நிம்மதி கானல் நீரா?
நிம்மதி கானல் நீரா?
நிம்மதியோ கானல்நீ் ராக விலகித்தான்
அன்றாடம் செல்கிறதே! வாழ்க்கை
வழித்தடத்தில்
இப்படித்தான் என்றால்நான் வாழ்வது
தானிங்கே
எப்படியோ? சொல்லுங்கள் இங்கு.
மதுரை பாபாராஜ்
நிம்மதி கானல் நீரா?
நிம்மதியோ கானல்நீ் ராக விலகித்தான்
அன்றாடம் செல்கிறதே! வாழ்க்கை
வழித்தடத்தில்
இப்படித்தான் என்றால்நான் வாழ்வது
தானிங்கே
எப்படியோ? சொல்லுங்கள் இங்கு.
மதுரை பாபாராஜ்
திரு.M. ராஜ்குமாருக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
அகவைத் திருநாள்: 29.07.26
அகவை 55/56
இல்லற முத்துக்கள்:
மனைவி பிருந்தா தேவி
மகன் கோசல் கல்யாண்
பெற்றோர் பெரியோர்கள் ஆசியுடன்
பல்லாண்டு
நற்றமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.
குறள்நெறி போற்றிக் குடும்பத்தார் சூழ
சிறப்புடன் வாழ்க! நலமுடன் வாழ்க!
நிறைவுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!
அகங்குளிர வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
அத்தை திருமதி மாலதி இராமச்சந்திரன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
அகவைத்திருநாள்: 29.07.26
என்னை மகன்போலப் பார்த்தேதான்
காரையில்
அன்னமிட்ட ஆண்டுகளை மாணவ
வாழ்க்கையை
என்றுமே நன்றி மறவாமல்
வாழ்கின்றேன்!
அத்தை பிறந்தநாளில் வாழ்த்தி
வணங்குகிறேன்!
நற்றமிழ்போல் வாழ்க மகிழ்ந்து
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
மாற்றம் நன்று!
காலையில் வாக்குவாதம்! வம்புசண்டை!
கோபதாபம்!
மாலையில் நட்புரிமை! தோழமை!
அன்புடைமை!
வானிலை மாற்றம்போல் எல்லாமே
மாறிவிடும்!
வாழ்க்கையில் இம்மாற்றம் நன்று.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Change Is Good!
Morning may awaken with quarrels,
Arguments, anger, and wounded pride.
Yet evening returns with friendship,
Warmth, affection, and hearts reconciled.
Like the ever-changing sky,
Life, too, is forever in motion.
Such transformations are a blessing—
For change is the grace that renews life.
— Madurai Babaraj
காலை!
விடிந்தும் விடியாத காலைப் பொழுதில்
எழுந்தே உசுப்பும் கதிரவன் கோலம்!
கதிரின் வரவறிந்தே ஆடும் கதிர்கள்!
மகிழ்ந்தேன் ரசித்தேன் உணர்ந்து.
மதுரை பாபாராஜ்
நேயர் முருகுவின் விருப்பத்திற்கு இணங்க எழுதிய கவிதை!
மாலை!
நேயர் முருகுவின் விருப்பத்திற்கு
இணங்க எழுதிய கவிதை!
மாலைப் பொழுதில் மறையும் கதிரவன்
மேலைத் திசையில் இறங்கும் அழகிலே
ஆடும் கதிர்களின் ஆடல் கலையிலே
வாழ்வை மறந்தேன் ரசித்து.
மதுரை பாபாராஜ்
கொந்தளிக்கும் ஆழி! குமுறும் எரிமலை!
என்றிங்கே கொந்தளிக்கும் என்று
குமுறுமென்று
இங்கே தெரியாத வாழ்க்கையின்
சூழ்நிலைகள்!
சந்திக்க வேண்டுமிதை நாம்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
We Must Face It!
The ocean heaves in restless rage,
The volcano groans with fiery blaze.
Who can foresee where tempests rise,
Or when life's hidden trials arrive?
Its changing tides remain unknown—
Yet every challenge must be met.
With courage firm and spirit strong,
We face what destiny has set.
— Madurai Babaraj
கடந்தகால வாழ்வை நினைவில் நிறுத்தி
தடம்பதித்த அந்த நிகழ்வுகளை அச்சில்
நிறைவுடன் அந்தநாள் ஞாபகம் நூலைப்
படிப்பவர்கள் எண்ணி மகிழவைத்தார்
வாழ்த்து!
முறைப்படுத்தி தந்தமைக்கு வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Greetings on Springtime by Mr. Isakkirajan!
He gathered the footprints of bygone days,
And etched their cherished moments into
print.
With graceful care, he made yesterday
bloom again,
So every reader may relive those treasured
memories with joy.
Warm congratulations to the author
For presenting the past with such thoughtful
order and enduring charm.
— Madurai Babaraj
வசவுகள் நன்மைதரும்!
மெய்களைச் சொல்லி வசவுகள் வாங்கலாம்!
பொய்களைச் சொல்லியே வாழ்த்துகள் வாங்காதே!
மெய்களால் வந்த வசவுகள் நன்மைதரும்!
பொய்களின் வாழ்த்துகள் தீது.
மதுரை பாராஜ்
ChatGPT
Reproach Brings Blessings!
Speak the truth, though reproach may come;
Never earn applause by speaking lies.
The blame born of truth will yield lasting good;
The praise won by falsehood brings only harm.
— Madurai Babaraj
முழங்கால் அறுவை சிகிச்சையில்
ஆற்றல்
விளங்கிட ஆயிரம் தன்னைத்தான்
செய்து
விழாவெடுத்து சாதனையை
வெற்றியுடன் வாழ்த்தி
பிரசாந்த் மருத்துவக் கூடமோ இன்று
வரலாறு கண்டது சொல்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Prashanth Hospitals, Chennai!
A thousand knee replacements— A milestone carved by healing hands, A triumph crowned with joyous celebration, Honouring skill, compassion, and success.
Today, Prashanth Hospitals has written A shining page in the chronicles of medicine— A story history itself shall proudly tell.
— Madurai Babaraj
சொந்தமான வீட்டுக்குள் அன்னியரைப்
போல்வாழும்
அன்பற்ற சூழ்நிலைகள் உள்ள
உளைச்சலை
இன்னலை ஏற்படுத்தி நாளும்
விரக்தியைத்
தந்தேதான் தள்ளாடும் சாற்று.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Despair!
Within the walls of one's own home,
we live as strangers, side by side.
Where love has withered, every day
becomes a burden to endure.
The heart grows weary,
troubled by silent wounds and unseen sorrows;
each passing dawn brings fresh distress,
leaving the soul to stagger beneath
the heavy weight of despair.
— Madurai Babaraj
யாருக்கும் யாரும் உதவிகள் செய்வது
பாரில் தொடர்நிகழ்வாய் இங்கிருக்க
ஏலாது!
வாழ்வின் பரபரப்பில் எங்கெங்கோ
வாழ்ந்திருப்பார்!
யாரையும் சாடுவது ஏன்?
மதுரை பாபாராஜ்
ChatGPT
Why Condemn?
Helping one another—
the timeless rhythm of life on earth—
can never cease.
Amid the restless rush of living,
each soul is carried
to distant paths and different places.
None can know another's burdens;
none can see every unseen struggle.
So tell me—
why condemn anyone?
சூறாவளி!
சுழன்றடிக்கும் சூறா வளிக்கு் நடுவில்
உளைச்சல் நிறைந்திருக்கும் உள்ளமுடன்
வாழும்
நிலையென்றால் என்செய்வேன் சொல்?
மதுரை பாபாராஜ்
ChatGPT
Cyclone
At the heart of a whirling cyclone, If I must live With a soul burdened by endless unrest— Tell me, How shall I endure?
— Madurai Babaraj
உளைச்சலே மேல்!
வீட்டைத் துறந்துவிட்டுப் போவென்று
சூழ்நிலைகள்
ஊற்றெடுத்துச் சொன்னாலும்
மீண்டுமிந்த வீட்டுக்குள்
தான்வந்தே வாழவேண்டும்
என்றெண்ணும் போதிலே
வீட்டில் அனுசரித்து வாழ்வோம்
நிலைப்பாட்டைப்
போற்றி உளைச்சலுடன் வாழ்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Better the Burden!
Though storms may urge, "Abandon this
home,
Walk away, be gone forever,"
Yet when the heart returns to whisper,
"Here alone I must still live,"
Wisdom chooses not rebellion, but grace.
Adapt with those beneath this roof,
Hold fast to peace as life's true stand;
If strain must be the price of love,
Then bear the noble weariness—
For weary harmony is
better than a broken home.
— Madurai Babaraj