Thursday, November 22, 2018

யார்தான் காப்பார் மீனவர்களை?

கடலுக்குள் செல்லவேண்டாம் வானிலை சொல்ல
கடலுக்குள் வந்தால் விரட்டுவோம்  என்றே
அடங்காமல் சிங்களவர் மீனவரைச் சொல்ல
இடையிலே சிக்கித் தரைமீது மீனாய்
துடித்துத் துவள்கின்றார் பார்.

இன்னும் கோயில்கள் ஏன்?

கோடிகோடி கோயில்கள் நாட்டில் இருந்தாலும்
தேடித்தான் கட்டுகின்றார் கோயில்கள் இன்னுமிங்கே!
வாடி வதங்குகின்ற ஏழைக்கு வாழ்வளித்தால் 
நாடி வருவான் இறை.

புயலின் சுற்றுலாப் பேரழிவு!

ஆண்டுக் கொருமுறை சுற்றுலா செல்வதுபோல்
ஏனோ கடலுக்குள் மையமாகி, எங்குவந்து
தாக்குவாய்? எப்படித் தாக்குவாய் ? என்றுதான்
ஏக்கம் பதட்டமுடன் ஊடகத்தைப் பார்த்திருக்க
போக்குகாட்டி எங்கெங்கோ நீயும் பயணித்து
நாட்டிலும் வீட்டிலும் பேரழிவை உண்டாக்கி
போற்றி வரவேற்கும் பண்பைப் பறக்கவைத்தே
தூற்றி வெறுக்கவைப்ப தேன்?

Tuesday, November 20, 2018

பெறுநர். திரு.பூபாலன்

நம்ம உணவகம் வாழ்க வளர்ந்து!

அன்பும் தரமும் கடமைத் துடிப்பாக
கண்ணுங் கருத்தாக  ஈடுபட்டே நாள்தோறும்
நம்ம உணவகத்தை இங்கே நடத்துகின்றார்!
பண்பான  கல்லூரி மாணவிகள் ஆதரவில்
வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.