Saturday, September 30, 2023

இரண்டு கிளைகள்


இரண்டு கிளைகள்!


மரமொன்று ஏந்தும் கிளைகள் இரண்டு!

இரண்டிலும் முட்களோ உண்டெனினும் ஒன்றோ

உறுத்திட, மற்றொன்றோ இங்கே உரசும்

உறுத்தாது! ஆனால் மரமிங்கே தாங்கப்

பழகித்தான் நிற்கிறது பார்.


மதுரை பாபாராஜ்

 

மல்லிகை மணக்கும்


மாற்றான்தோட்டத்து மல்லிகையும் மணக்கும்!


மாற்றார்  கருத்தை மதிக்கின்ற பக்குவமும்

ஊக்கப் படுத்தும் பெருந்தன்மைப் பண்புகளும்

நேர்மறை எண்ணமும் கொண்டிங்கே வாழ்பவரை

மாசற்றோர் என்றே வணங்கு.


மதுரை பாபாராஜ்

 

மதுரக்காரன் பாடல்

 மதுரக்காரன் பாரடா!


ஏடா ஏடா ஏடா

நான் மதுரக் காரன் தாண்டா


கீழடியே தமிழன் 

வரலாற்றைச் சொல்லும்!


தூங்கா நகரம் என்று

ஊரு உலகம் சொல்லும்


தமிழ்ச்சங்கம் கண்டோம்

தலைநிமிர்ந்து நின்றோம்


மீனாட்சி கோயில்

தெப்பக்குளம் உண்டு


அழகர் கோயில் அழகை

பார்த்து ரசிக்க வேணும்


யானை மலை திருப்பரங்

குன்றம் கொண்ட நகரம்


ஆறுபடை வீட்டில் 

இரண்டு உண்டு இங்கே!


பள்ளிகளும் உண்டு

கல்லூரி உண்டு

தொழிற் சாலை உண்டு

மருத்துவமும் உண்டு


வைகை ஆறு உண்டு 

புராணக் கதை உண்டு!


சித்திரை மாதம் இங்கே

திருவிழாதான் உண்டு!


நாலு மாசி வீதி

தேரோட்டம் உண்டு!


ஜிகர்தண்டா பானம்

மதுரை சிறப்ப சொல்லும்


அந்தத்  தலைப்புலதான்

திரைப்படமும் உண்டு


எல்லா மதமும் உண்டு

ஒற்றுமையும் உண்டு


அந்தந்த மதங்களுக்கு

கோயில் குளம் உண்டு


மனித நேயம் கொண்டு

பழகுவது உண்டு


மதுரக் காரன் என்றால்

தனிப்பெருமை உண்டு


மதுரை பாபாராஜ்

தேர்



 தேர்!


தேரைத் தடையின்றிக் கொண்டு நிறுத்தலாம்!

வாழ்வென்னும் தேரை இழுக்கும் பொழுதிலே

தோன்றும் தடைகளை நீக்கப் படும்பாட்டைப்

பார்த்தால் விரக்திதான் சொல்.


மதுரை பாபாராஜ்

அலைக்குப் பின் அலைகள்



 அலைக்குப் பின் அலைகள்!


ஓரலை வந்தே முடிந்ததே என்றங்கே

பார்த்தபோது பேரலை ஒன்று திரண்டுவந்தே

பாயும் நிலையெடுத்தால் என்செய்வேன்? ஆழியே!

ஓய்வின்றி நாள்தோறு மா?


வாழ்வில் உளைச்சல்கள் ஒன்றன்பின் ஒன்றாக

ஆழி அலைபோல வந்தால் துடிக்கின்றோம்!

நாளும் துவள்கின்றோம் நாம்.


மதுரை பாபாராஜ்

Friday, September 29, 2023

சோர்வுதான்


சோர்வுதான்!


உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி மனதிலே

எப்போதும் என்றால் குதித்திருப்போம்

மான்போல!

முற்றும் உளைச்சலென்றால்  வாடி வதங்கிடுவோம்!

எப்போதும் சோர்வுதான் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

Thursday, September 28, 2023

மனதின் தவிப்பு

 மனதின் தவிப்பு!


சொன்னசொல்லைக் காக்க வழியின்றி வாழ்கிறேன்!

என்னசொல்ல? எப்படித் தான்சொல்ல?

என்றுநான்

சொன்னசொல்லைக் காப்பேனோ சொல்?


மதுரை பாபாராஜ்

Green Trends


சிகையழகு திருத்தமோ அற்புதம்!


GREEN TRENDS CUTTING STYLE!


கத்தரிக்கோல் சீப்பு இவற்றை விரல்களில்

அட்டகாச மாகப் பிடித்தே சிகையழகை

வெற்றிகர மாகத் திருத்துகின்ற ஆற்றலை

அற்புதமாய்க் காட்டுகின்றார் இங்கு.


சிகைதிருத்தம் மற்றும் முகத்திருத்தம் செய்ய

வகைவகை யாகத்தான் வண்ணக் கலவை

வகைகளை நம்மேல் தெளித்தே அழகின்

சிகரத்தைக் காட்டுகின்றார் பார்.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, September 27, 2023

வறுமைக் கண்ணீரும் வானத்தின் கண்ணீரும்


வறுமைக் கண்ணீரும் வானத்தின் கண்ணீரும்!!


வறுமை பிழிந்தெடுக்க கண்ணீர் பொழியும்

கொடுமையில் வீட்டுக்குள் வாழ்கின்றோம்! நீயேன்

உடைப்பெடுக்கும் கண்ணீரை வானமே! நாட்டில்

அடைமழையாய்க் கொட்டுகின்றாய்? 

நீயும் வறுமைப்

பிடியிலே சிக்கினாயோ? சொல்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

இழந்ததற் காக வதைபட வேண்டாம்!
நெறிப்படுத்தி உங்களது சிந்தனை மற்றும்
செயல்களை முன்னேற்றி நாளும்
முயன்றே
இலக்குநோக்கி முன்னேற்றம் காணுங்கள் இங்கே!
கலக்கம் தளர்வைத் தரும்.

மதுரை பாபாராஜ்
 

Monday, September 25, 2023

நண்பர் எசக்கிராஜன்


நண்பர் எசக்கிராஜன் அனுப்பியதற்குக் கவிதை!


ஏழையின்முன் உன்செல்வம் பற்றியே பேசாதே!

வாட்டுகின்ற துன்பத்தில் வாடுபவன்  முன்னேயோ

ஊற்றெடுக்கும் உந்தன் மகிழ்ச்சியைப் பேசாதே!

நாளும் வலிமையைப் பற்றி வலிமையற்ற

ஆளிடம் பேசாதே! பெற்றோரே இல்லார்முன்

தாய்தந்தை பற்றித்தான் பேசாதே!

புண்படும்!

காயப் படுத்தாதே தப்பு.


மதுரை பாபாராஜ்


 

தொடர்வண்டிப் பயணம்



வந்தே பாரத் தொடர்வண்டிப் பயணம்!

25.09.23

சரவணன் சித்ரா இணையராய் இன்று

பயணத்தில் செல்வதைக் காண்.


மதுரை பாபாராஜ்

 

ஆடும்வரை ஆட்டம்



 ஆடும்வரை ஆட்டம்!


மனிதன் இரத்தவோட்டம் சுண்டுமட்டும் ஆடிக்

களித்திருப்பான் கண்மூடி நாடுவான் தேடி!

துடிக்கும் நிலையில் வெறுப்பான் துயரில்!

புலம்பித் தவிப்பான் உணர்.


மதுரை பாபாராஜ்

போர்தேவையா



 போர் தேவையா?


நாட்டுக்கும் நாட்டுக்கும் போர்தான்! பலியாடுக்

கூட்டமாய் மக்கள் வெளியேற்றம்! என்னலாபம்?

நாட்டுடைய வீரர்கள் வீர மரணமாம்!

வீட்டில் துயரவெள்ளம் சூழக் குடும்பத்தார்

பாவம் பரிதாபந் தான்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை:

தேவை உருவானால் சிக்கலோ ஒன்றெனினும்
நீங்கள் பலதீர்வைக் காண்பீர்கள்! உங்களுக்குத்
தேவை கவனமுடன் சிக்கலைத் தீர்க்கவேண்டும்!
தீர்வில் கவனம் செலுத்து.

மதுரை பாபாராஜ்
 

Saturday, September 23, 2023

மருமகன் ரவி அனுப்பிய படத்திற்குக் கவிதை!



 மருமகன் ரவி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


தனிமையில் வாழ்வதற்குக் கற்றுக்கொள்! உன்னை

உணரச் செலவழிக்கும் நேரமோ என்றும்

கனியாகும்! வீணல்ல! ஆணவத்தை நாளும்

தணித்தே வழிநடத்தும் ஆன்மாவை நன்கு!

மனிதனே ஏற்று நட.


மதுரை பாபாராஜ்

Friday, September 22, 2023

வள்ளுவத்தைப் பின்பற்று


வள்ளுவத்தைப் பின்பற்று!

குறள் 305:

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்


கோபம் கொள்ளாதே!

AVOID ANGER! BE HEALTHY!


கோபம்.. நமது உடலில் ஏற்படுத்தும் தீமைகள்:


நமக்கோ இரத்த அழுத்தமோ கூடும்!

இதயநோய் உண்டாகும்! மூச்சுவிடும் போக்கில்

படபடப்பு கூடும்! உடல்நடுங்கும்! அல்சர்

மனத்தடு மாற்றம் செயல்களும் சொல்லும்

அனைத்துமே கட்டுப்பாட் டைமீறிச் செல்லும்!

உறவுகள் பாதிக்கும்! நிம்மதிக்கு வேட்டும்

மனநிலை பாதிப்பும் உண்டு.


மதுரை பாபாராஜ்

 

இரக்கம் வருமா?


நண்பர் பன்னீர் செல்வம் அனுப்பிய படத்திற்கு நன்றி!


இரக்கம் வருமா?


தலையிலே சும்மாடு  வைத்தே அதன்மேல்

கடவுள் சிலைகளைக் கூடையில் வட்ட

வடிவத்தில் நன்றாய் அடுக்கி, இடுப்பில்

குழந்தையைக் கையால் அணைத்தே சிலைக்கு

விலைகூறி விற்றுப் பணமாக்கி இங்கே

ஒருசாண் வயிற்றுப் பசியடக்கும் பெண்ணை

கடும்வறுமை வாட்டி வதைத்திருக்க நாளும்

படும்பாட்டை தந்ததேன் அக்கடவுள் இங்கு?

உழைத்தால் உயர்வதுதான் என்று?


மதுரை பாபாராஜ்

 

Thursday, September 21, 2023

காதுல பூ!


காதுல பூ!


நிரந்தரமாய் இங்கே பகைவரும் இல்லை!

நிரந்தரமாய் நண்பரும் இல்லையென்று சொல்வார்!

அரசியல் சூட்சுமம் என்பார் சிரித்தே!

உலகமக்கள் காதுல பூ.


மதுரை பாபாராஜ்

 

வேகமா? விவேகமா?


 வேகமா? விவேகமா?


வேகம்! குறுக்கு வழியிலே போகவைக்கும்!

வேகத்தை விட்டே விவேகமாய் சிந்தித்தால்

நேர்வழியில் நிம்மதிக்குத் தூதுவிடும்!

சாதனையை

வாழ்வில் மலரவைக்கும் சொல்.


மதுரை பாபாராஜ்

இன்றைய வீடு



 இன்றைய வீடு!


வீட்டுக்குள் சென்றால் அறைகளோ மூன்றிருக்கும்!

காட்சிப் பொருள்கள் நிறைந்திருக்கும்!

கேட்பவர்கள்

யாருமில்லை! வாங்க! வரவேற்போ இல்லைதான்!

பார்ப்பதற்கு எந்த அறையில் எவருள்ளார்?

பார்க்கவேண்டும் சென்று கதவைத் திறந்தேதான்!

வாருங்கள் என்பார் மடிக்கணினி பார்த்தேதான்!

வீட்டின் விருந்தோம்பல் இன்று.


மதுரை பாபாராஜ்


இருதரப்பும் கேள்


இருபுறமும் கேள்!


ஒருதலைத் தீர்ப்பு நடுநிலை அல்ல!

இருதரப்பை நன்கு விசாரிக்க வேண்டும்!

தரவேண்டும் தீர்ப்பு நடுநிலை யோடு!

இருபுறமும் கேட்பது நன்று.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

எந்தச் செயலெனினும் அந்தச் செயலினை
என்றும் அமைதியான மற்றும் நிலையான
நல்ல மனதுடன் செய்வதற்குக் கற்கவேண்டும்!
அந்த முயற்சிகளால் தோன்றும் விளைவுகள்
இங்கே சிறப்பாக மற்றும் திருப்தியாக
நன்றாய் அமையும் உணர்.

மதுரை பாபாராஜ்
 

Tuesday, September 19, 2023

நண்பர் எசக்கிராஜன்


நண்பர் எசக்கிராஜன் அனுப்பியதற்குக் கவிதை!


வன்புயலில் வேருடன் சாயும் பெருமரங்கள்!

சின்ன எளிய பசும்புற்கள் சாயாமல்

கண்ணெதிரே வாழ்ந்திருக்கும்! நாமும் எளிமையாய்

எந்தவகை ஆணவமும் இல்லாமல் வாழ்ந்திருந்தால்

நன்கு வலிமையுடன் நாமோ தலைநிமிர்ந்து

கண்குளிர வாழலாம் சொல்.


மதுரை பாபாராஜ்

 

ஒன்று முதல் பத்து முடிய


 ஒன்று முதல் பத்து முடிய!


ஒன்றும் சுழியமும் ஒன்று!

இந்திய நாடு ஒன்று!

ஒன்றும் ஒன்றும் இரண்டு!

குறளின் அடிகள் இரண்டு!

இரண்டும் ஒன்றும் மூன்று!

இயல்இசை நாடகம் மூன்று!

மூன்றும் ஒன்றும் நான்கு!

வெண்பா அடிகள் நான்கு!

நான்கும் ஒன்றும் ஐந்து!

நமக்குப் புலன்கள் ஐந்து!

ஐந்தும் ஒன்றும் ஆறு!

உணவின் சுவைகள் ஆறு!

ஆறும் ஒன்றும் ஏழு!

குறளின் சீர்கள் ஏழு!

ஏழும் ஒன்றும் எட்டு!

உலகின் திசைகள் எட்டு!

எட்டும் ஒன்றும் ஒன்பது!

உணர்ச்சிப் பண்புகள் ஒன்பது!

ஒன்பதும் ஒன்றும் பத்து!

பிள்ளைப் பருவம் பத்து!


மதுரை பாபாராஜ்

வாழ்வின் நிறைவுப் பகுதி




வாழ்வின் நிறைவுப்பகுதி!


ஆசை எதிர்பார்ப்பு என்றே எதுவுமில்லை!

காசு பணமெனக்குத் தேவையற்ற சூழ்நிலை!

பாடுபட்டு நாளும் உழைக்க முடியவில்லை!

வாழ்வின் நிறைவுப் பகுதியில் வாழ்கிறேன்!

தேவை, உணவைக் குறைத்து.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழுல்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

யாரும் எதுவும் நமக்குக் கொடுக்காத
வேலைகளைத் தேர்ந்தெடுத்துச் செய்யும் முனைப்பில்
வழிமுறையைக் காணுங்கள்! ஆர்வமோ பொங்க
பொறுப்புணர்வு மற்றுமிங்கே ஆற்றல்  உரிமையுடன்
மேலும் திருப்தியைக் காணலாம்! நாமிங்கே!
ஆர்வமே தூண்டுகோ லாம்

மதுரை பாபாராஜ்
 

எள்ளும் எண்ணெயும்


எள்ளும் எண்ணெயும்!


எள்ளென்றால் எண்ணெயாக மாற்றவேண்டாம்! கேட்கின்ற

எள்ளைத் தெரிந்தே எடுத்தளித்தால் போதுமே!

எள்ளே தெரியவில்லை! எள்ளில் இருந்தேதான்

எண்ணெய் எடுப்பாரோ? சொல்.


மதுரை பாபாராஜ்

 

Monday, September 18, 2023

நல்லதைச் செய்யுங்கள்


நல்லதைச் செய்யுங்கள்!


நல்லதை எண்ணியே நல்லதைச் செய்யுங்கள்!

நல்லதே வாழ்வில் நடக்குமென்று நம்பலாம்!

பொல்லாத எண்ணங்கள் வாழ்வைச் சிதைத்துவிடும்!

எல்லா வகையிலும் கேடு.


மதுரை பாபாராஜ்

 

பணிக்களம் -- இல்லறம்


பணிக்களம்!


அமையும் பணிக்களத்தில் ஆற்றலைக் காட்டி

இமைப்பொழுதும் சோராமல் சாதனைகள் செய்தே

விருதுகள் பட்டங்கள் பெற்றே மகிழ்வார்!

பருவத்தில் இல்லறம் ஏற்று.


இல்லறம் -- இணையர்!


இல்லறத்தை ஏற்றே இணையராய் மாறுவார்!

நல்லறம் போற்றி குழந்தைகள் பெற்றெடுப்பார்!

இவ்வுலக வாழ்க்கை சுழன்றேதான்

சென்றிருக்க

பிள்ளைகள் ஏற்பார் தொடர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

பள்ளி கல்லூரி



தேரை நிலைநிறுத்தும் பெற்றோர்!


மேனிலைப் பள்ளிக்குச் செல்வார் சிரிப்புடன்!

ஆனமட்டும் கற்று மதிப்பெண்கள் பெற்றேதான்

ஆர்வமுடன் கல்லூரி சேர முயற்சிப்பார்!

தேரை நிலைநிறுத்தத் தான்.


கல்லூரி படிப்பு!


கல்லூரிக் கற்றலில் ஆண்டுகள் போய்விடும்!

ஒன்றாய் இருந்தோர் பிரிந்தேதான் சென்றிடுவார்!

பன்னாடோ பல்துறையோ சென்றே படித்திருப்பார்!

தங்கள் சிறகை விரித்து!


மதுரை பாபாராஜ்

 

உலகம் உன்வசம்


உலகம் உன்வசம்!


விடியல் ஒளியுடன் விடியட்டும்!

நம்பிக்கை தன்னை விதைக்கட்டும்!


நேற்றைய பொழுதை நினைக்காதே

இன்றைய பொழுதை உனதாக்கு!


உழைத்து வாழ்ந்து முன்னேறு

சோம்பல் தன்னைத் தூக்கியெறி!


இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்து

நேர்மை உண்மை வாழ்வாக்கு!


உனக்கென உள்ளது தேடிவரும்

வருவதில் திருப்தி அடைந்துவிடு!


கிடைக்காத ஒன்றுக்கு ஏங்காதே!

கிடைத்ததை வைத்து நடைபோடு!


யாரையும் இங்கே பகைக்காதே

பொறாமை நெருப்பில் வேகாதே!


உன்னை நீயே உணர்ந்துவிடு

உலகம் உந்தன் வசமாகும்!


மதுரை பாபாராஜ்



 

Sunday, September 17, 2023

பெற்றோரே கவனம் தேவை

 பெற்றோரே! கவனமாய் வாழுங்கள்!


பெற்றோரைப் பார்த்துக் குழந்தைகள் வாழ்க்கையில்

இப்படித்தான் வாழவேண்டும் என்றே உணரவேண்டும்!

இப்படிநாம் வாழக்கூ டாதென்ற எண்ணத்தைப்

பெற்றோர் உருவாக்கும் வாழ்வமைந்தால் பிள்ளைகள்

உள்ளம் உளைச்சலில் தான்.


மதுரை பாபாராஜ்

விழாவும் உளைச்சலும்

 விழாவும் உளைச்சலும்!


இந்தவிழா அந்தவிழா என்றேதான் எந்தவிழா

என்றாலும் உள்ளம் உளைச்சலில் சொந்தவிழா

பந்தாடும் நேரத்தில் உற்சாகம் தோன்றுமா?

உள்ளம் விரக்தியில் தான்.


மதுரை பாபாராஜ்


பற்றின்றி வாழ்வோம்

 பற்றுடன் பற்றின்றி வாழ்வோம்!


முட்டிமோதி வாழ்வதைக் காட்டிலும் நாள்தோறும்

எட்டிநின்று  வாழ்ந்தால் மனதில் உளைச்சலில்லை!

விட்டுக் கொடுத்தால் அமைதியாக வாழலாம்!

பற்றுடன் பற்றின்றி வாழ்.


மதுரை பாபாராஜ்

பெற்றோர் படும்பாடு



பெற்றோர் படும்பாடு!

பள்ளியில் சேர்ப்பார்! முதல்நாள் குழந்தையோ
துள்ளி அழுதிருக்கும் பெற்றோர் ஆர்வமுடன்
பள்ளிக் கழைத்தேதான் செல்வார்கள்! யோகாக்கள்
பல்வாறாய்ச் செய்தே முயன்று.

மதுரை பாபாராஜ்


 

பூங்கா விளையாட்டு


பூங்கா விளையாட்டு!


மாலைப் பொழுதிலே பூங்கா வளாகத்தில்

நாலுபேர் சேர்ந்திருக்க கூடி விளையாடும்

ஆர்வத்தைக் கண்டே மலைத்திருப்பாள் தாயங்கே!

சேயும் மகிழ்ந்திருக்கும்  சேர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

தாலாட்டித் தூங்கவைப்பாள் தாய்


தாலாட்டித் தூங்கவைப்பாள் தாய்!


ஊட்டி மகிழ்ந்தாள்! உறங்கவைக்க தொட்டிலில்

போட்டேதான் தாலாட்டுப் பாடுவாள் தாயிங்கே!

கேட்டு மயங்கியே தூங்கும் குழந்தையும்!

பார்த்து மகிழ்ந்திருப்பாள் தாய்.


மதுரை பாபாராஜ்

 

ஊட்டி வளர்த்தவள் தாய்


ஊட்டி வளர்த்தவள் தாய்!


வானத்தில் செல்லும் நிலவினைக் காட்டிகாட்டி

வாய்மணக்க தாயிங்கே ஊட்டி மகிழ்ந்திருப்பாள்!

சேயும் மழலையில் ஏதேதோ பேசுமங்கே!

தாயும் ரசிப்பாள் வியந்து.


மதுரை பாபாராஜ்

 

முப்பெரும் விழா




 முப்பெரும் விழாக்கள்!


பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்தநாள்!

அறிஞர் அண்ணா பிறந்தநாள்!

தி மு க தொடங்கிய நாள்!


15.09.23--16.09.23--17.09.23


தமிழ்நாடு தன்னெழுச்சி காண்பதற்கு

என்றும்

இமைபோல் கடமையை, காலத்தைப் பொன்போல்

கருதி உழைக்கின்ற பாங்கினை இங்கே

பெருமையுடன்  முப்பெரும்  நாளின் விழாவாய்

நடத்துகின்றார் ஆண்டுதோறும் தான்.


மதுரை பாபாராஜ்



Friday, September 15, 2023

நண்பர் சேதுமாதவன்


நண்பர் சேது மாதவன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


வெள்ளை மலரனுப்பி நல்லிரவாய் ஆகட்டும்

என்றேதான் வாழ்த்தி் மகிழ்கின்ற நட்பிற்கு

நன்றி நவில்கின்றேன் நான்.


மதுரை பாபாராஜ்

 

பூசணி


பூசணியைச் சோற்றில் மறைப்பார்!


முழுப்பூ சணிக்காயைச் சோற்றில் மறைத்து

மழுப்பும் எதிர்மறைச் சிந்தனை கொண்டோர்

உலகைக் கடுகுக்குள் வைத்தே அடக்கி

மறைப்பதையும் செய்வார்கள் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

நீங்களிங்கே செல்வதோ நேராய் சரியாக
உள்ளதென்றால் நீங்கள் நியாயப் படுத்தவோ
செய்கையைக் காக்கவோ தேவையில்லை! உங்களது
முன்னேற்றந் தன்னிலும் மற்றும் மனப்போக்கில்
இங்கேயோ தாக்கத்தை உண்டாக்கிப் பார்த்திருக்கும்!
உங்கள் கடமையே கண்.

மதுரை பாபாராஜ்
 

அறிஞர் அண்ணா

அண்ணா ஓவியத்தை வரைந்தவர் நண்பர் திரு.அன்பு அவர்கள்

அறிஞர் அண்ணாவின் புகழ் வாழ்க!


15.09.2023


அன்பகம் பண்பகம் மற்றும் அறிவகமாய்

என்றும் திகழ்கின்ற பேரறிஞர் அண்ணாவின்

தொண்டில் தலையாய தொண்டு தமிழ்நாடு

என்னும் பெயர்தந்த தொண்டு.


கடமையுடன் கண்ணியம் கட்டுப்பாட் டையும்

நடைமுறையாய்ப் போற்றச் சொன்னவர்  அண்ணா!

புகழ்வாழ்க! என்றும் நிலைத்து.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, September 13, 2023

பெற்றோரே தெய்வங்கள்


பெற்றோரே தெய்வங்கள்!


அம்மா அப்பா நம்வாழ்வில்

அன்பும் அறிவும் அவர்கள்தான்!


ஆற்றலை வளர்ப்போர் அவர்கள்தான்

வாய்ப்பைத் தருவதும் அவர்கள்தான்!


இமைபோல் நம்மைக் காப்பார்கள்

நல்வழி காட்டுதல் அவர்கள்தான்!


ஒழுக்கம் கற்றுத் தருவார்கள்

பண்பை நமக்குச் சொல்வார்கள்!


நன்றாய்ப் படிக்கச் சொல்வார்கள்

பள்ளியில் சேர்ப்பதும் அவர்கள்தான்!


நமது வளர்ச்சியைக் கண்டேதான்

நாளும் மலைத்தே மகிழ்வார்கள்!


எத்தனை குழந்தை என்றாலும்

சமமாய்  நடத்தி வாழ்வார்கள்!


நமது தேவை அறிவார்கள்

அறிந்தே கடமை செய்வார்கள்!


பெற்றோர்க் கில்லை என்றாலும்

நமக்கே கொடுப்பார் அவர்கள்தான்!


தெய்வத்தை நாமோ பார்த்ததில்லை

தெய்வம்  நமக்கு அவர்கள்தான்!


மதுரை பாபாராஜ்


 

மாண்புமிகு முதல்வருக்கு வாழ்த்து


மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து!


மகளிர் உரிமைத் தொகை 

மாதம் ரூபாய்1000!


காஞ்சிபுரத்தில் தொடங்குகிறார்!


தொடங்கும் நாள்15.09.23


மகளிர் உரிமைத் தொகையை வழங்கி

அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் மலர

நடைமுறை யாக்கி  நமது முதல்வர் 

மகத்தான சாதனையை நாடுபோற்ற செய்தார்!

அகங்குளிர அன்புடன்  வாழ்த்து.


போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்

ஊற்றெடுக்கும் சாதனைகள் ஊர்மெச்ச நாட்டுகின்றார்!

காக்கும் கரங்களாம்  அன்பு முதல்வரை

நாள்தோறும் வாழ்த்துவோம் சூழ்ந்து.


மதுரை பாபாராஜ்


C1, பிரார்த்தனா

குரோவ் அடுக்ககம்

செங்கமல வளாகம்

இணைப்புச் சாலை

ஆதம்பாக்கம்

சென்னை 600 088

--------------------------------------

கைபேசி: 900 326 0981

--------------------------------------

 

Tuesday, September 12, 2023

புறணி பேசாதே



 வள்ளுவத்தைப் பின்பற்று!


புறணி பேசாதே!


மற்றவரைப் பற்றி புறணிபேசி வாழ்பவர்கள்

அற்பப் பதராவார்! உள்ளொன்று வைத்தேதான்

முற்றும் புறமொன்று பேசும் அறிவிலிதான்!

இப்படி வாழ்தல் இழிவு.


மதுரை பாபாராஜ்

இயற்கைமுன் தூசு


இயற்கைமுன் தூசு!


என்ன அறிவியல் நுட்பம் வளர்ந்தாலும்

அன்றாடம் காணும் நிலநடுக்கம் பொங்கியெழும் 

வெள்ளம் சுனாமி எரிமலயின் சீற்றங்கள்

துள்ளிப் பரவுகின்ற காட்டுத்தீ மாமலையின் 

கொத்துச் சரிவுகள் என்றே இயற்கையின் 

அஞ்சவைக்கும் பேரழிவை யார்தடுக்கக் கூடுமிங்கே?

எல்லாம் இயற்கைமுன் தூசு.


மதுரை பாபாராஜ்

 

Monday, September 11, 2023

நெறிப்படுத்தி வாழ்வோம்


நெறிப்படுத்தி வாழ்வோம்!


அறிவுரை மற்றும் அறவுரை கூறி

நெறிப்படுத்தி வாழ முயற்சிகள் செய்வோம்!

கறைப்படுத்தி வாழ்தலோ தாழ்வுக்கு வித்து!

முறைப்படுத்தி வாழ்தல் உயர்வுக்கு வித்து!

நெறிப்படுத்தி வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

 

ஓடும் ஆணவம்


நோய்வந்தால் ஓடும் ஆணவம்!


ஆணவத்தில் விண்ணிற்கும் மண்ணிற்கும் நாள்தோறும்

ஆனமட்டும் துள்ளிக் குதித்திருப்பார்

மானிடர்கள்!

மானிடர்க்கு நோய்வந்தால் போதும் சுணங்கிடுவார்!

ஆடையும் மேனியும் சேர்ந்தே சுமையாகும்!

ஆணவம் ஓடும் மறைந்து.


மதுரை பாபாராஜ்

 

Sunday, September 10, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

மனஅமைதி என்பது மௌனத்தில் வாழும்
நிலையல்ல! நற்செயல்கள் செய்வதால்  நம்மைக்
கருணை மிளிர்பவராய் ஆக்குதலே ஆகும்!
இதுவே மகிழ்ச்சியை உள்ளத்தில் தூவும்!
கருணையுள்ளம் கொள்தல் உயர்வு.

மதுரை பாபாராஜ்
 

பாரதி நினைவுநாள்


முண்டாசுக் கவிஞன் பாரதியின் நினைவுநாள்!

11.09.23

முழுத்தலைப் பாகை எங்கே?

முறுக்கிய மீசை எங்கே?

செழுந்தமிழ்ச் சொற்கோ எங்கே?

சிந்தனைச் சுரங்கம் எங்கே?

எழுச்சியின் வேந்தன் எங்கே?

எரிமலைக் கவிதை எங்கே?

பழமையை எரிப்போன் எங்கே?

பாரதி கவிஞன் எங்கே?


மதுரை பாபாராஜ்

 

நந்தினி வெங்கடேசன் திருமணம்


திருமண வாழ்த்துப்பா!

திருமணம் நடைபெறும் கோயில்:

திருப்போரூர் கந்தசாமி 

திருக்கோயில்!

மணமக்கள் வாழ்க வளமுடன்!

மணநாள்: 11.09.23

மணமகன்:D. வெங்கடேசன் B.Sc;

மணமகள்:S.நந்தினி B.Com;


குறள்நெறி் போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்க! மகிழ்வுடன் வாழ்க!

நிறைவுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ் 

வசந்தா

குடும்பத்தார்