Friday, December 31, 2021

விஜயா பிரிண்டர்ஸ் வளர்க!


பண்பாளர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் வாழ்க!


விஜயா பிரிண்டர்ஸ் வளர்க!


அச்சகத் தொண்டில் எழுபத்து நான்காண்டு

முத்திரைச் சாதனை நாட்டி நிறைவுசெய்து

அக்கறையாய் இங்கே எழுபத்து ஐந்திலே

வெற்றிநடை போடுவதை வாழ்த்து.


வண்ண விசிறியும் மஞ்சள்பை நாட்காட்டி

கண்கவரும் சாவிக்கொத் தும்தந்து

கைகுட்டை

தந்தைக்கு நன்றி மறவாமல் ஆண்டுதோறும்

எண்ணமலர் நூலுடன் ஆறுபொருள் தந்தவரே

வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.


அச்சக நேரம் அரட்டைக் கிடமில்லை!

அச்சக நேரம் முடிந்ததும் நட்புமழை!

எப்போதும் நேர்த்தி உழைப்பு கடமைதான்!

நற்றமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்




 

மோகன் வினோ விருந்தோம்பல்!


மோகன் வினோ விருந்தோம்பல்!


29.12.21/30.12.21


சென்னை-- தஞ்சாவூர்-- 


பயணம் செய்தோர்:

பாபாராஜ்-- வசந்தா-- நிக்கில்-- வருண்


இரவுச்சாப்பாடு!


இட்லி, பிரியாணி மற்றும் தயிர்உள்ளிப்

பச்சடி வைத்தனர்! உண்டோம் சுவைத்தேதான்!

எந்தக் குறையுமின்றி நாங்கள் உறங்கினோம்!

அன்பில் திளைத்தோம் மகிழ்ந்து.


வகைவகை யாக இறைச்சிப் பொருட்கள்

தொலைபேசி பேசியே மோகனோ கொண்டு

வரச்சொன்னார் நண்பரிடம்! கொண்டுவந்தார் நண்பர்!

கடலருகே சென்றேதான் வாங்கிவரச் செய்தார்!

சமைத்த வினோவுக்கு வாழ்த்து.


கீர்த்தனா மற்றும் கிருத்திக்கும் எங்களைப்

பார்த்ததும் அன்பு மழையில் நனையவைத்தார்!

ஆரவாரம் செய்தேதான் திக்குமுக் காடவைத்தார்!

நாங்கள் கிளம்பினோம் காரைக் குடிநோக்கி!

ஆகாஷ் அழுதான் பிரிவுத் துயரத்தில்!

ஏக்கமுடன் சென்றோம் பிரிந்து.


மோகன் வினோவும் கிருத்திக்கும் கீர்த்தனாவும்

ஏகமாய் எங்களை நன்கு வரவேற்றார்!

ஈடற்ற பண்பில் விருந்தோம்பல் செய்தனர்!

வேடமற்ற நல்லுறவை வாழ்த்து.


நன்றியுடன்

மதுரை பாபாராஜ்

வசந்தா






 

Wednesday, December 29, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை


வணக்கம்


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை


வணக்கம் கூறிய புறாவே!

இன்றைய கவிதை கேள்!


திரைப்பாடல் அன்று! 

அதற்குரிய கவிதை இன்று!


பாடல் வரி:


காதோடுதான் நான்பாடுவேன்

மனதோடு தான் நான்பேசுவேன்!


கவிதை:


காதோடு வைத்தேதான் கைபேசி வாயிலாக

ஏதேதோ பேசுகிறேன் உள்ளம் மறந்தேதான்

ஊர்க்கதைகள் மற்றும் அவசியப் பேச்சுகளும்

பேசுகிறேன் இங்கே மகிழ்ந்து.


பாடல் வரி:

விழியோடு தான் விளையாடுவேன்

உன் மடி மீது தான் கண் மூடுவேன்


கவிதை:

மடிக்கணினி மீது விரலோட நாளும்

விழியோடு தானே விளையாடு கின்றேன்!

மடிக்கணினி மீதுநான் தூங்கி வழிந்தே

மடிமீது கண்மூடு வேன்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் ராவ் அனுப்பிய சொல்லோவியம்!


 நண்பர் ராவ் அனுப்பிய சொல்லோவியம்!


தமிழாக்கம்


இப்படியும் மாற்றலாம்!


உலகமே உன்னை எதிர்க்கும் உணர்வு

கலக்கத்தைத் தந்தால் திரும்பிநின்று செல்ஃபி

கைபேசி தன்னில் எடுத்தால் உலகம்

திரண்டுநிற்கும் உன்பின்னால் என்ற உணர்வு

உன்மனதில் தோன்றும் உணர்.


மதுரை பாபாராஜ்

செல்வன் ஆதித்யா அனுப்பிய சொல்லோவியம்!


செல்வன் ஆதித்யா அனுப்பிய சொல்லோவியம்!


தமிழாக்கம்.


கனவு! குறிப்பிட்ட தேதியில் இங்கே

நினைவானால் 

வெற்றி இலக்காகும்! 

அந்த

இலக்கை அடையும் படிகளே திட்டம்!

வளர்கின்ற திட்டம் செயலானால் உங்கள்

கனவு நிறைவேறும் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

Monday, December 27, 2021

நண்பர் எழில் புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!

 


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


ஒவ்வோர் நிகழ்வும் செயலும் நடப்பது

எல்லாமே காரணத் தோடுதான்! நம்முடைய

உள்ளம் அதிலிருந்து கற்கவேண்டும் பாடத்தை!

கற்றல் நமது செயல்திறனை ஊக்குவிக்கும்!

ஒற்றை இலக்கே குறி.


மதுரை பாபாராஜ்

நண்பர் IG சேகர் அனுப்பிய மலர்கள் படம்!


நண்பர் IG சேகர் அனுப்பிய மலர்கள் படம்!


மலர்களே! இன்றைய கவிமை!


உட்பகை மானிடருக்கே!


பலாப்பழம்-- மனிதன்!


வெளியிலே முள்ளிருக்கும் ! உள்ளே இனிப்பாய்ப்

பழங்கள் கனிந்திருக்கும்! மாந்தர் வெளியே

பழம்போல் இனிமையாய்ப் பேசுவார் உள்ளம்

முழுவதும் முள்ளாக உட்பகை தேக்கி

இழிவாக வாழ்கின்றான்! ஏன்?


மதுரை பாபாராஜ்



 

குறள் 90 விருந்தோம்பல்


குறள் 90:


மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.


இன்றைய விருந்தோம்பல்!


உறவினர் வீட்டுக்குச் சென்றேன்! அறையில்

மகனங்கே  மெய்நிகர் ஆட்டத்தில் வாழ்ந்தான்!

மகளங்கே கைபேசி பேச்சிலே வாழ்ந்தாள்!

இணையரோ தங்கள் மடிக்கணினி பார்த்துப்

பணிசெய்து கொண்டிருந்தார்! வீட்டுக்குள் சூழல்

தனித்தனியாய் எல்லோரும் ! பார்த்தனர் என்னை!

மணித்துளி புன்னகை செய்துவிட்டு மீண்டும்

அவரவர் வேலை பரபரப்பில் மூழ்க

வெளியிலே வந்தேன் நகர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

என்றும் படுத்தலா?

 என்றும் படுத்தலா? சே.


மைந்தனாய் எங்களுக்கு வந்தாய் படுத்தினாய்!

இன்றும் படுத்துகின்றாய்! இல்லற வாழ்விலே

மைந்தர்கள் என்றுனக்கு வந்தார்! அவர்களையும் 

இன்று படுத்துகின்றாய்! என்னபாவம் செய்தனர்?

அன்றும் படுத்தினாய்! இன்றும் படுத்துகின்றாய்!

என்றும் படுத்தலா? சே.


மதுரை பாபாராஜ்

வசந்தா


Sunday, December 26, 2021

சாலையில் புலிகள்


நன்றி youtube


சாலையில் புலிகள்!


சாலை இருமருங்கும் அந்தோ புலியிரண்டு!

சாலையில் வண்டியில் உள்ளவர்கள் அச்சத்தில்

பார்த்தவாறே உட்கார்ந்து செய்வ தறியாது

வேர்க்க விறுவிறுக்க பார்க்கின்றார் ! அப்புலிகள்

சாலை குறுக்கே நடந்தேதான் இங்குமங்கும்

போகவர உள்ளதே! மாந்தர் மயிரிழையில்

ஆபத்தே இன்றித்தான் தப்பித்த தாகத்தான்

பார்த்தேன் வலையொளியில் நான்!


மதுரை பாபாராஜ்


 

நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


வணக்கம் நண்பரே.


பறவையே! இன்றைய கவிதை!


பொன்மொழிக்குக் கவிதை!


"தாயிங்கே பத்தடி பாய்ந்தாலோ பெற்றெடுத்த

சேயோ பதினா றடிபாயும்" பொன்மொழிதான்!

தாயின் கவனமோ சேயிடத்தில் காண்பதில்லை!

சேயோ தடுமாறும் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

Saturday, December 25, 2021

மகள் திருமதி உமா பாலு அனுப்பிய படம்


மகள் திருமதி உமா பாலு அனுப்பிய படம்


கவின்மிகு கதழுந்து!


இலைகள் மலர்களை வைத்தே அமைத்த

கலைநயம் மிக்க கதழுந்தோ பார்க்க

அழகே! இயற்கை

படைப்புத் திறனை

ரசித்தேதான் வாழ்த்துகிறேன் நான்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!


செம்மலர்களே! இன்றைய கவிதை:


வலசை ஒழுக்கம்,!


வலசை வழியைப் பறவை மறந்தால்

வழிமாறிப் போகும்! கலங்கித் தவிக்கும்!

ஒழுக்க வழியை மனிதன் மறந்தால்

இழிவில் துடிப்பான் உணர்.


மதுரை பாபாராஜ்

Comments:

செம்மையான செழுமையான கவிதை! மும்மைக்கும் வழியமைக்கும் கவிதை!

தீத்தாரப்பன்VOV

ஒழுக்கம் இல்லையாயின்

வாழ்க்கை தொல்லையே

கனியன் கிருஷ்ணன்


 

Friday, December 24, 2021

ஏற்றத்தாழ்வு

 ஏற்றத்தாழ்வு!


கையில் பணப்புழக்கம் உள்ளவர்கள் வாழ்நிலையும்

கையில் பணப்புழக்கம் இல்லாதோர் 

வாழ்நிலையும்

வையகத்தில் ஏழை பணக்காரர் வேற்றுமையை

மையமாக்கிப் பார்க்கிறதே? என்று முடியுமோ?

கையில் பணமுள்ளோர் வாங்கலாம் எண்ணுவதை!

கையில் பணமற்றோர் தேவைக்கே தத்தளிப்பார்!

வையகமே! வேறுபாட்டை நீக்கு.


மதுரை பாபாராஜ்

தாங்கப் பழகு

 தாங்கப் பழகு!

THINK POSITIVE

கூடப் பிறந்தவர்கள் நம்மைத் தவிர்க்கின்ற

சூசகச் சூழ்நிலைகள் உண்டாகும் வாழ்விலே!

பாதகமாய் எண்ணாமல் நாளும் பழகவேண்டும்!

சோதனையைத் தாங்கப் பழகு.


மதுரை பாபாராஜ்

Thursday, December 23, 2021

செல்லப் பேரன்நிக்கில் 9.10.21


செல்லப் பேரன் E.S.நிக்கில் அபிசேக் பிறந்தநாள் வாழ்த்து!


நாள்: 09.10.2021


அகவை 16/17


அகரவரிசை வாழ்த்து.


அன்பாய்ப் பழகவேண்டும்! 

ஆற்றல் வளர்க்கவேண்டும்!

இன்சொல்லே பேசவேண்டும்! 

ஈகை அளிக்கவேண்டும்! 

உழைத்துப் படித்து முன்னேற வேண்டும்!

ஊக்கமுடன் வாழவேண்டும்! 

எளிமை உணர்வுவேண்டும்!

ஏழைகளுக்கு உதவவேண்டும்! ஐயந்திரிபற கற்கவேண்டும்! ஒழுக்கமுடன் வளரவேண்டும்!

ஓங்குபுகழ் பெற்றே உயரவேண்டும்! 

ஔவைத் தமிழைக் கற்றுத் தெளியவேண்டும்!


அம்மாவும் அப்பாவும் ஆசி பொழிந்திருக்க

நண்பர் உறவினர் எல்லோரும் வாழ்த்திசைக்க

நன்னெறியில் பீடுநடை  போட்டு வாழவேண்டும்!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

 

நண்பர் எழில்புத்தன. சொல்லோவியம்


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்.


எண்ணற்ற சிந்தனைகள் மற்றும் செயல்பாடு

நம்முள்ளே ஆழமாய் மூழ்கி இருக்கிறது!

ஒன்றைத் தெரிவுசெய்து அந்தச் செயலையோ

எண்ணத்தை யோநீ நிறைவேற்று!

உன்னுள்ளே

பெற்று மகிழலாம் நாளும் திருப்திதான்!

ஒன்றுசெய் நன்றுசெய் இன்று.


மதுரை பாபாராஜ்

 

உண்மை நிகழ்வு


வீட்டில் நடந்த உண்மை நிகழ்வு!


அடுப்படிச் சாளரம் சாத்தாத நேரம்

நெடுவால் குரங்கு நுழைந்தே நடந்து

நடந்துவந்தே அங்கே உணவுமே சையில்

கிடந்தவா ழைப்பழத்தைத் தோலுரித்தே உண்டு

எறிந்தே உணவறைச் சாளரம் ஏறிக்

கடந்துசென்ற தைப்பார்த்தோம் நின்று.


மதுரை பாபாராஜ்


 

சூழ்நிலைக் குரங்குகள்

 வாழ்விலே சூழ்நிலைக் குரங்குகள்!


இக்குரங்கு அக்குரங்கு என்றே குரங்குகளை

எப்படியோ தாண்டி அமைதியாகும் நேரத்தில்

உள்ளே மனக்குரங்கு துள்ளித்தான் ஆடினால்

எள்ளளவு நிம்மதிதான் என்று?


மதுரை பாபாராஜ்

Wednesday, December 22, 2021

ரவி சுபா குடும்பம்


நினைத்தேன் எழுதினேன்!


வாழ்த்துப்பா!


மகள்: சுபாதேவி

மருமகன்: ரவி


இல்லற முத்து:

பேரன்:

சுசாந்த் ஸ்ரீராம்


செவன்த்டே, சாண்ட்லர் கேப்ரன்ஹால் 

படித்து

முயன்றேதான் பாத்திமா கல்லூரி சேர்ந்தார்!

இளங்கலைப் பட்டம் பொருளாதா ரத்தில்!

முதுநிலைப் பட்டம் வணிகநிர் வாகம்!

முடித்தார் ஆய்வுநிலைப் பட்டமும் பெற்றார்!

தனியார் நிறுவனத்தில் வேலைபார்க் கின்றார்!

முனைப்புடன் வாழ்க மகிழ்ந்து.


இல்லற வாழ்வில் கணவர் ரவியேற்றார்!

நல்லறம் காத்தேதான் வாழ்கின்றார்!  

வேலையோ

அப்பலோவில் பார்த்தார்! துபாய் மருந்துமனை

நல்வாய்ப்பை ஏற்றேதான் பார்க்கின்றார் அங்குதான்!

நல்லுழைப்பால் வாழ்க தொடர்ந்து.


மைந்தன் சுசாந்த்சிரிராம் கல்லூரி வாழ்விலே

ஒன்றித் திளைக்கின்றார் ஆர்வமுடன் செல்கின்றார்!

பண்புடன் வாழ்க படித்தேதான் வாழ்கவே!

பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.


நலமுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!

உறவுகள் சூழ உவகையுடன் வாழ்க!

சிறப்புகள் பெற்று அகங்குளிர வாழ்க!

குறள்போல வாழ்கபல் லாண்டு.


பெற்றோர்

மதுரை பாபாராஜ்

வசந்தா

 

குறளஉக்குப் பொற்காலம்


திருக்குறள் இன்று


பண்டிதர்  நூலாய் இருந்ததோ இன்றிங்கே

எங்கும் குறளோசை பாமரர்கள் கேட்கின்ற

வண்ணம் ஒலிக்கிறதே! பொற்காலம் என்றுரைப்பேன்!

வள்ளுவம் வாழ்வியலின் வேர்.


மதுரை பாபாராஜ்

 

நற்றமிழர் இராமாநுசனாருக்கு வாழ்த்து


கேட்டேன்! ரசித்தேன்!

நற்றமிழர் இராமாநுசனாருக்கு வாழ்த்து

ழகரம் தொலைக்காட்சி பேட்டி!


வணிக மொழியல்ல எங்கள் தமிழோ

கனிந்திருக்கும் வாழ்வியல் போற்றும் மொழிதான்

துணிந்தேதான் சொன்னார் இராமா நுசனார்!

வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

Tuesday, December 21, 2021

நம்பிக்கை கொள்

 நம்பிக்கை கொள்!


கவலைகள் இல்லாத வாழ்க்கையே இல்லை!

கண்ணீர் சிந்தாத உயிர்களே இல்லை!


தடைகளே இல்லாத பாதைகள் இல்லை!

முயற்சிகள் இல்லாமல் ஏற்றங்கள் இல்லை!


வருவதை ஏற்று வாழ்வதே சிறப்பு

மறுத்தால் வாழ்க்கைக்கு மனிதனே பொறுப்பு


சோதனைச் சூழல் சூழ்வது இயல்பு

சாதனை யாக மாற்றப் பழகு!


சோம்பித் திரிந்தால் வறுமையே சீறும்

சோம்பலை உதறு ! வானம் வசப்படும்!


நம்பிக்கை கொண்டு உலகை  வெல்லு!

அனைத்தையும் வென்று நிமிர்ந்து நில்லு!


மதுரை பாபாராஜ்

புண்படும்

 புண்படும்!

வாய்தான் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ?

சூழ்நிலையைப் பார்க்காமல் சொல்லும் கருத்துகளால்

பாழ்பட்டுப் போகும் அமைதியான வாழ்க்கைதான்!

வேலெனப்  புண்படுத்தும் சொல்.


மதுரை பாபாராஜ்


பெற்றோரைக் காக்கும் கரம்

 காக்கும் கரம்!

பெற்றோரைப் புண்படுத்தி வாழ்வது வாழ்வல்ல!

உற்றதுணை யாகி மதிப்பளித்துப் போற்றுகின்ற

நற்செயலைச் செய்தேதான் வாழும் குழந்தைகள் 

பெற்றோரைக் காக்கும் கரம்.


மதுரை பாபாராஜ்


பரிசு

 பிறவி தந்த பரிசு!


உற்றார் உறவினர்முன் பெற்றோர் தலைகுனிந்து

நிற்கின்ற சூழ்நிலையை ஏற்படுத்தும் மைந்தனைப்

பெற்றெடுக்கத் தாய்தந்தை என்னபாவம் செய்தனரோ?

இப்பிறவி தந்த பரிசு.


மதுரை பாபாராஜ்




ஏன்? ஏன்? ஏன்?

 ஏன்? ஏன்? ஏன்?


திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்று

கருத்துடன் பேணி வளர்த்தால் முதுமை

திருப்புமுனை வாழ்வாகும்  என்றே

நினைத்தேன்!

நெருப்புமுனை வாழ்வாச்சே ஏன்?


படித்தார்  வளர்ந்தார் பணிக்களம் சென்றார்!

படிப்படி யாகவே இல்லறம் ஏற்றார்!

மதிவழி வாழ்க்கை மழலையர் என்றே

நதிபோல் நடந்தார் இணைந்து.


நானோ முதுமைப் பருவத்தில் வாழ்கின்றேன்!

ஏனோ தெரியவில்லை? இப்படியோர் வாழ்வினைக்

காண்பேன் எனநான் நினைக்கவில்லை? காணுகின்றேன்!

ஏனென்று யாருரைப்பார் சொல்?


இளமை வரைக்கும் இனிமைதான் வாழ்க்கை!

இடைப்பட்ட வாழ்க்கை உளைச்சலில் வாழ்ந்தேன்!

இடைவெளியில் மூச்சுவிட்டேன்! எந்தன் முதுமைப்

பருவம் எரிமலைதான் ஏன்?


மதுரை பாபாராஜ்






OPEN TIME!

 இல்லறத்தின் வேர்!


OPEN TIME!


குறித்தநேரம் காலை வரவேண்டும்

என்ற

நெறிகள் கணினி அலுவலக வேலை

முறையில் கிடையாது! ஊழியர்கள் எல்லாம்

குறிப்பிட்ட வேலை இலக்கை முடித்து

நிறைவுசெய்தால் போதுமாம் இங்கு.


காலைப் பொழுதில் நினைத்தநேரம் வந்தேதான்

வேலை இலக்கை முடிக்கின்றார்! செல்கின்றார்!

காலமாற்றம்  எல்லாம் தொழில்நுணுக்க

மேம்பாட்டின்

கோலமாற்றம் என்றேதான் சொல்.


வீட்டுப் பணிகளை மங்கை முடித்துவிட்டு

லூட்டிக் குழந்தைகளை எல்லாம் சமாளித்து

நாட்டுப் பணிக்களம் நோக்கிப் பறக்கின்றார்!

ஆற்றலைப் போற்றித்தான் வாழ்த்து.


ஆண்களும் பெண்களும் ஓடிஓடி வாழ்கின்றார்!

பேரிடர் காலத்தில் வீட்டில் இருந்துகொண்டும்

ஆர்வமுடன் வேலைகள் செய்கின்றார்

நாள்தோறும்!

பாருக்குள் பம்பரம்போல் சுற்றுகின்றார்

எப்பொழுதும்!

வேர்களானார் இல்லறம் காத்து.


மதுரை பாபாராஜ்





கடப்பேனா நெடுஞ்சாலை?


கடப்பேனா நெடுஞ்சாலை?


நடக்கின்றேன் வாழ்க்கை நெடுஞ்சாலை மீது!

படரும் பனிமூட்டம் எங்குபார்த்த போதும்!

நடையைத் தொடர்ந்தேன்! பனிப்புகையுள் சென்றேன்!

உடலில் நடுக்கம் உணர்ந்தேன்! நடந்தேன்!

கடப்பேனா? வாழ்க்கையே! கூறு.


மதுரை பாபாராஜ்

21.12.21

 

தம்பி கெஜராஜ்


நினைத்தேன் எழுதினேன்!


என் தம்பி கெஜராஜ் அவர்களுக்கு வாழ்த்து!


இல்லற முத்துக்கள்:


மனைவி: மல்லிகா


மகன்- மருமகள்: 

திரைப்பட இயக்குநர்  

G.கார்த்திக் சுப்பாராஜ் - 

மருத்துவர் K.சத்யப்பிரேமா


மகள்-- மருமகன்:

K.தேவிகாராணி-- S.கார்த்திகேயன்

பேரன்: சஞ்சய் சாய்


மருந்துத் துறை முதல் கலைத்துறை வளர்ச்சி தொடரும்:


பிரிட்டோவில், தூய மரியன்னைப் பள்ளி்

படிப்பிற்கு அடுத்து அமெரிக்கன் காலேஜ்

படிப்பை நிறைவுசெய்து வேலைக் களத்தில்

துடிப்பாய்ச் சேர்ந்தார் விழைந்து.


மருந்துத் துறையில் பிரதிநிதி வேலை!

அரும்பாடு பட்டே அலைந்தே உழைத்தார்!

திருமணம்  இல்லாளாய் மல்லிகாவை ஏற்றே

கருத்துடன் வாழ்கின்றார் இங்கு.


மருந்து நிறுவனத்தில் ஊழியர் ஆகி

கருத்துடன் நாளும் உழைத்தார்! வயதோ

அறுபதில் வாய்ப்பு திரைப்படத்தில் பெற்றார்!

விறுவிறு ஏற்றந்தான் பார்.


பல்வேறு கோணத்தில் பல்வேறு வேடங்கள்!

உள்வாங்கி ஆற்றல் மிளிர நடிக்கின்றார்!

எல்லோரும் வாழ்த்துகின்றார் போற்றுகின்றார் சூழ்ந்தேதான்!

பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.


தம்பி இருக்குமிடம் எல்லாம் கலகலப்பு!

எங்கு வருவாரோ அங்கெல்லாம் நாயகன்தான்!

சின்னக் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்

எல்லோரும் பேசுவார் வந்து.


நடித்த படங்கள் அறுபதுக்கும் மேலே!

துடிப்புடன் ஒன்றி நடிப்பதில் ஆற்றல்!

விதவித மாக குணச்சித்ர வேடம்!

சிறப்பான சாதனையைப் போற்று.


எங்கள் குடும்பக் கடைக்குட்டி தம்பிதான்!

அன்பு மனைவி குடும்பத்தார் சூழ்ந்திருக்க

நண்பர்கள் சுற்றம் உறவினர்கள் சூழ்ந்திருக்க

வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

 

Labels:

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


வசதியான சூழலைத்தான் உள்ளம் விரும்பும்!

வசதி பழகிவிட்டால் மற்றைய சூழல்

அசதியை ஏற்படுத்தும்! ஆகவே நாமோ

வசதியை விட்டு வெளிவர வேண்டும்!

வசதியற்ற சூழலின் தன்மை புரியும்!

வசதியற்ற சூழல் பழகு.


மதுரை பாபாராஜ்

 

Monday, December 20, 2021

திரைப்பட இயக்குநர் கெ.கார்த்திக் சுப்பாராஜ் அவர்களுக்கு வாழ்த்து:


திரைப்பட இயக்குநர் 

கெ.கார்த்திக் சுப்பாராஜ் அவர்களுக்கு வாழ்த்து:


குடும்ப முத்துக்கள்:


பெற்றோர்:

அப்பா:S.P. கெஜராஜ்

அம்மா: திருமதி.கெ.மல்லிகா


மனைவி: மருத்துவர் சத்யப்பிரேமா


மைத்துனர்: S. கார்த்திகேயன்

தங்கை: திருமதி.K.தேவிகாராணி

&

செல்வன் சஞ்சய் சாய்



மதுரைத் தென்றல் கார்த்திக்தான்!

மனதைக் கவரும் கார்த்திக்தான்!


தம்பி கெஜராஜ் மல்லிகா

மகனாய்ப் பிறந்தார் கார்த்திக்தான்!


மாநில வங்கிப் பள்ளியிலே

பள்ளிப் படிப்பை முடித்தவராம்!


தியாக ராசர் பொறியியல்

கல்லூரி வாழ்வை நிறைவுசெய்தார்!


நாடகம் எழுதி நடித்தவராம்!

கவிஞ ராக மிளிர்ந்தவராம்!


கணினித் துறையில் பணிசெய்தார்!

வெளிநா டுகளும் சென்றவராம்!


பிரான்சு நாட்டில் இருந்தபோது

நாளைய இயக்குநர் நிகழ்வினிலே


கலைஞர் தொலைக்காட்சி வாய்ப்பளித்தார்!

கலந்து கொண்டு விருதுபெற்றார்!


குறும்பட இயக்குந ரானவரோ

திரைப்படம் இயக்க முயற்சித்தார்!


பலபடம் எடுத்தார் ஆற்றலுடன்!

வெற்றிப் படங்களாய் மாறியதே!


இன்னும் தொடர்ந்து திரைத்துறையில்

படங்கள் இயக்கி வருகின்றார்!


திருப்பு முனைகள் படங்களுக்கே

உயிரோட் டங்கள் ஆனதுபார்!


முயற்சி ஆர்வம் ஈடுபாடு

மூன்றும் மிளிரும் உழைப்பினிலே!


உழைப்பால் உயர்பவர்  கார்த்திக்தான்!

அடக்கம் பணிவும் கார்த்திக்தான்!


எங்கள் குடும்பப் பெருமைக்கு

எடுத்துக் காட்டே கார்த்திக்தான்!


முன்னணிச் சாதனை பின்னணியே

ஊக்கம் கொடுக்கும் இல்லாள்தான்!


வாழ்க வாழ்க வளமுடனே!

வாழ்வாங்கு வாழ்க பல்லாண்டு!


பெற்றோர் மற்றும் குடும்பத்தார்

வாழ்த்து கின்றோம் சூழ்ந்தேதான்!


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்.

 

Labels:

நண்பர் எழில்புத்தன்சொல்லோவியத்தின் தமிழாக்கம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


அக்கறை அன்பைப் பலவழிகளில் காட்டலாம்!

அப்படியே காட்ட பெருந்தன்மை கொள்ளுங்கள்!

முற்றிலும் காட்ட முடிவெடுத்தால் 

ஏனிங்கே

கொஞ்சகொஞ்சம் காட்டவேண்டும் கூறு?


மதுரை பாபாராஜ்

 

குறள் 311


32.இன்னா செய்யாமை

குறள் 311

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா

செய்யாமை மாசற்றார் கோள்


சிறப்பில் மிளிரவைக்கும் செல்வத்தை நாளும்

பெறக்கூடும் என்றாலும் வாழ்வில்-- பிறருக்குத்

துன்பத்தைச் செய்யாமல் வாழ்வதே தூய

மனமுடையோர் கொள்கையாம் கூறு.


மதுரை பாபாராஜ்

 

வள்ளுவத்தை வாழ்த்து


மனத்தில் வள்ளுவத்தை வாழ்த்து!


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.


-- குறள் 972


பிறக்கும் பொழுதில் நேர்மறை எண்ணம்

சிறகடிக்க இங்கே பிறந்தவர்கள் எல்லாம்

சிறப்பாக வாழ்வதற்கு வாழ்த்தி மகிழ்வார்!

பிறப்பொக்கும் எல்லோர்க்கும் இங்கு!


வளர்ந்து படித்தே அமைந்திடும் சூழல்

களங்களில் வாழும் நிலையிலே மாற்றம்

அலையலையாய் உண்டாக ஏற்ற இறக்கம்

கலங்கவைத்துத் தேர்நிலை காணும் நேரம்

மலைத்திருப்போம் வாழ்க்கையைப் பார்த்து.


அவரவர் பாதை தொழில்முறையில் மாறும்!

இணைந்தோர் பிரிவார்! பிரிந்தோர் இணைவார்!

அனைத்துமே செய்தொழில் வேற்றுமையால் தானே!

மனத்திலே வள்ளுவத்தை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

திருமதி மல்லிகா ராஜா

 திருமதி மல்லிகா ராஜா


இயற்கை எய்திய நாள்:18.12.21


எங்கள் குடும்பத்தில் உற்றதுணை யாகித்தான்

தன்னால் முடிந்தவரை தன்னுழைப்பைத் தந்தவர்!

இன்றும் குழந்தைகள் யாரும் மறக்கவில்லை!

பண்பறிந்து நாளும் பழகியவர்! புன்சிரிப்பைத்

தன்முகத்தில் என்றும் தவழவிட்டு வாழ்ந்தவர்!

மண்ணுலகை விட்டு மறைந்தாலும் எங்களது

எண்ணத்தில் வாழ்கின்றார் வணங்குகிறோம் நாங்கள்தான்!

நன்றியுடன் எண்ணுவோம் இங்கு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


இசைமலை சந்தோஷ் நாராயணன் வாழ்க!


நினைத்தேன் எழுதினேன்

இசைமலை சந்தோஷ் நாராயணன் வாழ்க!

இசையோடு நாளும் விளையாடிப் பார்க்கின்றாய்-- கேட்போர்

இதயத்தை இசையோடு கட்டித்தான்

போடுகின்றாய்


என்னென்ன மாயங்கள் எப்படித்தான்

காட்டுகின்றாய்-- ஆகா

பண்களெல்லாம் போட்டிபோட்டு வரவைத்து மகிழ்கின்றாய்


துள்ளலுக்குத் தூதுவிட்டுத் துடிக்கத்தான் வைக்கின்றாய்-- அடடா

அள்ளித்தான் ஆர்ப்பரிக்க அருமையாகப் பொழிகின்றாய்!


துன்பியல் பின்னணியா கேட்போரை அழவைப்பாய்---

நெஞ்சைப் பிழியவைத்து சோகத்தில் மிதக்கவைப்பாய்


ஏற்றத்தில்  இறக்கத்தில் இசையலைகள் உணரவைப்பாய்-- ஆடவைக்கும்

பாட்டுகளில் மெய்மறந்து ரசிக்கத்தான் செய்திடுவாய்!


இசையிலே மாயவலைப் பின்னுகின்றாய் நீவாழ்க-- தாள

நடைபோட்டு வாழ்வாங்கு

வாழியவே என்றென்றும்!


சந்தோசே ! சந்தோசே! சந்தோச மாய்வாழ்க-- இன்பம்

தங்கித்தான் தழைத்திருக்க ஆற்றலுடன் நீவாழ்க!


மதுரை பாபாராஜ்






 

இசையின் மாயநதி சந்தோஷ் நாராயணன்


வாழ்த்து

துள்ளல் இசையா? மனதை மயக்கியே
அள்ளும் இசையா? இசைச்சுற்றும் மாயநதி
உள்ளத்தில் ஊறிவரும் சந்தோஷ்நா ராயணன்
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்
20.12.21

 

Sunday, December 19, 2021

நண்பர் BSNL இராமசாமி அனுப்பிய வணக்கம்!


வணக்கம்.

நண்பர் BSNL இராமசாமி அனுப்பிய வணக்கம்!


நன்றியைக் கற்றுக் கொடுப்பது நாயென்பார்!

என்றோ கொடுத்த உணவை நினைவிலேந்தி

நன்றியுடன் வாலாட்டும் கொஞ்சி மகிழ்ந்திருக்கும்,!

வண்ணமலர்ப் பின்னணி நன்று.


மதுரை பாபாராஜ்

 

Saturday, December 18, 2021

வார்ப்புரை வேந்தர் கவிஞானி மெய்ஞானி வாழ்க!


வார்ப்புரை வேந்தர் கவிஞானி மெய்ஞானி வாழ்க!


வார்ப்புரை வேந்தராம் மெய்ஞானி 

நேர்த்தியாக

ஆழ்கடல் காட்டும் அமைதியாக புத்தகத்தைப்

பூக்கவைக்கும் ஆற்றலை வாழ்த்துவோம் நாள்தோறும்!

பாத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

அருமைக் கவியின் அரிதான வாழ்த்து 

பெருமை கொடுத்துப் பெரிதாய்ப் பெருக்கிய 

ஊக்கம் கொழித்தே உளமும் நிறைத்ததினி

ஆக்கம் சிறக்கும் அகன்று. 

 

அன்புமிகு கவிவாணருக்கு என் 

நெஞ்சார்ந்த நன்றி!🙏🙏

 

மெய்ஞானி

 

புலமையும் எளிமையும்


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை! 

 பறவையே!

இன்றைய கவிதையைக் கேள்!


புலமையும் எளிமையும்!


பாவினத்தின் சொற்கள் புலமையைக் காட்டினால்

பாமரர் தத்தளிப்பார் செய்யுளாய் மாறிவிடும்!

பாவினத்தின் சொற்கள் எளிமையைக் காட்டினால் 

பாமரர்க்கும் இங்கே புரியும் கவிதையென்றே

பாவினத்தைக்  கேட்பார் ரசித்து.


புலவர்கள் செய்யுளை இங்கே எளிமை

இழையோடத் தந்து ரசிப்பதற்குத் தூண்டும்

நிலையே கவிதை படைத்தலின் நோக்கம்!

கருத்தை விதைத்தல் கவிதையின் பின்னல்!

கருத்தும் எளிமையும் கண்.


மதுரை பாபாராஜ்

 

அம்மா நிலமங்கை துரைசாமி அவர்கள் தீட்டிய ஓவியம்!


அம்மா நிலமங்கை துரைசாமி அவர்கள் தீட்டிய ஓவியம்!


அம்மாவின் தோளில் குழந்தை அழகாக

நிம்மதியாய்த் தூங்குகின்ற காட்சியை ஆற்றலுடன்

ஓவியமாய்த் தீட்டிய அம்மாவை வாழ்த்துவோம்!

பாத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

Friday, December 17, 2021

கருவேப்பிலை


நண்பர் பன்னீர் செல்வம் அனுப்பிய பறவையே இன்றைய கவிதையைக் கேள்,:

எறிந்த கருவேப்பிலை!

சமையல் மணக்க சுவைக்க உதவும்

கருவேப் பிலையைப் பயன்படுத்தி விட்டே

விருட்டென்றே தூக்கி எறிவார் உடனே!

அதுபோல நம்மை எறிவார் செருக்கில்!

எதற்குமே எச்சரிக்கை கொள்.

கருவேப் பிலையைப் பயன்படுத்தித் தூக்கி

எறிவதுபோல் நம்மை எறிவார் சிலர்தான்!

செருக்குடன் தன்னலம் உள்ளோர் துரோகம்

நெருஞ்சியாய்க் குத்தும் உணர்.


மதுரை பாபாராஜ்



மதுரை பாபாராஜ்

 

சித்திரக்கவி

நண்பரே சித்திரக் கவிபார்த்தேன் கவிபடைத்தேன்!


கணக்கைப் பார்த்து கடினமான தென்றே

மனம்கணக்க வேறுபாடம் தேடிப் படித்தேன்!

கணக்குத் துறையிலே போய்விழுந்தேன் நான்தான்!

கணக்குகளைப் பார்த்தேன் மலைத்து.


மதுரை பாபாராஜ்


 

பொறுமை குமுறியது


பொறுமை குமுறியது!


அடித்தார் பொறுத்தேன்! துவைத்தார் பொறுத்தேன்!

பிழிந்தார் பொறுத்தேன்! உலர்ந்தும் பொறுத்தேன்!

தளர்ந்தேதான் காரணத்தைக் கேட்டேன்! பரிசு

பொறுமைக்கே என்றார் உளைச்சலால் நொந்தேன்!

பொறுமை, குமுறியதே பார்.


மதுரை பாபாராஜ்


உள்வாடகை

 உள்வாடகை குற்றம்!


வாழ்க்கையே வாடகை வாழ்க்கைதான்! அத்தகைய

வாழ்க்கையில் உள்வா டகைவிட்டு வாழ்வதேன்?

வாடகைக்குச் சட்டம் இடங்கொடுக்கும்!

வாடகைக்குள்

வாடகைக்குச் சட்டமில்லை சாற்று.


மதுரை பாபாராஜ்

ஓவியர் வேணுகோபால் சர்மா அவர்களுக்கு வாழ்த்து!


ஓவியர் வேணுகோபால் சர்மா அவர்களுக்கு வாழ்த்து!


அகவைத் திருநாள்:17.12.21


இப்படித்தான் வள்ளுவர் என்பதை ஆய்ந்தறிந்தே

அப்படியே உள்ளத்தில் வந்த உருவத்தை

கற்றறிந்த சான்றோர் அவையினர் சம்மதிக்க

இத்தரணி போற்ற வரைந்திட்ட வேணுகோபால்

சர்மாவின் ஆற்றலை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

Thursday, December 16, 2021

ஆறறிவே ஆணவத்தைத் தூற்று!

 நன்றி தொல்காப்பியம் நூற்பா:


கவிதை


ஆறறிவே ஆணவத்தைத் தூற்று!


ஓரறிவு  ஈரறிவு மூவறிவு நாலறிவு

ஓரளவு சிந்திக்கும் ஐயறிவைச் சார்ந்தவைகள்

சீரழிவை விட்டுத்தான் நேர்வழி் தேர்ந்தெடுக்கும்!

ஆறறிவு மாந்தர்கள் ஏனோதான் சீரழிவுப்

பாதையென்று யார்சொன்ன போதும் மறுத்தேதான்

நேர்வழியை வாழ்வில் தவிர்த்தேதான்

வாழ்கின்றார்!

ஆறறிவே! ஆணவத்தைத் தூற்று.

மதுரை பாபாராஜ்


-------------------------------------------------------------------

தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலுள்ள மரபியல் பகுதியில் இந்த நூற்பா இடம்பெற்றுள்ளது:

'ஒன்றறிவு அதுவே, உற்று அறிவதுவே,

இரண்டறிவு அதுவே, அதனொடு நாக்கே,

மூன்றறிவு அதுவே, அவற்றொடு மூக்கே,

நான்கறிவு அதுவே, அவற்றொடு கண்ணே,

ஐந்தறிவு அதுவே, அவற்றொடு செவியே,

ஆறறிவு அதுவே, அவற்றொடு மனனே,

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.'


--------------------------------------------------------------------

 ஓரறிவு கொண்ட உயிரினங்கள்: மரம், செடி, கொடி, புல், பூண்டு போன்ற தாவர இனங்கள்.

ஈரறிவு கொண்டு உயிரினங்கள்: நத்தை, சங்கு (இதற்கு உடல், வாய் ஆகிய இரண்டு உறுப்புகள் மட்டுமே உள்ளது.)

மூவறிவு: எறும்பு, கரையான், அட்டை

நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு

ஐயறிவு: விலங்குகள், பறவைகள்

ஆறறிவு: மனிதர்கள்

-------------------------------------------------------------------








நண்பர் சையது அஸ்லாம் அனுப்பியதன் தமிழாக்கம்!


நண்பர் சையது அஸ்லாம் அனுப்பியதன் தமிழாக்கம்!


அமைதி! மனிதனின் அற்புத ஆற்றல்!

எதற்கும் எதிர்வினையில் எல்லைகள் மீறி

நடத்தல் தவிர்த்தல் தனக்கெனக் கொள்தல்

தவிர்த்தால் மனது தெளிவாகும்! உள்ளம்

அடையுமே நிம்மதி இங்கு.


மதுரை பாபாராஜ்

 

எனது இன்றைய நிலை

 எனது இன்றைய நிலை!


அப்பாடா! எல்லாம் முடிந்ததே என்றேநான்

உட்கார்ந்தேன்! எங்கிருந்தோ வீசிய 

பாறாங்கல்

அப்படியே என்மேல் விழுந்ததால் தத்தளித்தேன்!

இப்படித்தான் இன்றெந்தன் வாழ்வு.


மதுரை பாபாராஜ்


சிலர் பலரானால்

 சொல்லிய வண்ணம் செயல்(வெகு சிலரே)


எண்ணிய வண்ணம்

செயல்(வெகு பலர்)


கனியன் கிருஷ்ணன்,தென்காசி


சிலர் பலரானால்


சொல்லிய வண்ணம் செய்வோர் சிலராவார்!

எண்ணிய வண்ணம் செய்வோர் பலராவார்!

இங்கே சிலர் பலரானால் நன்றுதான்!

பண்பகமாய் மாறும் உலகு.


மதுரை பாபாராஜ்

புரியவில்லை!!

 புரியவில்லை!


என்னசெய்வ தென்றெனக்குப் புரியவில்லை யே!

எத்திசையில் பயணமென்று தெரியவில்லை யே!

தன்னாலும் தெரியவில்லை நடித்தேதான்  வாழ்கின்றார்!

சொன்னாலும் புரியவில்லை ஏற்கத்தான் மறுக்கின்றார்!

சூழ்நிலையின் கைதியாகி தத்தளிக் கின்றேன்!

வாழ்வெனக்குப் புரியவில்லை கலங்கித் தவிக்கிறேன்!

கடைசிகட்ட வாழ்க்கையிங்கே போராட்டந் தானோ!

சிறைப்பறவை யாகிவிட்டேன் விடுதலை என்றோ?

சோதனையும் வேதனையும் சொந்த மானது!

இதயமெல்லாம் புண்பட்டே ரணங்க ளானது!!


மதுரை பாபாராஜ்


மெய்ப்பொருள் காண்போம்!

 மெய்ப்பொருள் காண்போம்!


நன்கு தெரிந்தவரே கேட்பதில்லை! எப்படி்

கொஞ்சம் தெரிந்தவர் கேட்பார் அறவுரையை? 

நன்கு தெரிந்தவரோ இல்லையோ மெய்ப்பொருளை

நன்கறிந்து கேட்பதே பண்பு.


மதுரை பாபாராஜ்


Wednesday, December 15, 2021

கோடியைக் கோடிதேடும்

 கோடியைக் கோடிதேடும்


கோடிகோடி சேர்த்தவர் தேர்தலிலே நின்றுவிட்டால்

கோடியிலே வாழ்பவரைத் தேடித்தான் வந்தேதான்

வாக்குகள் கேட்கவேண்டும்! கேட்காமல் சென்றுவிட்டால்

கோடிகோடி உள்ளவரும் தோற்றிடுவார் தேர்தலில்!

கோடியைக் கோடிதேடும் கூறு.


மதுரை பாபாராஜ்

பேராசிரியர் சுப வீரபாண்டியன் சிந்தனையைக் கவிதையாக மாற்றினேன்.


பேராசிரியர் சுப வீரபாண்டியன் சிந்தனையைக் கவிதையாக மாற்றினேன்.


1984. எது காரணம்?


உண்ணும் உணவிலே மூச்சுவிடும் காற்றிலே

மண்ணக வாழ்க்கை முறையெல்லாம் மாசுகளே!

இன்றோ கலப்படத்தில் வாழ்நாளோ நீண்டநாள்!

அன்றோ கலப்பட மற்ற இயல்பான

மண்ணக வாழ்க்கை! இருந்தாலும் வாழ்நாளோ

அன்று குறைவுதான்! எப்படி என்றுதான்

கொஞ்சம் அறிவியலே! கூறு.


மதுரை பாபாராஜ்


 

இல்லறத்தை இனிமையாக்கு

 

இல்லறத்தை இனிமையாக்கு!


உரிமைகள் மற்றும் கடமைகள் இந்த

இரண்டையும் போட்டுக் குழப்பாமல் வாழ்ந்தால்

கருத்தொன்றி ஆண்களும் பெண்களும் வாழும்

ஒருநிலை காணலாம் இங்கு.


ஆண்களோ பெண்ணை அடிமையாய் எண்ணுவதும்

ஆண்களைப் பெண்கள் துச்சமாய் எண்ணுவதும்

போட்டி பொறாமை எடுத்தெறிந்து பேசுவதும்

கூட்டை எரிக்கும் நெருப்பு.


ஆண்களும் பெண்களும் விட்டுக் கொடுப்பதே

ஊனமற்ற வாழ்வை உளைச்சலின்றி ஏற்படுத்தும்!

தேன்கூடு என்ற குடும்பம் கலையாமல்

பார்த்தல் விவேகம் உணர்.


பெருந்தன்மை கோழைத் தனமல்ல! விட்டுக்

கொடுப்பவர்கள் கெட்டுத்தான் போவதில்லை! வாழ்க்கை

நடுத்தெருப் போட்டியல்ல! வெற்றிதோல்வி பார்க்க!

சிறுமையைத் தூக்கி எறி.


தந்தையும் தாயும்  குழந்தை வளர்ப்பிலே

கண்ணுங் கருத்துமாய் அக்கறை காட்டவேண்டும்!

இந்த இருவருக்கும் என்றும் பொறுப்புண்டு!

கொஞ்சம் தவறினாலும்  சேய்கள் மனம்நோகும்!

பின்னால் இடித்துரைப்பார்  பார்.


இரண்டு சிறகும் அசைந்தால் பறக்கும்

இயக்கத்தைப் போல இணையர் இருந்தால்

குடும்பப் பறவை உயர்ந்தே பறக்கும்!

இரண்டிலே ஒன்று இணங்க மறுத்தால்

இயக்கம் தடுமாறும்  இங்கு.


மதுரை பாபாராஜ்





Tuesday, December 14, 2021

நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச்சொல்லோவியத்தின் தமிழாக்கம்:


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச்சொல்லோவியத்தின் தமிழாக்கம்:



திட்டமிடல் என்பதில் உள்ள உயிர்த்துடிப்பு

திட்டமிட்டுச் செய்வது மட்டுமல்ல

திட்டத்தின்

பின்னணியில் உள்ளாடும் எண்ணமாகும்! இவ்வெண்ணம்

உன்னை இலக்குநோக்கிச் செல்லவைக்கும் உந்துசக்தி!

உந்துசக்தி வெற்றிக் கழகு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் இசக்கிராஜன் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்தின் தமிழாக்கம்:


நண்பர் இசக்கிராஜன் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்தின் தமிழாக்கம்:


சுத்தியல் தந்த கடைசி அடியாலே

கல்லுடைந்த  தென்றால் முதலடி எப்பயனும்

இல்லையென்று ஆகாது! வெற்றி கனிவதோ 

இங்கே தொடர்முயற்சி தந்த விளைவே! 

என்றும் தொடர்முயற்சி கொள்.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில் புத்தன் அனுப்பியதன் தமிழாக்கம்!


நண்பர் எழில் புத்தன் அனுப்பியதன் தமிழாக்கம்!


திட்டங்கள் தீட்டினாலும் ஒன்றிரண்டே சாதிப்போம்!

பற்றுடன் சாதிக்க ஆற்றல் இருந்தாலும் 

முற்றும் நிறைவேற்ற வேண்டும்! முடித்துவிட்டால்

வெற்றி விகிதங்கள் கூடும்! செயல்திறனின்

மொத்த மதிப்புயரும் சொல்.


மதுரை பாபாராஜ்

 

கூடுகட்ட இடந்தேடி!


கூடுகட்ட இடந்தேடி!


கூடுகட்ட வான்பறவை பாங்காய் இடந்தன்னைத்

தேடி அலைந்தபோது பார்த்ததே ஓரிடத்தை!

நாடியே கூடுகட்டப் பார்த்தபோது அவ்விடமோ

தாவிப் பறந்ததே! என்னவென்று பார்த்தபோது

வாலிபன் வைத்த சிகையழகே என்றுணர்ந்து

வன்பறவை கண்டு பறந்ததே வேறிடத்தை

நாடித்தான்! நாகரிகம் பார்.


மதுரை பாபாராஜ்

 

பெருமைக்குரிய ரேமா ராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்து!


பெருமைக்குரிய  ரேமா ராஜேஸ்வரி

அவர்களுக்கு வாழ்த்து!


பெருந்தொற்றுக் காலம் சமாளிக்கும் தொண்டைக்

கருத்தாகக் கையாண்டு மக்கள் மனதில்

பெருமையுடன் வாழ்கின்ற நற்புகழை வாழ்த்து!

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

Monday, December 13, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்கு கவிதை!


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்கு கவிதை!


வணக்கம் நண்பரே


பறவையே இன்றைய கவிதை!


இயல்பே அழகு!


இயல்பாய் நடக்கும் எதுவும் அழகே!

இயல்பை விலக்கி வலிந்து நடக்கும்

செயல்கள் அனைத்தும் செயற்கை அழகே!

இயல்பாக வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

 

குடிக்காதே


 குடிக்காதே!


குடித்தால் மனக்கவலை தீருமென்றால் நாட்டில்

குடித்து  மனக்கவலை தீர்க்கலாம் நாளும்!

குடித்தால் மனக்கவலை தீராது! ஆனால்

படையெடுக்கும் பல்வகை நோய்.


மதுரை பாபாராஜ்

கோசலின் கம்பீரம்!


 கோசலின் கம்பீரம்!

அறிவார்ந்த ஆற்றலின் கம்பீரப் பார்வை!

நெறிப்படுத்தும் பேச்சில் தெறித்துவிழும் முத்து!

அழகான புன்னகை!சு றுசுறுப்பில் தேனீ!

எடுப்பான தோற்றத்தை வாழ்த்து.

குப்பாயம் போட்டு கழுத்தில் மிடற்றுகட்டி 

கட்டி அழகாய் உடையணிந்து மேடையில்

வந்தே ஒலிவாங்கி முன்னே நின்றுதான்

சங்கநாதம் செய்கின்றார் கோசல் அரங்கிலே!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


பாபா தாத்தா


கோட் -- குப்பாயம்

டை -- மிடற்றுக்கட்டி

 

Sunday, December 12, 2021

தலைநகர் டில்லியில் விவசாயிகளும் ஏழைக் குழந்தைகளும்!


தலைநகர் டில்லியில் விவசாயிகளும் ஏழைக் குழந்தைகளும்!


உலகுக்கே நாளும் உணவளிக்கும் மக்கள்

தலைநகர் டில்லியில் போராடி வாழ்ந்தார்!

இதையெல்லாம் நாள்தோறும் வேடிக்கை பார்த்த

குழந்தைகள் தங்கள் பசிதீர உண்டார்

விவசாய மாந்தருடன் உட்கார்ந்து! இன்று

விவசாயி போராட்டம் தன்னை நிறுத்தி

அவரவர் ஊருக்குச் செல்கின்றார்! நாளும்

வயிறார உண்டிருந்த ஏழைக் குழந்தை

வயிற்றுப் பசியை எவர்போக்கு வார்கள்?

மகிழ்ச்சி்யான சூழல் ஒருபுறம்! அங்கே!

துடிக்கவைக்கும் ஏழ்மை மறுபுறம் அங்கே!

புரியாமல் பார்க்கும் குழந்தைகள் ஏக்கம்!

பழகிவிட்ட வாழ்க்கைத் துயர்.


மதுரை பாபாராஜ்



 

ஜெகமே தந்திரம் படத்தில் எனது பாடலைப் பாடிய பின்னணிப் பாடகர் திருமதி மீனாட்சி

ஜெகமே தந்திரம் படத்தில் எனது பாடலைப் பாடிய

பின்னணிப் பாடகர் திருமதி மீனாட்சி இளையராஜா இணையரும் மகன் பரத்ராமும் எங்கள் வீட்டுக்கு வருகைதந்த தருணம்.

மகிழ்ந்தோம். 12.12.21

நன்றியும் வாழ்த்தும்:


படம்: ஜெகமே தந்திரம்


தேய்பிறைய பெத்தெடுத்தே பாடல் எழுதிட

வாய்ப்பளித்த கார்த்திக்சுப் பாராஜ் இயக்குநர்,

தேர்ந்த இசையருவி சந்தோஷ்நா ராயணன்,

ஆர்வமுடன் பாடிய மீனாட்சி இளையராஜா

மூவருக்கும் நன்றி நவில்கின்றேன் வாழ்த்துகின்றேன்!

பாத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

Labels:

Thursday, December 09, 2021

முப்படைத் தளபதி விபின் ராவத் பேச்சின் தமிழாக்கம்:


நண்பர் VOV கோவை பாலகிருஷ்ணன் அனுப்பிய ஆங்கிலத்தின் தமிழாக்கம்


முப்படைத் தளபதி விபின் ராவத் பேச்சின் தமிழாக்கம்:


Vipin Rawat, Chief of Defense Staff of India, has said that every person in India must read the following sentences about the Indian Army.


 We kindly request you to cooperate in spreading these invaluable 'National Defense Sources' to more and more countrymen through various means.


 ✌🎖


 Indian Army 10 Best Precious Words: Must Read.

 Reading these gives a feeling of true pride ...


நமது இராணுவ வீரர்கள் நினைவில் கொள்ள வேண்டிய இன்றியமையாத அம்சங்கள். படித்தால் நாட்டுப் பற்றால் தலைநிமிர்வோம்:

தமிழாக்கம்:

 1.

 *"I will come back waving the tricolor or wrapping myself in the tricolor, but I will definitely come back."*

 - Capt. Vikram Batra,

   Param Veer Chakra


இந்திய நாட்டின் கொடியேந்தி நான்வருவேன்!

அல்லது அக்கொடியால் என்னுடலை மூடிவைத்த

வல்லமை  உள்ளபடி நான்வருவேன் இங்குதான்!

எப்படியும் நான்வருவேன் நம்பு.

 2.

 *"The extraordinary adventure of a lifetime for you is our everyday life.*"

 - Signboard (Indian Army) on Leh-Ladakh Highway


வாழ்விலே நீங்கள் புரியும் மகத்தான

சாதனை என்பதே நம்முடைய ஒவ்வொருநாள்

வாழ்க்கையும் என்பதுதான் சொல்.


 3.

*"If I die before I prove my bravery, then I swear I will kill death."*

 - Capt. Manoj Kumar Pandey,

 Param Veer Chakra, 1/11 Gurkha Rifles


என்னுடைய வீரத்தைக் காட்டுமுன் நானிறந்தால்

அந்த மரணத்தை நான்கொல்வேன் என்றெந்தன்

உள்ளம் மகிழும் உணர்வு.

 4.

 *"Our flag does not fly because the wind is blowing, it flies with the last breath of every young man who sacrifices his life to protect it."*

 - Indian Army


நம்கொடி பட்டொளி வீசிப் பறப்பதோ

இங்குவீசும் காற்றாலா? இல்லை! அதைக்காக்க

இன்னுயிர் நீத்த தியாகிகளால் என்றுதான்

நெஞ்சுயர்த்திப் பாடுவோம் சூழ்ந்து.



 5.

 *"You have to be good to get us, you have to be fast to catch us, but you have to be a kid to win us."*

 - Indian Army


எங்களை நீங்கள் அடைவதற்கு நல்லவராய்

என்றென்றும் வேகமாக காற்றாய்ச் செயல்படும்

வல்லவராய் நீங்கள் இருக்கவேண்டும்! எங்களை

வென்றேதான் தோல்வியுறச் செய்ய கபடமற்ற

அன்புக் குழந்தைகளாய் இங்கே இருக்கவேண்டும்!

அன்பே மகிழவைக்கும் சொல்.


 6.

 *"May God have mercy on our enemies, because we will not."*

 - Indian Army


தெய்வம்  பகைவரிடம்  காட்டட்டும்  தன்னிரக்கப்

பண்பைத்தான்! ஏனென்றால் நம்மனம் காட்டாது!

நம்நாடே நம்முயிர் பார்.


 7.

 *"Our life is our coincidence, our love is our choice, our killing is our business."*

 - Officers Training Academy, Chennai


நம்முடைய வாழ்க்கையோ தற்செயல்தான்! நம்முடைய

அன்பிங்கே நாமே தெரிவுசெய்தல்! நம்நாட்டைப்

புண்படுத்தும் நம்பகையை இங்கே அழிப்பதே

நம்தொழிலாம்  என்றே உணர்.

 8.

 *"If a person says that he is not afraid of death, then he is either lying or he belongs to the Gurkha Army."* # Nepali # boys💪

 - Field Marshal Sam Manekshaw


யாரேனும்  சாவினைக் கண்டுநான் அஞ்சவில்லை

வாழ்விலென்றால் பொய்யென்போம் சொன்னவரை! இல்லையெனில்

கூர்க்கா படைசேர்ந்த வீரனென்போம்! அஞ்சாமை

கூர்க்கா படைச்சிறப்பு கூறு.

9.

 *"It is God's job to forgive terrorists, but it is our job to get them to meet God."*

 - Indian Army


தெய்வத்தின் வேலையோ தீவிர வாதிகளை

மன்னித்தல்! ஆனால் நமது கடமையோ

அந்த இரக்கமற்ற கூட்டம் இறைவனைச்

சந்திக்க வைப்பது தான்.


 10.

 *"We regret that we have only one life to give to our country."*


நம்முடைய தாய்நாட்டைக் காப்பதற்கு நம்மிடம்

உள்ளவாழ்க்கை ஒன்றே! உயிருமிங்கே ஒன்றாகும்!

இவ்வாய்ப்போ என்றுவரும் சொல்.


மதுரை பாபாராஜ்


 🙏🙏🙏

 🙏

 We forward jokes a lot

 Keep pushing it ...

 Get everyone face to face with the Indian Army.


*......Jay Hind ......* 🇮🇳

  

     ⚔ Indian Army

 

மருமகன் ரமேசுக்கு வாழ்த்து.


மருமகன் ரமேசுக்கு வாழ்த்து.


வாழ்க வளமுடன்! உள்ளம் மகிழத்தான்

வாழ்த்தை மனங்குளிர நாள்தோறும்  வாழ்த்துகின்றார்!

வாழ்த்தும் ரமேஷ்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்

 

அம்மா நிலமங்கை துரைசாமி அவர்களுக்கு வாழ்த்து!


அம்மா நிலமங்கை துரைசாமி அவர்களுக்கு வாழ்த்து!


அம்மாவின் ஆற்றலில் அன்ன மளிப்பவள்!

அன்னத்தை ஊட்டிஊட்டிக் கொடுத்தே பண்புகளை

அன்றாடம் ஊட்டி வளர்க்கின்றாள்! வாழ்த்துவோம்!

அன்னை உணர்வுப் படம்.


மதுரை பாபாராஜ்

 

இராமசாமி இராசேந்திரன் வாழ்க.


இராமசாமி இராசேந்திரன் வாழ்க.


இராமசாமி இராசேந்ரன் இன்சொற்கள் பேசி

இயல்பாய்ப் பழகிடும் நண்பர்கள்

வாழ்க!

அகநக நட்பதே நட்பென்ற வாக்கை

அகங்குளிர போற்றுவோரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்