Saturday, March 31, 2012

தாக்குவதேன்?======================
நாள்கள் விடிகின்ற கோலத்தில் மாற்றமில்லை!
கோள்கள் சுழல்கின்ற கோலத்தில் மாற்றமில்லை!
வாழ்வின் நிகழ்வுகளின் கோலத்தில் மாற்றங்கள்
சூழ்ந்துநின்று தாக்குவ(து) ஏன்?
==============================================
தனிமனிதத் தீவு!
================
அடுத்தடுத்த வீட்டில் குடியிருந்து கொண்டு
கடிவாளம் போட்ட குதிரையைப் போல
நடந்துகொள்ளும் மாந்தர் தனிமனிதத் தீவாய்
நடைபோடும் கோலத்தைப் பார்.
===============================================

Thursday, March 22, 2012

இயற்கைக் காட்சிகள்!
========================
சிட்டுக் குருவிகள் மாமரத்தில் பாடிநிற்க
மொட்டவிழ்ந்த பூக்கள் செடிகளிலே ஆடிநிற்க
கட்டவிழ்ந்த மேகங்கள் சாரலைத் தூவிட
நற்றமிழே! மெய்மறந்தேன் நான்.

காலைமுதல் மாலைவரைச் செங்கதிரோன் வெம்மையைத்
தாள முடியாமல் மாலைப் பொழுதிலே
நீலவானம் இங்கே கருமேகம் கட்டவிழ்க்க
கோலமழை தந்தாள் வியர்த்து.
============================================================

முதுமையும் தனிமையும்
==========================
வெறுமை! தனிமை! முதுமைப் பருவம்!
உறுதுணை யின்றித் தவிக்கும் கொடுமை!
எடுத்ததற் கெல்லாம் துணைக்கரம் நாடி
வெதும்புகின்ற சூழ்நிலை தான்.
===============================================================

இல்லறமே பக்தி!
==================
இல்லறத்தின் எல்லைக்குள் பக்தி இருக்கவேண்டும்!
இல்லறம் எல்லையற்ற பக்திக்குள் சென்றுவிட்டால்
இல்லறம் நாடும் கடமைகள் தத்தளிக்கும்!
இல்லறமே பக்தி! உணர்.
===================================================================

ஆசை நெருப்பு!
===============
இதுவேண்டும் என்றும் அதுவேண்டும் என்றும்
எதைப்பார்த்த போதும் எனக்குவேண்டும் என்றே
மதிமயங்கும் மாந்தர்கள் ஆசை நெருப்பில்
புதைந்து கருகும் சருகு.
=================================================================

களையை நீக்கு!
=================
எதிர்மறைப் பண்புகளை ஊக்குவித்து நாளும்
புதர்போல் வளரவிடும் எண்ணத்தை மாற்று!
உடனடியாய் நீக்கும் களைபோல நீக்கு!
படரும், தொடரும் மகிழ்வு.
=====================================================================

Sunday, March 11, 2012

REALITY

APPLICABLE TO OLD AGE WIDOW OR WIDOWER

WHAT A CROWD!
WHAT A CROWD!
ON YOUR FUNERAL DAY!

MANY CAME !
MANY SAW!
MANY CONSOLED AND GONE!
WEPT AND WEPT
AND SOBBED!

AFTER FUNERAL
PERIPHERY CIRCLE
RECEDED AND DISAPPEARED!

DAY BY DAY
KITH AND KIN
ONE BY ONE
LEFT FOR DAILY CHORES!

AT LAST! AT LAST!
I AM ALONE WITHOUT YOU!
WANDERING HERE AND THERE!
REWINDING OUR MEMORABLE THOUGHTS!
GRIPPING MY MIND ALWAYS!

TEAR DROPS GATHERED
TO THE BRIM OF MY EYES!
SPILLED ON MY LAP!

YOU ARE SLEEPING
IN THE GRAVE THERE!
I AM COUNTING MY DAYS
AWAITING MY TURN HERE!


Saturday, March 10, 2012

தூது!
=============
ஒளிமங்கும் கண்கள்! விழும்நிலையில் பற்கள்!
குழிவிழுந்த கன்னம்!தடுமாறும் கால்கள்!
குழறுகின்ற பேச்சு!நடுங்கும் கரங்கள்!
தளர்ந்துபோன மேனி!படையெடுக்கும் நோய்கள்!
உலகத்தில் தாக்கும் முதுமைக்குச் சான்று!
மரணம் அனுப்புகின்ற தூது.
============================================

வாழ்வை ரசிப்போம்!========================
வாழ்க்கை மலரை ரசிக்கும் கலையறிவோம்!
நாளும் கசக்கி எறியும் நிலைவேண்டாம்!
வாழ்த்தட்டும் நம்மைத் தலைமுறைதான்! நாமிங்கே
வாழ்ந்திடுவோம் வாழ்வை ரசித்து.

Friday, March 02, 2012

குறுந்தொகைப் பாடல்காட்சி:213=============================

மரப்பட்டை தன்னைக் ஞெரேரென்(று) உதைத்துக்
கலைமான் வளைத்துக் கொடுத்திட, குட்டி
சுவைத்தேதான் உண்டது போகவே மிஞ்சும்
கிளையையே உண்டு பசிதீர்க்கும் தாய்மான்!
நிழலாக நின்று வெயிலின் கொடுமை
நெருங்காமல் காத்திருக்கும் பார்.
============================================

குறுந்தொகைப் பாடல்காட்சி:233
==============================
கவலைக் கிழங்குகளைத் தோண்டிய தாலே
குழிகள் அகன்றிருக்கும் வாயுடன் பார்க்கும்!
மிளிர்கின்ற கொன்றை மலர்கள் அதற்குள்
பரப்பிவைத்த காட்சியோ செல்வந்தர் பேழை
நிரப்பிய பொன்னுடன் மூடியைத் திறந்த
நிலைபோல் இருக்கிறது காண்.

மறுசுழற்சி கிடைக்குமா?
(RECYCLING)
=======================
கழிவுகளை மீண்டும் மறுசுழற்சி செய்தே
உயிரூட்டும் காலகட்ட வாழ்வில்- கழிந்துசென்ற
ஆண்டின் தவறுகளை இங்கே திருத்துகின்ற
பாங்கில் மறுசுழற்சி வாய்ப்பை மனிதனிங்கே
மீண்டும் பெறுவானோ?சொல்.
===========================================