Saturday, April 25, 2026

பகுத்தறிதல் நன்று!


 வேண்டும் பகுத்தறிவு வேண்டும்

 பகுத்தறிவு

தூண்டுக நாளும் அதை.

தென்.கி.

Friday, April 24, 2026

அம்மா ஓவியர் நிலம்துரை


 அம்மா ஓவியர் நிலம்துரை அவர்களுக்கு

 வாழ்த்து!


கிளையில் கிளியமர்ந்து இந்நாள்

அழகாய்

விளங்கவே வாழ்த்துவதை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Dental Planet Annanagar



 DENTAL.PLANET- ANNA NAGAR!


INAUGURATED BY

G.KARTHIK SUBBARAJ

CINE DIRECTOR!


DR.SATHYA PREMA TEAM!


அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!

முகத்தின் அழகிங்கே பல்லில் தெரியும்!

முகத்தின் அழகைப் பராமரிக்கும் பற்கள்

முறையுடன் வைத்தடுக்கும் ஆற்றலைக் காட்டும்

மருத்துவரை வாழ்த்தி வணங்கு.


கணவர் இயக்குநர் கார்த்திக் கரத்தால்

மனங்கவரும் புன்னகை மின்னத் திறந்தார்

மருத்துவக் கூடத்தை! வாழ்த்துவோம் கூடி!

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


Meta AI


*DENTAL PLANET - ANNA NAGAR*  


*Inaugurated by G. KARTHIK SUBBARAJ, Cine Director*  

*DR. SATHYA PREMA TEAM*


*Smiles That Speak*


The beauty of the heart shows in the face,  

The beauty of the face shines in the teeth you trace ✨  

Those teeth that guard a lovely face,  

When set with skill and perfect grace —  

Salute the doctor whose hands embrace  

That art of giving smiles their place 🦷


By husband Director Karthik’s hand,  

The clinic opened, bright and grand.  

With heart-warming smiles now lighting the room,  

We gather here, blessings in bloom 🎉


May this haven of care live long and true,  

Like timeless Tamil, ever new.  

Live for many years, in service and light!


— _Madurai Babaraj_  

_Vasantha_  

_and Family_

ஆற்றலை வாழ்த்து


 அறிவு மிகுதியாய்க் கொண்டிருந் தாலும்

அறிவுநல் லாற்றலாதல் நன்று.

தென் . கி.

Thursday, April 23, 2026

ஒன்று போதும்

 ஒன்றுபோதும்!

எதிர்மறை எண்ணங்கள் ஆயிரம் உண்டு!

புதிராக வாழ்விலே நேர்மறை எண்ணம்

சுடரொளி வீசுமே ஒன்றாக மட்டும்!

அதுபோதும் வாழ்வில் உணர்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


One is enough!


Negatives gather by the thousand,

A restless swarm within the mind;

Yet one bright, positive spark alone

Can light the path we seek to find.

In life’s deep maze, that single glow

Dispels the dark we wander through—

Hold fast to it, for even one

Is enough to see you through.

— Madurai Babaraj

இயக்குநர் அமீர்

 இயக்குநர் அமீர் அவர்களின் கருத்துக்கு கவிதை:


கனிந்திருக்கும் மாற்றம்!


மாற்றம் எதற்காக? மாற்றம் கனிந்திருக்கு!

மாற்றங்கள் தேவை எனக்கூறும் கூக்குரல்கள்

மாற்றங்கள் என்னவகை மாற்றங்கள் கூறுங்கள்!

மாற்றத்தில் ஏற்றங்கள் வேண்டுமிங்கு !ஏமாற்றம்

வேண்டாம் எனக்கூறல் நன்று.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Why this cry for change? Change has ripened already!

Voices rise, demanding waves of reform—

But what kind of change do you seek? Speak clear.

Let change be a climb toward betterment here,

Not a descent into deceit—

To ask for change without betrayal is wisdom.


Wednesday, April 22, 2026

நண்பர் பாலுநடராஜன்வீட்டுத் திருமணம்


 

திரு பாலு அவர்களுக்கு வாழ்த்து


 நன்றியுடன் நண்பருக்கு வாழ்த்து!

அன்பின் அடையாளம் செம்மலர்

 வெற்றியின்

சின்னம் கதிரோன்  மலராகும்

 இவ்விரண்டை

இன்று அனுப்பினார் பாலுதான்

 வாழியவே!

நன்றியுடன் நண்பரை வாழ்த்து


மதுரை பாபாராஜ்

முதுமையில் கடைசி நாள்கள்

 முதுமையில் கடைசி நாள்கள்!


குழிவிழுந்த கண்கள்! துளைவிழுந்த பற்கள்!

வழித்துணையோ கம்பு!   தெளிவற்ற பேச்சு! 

தடுமாறும் கால்கள்! நடுங்குகின்ற கைகள்!

எடுத்ததற் கெல்லாம் எரிச்சல்! வெறுமை

படுத்தும் பொறுமையற்ற வாழ்வு.

மதுரை பாபாராஜ்.

ChatGPT

Last Days. Of Old Age!

Sunken eyes, and hollowed teeth,

A staff now serves as faithful guide;

Words fall blurred, no longer clear,

Steps that falter, hands that shake—

For every act, a spark of ire,

An empty ache that lingers deep,

A restless life, devoid of calm.

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


சிந்தனை செய்யாமல் நீங்கள்

 எதைச்செய்ய

ஏலுமோ அந்தச் செயல்களைச்

 செய்யலாம்!

மற்றவர்கள் என்னசெய்வார்?

 காத்திராமல் செய்யலாம்! 

உங்கள் செயல்களே வேர்.

மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

வாழ்க்கையின் ஓட்டத்திற் கேற்பவே

 வாழலாம்!

ஆனாலும்  உங்கள் முயற்சிகளை

 விட்டுவிட்டுத்

தீர்மானம் செய்வது தப்பு.


மதுரை பாபாராஜ்

Tuesday, April 21, 2026

திராவிட இயக்கம்

 திராவிட இயக்கம்!


தமிழுக்குப் புத்துணர்ச்சி் தந்த இயக்கம்

திராவிடம் என்றபெயர் ஏந்தும் இயக்கம்!

மறுமலர்ச்சி மற்றும் சமத்துவம் நாளும்

நிறைவேறப் பாடுபடும் உண்மை இயக்கம்!

குறள்நெறி  போற்றுவதை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Dravidian Movement!


A force that breathed new life into Tamil’s soul,

The movement that proudly bears the Dravidian name!

For renaissance and equality, day by day it strives,

A truthful path that labors for justice to prevail.

Let us hail the way of the Kural, ever cherished and upheld.


— Madurai Babaraj


பேருழைப்பு

 பேருழைப்பு!

பாடல் படைப்பவர் பாடலைப் பாடுபவர்

பாடலைப் பாடுதல்போல் இங்கே நடிப்பவர்

வேறுவேறு என்றாலும் மூவரும் ஒன்றிணைந்தே

பாடுபட்டால் காட்சி அரங்கேறும் பார்த்திருப்போம்!

ஈடற்ற பேருழைப்புத் தான்.

மதுரை பாபாராஜ்


இதுதான் வாழ்க்கை


 

Monday, April 20, 2026

கண்ணகிப் பாதை வாழ்த்து!


 அருமையான முயற்சி

வாழ்த்துகள்.


கண்ணகிப் பாதைப் பயணமிங்கே

 வெல்லட்டும்!

வண்டமிழ்க் காற்சிலம்பு எங்கும்

 ஒலிக்கட்டும்!

பண்பாட்டுச் சுற்றுலாவை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

ஆத்திகம்- நாத்திகம்

 ஆத்திகம் -- நாத்திகம்!


ஆத்திகம் உன்னையோ நம்பென்று

 சொல்லியே

நாளும் அடிமையாய் என்றுமே

 மாற்றிவிடும் !

நாத்திகம் சிந்தித்து மூடநம்பிக்

 கைதன்னை

மாற்ற வழிவகுக்கும் இங்கு.


மதுரை பாபாராஜ்


Saturday, April 18, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை:


உங்கள் மனம்சொல்லும் சொற்களைக் கேளுங்கள்! 

அந்த மனமே வலிமைகொண்ட சக்தியாகும்! 

என்றும் செயல்களைப் பார்த்தேதான் தேவையான 

எச்சரிக்கை தன்னையே தந்துதவும்! வாழ்க்கையில்!

உள்ளத்தின் சொற்களைக் கேள்.


மதுரை பாபாராஜ்

Friday, April 17, 2026

மருமகன் ரவி


 

S.ஜெயசித்ரா பிறந்தநாள்


 திண்டுக்கல் S. ஜெயசித்ரா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத் திருநாள்: 17.04.26


குறள்நெறி போற்றிக் குடும்பத்தார் சூழ

சிறப்புடன் வாழ்க! நிறைவுடன் வாழ்க!

வளமுடன் வாழ்க! நலமுடன் வாழ்க!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

நண்பர் எழில்புத்தன்



நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

நீங்களோ ஒவ்வொரு வேலையும் செய்யலாம்!
ஆனாலும் ஒவ்வொரு வேலைக்கும் நேரமுண்டு! 
நேரம் எடுக்கலாம்! ஒவ்வொரு நேரத்தில் நீங்களோ சிந்தித்து ஒன்றைத் தொடருங்கள்!
ஒவ்வொன்றும் வேலை அதற்குரிய வாறுதான்
இங்கே முடியுமென்றே சொல்.

மதுரை பாபாராஜ்

புதிர்


 

Thursday, April 16, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மனதை அமைதியாக வைத்திருத்தல்

 இங்கே

மிகமிக முக்கிய மாகும்! அதுதான்

அனைத்துக்கும் ஆதாரம்! சொல்.


மதுரை பாபாராஜ்

Wednesday, April 15, 2026

தவிர்ப்போம்! வாழ்வோம்!


 

சிக்கல்

 சிக்கல்!

வெளியிலே சொல்ல முடியாத சிக்கல்

தவிக்கவைத்து வேடிக்கைப் பார்த்திருக்க

 வாழ்க்கை

துவைத்துப் பிழிந்தெடுத்துச் சக்கையாய்

 நாளும்

மலைக்கவைக்கும் சூழலைப் பார்.

மதுரை பாபாராஜ்

ChatGPT

A trouble I cannot voice to the world outside,

Life stands watching—tormenting me in quiet pride;

Wrung and worn like cloth, drained day by day,

Behold the crushing weight of the world I face.

Monday, April 13, 2026

சோர்வடையாதே


 சோர்வடையாதே!


என்ன நடந்தாலும் சற்றும் கலங்காமல்

சந்திக்கும் உள்ளத் துணிவே துணிவாகும்!

ஒன்று நடந்ததும் உள்ளத்தால் சோர்வடையும்

தன்னலம் என்றுமே கேடு.


மதுரை பாபாராஜ்


உயர்வுள்ளல்


 

நண்பர் எழில்புத்தன்

 

நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஏற்ற பணியில் இருந்தோ ஒதுக்கிய

வேற்றுப் பணியில் இருந்தோ கவனம்

சிதறுவது நல்லதல்ல! நன்கு கவனம்

செலுத்தி முடிப்பதே நன்று.


மதுரை பாபாராஜ்

திருமதி சரசுவதி மூர்த்தி


 [13/04, 11:19] Muthuveeran Rajkumar: 

Our close friend Prabakar’s mother, Mrs. Saraswathi Moorthy, is a wise and well‑educated 91‑year‑old. She is writing a summary of her observations about the book. I will share it soon. Thanks

[13/04, 13:29] Madurai Babaraj: 

திருமதி சரசுவதி மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்து:

தொண்ணூற்றி யோர்வயதில்

 புத்தகத்தை வாசித்துத்

தன்கருத்தை நச்சென் றெழுதித்தான்

 ஆசிகளை

வண்டமிழில் தந்த தகைமைக்கு

 நன்றியுடன்

என்வணக்கம் கூறுகின் றேன்.


அமெரிக்க நாடிருந்து ராஜ்குமார் நூலாம்

தமிழ்க்கவிதைப் பூக்கள் மணப்பதை

 இங்கே

அமுதமாய்த்  தந்த  சரசுவதி மூர்த்தி

தமிழ்போல வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

ராஜ்குமார் மாமா

Sunday, April 12, 2026

தளபதி கிருஷ்ணமூர்த்தி

 தளபதி கிருஷ்ணமூர்த்தி வருவார்

 உடற்பயிற்சி செய்வார்!


உடற்பயிற்சி செய்யும் தளபதி மூர்த்தி

கடந்தசில நாளாய் வெளிநாடு சென்றார்!

உடற்பயிற்சி செய்யும் இடமோ வெறுமைத்

தடம்பதித்து காணப் படுகிறதே இன்று!

பொறுப்பாய்! தளபதி மூர்த்தி வருவார்!

உடற்பயிற்சி செய்வார் விரைந்து.


மதுரை பாபாராஜ்


ChatGPT


The Commander Will Return!


The valiant commander, Krishnamoorthy,

Who trained with strength and steady will,

Has journeyed far to foreign lands—

And now the grounds lie silent, still.

Where once his footsteps marked the earth,

Now empty paths alone remain;

Yet wait with trust and sense of duty—

He shall return, and train again.


Mr Col Krishnamoorthy

*பெயருக்கு முன்னால் தளபதி என்ற பெரிய நிதி சேர்த்து இந்த மூர்த்தியின் கீர்த்தியை உயர்த்தியுள்ளீர்...*

*உடற்பயிற்சிக்கு இங்கு தளர்ச்சியும் அயர்ச்சியும் சிறிதும் இல்லாது உடலை உற்சாகப்படுத்த கூடம்* *பிரம்மாண்டம்....*


*எண்ணிக்கை குறைவிலும் உடற்பயிற்சிக்கு அங்கு கிடைக்கும் திருப்தி... இங்கு கூட்டத்தின் நடுவே* *தனிமையே...ஆகவே அந்த அளவுகோலில் இது பாதியே...*


*அங்கு மைதானத்தின் உடற்பயிற்சிக்கு உதவும் 'குட்டி சுவற்றின் மேல்' என்னுடைய பெரிய நினைவுகளை விட்டு* *வந்திருக்கிறேன்...எனினும் அந்த வெறுமை நீங்க சிறிது நாட்கள் அவசியம் பொறுமை...அங்கு தொடர்வதே* *எனக்கு பெருமை.* 


*நல்ல நலம் விரும்பி நலம் விசாரித்ததில் எங்கள் நலம் என்றும் இருக்கும் நலம்.*


*அண்ணியாரை மிகவும் விசாரித்ததாக சொல்லவும்...*

வள்ளுவர் என்னத்த சொன்னாரு?

 [12/04, 20:54] Madurai Babaraj: 

வள்ளுவர் என்னத்த சொன்னாரு?

சொல்லாததே இல்லங்க!


அன்பைப் பத்தி 

ஆக்கத்தைப் பத்தி

இன்சொல் பத்தி

ஈகையப் பத்தி

உழவைப் பத்தி

ஊக்கத்தைப் பத்தி

எளிமையப் பத்தி

ஏற்றத்தைப் பத்தி

ஐம்புலன் பத்தி

ஒழுக்கத்தப் பத்தி

ஓங்குபுகழ் பத்தி

ஔவைத் தமிழ்ல

எஃகு போல சொல்லி இருக்காரு!


அடேயப்பா இவ்வளவா?

இதுமட்டுமில்ல!

அவரு சொல்லாததே இல்லங்க!


மதுரை பாபாராஜ்


ChatGPT


What did Valluvar leave unsaid?


Nothing—he spoke it all!


Of love that binds the human heart,

Of wealth and ways to shape its art,

Of gentle words that soothe and heal,

Of giving hands with noble zeal.

Of farming toil that feeds the land,

Of courage firm that helps us stand,

Of simple living, pure and clear,

Of rising high through righteous cheer.

Of mastering the senses five,

Of moral paths that keep us alive,

Of growing fame through virtuous deed—

In chaste Tamil, like tempered steel indeed!

Oh, is that all?—not quite, you see,

For nothing escaped his poetry!


[12/04, 21:35] Vovemayavaramban: 


உயிரை வழிநடத்த 

உள்ளுவோம் வள்ளுவம்!

அ முதல் ஃ வரை 

அய்யன் சொல்லாததில்லை!

மதுரை மாகவி

மாண்புடன் கவிதையாய்

உயிரெழுத்தில் சொல்லிவிட்டார்!

வாழ்த்துவோம் அய்யாவை

வணங்கியே!

நகைச்சுவை

 நகைச்சுவை!

நகைச்சுவையை என்றும்

 நகைச்சுவையாய் எண்ணு!

பகைச்சுவையாய் எண்ணும் எதிர்மறை

 எண்ணம்

அகத்திலே தோன்றினால் உள்ளம்

 இறுகும்!

நகைச்சுவையாய் எண்ணுதல் நன்று.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Humour!

Take humour always as humour—light and kind;

Turn it to hatred, and a darkened mind

Will harden the heart from deep within;

To laugh with grace—that’s where joys begin.

நல்லவரால் மழை

 நல்லவரால் மழை!

எல்லோரும் நல்லவர்கள் இல்லைதான்! இவ்வுலகில்

எல்லோரும் கெட்டவர்கள் இல்லைதான்! கெட்டவரும்

நல்லவரும் யார்யார்தான்? உள்ளத்துப் பண்புகள் 

நல்லவையாய்க் கொண்டவரே நல்லவராம் பாரிலே!

நல்லவரால் மட்டும் மழை.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Rain Falls by the Good

Not all are virtuous in this wide world—

yet not all are wicked either.

Who, then, are truly good or bad?

They alone are good, whose hearts

hold gentle, noble qualities within.

And so it seems—

it is by the goodness of such souls

that even the rain descends upon the earth.

நல்லவரால் பெய்யும் மழை!
அல்லாதவரையும் வாழ்விக்கும்! எனில்
நல்லவராய் வாழ்வதற்கு யாரிங்கே முயல்வார்?
ஈசா, யோசி!-- சுபசு நாதன்.

VovsubramanianThane:


எல்லோரும் நல்லவரே என்று விரும்புவோம்...

நீடித்த இவ்வுலகத்தில் தன்னலம் கருதாத நல்லவர் ஒருவர் இருப்பாராயின் அவரது நற்குணத்திற்காகப் பெய்யும் மழை, உலகத்தில் உள்ளோர் அனைவருக்கும் பெய்து நன்மை பயக்கும்.

கண்ணகி விரும்பியது போல் மழை பொறுப்பாக நடந்து கொள்ளும்...

மழை டிரம்ப் போல் நடக்காது

அவரும் நல்லவராக உந்தப் படுவார்

"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" - அவ்வையார்

 🌧️

Saturday, April 11, 2026

இடுக்கண் களைவதே நட்பு


 இடுக்கண் களைவதே நட்பு!


அழகுப் பறவை இருந்தது!

அழகில் கர்வம் கொண்டது!

அருகில் மற்ற பறவைகள்

வருவதைக் கூட வெறுத்தது!


அழகாய் உள்ள பறவைகளை

மட.டும் நண்பர்கள் ஆக்கியது!

ஒருநாள் காகம் வந்தது

நண்பனாய் ஏற்க கெஞ்சியது!


காக்கா! உந்தன் அழகைப்பார்

எந்தன் அழகை சற்றேபார்!

அழகே இல்லா உன்னைநான்

நண்ப னாக்க முடியாது,!

என்றே சொல்லி விரட்டியது!

காகம் பாவம் வருந்தியது!


ஒருநாள் காட்டில் நோய்த்தொற்று

பரவத் தானே தொடங்கியது

அழகுப் பறவை நோயாலே

அழகை இழந்து வாடியது.


அழகிய நண்பர் எல்லோரும்

கொஞ்சம் கூட உதவவில்லை!

அழகுப் பறவை கெஞ்சியது

விலகிச் சென்று பறந்துவிட்டார்!


காகம் இதனைப் பார்த்தது

பறந்து வந்தே உதவியது

அல்லும் பகலும் கவனித்தே

அழகுப் பறவையைக் காத்தது!


நோயில் இருந்து மீண்டவுடன்

அழகுப் பறவை காகத்திடம்

காகமே நீதான் என்நண்பன்

உந்தன் நட்பே மெய்யாகும்!


உடலின் அழகு அழகல்ல

மனதின் அழகே அழகாகும்

என்பதை நீதான் உணர்த்திவிட்டாய்!

என்றே சொல்லித் திருந்தியது!


மதுரை பாபாராஜ்


ChatGPT


Friendship That Heals in Hardship


A lovely bird there lived once fair,

So proud it was of beauty rare;

It shunned the rest that fluttered near,

And kept all lesser wings in fear.


It chose as friends the bright, the grand,

The fairest flock in all the land;

One day a crow came drawing nigh,

And begged for friendship, soft and shy.

“O crow! Just look at you, then me—

Can you match such beauty?” said she.

“You have no charm, no grace, no art—

I cannot take you to my heart.”

She drove it off with haughty cry;

The poor crow left with grieving sigh.


Then in the woods a sickness spread,

A shadow dark, a silent dread;

The lovely bird, by illness torn,

Lost all the grace it once had worn.


Her splendid friends all turned away,

Not one remained, not one would stay;

She pleaded, but they would not hear—

They flew away and left her there.


The crow beheld her fragile plight,

And came to help with gentle might;

By day and night it stayed beside,

With patient care, its heart open wide.


When she arose, restored and strong,

She knew her pride had been so wrong:

“O crow, you are my truest friend—

Your love is real, from start to end.


The body’s beauty fades away,

But beauty of heart will ever stay;

You’ve taught me truth I failed to see—

Now I am changed, and truly free.”


[12/04, 08:59] Vovemayavaramban: உள்ளத்தைத் தொட்ட

உன்னதக் கவிதை!

உள்ளம் நெகிழ்ந்து

உண்மை உணர்ந்தது!

உத்தமர் பாபா

உரைப்பார் நாளும்!

உலகோர் அறிய

அரிய கவிதைகள்!

வாழ்த்துகள் கவியே!

🙏🌹இமயவரம்பன்

[12/04, 09:10] Madurai Babaraj:

 இமயம் அளித்திருக்கும் வாழ்த்துக்

 கவிதை

இமயத்தை விஞ்சுகின்ற வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

[12/04, 09:05] VOVBALUNATARAJ:

 இப்போதெல்லாம் சுயநலமும் வியாபார

 சிந்தனைகளும்

நட்பை வெகுதூரம் பின்னுக்கு தள்ளி

 விட்டன.

[12/04, 09:08] Madurai Babaraj:

 உண்மைதான் பாலு

[12/04, 09:11] VOVBALUNATARAJ:

 நட்பு என்று நம்மை நாமே ஏமாற்றிப்

 கொண்டால்

பல பாடங்களையும் வலிகளையும் 

தரும்எ ன்பது நிஜமே.

[12/04, 09:13] Madurai Babaraj:

 மற்றவர்களைப் பற்றிக் கவலை

 வேண்டாம். நாம் மனசாட்சியுடன்

 இருந்தால் போதும்.

செ.வ.இராமாநுசன்

அருமை ஐயா!

அழகுக்கு அழகு, கெழுதகை நட்பு! என்றே எளிமையாக எடுத்துரைத்தீர். இனிமை, எளிமை, பொருண்மை, பெருமை ஒளிர்கிறது!

வாழ்த்துகள், நல்வளம் பெருகவே!

வெற்றி மீது வெற்றி வந்து தங்களைச் சேரட்டும்!

வணக்கம்

Subramanian Thane Mumbai

நெஞ்சத்தழகே அழகு



Friday, April 10, 2026

அம்மா நிலம் துரை


 அம்மா நிலம் துரை அனுப்பியதற்கு வாழ்த்து!


பறவை விடு தூது!


சிறகடித்துச் செல்லும் பறவையே! உந்தன்

வழியிலே என்னவரைப் பார்த்தால்நீ நின்று

விரைந்து வரச்சொல்! அவரைத்தான் மேனி

பசலையில் வாடு தெனக்கு.


மதுரை பாபாராஜ்


O bird that beats its wings across the sky!

If along your path you chance to see my

 beloved, pause—

Tell him to hasten back to me; for here I

 fade,

My body paling in the sickness of longing.

நண்பர் ஐஜி சேகரும் மகளும்


 நண்பர் ஐஜி சேகர் தோளில் மகள்!


அப்பாவின் தோளிலே அன்புமகள்

 நித்திலாதான்!

எப்போதும் போல எடுப்பாக அப்பாதான்!

அம்மாபோல்  பேசுவாயோ?  அப்பாவை

 விஞ்சுவாயோ?

அப்பாவும் நித்திலாவும் தூள்.


மதுரை பாபாராஜ்

திரு ஜெபராஜ்


 திரு ஜெபராஜ் அனுப்பிய படத்திற்குக் கவிதை!

பணிகள் நிறைவுசெய்தே ஆசான்கள் கூடி

இனிமையாய் அக்காலம் சென்றே நினைவில்

பழைய நிகழ்வுகளை நெஞ்சில் கொணர்ந்து

இழையவிட்டார் சேர்ந்து மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

ChatGPT

When duties were done, the teachers gathered as one,

In gentle delight, as those old days softly passed on.

They drew from the heart those moments of yore,

Threading memories together—rejoicing once more.

Thursday, April 09, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நல்ல பழக்கவழக் கங்களைப் பின்பற்றி

என்றும் குடும்பத்தார் சுற்றத்தார் நண்பருக்கு

அன்பாய்த் தகவல்  வசதிகளைத் தாருங்கள்!!

இந்த நடைமுறைதான் என்றென்றும் வாழ்விலும்

பண்பு, மகிழ்ச்சி  அமைதியை உண்டாக்கும்!

நல்ல பழக்கத்தை நாடு.


மதுரை பாபாராஜ்

Wednesday, April 08, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


சிக்கலான மற்றும் கடினப் பிரச்சினைகள்

தம்மையும் இங்கே எளிமையான அன்பான

அக்கறை காட்டும் தகவலுடன் அல்லது 

ஆதரவில் நாமே வெளிப்படுத்தி சாதிப்போம்!

ஆமாம் இலக்கே குறி.


மதுரை பாபாராஜ்

Tuesday, April 07, 2026

தத்தளிப்போம்


 

M. R கோசல் கல்யாண் பிறந்தநாள் வாழ்த்து


 M.R.கோசல் கல்யாண் பிறந்தநாள் வாழ்த்து!

வெள்ளி விழா ஆண்டு,!

பெற்றோர்:

அப்பா: M.ராஜ்குமார்

அம்மா: பிருந்தா


அகவைத்திருநாள்: 08.04.26


அகவை இருபத்து ஐந்தினைக் காணும்

மகத்தான கோசலே! பல்லாண்டு வாழ்க!

மகிழ்ச்சியுடன் செந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு! 

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


பெற்றோரும் உற்றார் உறவினர் நண்பர்கள்

எப்போதும் சூழ்ந்திருக்க அன்னாரின் ஆசியுடன்

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


Silver Jubilee Birthday Wishes

for M.R. Koshal Kalyan!


On this radiant Silver Jubilee year,


Born on the blessed day—08.04.26,


A soul now steps into twenty-five,

O noble Koshal, long may you thrive!

Like classical Tamil, pure and bright,

May your life glow in joy and light;

With a heart at peace, forever warm,

May happiness in your spirit form.

Son of Rajkumar, strong and wise,

And Brindha, grace in loving guise—


With parents’ blessings, deep and true,

May endless fortune follow you.

Encircled by kin, by friends held dear,

In love that grows with every year,

With elders’ grace upon your way,

May you flourish in Tamil’s gentle sway.

Live on, shine on, for countless days—

In harmony, joy, and timeless praise.

பரபரப்பான வீடு!

 பரபரப்பான வீடு!

மகனறைக்குச் சென்றால் அலுவலகக் கூட்டம்!

கையசைத்தே செல்வதற்குச் சொல்வானர அகன்றுவந்தேன்.!

நழுவியே நிக்கில் அறைக்குநான் சென்றால்

படித்திருப்பான் பேசுவான் காதில் கருவி!

துடிக்கும் கரங்களுடன் போகத்தான் சொல்வான்!

வருணறைக்குச் சென்றால் கணினிவிளை யாட்டு!

இருகாதில் பாடல் கருவி! கையசைப்பான்!

மருமகளோ அங்கே மடிக்கணினி வேலை!

கருத்தோடு பார்ப்பார்! விலகித்தான் செல்வேன்!

அனைவரும் மும்முரமாய் அங்கே இருப்பார்!

கிளம்பி நகர்ந்திடுவேன் நான்.

மதுரை பாபாராஜ்

MetaAI

* Busy House!

I step to my son’s room — office calls fill the air 💼,  

He waves me  with a gesture, so I turn back there.

I slip to Nikhil’s room, hoping for a word,  

He’s deep in his books, earbuds on, talking — though not heard 🎧,  

With restless hands he signals:  without a sound.

To Varun’s room I go — games flash on the screen,  

Songs in both ears, he just waves me off the scene 🖥️.

My daughter-in-law sits there, laptop on her lap,  

She glances up, intent, then back to her work’s map 💻.

Everyone’s busy, absorbed in their own world,  

So I quietly leave, my words left uncurled 🚶.




Sunday, April 05, 2026

Friend Jeberaj Grand son and Grand daughter!


 Friend Jeberaj Grand son and Grand daughter!

ஜெபராஜ் அவர்களின் பேரனுடன் பேத்தி

அமெரிக்கா நாட்டிலே பச்சைபசே லென்ற

கவர்ச்சிமிகு பின்னணியில் நின்றே சிரிக்கின்றார்!

அன்புடனே சொல்கிறேன் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

தாத்தாவின் நண்பர்

ChatGPT

Jebaraj’s grandson and grand daughter stand afar,

In America’s lush, emerald embrace—

Smiling bright against a charming, vivid scene;

With love, I offer my heartfelt wishes.

வேடிக்கை பார்!

 வேடிக்கை பார்!

சொந்த மகனையும் சொந்த மகளையும்

ஒன்றுமே சொல்ல முடியவில்லை இந்நிலையில்

வந்த மகனையும் வந்த மகளையும்

என்னசொல்லக் கூடும்நான் எண்ணித்தான் பார்க்கிறேன்!

அன்புடன் வேடிக்கை பார்.

மதுரை பாபாராஜ்


MetaAI

*Watch the Irony Unfold*

I cannot speak a word to my own son or daughter dear,

In this state, my voice disappears 🙏,

Then how can I advise the son or daughter who came to me,

I sit and ponder this irony 😅.

So just watch with love, and see the play,

Life's little dramas, day by day 🌟.


Saturday, April 04, 2026

யானையும் தாயும்


 [05/04, 11:54] FenSomu: This beautiful big guy goes for a snack to this particular house every day in Kollam, Keralam , *God's Own Country*.

யானை வருகிறது வீட்டின் வெளியிலே

பூனைபோல் நின்றிருக்க அங்கிருக்கும் தாய்வந்தே

யானைக்கு அன்புடனே ஊட்டும் பழங்களை

யானையும் வாங்கித்தான் உட்கொள்ளும் காட்சியை

மாமதுரை நண்பராம் சோமு அனுப்பினார்

நானதைக் கண்டேன் ரசித்து.


மதுரை பாபாராஜ்

பேராசிரியர் தந்தையும் மருத்துவர் மகளும்!


 ஆசிரியர் தந்தையும் மருத்துவர் மகளும்!


தந்தையும் செல்ல மகளும் மரத்தின்கீழ்

அன்பு நிழலிலே நின்றிருக்கும் காட்சிகண்டு 

இங்கே மகிழ்ந்தேன்! அருமைதான் இப்படம்!

இன்பப் பெருநாளை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

05.04.26


ChatGPT


The Professor Father and the Dictor Daughter!


Beneath a tree they gently stand—

a father, wise; a daughter, dear—

held close within love’s tender shade;

a sight that stirs the heart with cheer.

I pause, I smile at such a scene—

so pure, so warm, so quietly bright;

a perfect frame of life’s sweet grace,

a moment wrapped in soft delight.

On this glad day of joy and light,

may blessings bloom and ever stay—

for love like this, so deep and true,

is life’s own gentle, guiding ray.

மருத்துவர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்து!

 மருத்துவர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்து!

எண்ணற்ற நோய்கள்தான் எப்படித் தாக்குமென்று

கண்கூடாய்ப் பார்ப்போம் மருத்துவக் கூடத்தில்!

சற்றும் முகஞ்சுழிக் காமல் சிகிச்சைகள்

தந்தேதான் காக்கும் மருத்துவர் உள்ளிட்டோர்

அன்பே நமக்கு மருந்து.

மதுரை பாபாராஜ்

Chat GPT

Salute to the Doctors and Team!


Countless ailments—who can foresee

How they strike? We witness silently

Within the halls of healing care.

Yet not a trace of weary face,

With steady hands and patient grace,

They guard our lives from hidden snare.

Through every cure their hearts impart

The truest medicine is love at heart.


நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்கு கவிதை!


சிலநேரம் நீங்கள் சிலவற்றை இங்கே

சிலருக்கு சொல்லவேண்டும் என்றிருப் பீர்கள்!

பலவித காரணத்தால் சொல்லமுடி யாத

நிலைவரும்! எப்படியோ போய்ச்சேரும் செய்தி!

உளமார உண்மையாய் எண்ணம் இருந்தால்

அவைகளும் போய்ச்சேரும் பார்த்து.


மதுரை பாபாராஜ்

Thursday, April 02, 2026

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!



அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!

குறள் 1


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு அருமை!
அறிமுகம் ஆக்கியது பெற்றோர்தான் இங்கே!
அறிந்த கடவுள் அவர்.

மதுரை பாபாராஜ்

A begins all letters—
as the Primal One begins the world;
So too, in this life’s first awakening,
it is our parents who introduce us—
the gods we first come to know.


குறள் 35


 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்கு

 கவிதை!


மகிழ்ச்சியாக வாழ பலவழிகள் உண்டு!

அதிலொன்றே மற்றவர் வாழ்வை உயர்த்தி

மகிழவைத்தல்!  அந்தக் குணமொன்றே நம்மை 

மகிழவைக்கும்! அப்பண்பே நன்று.


மதுரை பாபாராஜ்

Wednesday, April 01, 2026

நண்பர. சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பிய

 படத்திற்கு கவிதை!


வாய்க்காலில் நீரோட வாய்க்கால் கரைமீது

வேரோடும் ஒற்றை மரம்நிற்க சுற்றியும்

சேனைபோல் பச்சை மரங்களோ நின்றிருக்க

நண்பராம் மாதவன் காலை வணக்கத்தைத்

தந்தாரே அன்புடன் வாழ்த்து.



மதுரை பாபாராஜ்

அம்மாவின் ஓவியம்


 அம்மா நிலம்துரை அவர்களுக்கு வாழ்த்து!


கடற்குதிரை தன்னை அழகாய் வரைந்து

படமாக இன்று அனுப்பிய ஆற்றல்

வியக்கத.தான் வைக்கிறது ! வாழ்த்து.


மதுரை பாபாராஜ்