலைத் தென்றல் இணையர் 

பெருந்தன்மைப் பண்பாளர் நிர்மலா 

மோகன்

அறநெறி போற்றுகின்ற கட்டளை வாழ்க!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன் அனுப்பிய சொல்லோவியம்!


 நண்பர் எழில்புத்தன் அனுப்பிய சொல்லோவியம்!


தமிழாக்கம்


உண்மையாய் ஒன்றும் மனதுக்குள் ஒன்றுமென

ஒவ்வொன்றும் இங்கே இரண்டாய் நடக்கிறது!

உங்கள் மனங்களை நேர்மறை எண்ணத்தால் 

நன்கு வலிமைப் படுத்துவது தேவையான

ஒன்றாகும் என்றே உணர்.


மதுரை பாபாராஜ்

தேன்கூடு கட்டு

 தேன்கூடு கட்டு!

வாழ்க்கை கிடைக்காமல் தத்தளிக்கும் மாந்தருண்டு!

வாழ்க்கை கிடைத்திருந்தும் தட்டிவிடும் மாந்தருண்டு!

தேளாகக் கொட்டினால் நிம்மதி சேராது!

தேனாகச் சொட்டினால் நிம்மதி கூடுகட்டும்!

தேன்கூட்டைக் கட்டு முயன்று.


உறவில் குறைபாடு!

 உறவில் குறைபாடு!

உறவைப் பராமரிக்கும் பண்பும், உறவின்

குறைபாட்டில் வேறுபாடு காண்பதும் வேறு!

உறவின் இணக்கம் குறைபாட்டை நீக்கும்!

குறையை மறந்தே இணக்கம் வளர்த்தல்

குறைகளை நீக்கும்! மகிழ்ச்சியைத் தூவும்!

குறைபாட்டை எண்ணி உறவை இழத்தல்

முறையல்ல என்றே உணர்.


மதுரை பாபாராஜ்

Sunday, April 18, 2021

திருமண நிகழ்வில் மேளக் கச்சேரி!

 இணையர்:

P. பிரியதர்ஷினி-- M.சீனிவாசன்


திருமண நிகழ்வில்

மேளக் கச்சேரி!


18.04.21-- மயிலாடுதுறை

மேளத்தில் பத்து விரல்கள் விளையாடும்

கோலத்தில் மெய்மறந்தேன்! அற்புதமாய் ஓசைகள்

காற்றில் கலந்துவந்து உள்ளத்தை ஈர்த்திழுக்க

ஊற்றெடுத்த இன்பத்தில் நான்.


மேளத்தைப் பேசவைத்த ஆற்றலோ அற்புதம்!

தாளம் பிசகாமல் மாறிமாறிக் கச்சேரி

மேளம் இசைக்க தலையாட்டி பொம்மையாய்

மேளத்தால் மாறிவிட்டோம்! மெய்.


மதுரை பாபாராஜ்


P. பிரியதர்ஷினி-- M.சீனிவாசன்

 திருமண வாழ்த்து!

திருமண நாள்:18.04.21

இணையர்:

P. பிரியதர்ஷினி-- M.சீனிவாசன்



அன்பையும் பண்பையும் வாழ்வின் இமையாக்கி

என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழியவே!

கண்போல் இணக்கத்தைக் காத்தேதான் வாழியவே!

என்றும் பதினாறு செல்வங்கள் பெற்றேதான்

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


ஆசிகள் வழங்குவோர்

மதுரை பாபாராஜ் -- வசந்தா

குடும்பத்தார்

Thursday, April 15, 2021

நண்பர் DGM இராமசாமி அனுப்பியது

 வணக்கம் நண்பரே!

தமிழாக்கம்


நம்பிக்கை கொண்டே புதியநாள் ஒவ்வொன்றும்

இங்கே மலர்கிறது! நம்பிக்கை கொண்டேதான்

என்றுமே வாழ்க்கை நகர்கிறது! இந்தநாள்

கொண்டு வரட்டும் மகிழ்வு.


மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி அனுப்பியது

 மருமகன் ரவி அனுப்பியது


தமிழாக்கம்

அமைதியை ஆழ்ந்து கவனித்தே ஒன்றும்

நிலையெடுத்தால் வாழ்வில் மலைக்கவைக்கும் செய்தி

அலையலையாய் வந்தே உணர்த்தும்! அறிந்தால்

இயல்பாக வாழ்வோம் உணர்.


மதுரை பாபாராஜ்

Sunday, April 11, 2021

நண்பர் சுந்தரம் அனுப்பியது

 நண்பர் சுந்தரம் அனுப்பியது


தமிழாக்கம்

வசதியான வாழ்க்கைப் பயணம் அமைய

எதிர்பார்ப்பு என்னும் சுமையைக் குறைத்தே

வருவதை வைத்து திருப்தியாய் வாழ்ந்தால்

நிறைவாய் வாழலாம் நம்பு.


மதுரை பாபாராஜ்

Saturday, April 10, 2021

வலைக்குள்ளே மீன்!


 வலைக்குள்ளே மீன்!

பணச்சிக்கல் என்றால் கடன்வாங்கித் தீர்ப்போம்!

மனச்சிக்கல் என்றால் களையிழந்து போவோம்!

மனமோ வலைக்குள்ளே சிக்கிய மீன்போல்

துடிக்கும் துவளும் உழன்று.


மதுரை பாபாராஜ்


பேரன் கோசலுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

 பேரன் கோசலுக்குப்  பிறந்தநாள் வாழ்த்து!


08.04.21

பெற்றோர்:

திரு. மு.ராஜ்குமார்-- 

திருமதி.பிருந்தா ராஜ்குமார்.


பெற்றோரின் ஆசியுடன் உற்றார் உறவினர் 

சுற்றத்தார் நண்பர்கள் சேர்ந்தேதான் வாழ்த்திசைக்க

கற்க கசடறக் கற்றபின் வாழ்க்கையில்

நிற்க அதற்குத் தகுந்தவண்ணம் ஆற்றலுடன்!

அற்புதமாய் முன்னேறி பல்லாண்டு வாழியவே!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


பாபா தாத்தா

வசந்தா அவ்வா

மற்றும்

குடும்பத்தார்




கொரோனா தடைபோல் வாழ்வு!

 கொரோனா தடைபோல் வாழ்வு!

கடமைசெய்ய வேண்டும் நடமாடு கின்றேன்!

நடமாட வேண்டும் உணவருந்து கின்றேன்!

உறவாட வேண்டும் உடையணி கின்றேன்!

தடைசெய்யப் பட்ட கொரோனா பகுதிச்

சிறைப்பறவை யானதே வாழ்வு.


மதுரை பாபாராஜ்



Thursday, April 08, 2021

கல்லறைத் தாழே! திற

 கல்லறைக் கதவே  திற!


உள்ளே அழுகை! வெளியே சிரிக்கின்றேன்!

இவ்வுலக வாழ்க்கை நடிப்பில் நகர்கிறது!

எவ்வளவு நாளோ தெரியவில்லை! என்னுயிர்

உள்ளவரை என்றால் முடியாது! தாங்காது!

கல்லறைத் தாழே திற.


வேதனை அம்பு துளைக்கின்ற நேரத்தில்

சோதனைத் தீயோ படர்கின்ற நேரத்தில்

பாடாய்ப் படுத்துகின்ற சூழ்நிலை கொக்கரித்தால்

வேடமே வாழ்வு! விளம்பு.




Tuesday, April 06, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 ஆளப்போகிறவர் யார்?


தேர்தல் எழுச்சி தெரிகிறது! வாக்காளர்

ஆர்வம் ததும்ப இளைஞர் முதியோர்கள்

சேர்ந்தேதான் சென்றார்கள் வாக்களித்தார்! எண்ணத்தைத்

தேர்தல் முடிவுகள் காட்டும்! பொறுத்திருப்போம்!

ஆள்வதற்கு யார்வருவா ரோ?


மதுரை பாபாராஜ்

Sunday, April 04, 2021

நண்பர் IG. சேகர் அனுப்பிய படம்

 


நச்சு மரம்!

மனம்விட்டுப் பேசு! சுமையிறங்கிப் போகும்!

துணைசேர்த்துப் பாரு! தனிமைதான் நீங்கும்!

குணக்குன்றாய் மாறு! குவலயம் போற்றும்!

சினக்குமுறல் நச்சு மரம்.


மதுரை பாபாராஜ்


அரைக்கிணறு

 சிக்கல் தவிர்! அரைக்கிணறு!


வெய்யில் தகிக்கறதே என்று நெருப்புக்குள்

கைவிட்ட அற்பனைப்  போலத்தான் வாழ்க்கையில்

சிக்கலைச் சிக்கலாக்கி வாழும் முறைதவறு!

சிக்கல் தவிர்க்கப் பழகு.


அரைக்கிணறு தாண்டியாச்சு! மீத முள்ள

அரைக்கிணறைத் தாண்டத் தயங்கியே நின்றால்

விழுவோம் கிணற்றுக்குள்! தாண்ட முயன்றால்

எழுந்தேதான் தாண்டலாம் இங்கு.


மதுரை பாபாராஜ்


Saturday, April 03, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


 பறவையே! பார்த்து வாக்களிக்கச் சொல்!

அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:504)

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளலென்றார் ஐயன்!

மனதில் எடைபோட்டு வாக்களிக்க வேண்டும்!

குணக்குன்றாய் வாழ்வோரை  நாடாள வைப்போம்!

இணக்கம் மணக்கும் விளம்பு.


மதுரை பாபாராஜ்


Friday, April 02, 2021

தமிழ் நெடுஞ்சாலை

 தமிழ் நெடுஞ்சாலை


!

விகடனில் பாலா தமிழ்நெடுஞ் சாலைத்

தொடரோ வெளிவர உள்ளதற்கு வாழ்த்து!

நடைபோடு  கம்பீர மாக தமிழே!

படைபோல நாங்கள் தொடர்ந்தேதான் வந்து

நடைபோடு வோமே படித்து.


மதுரை பாபாராஜ்

Thursday, April 01, 2021

திரு.துரைசாமி திருவாசகம் அய்யா(விசாகை) அனுப்பிய சொல்லோவியம்

 திரு.துரைசாமி திருவாசகம் அய்யா(விசாகை) அனுப்பிய சொல்லோவியம்



அறிவியலை விட்டுவிட்டே ஆன்மீகம்  வந்தால்

நெறிகளை விட்டே வெறிகளை ஏற்கும்

முறைகள் தலைதூக்கும்!

தந்தை பெரியார்

பிறப்பாரோ மீண்டும்? விளம்பு.


அருமை. 

மெய்ஞ்ஞானத்தை விஞ்ஞானத்துடன் ஒப்பிட்டு சமாதானப்படுத்தும் விஞ்ஞானப் பேரறிஞர்  ஐன்ஸ்டீனின் (Eisenstein)கூற்றை நினைவு கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்குமோ? 

“Religion is blind without Science and Science is maimed without religion.”

In this quote Einstein has carefully avoided using the word spirituality instead of religion. 

Really we need a PERIYAR now most socially.


மதுரை பாபாராஜ்

திருமதி உமா ராம்குமார் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியம்.

 திருமதி உமா ராம்குமார் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியம்.


தமிழாக்கம்

எதிர்பார்ப்பில் ஏமாற்றம் காண்பதும் நாளும்

எதிர்பாரா சூழலைச் சந்திக்க வைத்தும்

நெறிப்படுத்தி வாழ வழிகாட்டும் ஆற்றல்

முறையொன்றே வாழ்வாகும் செப்பு.


மதுரை பாபாராஜ்