Saturday, February 27, 2021

தளபதி ஸ்டாலின் பிறந்தநாள்

 தளபதி ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


01.03.2021

பெரியார் அண்ணா கலைஞர்

வழியில் நடப்பார் தளபதி


கலைஞரின் மகனே ஸ்டாலின்

கழகத்தின் தளபதி ஸ்டாலின்


கடமை கண்ணியம் காப்பார்

கட்டுப் பாட்டைக் காப்பார்


உறவுக்குக் கைகள் கொடுப்பார்

உரிமைக்குக் குரல்தான் தருவார்


மக்களின் குறைகளை தீர்ப்பார்

வாழ்வில் புன்னகை சேர்ப்பார்


உழைப்பை நம்பி வாழ்வார்

கொள்கை விளக்கை ஏற்பார்


தமிழே மூச்சாய் வாழ்வார்

தமிழர் நலத்தைக் காப்பார்


இந்தித் திணிப்பை எதிர்ப்பார்

இருமொழிக் கொள்கை வளர்ப்பார்


காட்சிக் கெளியர் ஸ்டாலின்

கடுஞ்சொல் அறியார் ஸ்டாலின்


ஏழை எளியோர் வாழ்வில்

ஒளிவிளக் கேற்றுவார் ஸ்டாலின்


உயர்வு தாழ்வு இல்லை

சமத்துவம் தானே எல்லை


அனைத்து மதத்தை மதிப்பார்

இணக்கத்தை நாட்டில் விதைப்பார்


சொன்னதை என்றும் செய்வார்

செய்வதைத் தானே சொல்வார்


தளபதி ஸ்டாலின் வாழ்க!

வளர்தமிழ் போல வாழ்க!


மதுரை பாபாராஜ்





நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

 நண்பர் இராமசாமி அனுப்பிய படம்


வணக்கம் 

எண்ணித்  துணிக கருமம்  துணிந்தபின்

எண்ணுவம் என்ப திழுக்கு.( குறள்)

எந்தப் பணியெனினும்  எண்ணித் தொடங்கவேண்டும்!

அந்தப் பணியைத் தலைகீழாய் நின்றேனும்

வென்றெடுத்தே சாதிக்க வேண்டும் முறையாக!

உன்னால் முடியும் உணர்.


மதுரை பாபாராஜ்

தேர்ந்தெடுத்தால் நன்று

 தேர்ந்தெடுத்தால் நன்று!

தேர்தல்நாள் 06.04.21


வள்ளுவத்தைப் போற்றுவோரைத் தேர்தலில் தேர்ந்தெடுப்போம்!

நல்லவரை நாடுகாக்கும் வல்லவரை சான்றாண்மை

உள்ளவரை, தன்னலந் தன்னைத் துறந்தவரை

எல்லோரும் தேர்ந்தெடுத்தால் நன்று.

தமிழுணர்வு கொண்டோரைத் தேர்ந்தெடுப்போம்! நாட்டில்

சமத்துவம் பேணுவோரைத் தேர்ந்தெடுப்போம்! மக்கள்

இணக்கமுடன் வாழவழி காட்டுவோரை

என்றும்

மனங்குளிரத் தேர்ந்தெடுத்தால் நன்று.


மதுரை பாபாராஜ்

Friday, February 26, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


வணக்கம்


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

பறவைகளும் குறளும்

குறள் 1295:


பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்

அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.


அன்பர் பிரிந்துவிட்டால் அஞ்சுகின்ற நெஞ்சமோ

வந்தால் பிரிவாரோ என்றேதான் அஞ்சுதே,

நெஞ்சே! துயர்தான் உனக்கு.

மதுரை பாபாராஜ்


கின்னஸ் சுண்டுப் பலகை சாதனை

 [2/25, 6:58 AM] Lingaraj Kannan: Leaving Madurai by Vaigai Express today, the 25.02.2021 at 7.00 am for the above Non-Stop play of Carrom for 3 days and will be completing on Sunday, the 28.02.2021 at 7.00 pm. You are invited.🌹🤝


 கின்னஸ் சாதனை

சுண்டுப்பலகை

MARATHON CARROM

25.02.21 7 am to 28.02.21 7 pm


அஸ்வின் சௌந்தரராஜன்

&

மோகன கிருஷ்ணன்


சுண்டுப் பலகை விளையாட்டில் சாதனைச்

செண்டுகளை ஏந்த தொடர்ந்தேதான் மூன்றுநாள்கள்

இங்கே விளையாடும் அஸ்வின், கிருஷ்ணனும்

கின்னஸின் சாதனை நாயகர்கள் பட்டத்தை

வென்றெடுத்து வாழியவே நீடு.


மதுரை பாபாராஜ்

முத்தொள்ளாயிரம் 14

 முத்தொள்ளாயிரம்

பாடல் 14

அள்ளற் பழனத் தரக்காம்பல் வாய்அவிழ

வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப் – புள்ளினம்தங்

கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேற் கோக்கோதை நாடு. -14

-----------------------------------------------------------------

கவிதை


சேற்று நிலத்திலே ஆம்பல் மலர்கிறது!

ஈர்க்கின்ற செவ்வண்ணப் பூக்களைப்

பார்த்ததும்

தீப்பற்றிக் கொண்டதோ வெள்ளத்தில்

என்றஞ்சி

காப்பதற்குப் புள்ளினம் தங்கள் சிறகுக்குள்

மூடும் குஞ்சுகளை! இத்தகைய காட்சிகொண்ட

நாட்டுக் குரியோன் இலைவடிவ வேல்கொண்ட

மாமன்னன் கோதை! உணர்.





 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்

 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்.


மொழியாக்கம்

எந்தக் குறிப்பிட்ட நேரமும் 

சந்திக்கும்

ஒவ்வொரு சூழ்நிலையும் உங்கள் உறுதியும்

முன்னெடுத்துச் செய்யும் விவேகமும் சேர்ந்தேதான்

என்ன அடுத்தது என்றே அடியெடுத்து

முன்னேற வைக்கும் உணர்.



Thursday, February 25, 2021

முத்தொள்ளாயிரம் 13

 முத்தொள்ளாயிரம்

பாடல் 13

நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய

ஊரிரே என்னை உயக்கொண்மின்-போரிற்

புகலும் களியானைப் புழியர் கோக் கோதைக்கு

அழலுமென் நெஞ்சங் கிடந்து. 13

--------------------------------------------------------------------

கவிதை!


வெம்மையைத் தீர்க்கின்ற நீரும் நிழலும்போல்

என்றும் அருள்புரியும் ஊராரே! காத்தருள்க!

அங்கே வருகின்றான் பூழிநாடன் கோதைதான்!

கம்பீர யானையுலா பாருங்கள்! என்னுடைய

நெஞ்சைக் கவர்ந்துவிட்டான்!  காத்தருள்க என்னைத்தான்!

கெஞ்சுகிறாள் ஆரணங்கு தான்.









Wednesday, February 24, 2021

மருமகன் ரவி அனுப்பியது

 மருமகன் ரவி அனுப்பியது!


மொழியாக்கம்

கடின உழைப்பு! குறைவான பேச்சு!

தெரிந்ததைச்  செய்தல்! பிழைகளில் கற்றல்!

மனிதருடன் நட்பு! சிரித்து மகிழ்தல்!

புகாரை நிறுத்துதல்! உன்னுள்  முதல்செய்!

பெரிதாய்க் கனவுகாண்! திட்டமிடு முன்பே!

நிபந்தனை யின்றியே அன்பைப் பொழி!

சிறப்புகள் தேடிவரும் சூழ்ந்து.


மதுரை பாபாராஜ்

Tuesday, February 23, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்

 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நம்பிக்கையே வேர்!

உங்களை எல்லோரும் நட்டாற்றில் கைவிட்டுச்

சென்றாலும் உங்கள் மனஉறுதி சீர்படுத்திச்

செம்மைப் படுத்தி இலக்கை அடையவைக்கும்!

நம்பிக்கை வாழ்வுக்கு வேர்.


மதுரை பாபாராஜ்

முத்தொள்ளாயிரம் 12

 முத்தொள்ளாயிரம்

பாடல் 12

மல்லல்நீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினும்

சொல்லவே வேண்டும் நமகுறை-நல்ல

திலகங் கிடந்த திருநுதலாய் அஃதால்

உலகங் கிடந்த இயல்பு. 12

-------------------------------------------------------------------

கவிதை

தட்டிவிட்டால் பாயும் குதிரைகொண்ட சேரனிடம்

சுற்றிவரும் என்னுள்ளக் காதல்நோய்

வாட்டுவதை

நெற்றித் திலகமிட்ட மங்கையே! நீர்வளம்

அட்டியின்றி ஏந்துகின்ற மாந்தை நகரத்தார்

எப்படியும் சொல்லவேண்டும் செப்பு.






Monday, February 22, 2021

வசந்தா கருத்து கொரோனா நிலை

 கொரோனாவில் வாழ்க்கை நிலை!

மனைவி வசந்தா கொடுத்த கருத்து.

கடலுக் கடியில் இருந்துகொண்டு நாளும்

கடந்தகால வாழ்க்கை வருமோ வராதோ?

கரைதெரிய வாய்ப்புண்டோ இல்லையோ என்ற

பரபரப்பில் போகிறது வாழ்வு.


மதுரை பாபாராஜ்

25.07.20


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்

 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


மன உறுதியே மகிழ்ச்சி

சாதிக்க எண்ணியபின் தீட்டும் செயல்திட்டப்

பாதையில் முட்கள் வரவேற்கும் என்றறிந்தும்

நாமோ முன்னேறப் பார்க்கும்

உறுதிதான்

வாழ்வின் மகிழ்ச்சியாகும்! சொல்.


மதுரை பாபாராஜ்

நண்பர் முருகேசன் அனுப்பிய படம்

 நண்பருக்கு வணக்கம்!


உயர்திணை!

தன்னை வளர்த்திருக்கும் தாயின் முதுகிலே

அன்பாக ஏறிநின்றே ஈன்றெடுத்த தாய்க்கொரு

நன்றியுடன் முத்தம் வழங்குகின்ற குட்டியாடு!

ஐந்தறிவோ ஆறறிவோ நன்றி உணர்விருந்தால்

என்றும் உயர்திணைதான் சொல்.


மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


நண்பருக்கு வணக்கம்

தண்ணீரில் வாத்து அழகாக உட்கார்ந்து

தன்கழுத்தை அங்கே திருப்பித்தான்  பக்கவாட்டில் 

தன்னிரையைப் பார்க்கிறதோ? நீருக்குள் 

தன்நிழலோ

இன்னொரு வாத்து தலைகீழாய் உள்ளதுபோல்

கண்களுக்குத் தோன்றும் ஒளிப்படம் அற்புதம்!

பண்பட்ட ஆற்றலை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Sunday, February 21, 2021

நண்பர் IG சேகர் அவர்களுக்கு வணக்கம்

 நண்பருக்கு வணக்கம்


பறைவயே கேள்!

நாட்டு நடப்புகளைச் சிந்தித்துப் பார்க்காதே!

ஊற்றெடுத்தே ஓடும் நகைச்சுவை வெள்ளந்தான்!

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்!

ஆற்றுவோம் நம்கடமை தானென்று வாழ்ந்துவிடு!

தேற்றிக்கொள் காட்சிமாறும் நம்பு.


மதுரை பாபாராஜ்

பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா

 தமிழறிஞர் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து.


நாள்: 22.02.21


பார்போற்றும் பட்டிமன்ற ஆசானே! வாழ்வாங்கு

வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்!

வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்

உங்களை!

ஆசிகளை நாடுகிறோம் சூழ்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


இளவல் ராம்குமார் அனுப்பிய காணொளி

 

ராம்குமார் அனுப்பியது


தாய்ப்பருந்து காணொளி


தாய்மொழி நாளிலே தாய்ப்பருந்து கூட்டிலே

சேய்ப்பருந்தை வெண்பனித் துன்பத்தில் பெற்றெடுத்து

நாள்தோறும் கண்போல காத்தே வளர்க்கின்ற

காட்சியைக் காணொளி தன்னில் சிலிர்ப்புடன்

பார்த்தேன் நெகிழ்ந்தேன் உணர்ந்து.


மதுரை பாபாராஜ்

குறள் 691

 குறள்நெறி போற்று!


அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

(அதிகாரம்:மன்னரைச் சேர்ந்தொழுகல் குறள் எண்:691)


அகலவும் வேண்டாம்! அணுகவும் வேண்டாம்!

அகத்தில் இணைந்தே இணக்கமாய் வாழும்

மகத்துவ வாழ்க்கையே நிம்மதி யாகும்!

புகைச்சலை நாளும் தவிர்.


மதுரை பாபாராஜ்


முத்தொள்ளாயிரம் 11

 முத்தொள்ளாயிரம்

பாடல் 11

காராட் டுதிரம்தூய் அன்னை களன்இழைத்து

நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ! – போராட்டு

வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதைக்கென்

நெஞ்சங் களங்கொண்ட நோய். – 11


சினவேல் மன்னவன் கோதையை நாடி

மனக்காதல் சென்றது! நோய்நீங்க அம்மா

புனலாட்டி ஆடுவெட்டிப் பார்த்தாலும் எந்தன்

மனநோய்தான் நீங்குமோ? என்னுடைய காதல்

மனமோ அரசனிடந்தான்! சொல்.


மதுரை பாபாராஜ்




Saturday, February 20, 2021

தம்பி லிங்கராஜ் அனுப்பியது

 

தம்பி லிங்கராஜ் அனுப்பிய காணொளி


மனித ஆற்றலை வாழ்த்து.

இரண்டு மணித்துளிக்குள் வான்மழை ஓசை

கரவொலி மூலம் தொடங்கிப் பெருகி

சரங்கள் பொழிவை மெதுவாய் நிறுத்தும் 

அழகே அழகுதான் கேள்.


மதுரை பாபாராஜ்

நண்பர்திரு.எசக்கிராஜன் அனுப்பியது

 நண்பர் திரு எசக்கிராஜன் அனுப்பியது!


_In character, in manners,_

_in style, in all things_

_the supreme excellence is_

_simplicity._

_-H.W.  Longfellow_

_Good morning_


மொழியாக்கம்!

பண்பு, நடத்தைகள், வாழும் முறைகள்

என்பதில் எல்லாம் முதன்மைச் சிறப்பானதோ

என்றும் எளிமைதான்!

கம்பீர மானது!

பின்பற்றி வாழ்தல் உயர்வு.


மதுரை பாபாராஜ்

கிளிகள் படத்திற்குக் குறள்

 குறளும் கிளிகளும்!

குறள் 1315:


இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்நிறை நீர்கொண் டனள்.


இப்பிறவி வாழ்வில் பிரியமாட்டேன் என்றதும்

சட்டென் றழுதாள்! அடுத்த பிறவியில்

விட்டுப் பிரிவாயோ? என்று.


மதுரை பாபாராஜ்

Friday, February 19, 2021

பொதிகைத் தொலைக்காட்சி

 பொதிகைத் தொலைக்காட்சியில்

தமிழ்த்தாத்தா உ.வே.சா பிறந்தநாள் ஒளிபரப்பு.


19.02.21


தமிழ்த்தாத்தா உ.வே.சா. நூலகம்!


பன்முக ஆற்றல் மிளிர்கின்ற பல்துறைப்

பண்பாளர்,  மாணவர் தமிழ்த்தாத்தா தொண்டுகளைப்

பண்புகளை எல்லாம் நினைவுகூர்ந்தார்!

நூல்களை

எங்கனம் சேகரித்தார் அச்சிட்டார் என்றெல்லாம்

பண்படப் பேசினார்கள் வாழ்த்து.


நூலகத்தில் வைத்துள்ள  ஏடுகள் நூல்களெல்லாம்

மாணவர்கள், ஆய்வாளர், ஆர்வலர்கள் எல்லோர்க்கும்

தேனமுதாய் நாளும் பயன்படும் என்றுரைத்தார்!

தீந்தமிழ்த் தாத்தாவை வாழ்த்து.


நடைப்பயணம் மேற்கொண்டு நற்றமிழ் ஏடை

தடையின்றி சேகரித்தே அச்சிட்டுத் தந்தார்!

கடமை, உழைப்பு, விடாமுயற்சி கொண்டே

படைவீரர் போல தமிழ்த்தாத்தா சங்க

இலக்கியம் மற்றும் இலக்கிய நூலை

இமைபோல் காத்ததை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்





மருமகன் ரவி அனுப்பியது

 மருமகன் ரவி அனுப்பியது


வணக்கம்


பொறுமை, அமைதி இரண்டும் வலிமை

நிறைந்தநல் ஆற்றல்! பொறுமை! மனத்தால்

வலிமைகொண்ட தென்றால் அமைதியோ என்றும்

உணர்வால் வலிமைகொண்ட தாகும்! மனமே!

நமைக்காக்கும் சூழலை வென்று.


மதுரை பாபாராஜ்



முத்தொள்ளாயிரம் 10

 

முத்தொள்ளாயிரம்

பாடல் 10

இவன்என் நலங்கவர்ந்த கள்வன் இவன்எனது
நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று – அஞ்சொலாய்
செல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்கச்
சொல்லும் பழியோ பெரிது. – 10
---------------------------------------------------------------
கவிதை

என்னழகைத் தன்வச மாக்கிய கள்வன்தான்!
என்நெஞ்சைத் தன்வச மாக்கிய கள்வன்தான்!
மன்னனாம் கோக்கோதை போகு மிடமெல்லாம்
வன்பழி தூற்றுகின்றார்! நானடக்கி வைத்திருந்தேன்!
என்மனதை  ஊரறியச் செய்துவிட்ட கள்வனிவன்!
என்செய்வேன்? என்னசொல்வேன்? நான்.

மதுரை பாபாராஜ்


சத்ரபதி சிவாஜி,கோகலே,கோப்பர்நிகஸ்

 19.02.21


சத்ரபதி வீரசிவாஜி பிறந்தநாள்

மாமன்னர் வீர சிவாஜி போர்முனை

ஆற்றலில் அஞ்சாத நெஞ்சமுடன் போரிட்டார்!

நாட்டிலே மக்களுக்குப் பொற்கால ஆட்சியை

ஏற்படுத்திக் காட்டினார் வாழ்த்து.


கோபால கிருஷ்ண கோகலே நினைவு நாள்


ஆங்கிலேய ஆட்சிக் கெதிராக போராடி

நாட்டின் விடுதலை மற்றும் சமுதாய

மாற்றத்தை

ஏற்படுத்தப் பாடுபட்டார்! காந்தி மனங்கவர்ந்த

ஆற்றலாளர் கோகலே! என்றும் அறவழியைப்

போற்றிய உத்தமர் தான்.


நிக்கலஸ் கோப்பர்னிக்கஸ் பிறந்த நாள்


பூமியை மையமாக்கிக் கோள்கள் இயங்கவில்லை

சூரியனை மையமாக்கி கோள்கள் இயங்குதைன்று

பாருக்கே சொன்னவர்! வானியல் ஆய்வாளர்!

வாழ்வாங்கு வாழ்க புகழ்!

அருமை அய்யா!

எத்தனை எத்தனை வாழ்த்துகள்!

அத்தனை அத்தனையும் 

அருமை!

தித்திக்க தித்திக்க 

மலரும்

எத்திக்கும் எத்திக்கும்

பரவும்

நித்தம் நித்தம்

நின் புகழ் பாடும்!!

👏👏👏👏👏👏👏

இமயவரம்பன்


மதுரை பாபாராஜ்

Thursday, February 18, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்

 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்.


மொழியாக்கம்.

தனிமனித நல்லொழுக்கம் பின்பற்றி வாழ்தல்

கடினமென்று எண்ணி சிலநேரம் மாந்தர்

உணர்வதுண்டு! ஆனால் 

கடைப்பிடிக் காமல்

மனவருத்தம் கொள்தல்

அதைவிடத் துன்பம்

எனஉணர்த்தும் வாழ்வின் நிகழ்வு.


மதுரை பாபாராஜ்

தமிழ்த்தாத்தா பிறந்தநாள்

 தமிழ்த்தாத்தா

உ வே சா! பிறந்த நாள் !

     19.02.21

------------------------------------------------------------

இலக்கிய ஏடுகளைச் சேகரித்த தாத்தா!

இலக்கிய நூல்களின் அச்சாணி தாத்தா!

உரமானார்!வேரானார் ! சான்றான்மைப் பண்பில்

உயர்ந்தார் தமிழ்த்தாத்தா! இங்கு.


சங்க இலக்கியத்தை உட்கார்ந்து நாம்படிக்க

எங்கெங்கோ தேடி நடந்தேதான் சேகரித்தார்!

செந்தமிழ் உள்ளவரை தாத்தாவின் நற்புகழும்

என்றும் நிலைக்கும் வணங்கு.


மதுரை பாபாராஜ்


கவிஞர் மு.வீரமணி நினைவுநாள்

 நண்பர் கவிஞர் மு.வீரமணி நினைவுநாள்!


19.02.21(19+02=21)


நட்பி்ல் நளினம்! முகத்திலே புன்னகை!

முத்துத் தமிழில் கவிதை படைப்பவர்!

எப்போது சென்றாலும் இன்முகம் பூத்திருக்க

சற்றும் அயராமல் பேசி மகிழ்கின்ற

நண்பரை எண்ணி வணங்கு.


என்றும் வணங்கும்

மதுரை பாபாராஜ்

வசந்தா



Wednesday, February 17, 2021

முத்தொள்ளாயிரம் 9

 

முத்தொள்ளாயிரம்

பாடல் 9

வருக குடநாடன் வஞ்சிக்கோ மான்என்(று)
அருகலர் எல்லாம் அறிய – வருகலாம்
உண்டா யிருக்கஅங்(கு) ஒண்தொடியாள் மற்(று)அவனைக்
கண்டாள் ஒழிந்தாள் கலாம் – 9

குடநாடன் வஞ்சிக்கோ மானே வருக!
மகத்தாய் வரவேற்றே மங்கைக் கருகில்
புறத்தே இருப்பவ ரெல்லாம்  மகிழ்ந்து
கலகலப்பாய் உள்ளனர்! ஆனால் இவளோ
அரசரைக் கண்டபின்பும் ஏனோ வாடி
கலகலப் பின்றி இருக்கின்றாள்! பாராய்!
அழகிழந்தே ஏங்குகிறாள் ஏன்?


பி கு:
கலாம் -- கலகலப்பு

மதுரை பாபாராஜ்

முத்தொள்ளாயிரம் 8

 முத்தொள்ளாயிரம் 

சேரமன்னன் கோதைநை நாடிய மங்கையின் நிலை!

பாடல் 8

ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்

காணிய சென்று கதவடைத்தேன் – நாணிப்

பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல

வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு. – 8

-----------------------------------------------------------------

கவிதை


வேந்தனாம் கோதை உலாவந்தான்!

நானுடனே

காண்பதற்குச் சென்றேனா, நாணம் எனைத்தடுக்க

தாழிட்டேன் வீட்டுக் கதவை! வறுமையில்

வாடுவோர்

நாடித்தான் செல்வார்கள் செல்வந்தர் வீட்டுக்கு!

வீடுநோக்கி வந்திடுவார் மீண்டுமங்கே சென்றிடுவார்!

மாதெந்தன் நெஞ்சமும் இப்படித்தான் போய்வரும்

கோதையைக் காண விழைந்து.


மதுரை பாபாராஜ்


 


மருமகன் ரவி அனுப்பியது

 காலம் காத்திருக்காது!


நம்செயலை நாமிங்கே தாமதம் செய்யலாம்!

பொன்னான நேரமோ தாமதம் செய்யாது!

சென்றுவிட்ட நேரம் திரும்ப வருவதில்லை!

என்றுமே நேரத்தைப் போற்று.


மதுரை பாபாராஜ்

முனைவர் சங்கர சரவணன்

 குறளோடு நடைபோடு


முயற்சியே திருவினையாக்கும்

கலந்துரையாடல்

ஏற்பாடு

வலைத்தமிழ் இளங்கோ

குறள்நெறிக் குரிசில் சி.இராஜேந்திரன்

சிறப்பு விருந்தினர் :

முனைவர் சங்கர சரவணன்


குறளோடு நாளும் நடைபோடு என்ற

சிறப்புத் தலைப்பில் முனைவர் அவர்கள்

முயற்சி திருவினை யாக்கும் உரையைத்

தளமாக்கித் தந்ததை வாழ்த்து.


குறள் 292


பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்.


அலுவலர்கள் தாங்கள் அறிந்த செய்தி

இரகசிய மானதெனில் காப்பதற் கேற்ப

மறைத்தேதான் சொல்வது பொய்யில்லை  என்றே

குறளை விளக்கினார் நன்று.


பலர்சிலர் சொல்லைக் குறளிலே அய்யன்

பலவாறாய்ப்  பாக்களில் எப்படி யெல்லாம்

பயன்படுத்தி உள்ளார் எனஉரைத்தார் தம்பி!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


இளங்கோவும் ராசேந் திரனும் முனைவர்

சரவணனை நோக்கி விளக்கத்தைக் கேட்க

தயங்காமல் புன்னகை வீசி பதில்கள்

சரஞ்சரமாய்த் தந்ததை  வாழ்த்து.


திரு.இரா.இரேணுகன்

திரு.ந.பாலு

திரு.மு.பொன்னியின் செல்வன்

திரு.இரா.இராமசாமி

திரு.கோ.இமயவரம்பன்

--------------------------------------------------------------

மூலப் பொருளின் கருத்துச் சிதையாமல்

யாவரும் கேட்கின்ற வாறு கணினியில்

ஆர்வமுடன் ஐவரணி பாடுபட்டுக் கோர்ப்பதை

வாழ்த்துகிறோம் நன்றி நவின்று.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்

 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


தன்னொழுக்கமே துணை!

யாருமற்ற தீவோ! ஒருவரும் அற்றதோ

நாமங்கே நல்ல பழக்கம் கடைப்பிடித்தால்

ஊறிவரும் நம்பிக்கை டன்கணக்கில்! அப்பண்பு

சாதனைக்கும் தீர்வுக்கும்

தூதாய்த் துணைநிற்கும்!

வேதனை தீரும் விளம்பு.


மதுரை பாபாராஜ்

யாவரும் கேளிர்.

 யாவரும் கேளிர்!

விட்டுக் கொடுக்கும் மனப்பண்பை நாள்தோறும்

கற்றுக் கொடுக்கின்ற கூட்டுக் குடும்பத்தை

விட்டுக் கொடுத்ததால் தீவுத் திடல்களாய்

மக்கள் பிரிந்தேதான் வாழ்கின்றார்  அங்கங்கே

சொந்த உறவுகளை விட்டு.


அன்றைய வாழ்க்கை முறைவேறு! வாழ்க்கையில்

இன்றைய வாழும்  முறைவேறு! மாற்றங்கள்

கொண்டுவரும் சூழ்நிலைக் கேற்ப

வளையவேண்டும்!

என்றும் அனுசரித்தல் நன்று.


வளையாமல் நாமோ வளைக்க நினைத்தால்

வளைக்க முடியாமல் தத்தளிக்கும் வாழ்வு!

மலைக்கவைத்த போதும் மனிதர்கள் வாழும்

நிலையெடுத்தார் நாளும் துணிந்து.


உள்ளூர் வெளியூர் தமிழ்நாடு வேறிடங்கள்

உள்நாடோ இல்லை வெளிநாடோ என்றேதான்

இவ்வுலகில் எங்கெங்கோ யாவரும் கேளிரென்று

உள்ளத்தால் வாழ்கின்றார் சேர்ந்து.


சொந்த உறவுகளை விட்டுப் பிரிந்தேதான்

வந்த உறவுகளை ஏற்று மகிழ்கின்றோம்!

சொந்தமோ வந்ததோ வேற்றுமை பாராமல்

ஒற்றுமையாய் வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

Tuesday, February 16, 2021

நண்பர் IG சேகருக்கு வணக்கம்

 கிள்ளைவிடு தூது!


திருமாலிருஞ்சோலை மலையில் கோயில் கொண்டிருக்கும் அழகரிடத்து பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடிய நூல் அழகர் கிள்ளை விடு தூது.


அழகர் கடவுளைக் காதலிக்கும் பெண்ணோ

உளத்தால் கிளியையே தூதுவிடும் தூது

இலக்கியம் உள்ளது! காலை வணக்கம்

வழங்கிட தூதுவந்த கிள்ளைகளே நட்பில்

திளைத்தே வணங்குகிறேன் நண்பரிடம் சொல்க!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.






இதுதான் வாழ்க்கை

 இதுதான் வாழ்க்கை!

இதுஉண்டு ஆனால் அதுஇல்லை! வாழ்வில்

அதுஉண்டு ஆனால் இதுஇல்லை! வாழ்வில்

இதுவுமுண்டு கூட அதுவுமுண்டு என்றே

குறையற்ற வாழ்வில்லை கூறு.


பொம்மைகள்

 பொம்மைகள்!

சாவி முடுக்கிய பொம்மைகள் போலத்தான்

ஆவி பறக்க பரபரப்பாய் ஓடுகின்றோம்!

சாவி இறங்க இறங்க நமக்குமிங்கே

வேகம் குறைய விவேகம் ஆள்கிறது!

பாடம் புகட்டுகின்ற வாழ்வு.


மதுரை பாபாராஜ்

முத்தொள்ளாயிரம் 7

 முத்தொள்ளாயிரம் 

பாடல் 7

கடும்பனித் திங்கள்தன் கைப்போர்வை யாக

நெடுங்கடை நின்றதுகொல் தோழி – நெடுஞ்சினவேல்

ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்

காணிய சென்றவென் நெஞ்சு. – 7

-----------------------------------------------------------------

கவிதை


பனிப்பொழியும் மாதமிது! போர்வையாய்க் கைகள்

துணையான போதும்  நடுங்குகிறேன்!

கோதை

கனல்சினம் கொண்டவன்! பூணாரம்

மாலை

அணிந்தவன் அந்த அரசன் உனக்குத்

துணையாக வந்தே நடுக்கம் தணிப்பான்

எனச்சொல்லி என்நெஞ்சம் சென்றது!

ஆனால்

எனைப்போல கைகளைப் போர்வையாய் மாற்றி

அணைத்தேதான் கோட்டையின் வாசலில் நின்று

தவிக்கிறது போலும் அங்கு.





 

 


முத்தொள்ளாயிரம் 6

  முத்தொள்ளாயிரம்

பாடல் 6

புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம் நின்றலரும் நன்னாடன் – என்னாகம்
கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
என்கொல் இவரறிந்த வாறு? – 6
--------------------------------------------------------------
கவிதை

மாந்தை நகரிங்கே புன்னாகம் நன்னாகம்
ஓங்கிநிற்கும்  தென்னை மரமிருக்கும்
நன்னகரின்
சேரன் கனவிலே என்மார்பைத் தொட்டுவிட்டான்!
ஊராரில் யாரறிவார்? கண்டபடி பேசுகின்றார்!
மாதின் மனமறிவார் யார்?

மதுரை பாபாராஜ்

Monday, February 15, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்

 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


தனிமனித ஒழுக்கம் தலைநிமிர வைக்கும்!

நல்ல பழக்கம் சிறந்த நடைமுறைகள்

எல்லோரும் எப்போதும் போற்றுவதே தன்னொழுக்கம்!

செய்யும் செயல்களின் முன்னுரிமை பின்பற்றும்

வல்லமையும் உள்ளடங்கும் சொல்.


மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகருக்கு வாழ்த்து

 நண்பருக்கு வணக்கம்


புலரும் பொழுது விடியல் பொழுதில்

மலர்க்கொத்து தந்து வணக்கத்தைக் கூறும்

உளங்கனிந்த நட்பிற்கு

நன்றி நவின்றேன்!

வளர்தமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

கரூர் செங்குட்டுவன் குறள் தொண்டு

 திருக்குறள் தூதர் கரூர் செங்குட்டுவன் அவர்களுக்கு வாழ்த்து.

தமிழ்ப்பற்றாளர்கள் பாராட்டு விழா!


15.02.20

தொண்டுகள் பலவிதம்!

ஒவ்வொன்றும் வள்ளுவ ரகம்!


குறள்களை ஊக்குவிக்கும்  வள்ளுவர் பெட்ரோல் நிலையம்!


வள்ளுவர் முகமை-- கரூர்


வண்டிப் பயணம் இயக்கிட பெட்ரோலை

வண்டியில் ஊற்றவேண்டும் நன்கு தொடரலாம்!

மண்ணகத்தில் வாழ்க்கை இயங்க குறள்களால் 

பண்பட்டு வாழவேண்டும்! உந்துதலைத் தந்திருக்கும்

இந்த முயற்சிக்கு வாழ்த்து.


வள்ளுவத்தை மூச்சாக்கி பேச்சாக்கி

வாழ்ந்துவரும்

வள்ளுவர் தூதராம் செங்குட் டுவனாரின்

வள்ளுவத் தொண்டுகள் பொன்னெழுத்துச் சாதனைகள்!

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்

VOV

திரு துரைசாமி திருவாசகம்

 RADIO FLOWER!


வானொலிப் பூக்களைப் பார்த்தேதான் நாளாச்சு!

தேனிசைக் கண்ணதாசன் பாடலை

நான்கேட்கத்

தூண்டி ஒலிபரப்ப வேண்டுமே செய்யுமா?

காண்கிறேன் கண்ணால் ரசித்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்

 நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்!


அனைத்தையும் நீங்கள் இழந்தாலும் 

மீண்டும் 

அனைத்துமே நேரம் வரும்போது 

வாழ்வில்

நமைநாடி வந்துசேரும்!நம்பிக்கை 

தன்னை

இழக்காமல் வாழ்க உழைத்து.


மதுரை பாபாராஜ்

Sunday, February 14, 2021

மருமகன் ரவி அனுப்பியது

 வணக்கம்.


வாழ்விலே மாசற்றோர் மற்றும் சரியானோர்

யாருமில்லை! மாந்தர் தவறுகளுக் காகநீங்கள்

நாளும் தவிர்த்தால் தனிமையில்தான் வாழ்வீர்கள்!

மாற்றார் கணிப்பைக் குறைத்து, நேசிப்பை

ஊற்றெடுக்கச் செய்வதே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 நண்பருக்கு வணக்கம்


அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்

(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:428)


அஞ்சுவண்ணம் கொண்ட அழகுக் கிளிகளே!

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை என்றுரைத்தார்

செந்தமிழில் வள்ளுவர்! மாந்தர் சிலர்மட்டும்

இந்த அறவுரையை மீறுகின்றார் ஏனென்று

சிந்திக்கும் உங்களுக்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

முத்தொள்ளாயிரம் 5

 முத்தொள்ளாயிரம் பாடலுக்குக் கவிதை!

பாடல் 5

வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்

நிரைபொரு வேல்,மாந்தைக் கோவே – நிரைவளையார்

தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர்தாய்மார்

செங்கோலன் அல்லன் என. – 5

--------------------------------------------------------------------

கவிதை


சேரமன்னா! உன்னை வணங்க மறுப்போரை

வீரமுடன் போரிட்டே மண்கவர்ந்து கொள்ளலாம்!

பார்வை வலைவீழ்ந்த பெண்ணழகைக் கொள்ளலாமா!

தாய்மாரோ செங்கோலன் இல்லையென்பார் உன்னைத்தான்!

வேந்தன் மலைபோல் அகன்றிருக்கும் மார்புடையோன்!

கூட்டமாக நின்றுகொண்டு வேல்களால் மாந்தைநகர்

நாட்டுமக்கள் தாக்குவார்கள்! மாதர்

வரிசையாய்ப்

போட்டிருக்கும் கைவளையல் தன்னைக் கவரலாமா?

நாட்டுமன்னா நல்லபதில் கூறு!








 .

Saturday, February 13, 2021

WORDSWORTH UP UP MY FRIEND! TRANSLATION

 



பாலாவின் சங்கச்சுரங்கம்

 ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் 

களம் ,திருச்சி இணைந்து வழங்கும

பாலாவின் சங்கச் சுரங்கம்!

மூன்றாம் பத்து எட்டாம்உரை


நாள் 13.02.21 6.30 pm

ID 817 9565 5462

தலைப்பு:

ஓங்குபுகழ் கானமர் செல்வி

(கொற்றவை)


அகநானூற் றுப்பாடல் சொல்லும் செய்திச்

சிறப்பில் வருகின்ற சொற்றொடரை பாலா

அரங்கில் விளக்கும் அருமையை வாழ்த்து!

இலக்கியத் தேன்விருந்து கேள்.


இலக்கியச் சோலையில் பாலைநிலத் தெய்வப்

பெயராய்ப் பயன்படுத்தி உள்ளதைக் காண்போம்!

பலநிலையில் பல்வேறு கோணத்தில் உண்டு!

விளக்குகின்ற பாலாவை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

மனிதத் தேனீ ரா.சொக்கலிங்கம்

 நண்பர் மனிதத் தேனீ ரா.சொக்கலிங்கம் 

அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


13.02.2021

நட்பின் இலக்கணம்! அன்பின் இலக்கியம்!

சொக்கலிங்கம் செந்தமிழ் மாமதுரை மூதூரின்

நற்பெயர் போற்றும் மனிதத்தே னீயாவார்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

Friday, February 12, 2021

DAFFODILS பேரரளிப்பூக்கள்



 

முத்தொள்ளாயிரம் 4

 முத்தொள்ளாயிரக் காட்சி

முத்தொள்ளாயிரம் 4

கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில்

அடைத்தாள் தனிக்கதவம் அன்னை – அடைக்குமேல்

ஆயிழையாய் என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்

வாயும் அடைக்குமோ தான் 

--------------------------------------------------------------

கடல்போன்ற மாப்படை சூழவே சேரன்

நகர்வலம் பார்த்து வருகிறான்! தோழி!

புறக்கண்ணால் பார்த்து ரசிக்க கதவை

அடைத்தேதான் தாழிட்டாள் தாய்தான்!

ஆனால்

நகரமக்கள் என்னை அவரோடு சேர்த்தே

பகர்வதை  ஊர்வாயை மூடி அவளால்

அடைக்க முடியுமா? சொல்.


மதுரை பாபாராஜ்





 

Thursday, February 11, 2021

பெட்ரோல் நிலையம் கரூர்


 குறள்களை ஊக்குவிக்கும்  பெட்ரோல் நிலையம்!

வள்ளுவர் முகமை-- கரூர்

வண்டிப் பயணம் இயக்கிட பெட்ரோலை

வண்டியில் ஊற்றவேண்டும் நன்கு தொடரலாம்!

மண்ணகத்தில் வாழ்க்கை இயங்க குறள்களால் 

பண்பட்டு வாழவேண்டும்! உந்துதலைத் தந்திருக்கும்

இந்த முயற்சிக்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்

 நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்!


உன்னை நம்பு!

ஆக்கபூர்வ மாக தயாராக, நன்றாக

சாதிக்க, தன்னல மின்றி, சகித்திருக்க, 

மற்றவ ருக்கு மரியாதை காட்டவும்

முற்றும் அமைதியாய் வாழ

துணைபுரியும்!

உன்னையே நம்பி உழை.


மதுரை பாபாராஜ்

திருமதி நிலமங்கை துரைசாமி ஓவியம்


மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகம்!

ஓவியம்: திருமதி:நிலமங்கை துரைசாமி

தண்டியாத்திரை!

12 March 1930 to 5 April 1930 

24 நாள்கள் 78 தொண்டர்கள்

நடந்த தூரம்: 

240 மைல்கள்( 390 கிலோமீட்டர்)

சபர்மதி-- தண்டி

ஒத்துழை யாமை இயக்கத்தின் சிற்பியாம்

அப்பழுக் கற்ற மகாத்மா காந்தியின்

குற்றமற்ற பேரறப் போராட்டம் இந்தமுறை!

தண்டி நடைப்பயணம் காந்தி வரலாற்றில்

பொன்னெழுத்தால் போற்றிப் புகழும்

நிகழ்வாகும்!

அந்த நிகழ்வினை ஓவியமாய்த் தீட்டிய

அம்மாவை வாழ்த்தி வணங்கு.


மதுரை பாபாராஜ்


முத்தொள்ளாயிரம் 3

 

முத்தொள்ளாயிரக் காட்சி!

பாடல் 3

வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேல் கண்டவர்
மாமையை அன்றோ இழப்பது – மாமையிற்
பன்னூறு கோடி பழுதோ,என் மேனியிற்
பொன்னூறி யன்ன பசப்பு - 3
-----------------------------------------------------------------
கவிதை:

தலைவியின் ஏக்கம்!

போர்க்குதிரை பூட்டிய தேரில் மெதுவாக
ஊர்ந்தேதான் வேந்தன் உலாவரும் காட்சியோ
ஈர்க்க மகளிர் ரசிக்கின்றார் கண்களால்!
மேனியோ மாமை நிறமிழந்தே பொன்னிறம்
ஊறிய வண்ணம் பசந்தது! குற்றமில்லை!
மாமையைக் காட்டிலும் இப்பசலை மேலாகும்!
ஏக்கத்தின் சின்னம் இது.

மதுரை பாபாராஜ்


.

முத்தொள்ளாயிரம் 2

 

முத்தொள்ளாயிரக் காட்சி!

பாடல் 2

தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்

தேயத் திரிந்த குடுமியவே – ஆய்மலர்

வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்

கண்டுலாஅம் வீதிக் கதவு – 2

----------------------------------------------------------------

கவிதை:


வண்டுமொய்க்கும் பூமாலை ஏந்தி குதிரைத்தேர்

முந்திவர சேரன் உலாவந்தான்! பேரழகைக்

கண்டு ரசிக்க மகளிர் கதவுகளை

முண்டித் திறக்கவும் பார்த்தால்  மயங்கிடுவாள்

என்றேதான் தாய்மார்கள் அக்கதவை மூடிவிட

இப்படி மூட, திறக்க கதவுகளின்

கொண்டியோ தேய்ந்தது தான்மிச்சம்!

எண்ணமோ

அங்கே கனியவில்லை யாம்.


மதுரை பாபாராஜ்


 

நம்வீடு

 நம்வீட்டார்!

என்வீட்டார் உன்வீட்டார் என்றெல்லாம் எண்ணாமல்

நம்வீட்டார் என்ற பெருந்தன்மைச்  சிந்தனை

என்று வருகிறதோ அன்றுதான் இல்லறம்

ஒன்றுபட்டு வாழும் நிமிர்ந்து.


மதுரை பாபாராஜ்


Wednesday, February 10, 2021

நண்பர் திரு OK அனுப்பியது

 


நண்பர் திரு.OK அனுப்பியது

மொழியாக்கம்


என்னசொல்ல வேண்டும் அறிவே உறுதிசெய்யும்!

எப்படிச் சொல்லவேண்டும்? ஆற்றல்

உறுதிசெய்யும்!

எவ்வளவு என்றே அணுகுமுறை காட்டிவிடும்!

சொல்லலாமா? கூடாதா? ஞானம் அறிவுறுத்தும்!

வெல்லும் பகுத்தறிவே! சாற்று.


மதுரை பாபாராஜ்


நண்பர் BSNL இராமசாமி அவர.களுக்கு வணக்கம்

 நண்பர் இராமசாமிக்கு வணக்கம்


சிவப்பு இளஞ்சிவப்பு வெள்ளை நிறங்கள்

கவர்ந்திழுக்க ரோசாக்கள் தம்மை அடுக்கி

அழகாய் அமைத்திருக்கும் ஆற்றலுக்கு வாழ்த்து!

வளர்நட்பு வாழியவே நீடு.


மதுரை பாபாராஜ்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!

உன்னையே நீயறிவாய்


 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!

மொழியாக்கம்.

நம்பிக்கை மட்டுமே சோதனையைச் சாதனையாய்க்

கண்முன்னே செய்துகாட்டும்!

நீங்கள் தனியானால்

நம்பிக்கை வல்லமை தந்தே பிடிமானம்

உண்டுபண்ணும்! உங்கள் இலக்குநோக்கிச் செல்லவைக்கும்!

உங்களுக்கு எல்லாத் திசைகளின் ஆதரவும்

வந்துசேர வாய்ப்பளிக்கும் இங்கு.


மதுரை பாபாராஜ்

Tuesday, February 09, 2021

முனைவர் சங்கர சரவணன்

 


வலைத்தமிழ் வழங்கும் 

எனைத்தானும் நல்லவை கேட்க

குறளோடு் நடைபோடு

முனைவர்.சங்கர சரவணன்

கட்டைவிரல் கேட்காத குருநாதர்!

குருநாதர் தட்சணை கேட்பார்! மரபு!

துரோணர் ஏகலைவன் கட்டை விரலைக்

குருவிற்குத் தட்சணை கேட்டார்! கொடுமை!

குருஇடத்தில் வள்ளுவரை வைத்தே இங்கே

திருக்குறளைக் கற்கின்றார் ஏகலைவன் மக்கள்!

குருவென்றும் தட்சணை கேட்டதே இல்லை!

குருவணக்கப் பண்பே இது.

முனைவர் சங்கர சரவணனுக்கு வாழ்த்து!

வள்ளுவத்தின் பன்முகத் தன்மைக்குச்

சங்கரர்

அள்ளித் தெளித்த கருத்துகள் அற்புதம்!

உள்ளங் கவரும் விளக்கத்தை ஆற்றலுடன்

வல்லவர் தந்ததை வாழ்த்து

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

இந்தக் குறளுக்கு ஆசிரியர் மாணவர்கள்

என்ற விகித விளக்கம் அருமைதான்!

தொண்டுகள் எல்லாம் குறளை மையமாக்கி

தந்தநல் ஆளுமைக்கு வாழ்த்து.

காந்தி வேடம்!

காந்திவேடம் போட்டவர் கண்டபடி வாழ்ந்தவர்!

காந்திவேடம் தந்த புகழாலே நல்லவராய்

மாறினார் வாழ்க்கையில் காந்தியின் தாக்கத்தால்!

மாறுவோம் வள்ளுவ மேற்று.


வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை

(அதிகாரம்:பகைத்திறம் தெரிதல் குறள் எண்:872)

வில்லேர் உழவர்கள் காவல் துறையினர்

சொல்லேர் உழவர்கள் ஊடக நண்பர்கள்

இவ்விருவர் ஆற்றும் கடமைக்கே ஒப்பீடு

செய்தார்! புதுமையை வாழ்த்து.

ரேசன் அட்டை வண்ணங்கள்

நாட்டிலே மக்கள் பொருளாதா ரத்தரத்தில்

ஏற்படும் வாழ்க்கையின் தேவைகளைக் கொண்டுதான்

நாட்டில் அரசளிக்கும் அட்டைகளின் வண்ணங்கள்!

தேவைகள் ஆதாரம் செப்பு.

குறள்நெறிக் குரிசில்- முனைவர் சங்கர சரவணன்-- வலைத்தமிழ் இளங்கோ.

மூவேந்தர் காட்சி உலாபோல் காணொளியில்

நாவேந்தி வந்த கருத்துக்  கலந்துரை

யாடலில் வள்ளுவத் தேரின் வடம்பிடித்தே

தேரை இழுத்தமைக்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

அருமையாய் இருக்கு!

பெருமையாய் இருக்கு!

👏👏👏👏👏👏👏

இமயவரம்பன்




நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பியது

 காலைக் காட்சி

பரந்தவானில் மேலெழும்பும் ஆதவனும் கீழே

சலசலக்கும் நீரோடும் நீள நதியும்

இடையில் இயற்கை அமைத்த மரங்கள்

அழகிய காட்சிதான் பார்.


ஜ்

பாலாவின் சங்கச் சுரங்கம்

 சங்கச் சுரங்கம்

இணையவழிச் சொற்பொழிவுத் தொடர்

மூன்றாம் பத்து ஏழாம் உரை!


06.02.21

கவிஞர்.பாலாவுக்கு வாழ்த்து

தலைப்பு:

பெரும் கை யானை


சங்க இலக்கிய ஆழிக்குள் மூழ்கித்தான்

எங்கெங்கு யானைக் குறிப்பென்னும் முத்துக்கள்

கண்களுக் கெட்டியதோ அங்கெல்லாம் சென்றேதான்

கொண்டுவந்த பாலாவை வாழ்த்து.


புறத்தில் மிளிர்ந்த வரியைத் தலைப்பில்

சிறப்பாய் மகுடமாக்கி ஆர்வம் ததும்ப

சிறப்புகளை நேயர் அரங்கில் உலவ

நடத்திய பாங்கினை வாழ்த்து.


யானை உருவம் மலைக்கு நிகராக

யானை உடல்தோல் குடிசையின் கீற்றுக்கும்

யானையின் பாதம் உருளைக்கல் போலென்றும்

யானையின் தந்தமோ வாழைப் பழம்போல

தோன்றுவதைச் சொன்னார் ரசித்து.


கான முயல்எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது குறள்தன்னைக்

காணவைத்தார் காட்சியைச் சித்திரத்தால் கண்முன்னே!

தேனமுதம் பாலாவின் பேச்சு.


தரும் வளவன் பெருமையைக் கூறும்

வரிகளைக் காட்டி விளக்கிய ஆற்றல்

செழிப்பை உணர்ந்தோம் ஒவ்வொரு காட்சி

விழிகள் ரசித்தன பார்த்து.


யானை டாக்டர்!

களிறு எறிந்து பெயர்தல் கவிதை!


இந்த உரையிலே யானை மருத்துவர்

தொண்டை நினைவுறுத்திப் பேசினார்!

தன்விருப்பாய்

அன்பர் சுகுமாறன் நூலின் கவிதையை

நன்கு விளக்கினார் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Monday, February 08, 2021

 இணையருக்கு திருமணநாள் வாழ்த்து


பெறுநர்:

திரு சண்முகம் 

திருமதி முனியம்மா சண்முகம்

09.02.21 ஆண்டுகள் 23

இல்லற முத்துகள்:

மகள்:செல்வி நந்தினி

மகன்: செல்வன். அசோக் குமார்


இல்லறத்தில் நல்லறத்தைப் பின்பற்றி

இன்பமாக

பல்வளங்கள் சூழ்ந்திருக்க பல்லாண்டு வாழியவே!

நல்லவராய் வல்லவராய் உங்கள் குழந்தைகள்

நல்ல முறையில் படித்தேதான் முன்னேறி

பல்வகை ஆற்றலுடன் பல்லாண்டு வாழியவே!

வள்ளுவம்போல் வாழ்கபல் லாண்டு.




மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்