Sunday, May 19, 2024

பாவலர் தமிழ் இயலன் ஐயா


 பாவலர் தமிழ் இயலன் ஐயா அவர்களுக்கு வாழ்த்து!


தூய தமிழின் பயிலரங்கந் தன்னிலே

பாவலர் ஆசான் தமிழியலன் பேசுகின்றார்!

நாவலரை நற்றமிழால் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Saturday, May 18, 2024

ஏர்வாடியார்


 இன்று அகவை 77 காணும் பாவலர் ஏர்வாடியார்

வண்டமிழ்போல் வாழ்க!


அகவைத்திருநாள்: 18.05.24


வங்கிப் பணியிலே சாதனை நாட்டிய

வண்டமிழ்ப் பாவலர் ஏர்வாடி யார்வாழ்க!

பண்பாளர் புன்னகை ஏந்தும் கவிமுரசு!

தண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


Wednesday, May 15, 2024

நடிகர் சௌந்தரராஜா


 நடிகர் சௌந்தர ராஜாவுக்கு வாழ்த்து!


முப்பத்து ஏழாம் திரைப்படத்தில் தோன்றித்தான்

இப்புவியில் சாதித்த சௌந்தர ராஜாவின்

அற்புத ஆற்றலை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் முரளி



 நண்பர் முரளி அனுப்பியதற்குக் கவிதை!


மரங்கள் நிறைந்திருக்கும் பூங்காவில் ஓய்வாய்ச்

சிலநேரம் உட்கார சாய்வாய் அழகாய்

மரத்தாலே ஆன இருக்கை இருக்கும்

பலர்வருவார் என்றேதான் பார்த்து.


காலை வணக்கத்தை அன்புடன் தந்தவரை

நாளும் வாழ்கவென்றே வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Sunday, May 12, 2024

திருமண வாழ்த்து


 

Saturday, May 11, 2024

நண்பர் முரளி


 நண்பர் முரளி அனுப்பியதற்குக் கவிதை!


வெண்கோப்பை ஏந்தும் குளம்பியுடன், வெண்புறா 

நின்றிருக்க வானொலி நீலமலர் பூத்திருக்க

நண்பரின் காலை வணக்கம் அனுப்பினார்!

நன்றி நவில்கின்றேன் இன்று.


மதுரை பாபாராஜ்

Friday, May 10, 2024

வாழ்வோம் உழன்று


 வாழ்வோம் உழன்று!


சுற்றாத கோயிலில்லை! கும்பிடாத சாமியில்லை!

பக்தியில்  யார்க்கும் சளைத்ததில்லை! ஆனாலும்

சிக்கல்கள் சுற்றித்தான் பின்னி வருகிறதே!

முற்பிறவி செய்த வினையென்பார் நம்பமாட்டேன்!

நல்லது என்றால் கடவுளருள் என்கின்றார்!

கெட்டது என்றாலோ உன்வினை என்கின்றார்!

இப்படியும் வேண்டாமே! அப்படியும் வேண்டாமே!

எப்படியோ வாழ்வோம் உழன்று.


மதுரை பாபாராஜ்

Thursday, May 09, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எதிர்காலந் தன்னிலே திட்டமிடல் மற்றும்
செயல்படுத்தல் என்பதைக் காட்டிலும்  உங்கள்
உளத்தில் அமைதி கிடைத்திட வைத்தல்
அவசிய முக்கியம் சூழலை ஏற்கும்
நிலையெடுத்தல் என்றே உணர்.

மதுரை பாபாராஜ்

Tuesday, May 07, 2024

ஒழுக்கமே வாழ்வு


 ஒழுக்கமற்ற வாழ்வும் புதைமணலில் சிக்குவதும் ஒன்று!

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


தொடர்ச்சி பொறுப்புணர்ச்சி இந்த இரண்டும்
இலக்கைச் சவால்களிலும் மற்றும் கடினம்
நிறைந்திருக்கும் சூழலிலும் சாதிக்க இங்கே
உதவும்! அவைகள் கவனமுடன் நாளும்
செயல்படவும் வைக்கும் உணர்.

மதுரை பாபாராஜ்

Sunday, May 05, 2024

நண்பர் ரவி


 குறும்பா வேந்தர் ரவி!


நாவலர் பாவலர் முத்தமிழின் காவலர்!

பாசமிகு நண்பர் ரவி.


மதுரை பாபாராஜ்

Saturday, May 04, 2024

நண்பர் முரளி


 நண்பர் முரளி அனுப்பிய படத்திற்கு வாழ்த்து:


பூவுக்குள் பூகண்டேன் 

நட்பின் மணம்கமழ்ந்த

காலை வணக்கத்தை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


Friday, May 03, 2024

நண்பர் திருமலை


 நண்பர் திரு.ப.திருமலை அவர்களுக்கு வாழ்த்து!


படிப்பாற்றல் - எழுத்தாற்றல்- படைப்பாற்றல்- பேச்சாற்றல்

நட்பாற்றல்-உழைப்பாற்றல்- 

பண்பாற்றல்!


திருமலையில் உள்ளதோ ஏழுமலை! இந்தத்

திருமலைக்குள் ஏழாற்றல் உள்ளதைக் கண்டேன்!

எழுத்தாற்றல் மற்றும் படிப்பாற்றல் நல்ல

படைப்பாற்றல் பேச்சாற்றல் நட்பாற்றல் மற்றும்

உழைப்பாற்றல் பண்பாற்றல் என்றேதான் ஏழு

மலையாற்றல் கொண்டவரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


காலமாற்றம்- கோலமாற்றம்

 காலமாற்றம்-கோலமாற்றம்!


நாளெல்லாம் கட்டிலிலே நான்படுப்பேன்! என்வசந்தா

காலடியில் நாளும் படுத்திருப்பாள்! காலமோ

நாள்தோறும் என்வசந்தா காலடியில் நான்படுக்க

நாளெல்லாம் கட்டிலிலே தான்படுக்கும் கோலமேற்றாள்!

காலமிங்கே செய்தகோலம் இஃது.


மதுரை பாபாராஜ்

Thursday, May 02, 2024

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


எல்லோரும் வேறு மொழிகளில் பேசினாலும்
கள்ளமின்றி வாய்திறந்து நாமோ சிரிக்கையிலே
உள்ளங் கவரும் ஒலிகளில் வேறுபாடே
இல்லை உணர்ந்தாயா? இங்கு.

மதுரை பாபாராஜ்

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எண்ணம் சிறியதோ இல்லையிங்கே எங்கிருந்தோ
வந்த பொறியோ அதனை முறையாக
நம்முள்ளம் கையாண்டால் ஏராள அற்புதங்கள்
உண்டாகும்! நல்லநல்ல எண்ணங் களையென்றும்
பின்பற்றி வாழ்தல் சிறப்பு.

மதுரை பாபாராஜ்

Wednesday, May 01, 2024

நண்பர் முரளி



 நண்பர் முரளி அனுப்பியதற்கு வாழ்த்து!


கோப்பைக் குளம்பி குடித்தோம் மகிழ்ந்தோம்!

காலை வணக்கத்தை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்