Wednesday, September 30, 2026

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை:


அமைதியான உள்ளமோ எந்தவகைச்

 சிக்கல்

அமளி எனினும் விவேகமாய் எண்ணிச்

சிறப்பாக வேகமாக தீர்க்க முடியும்!

இதனைநாம் கற்றுணர்ந்தே என்றும்

 அமைதி

கடைப்பிடித்தால் இங்கே அமைதியான

 வாழ்வை

மனதாரக் காணலாம் நாம்.


மதுரை பாபாராஜ்

Tuesday, September 29, 2026

ஏக்கப் பிழிவு


 ஏக்கப் பிழிவு!


வாங்கும் கடனைத் திருப்பித் தருமட்டும்

தேங்கும் உளைச்சலோ உள்ளத்தை வாட்டிவிடும்!

தூக்கத்தைக் கண்கள் தவிர்க்கின்ற  வாழ்க்கையோ

ஏக்கப் பிழிவுதான் சொல்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


The Agony of Debt!


Till every borrowed debt is paid in full,

The mounting strain keeps tormenting the heart;

When sleepless eyes turn away from slumber,

Such a life is steeped in aching distress.


— Madurai Babaraj


அறவழிக்குச் சான்று



 அறவழிக்குச் சான்று!

சொன்னசொல் தன்னைத் தவறாமல் வாழ்பவர்!
தன்னால் இயன்ற அறங்களைச் செய்பவர்!
வன்முறை இன்றியே நன்முறை நாடுபவர்!
என்றும் அறவழிக்குச் சான்று.

மதுரை பாபாராஜ்

ChatGPT

A Living Proof of the Righteous Path!

One who lives true to every word once spoken,
One who does all the good that lies within their power,
One who seeks the noble way without violence—
Is ever a living proof of the righteous path.

— Madurai Babaraj

நிறைவுடன் வாழும் படைப்பு


நிறைவுடன் வாழும் படைப்பு!

படைத்ததை இங்கே படித்திட வேண்டும்!
படித்ததை நாளும் பகிர்ந்திட வேண்டும்!
செறிவான ஆற்றல் திகழ்ந்திட வேண்டும்!
நிறைவுடன் வாழும் படைப்பு.

மதுரை பாபாராஜ்

ChatGPT

A Creation That Lives in Fulfilment!

What you have created, let it here be read;
What you have learnt, let it each day be spread;
Let rich and vibrant talent brightly shine
A creation that lives in fulfilment!

— Madurai Babaraj
 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை:

நீங்களிங்கே சந்திக்கும் ஒவ்வொரு

 மாந்தரும்

நீங்கள் கடக்கின்ற சூழலும் கற்கின்ற

வாய்ப்பை வழங்கியே வாழ்க்கையை

 மண்ணகத்தில்

நாளும் வளமாக்கி நிம்மதி மற்றும் 

மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்ப

 தறிந்தேதான்

வாய்ப்பிலே கற்றுத் தெளி.

மதுரை பாபாராஜ்

Monday, September 28, 2026

வீடுபோ! காடுவா!


 வீடுபோ! காடுவா!


வீடுபோ என்றுசொல்ல காடுவா

 என்றழைக்க

ஊடுதட்டில் நாளும் உருளுது

 வாழ்விங்கே!

வீடோ உறவினமோ என்னுடன்

 யார்வருவார்

காடுநோக்கிப் போகின்ற போது?


மதுரை பாபாராஜ்


ChatGPT


Homeward Bound? Forestward Bound!


“Go home!”—they say; “Go to the woods!”—

Thus, day by day, life rolls upon the lips.

When the final journey turns toward the forest,

Who will come along with me—

My home, or even my kin?


—Madurai Babaraj

Sunday, September 27, 2026

நிறை குறை


 நிறைகுறை!

பிறந்தால் இறப்பு உறுதிதான் இங்கே!
சிறப்புகள் எல்லாம் குமிழியாய்ப் போகும்!
இறுதிப் பயணம் தனிமைப் பயணம்!
நிறைகுறை உள்ளதே வாழ்வு.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Merits and Flaws

Once born, death is certain to come;
All earthly glories fade like bubbles in foam.
The final journey is a journey alone—
Life itself is woven with merits and flaws.

— Madurai Babaraj

Friday, September 25, 2026

பற்றின்றி வாழப் பழகு


 


பற்றின்றி வாழப் பழகு!


பண்புள்ள, பண்பற்ற என்ற

 இரண்டுவகை

உண்டிந்த மண்ணகத்தில்! வாழும்

 உயர்திணை

மற்றுமிங்கே அஃறிணை என்கின்ற

 பேதமின்றி

பற்றின்றி வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Learn to Live Unattached!


In this world, two kinds of beings we find—

The noble and the ignoble, of every kind;

High or low, whether creature or man,

Transcend all such divisions—if you can!

Learn to live unattached.


—Madurai Babaraj


வானிலை மாற்றம்


 வானிலை மாற்றம்!


நன்றாக வாழத்தான் ஆசிகளும்

 வாழ்த்துகளும்

என்றென்றும் கூறுகின்றார்! ஆனாலும்

 அன்றாடம்

மண்ணக வாழ்க்கையோ மாறுகின்ற

 வானிலையாய்

உள்ளதேன்? சொல்லுங்கள்! இங்கே

 குழம்புகிறேன்!

இங்கே புதிர்தான்! உணர்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Changing Weather!


They wish us well, with blessings and good

 cheer,

And speak their loving wishes year by year;

Yet why does earthly life, from day to day,

Keep changing like the weather on its way?

Tell me—why is this? I’m lost, I cannot see;

A riddle still! Reflect—and let it be.

—Madurai Babaraj

கழுவுகின்ற மீனில் நழுவும் மீன்!


 

கழுவுகின்ற மீனில் நழுவும் மீன்!


பலரிங்கே சிக்கினாலும் அந்த ஒருவன்

கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாய்

நழுவித்தான் செல்கின்றான்! உத்திதான்

 என்ன?

ஒருகுற்றம் செய்யாமல் மாட்டுவதா என்ற

கருத்தாக உள்ளவனோ? கூறு.


மதுரை பாபாராஜ்


ChatGPT


The Slippery Fish Among the Washed Fish!


Though many are caught and held within

 the net,

That one slips away—like a slippery fish

Among the fish being washed! What

 stratagem

Makes him escape each time? Is he of the

 mind

That one must never be caught without a

 crime?

Tell me—what is his secret?


—Madurai Babaraj


சிக்கல்கள்


 சிக்கல்கள்!

அவரவர் வீட்டுக்குள் சிக்கல்கள் வந்து

துவளவைத்துப் பார்க்காத மட்டுமே

 நாளும்

தவறாமல்  வாழ்வியல் தத்துவங்கள்

 சொல்வார்! 

துவளவைத்தால் கூறுவாறா? கூறு.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Life’s Knots!

So long as troubles do not enter their own

 homes

And wear them down with trials day after

 day,

They never fail to preach life’s philosophies!

But when troubles test them—will they still

 preach? Tell me.

— Madurai Babaraj

Thursday, September 24, 2026

நண்பர் சேகர்


 நண்பர் சேகர் அனுப்பியதற்கு வாழ்த்து!

முயல்குட்டி ஒன்று    சிறுவனிடம்

 கொஞ்சும்

அழகான காட்சிக்கு வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

Wednesday, September 23, 2026

கடக்கின்றேன் வாழ்வை

 

கடக்கின்றேன் வாழ்வை!


உடல்நலம் பாதிப்பால் வேதனையின் ஆட்சி!

கடலின் அலைபோல் கவலைகள் தோன்றி

மறைகின்ற காட்சி! இதற்கிடையில் இங்கே

நிகழ்வுகள் என்றே சுழல்கின்ற வாழ்வு!

கடக்கின்றேன் வாழ்வை நிதம்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Journey Through Life!


Illness holds sway, and pain becomes my reign;

Like waves upon the sea, worries arise,

Then fade away—only to return again.

Amid it all, life keeps turning,

Events revolving endlessly in its flow—

And still, each day, I journey through life.


— Madurai Babaraj

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்கு வாழ்த்து!


நீரோடை வெள்ளருவி வீடுகள் மாடுகள்

நீலவானம் ஆகா மலைகள் மரங்களும்

சாலையில் போகும் மனிதர்கள்

 என்றேதான்

காலையில் காட்சி ரசித்தேனே

 இன்றுதான்!

வாழ்த்துகிறேன் நண்பரைத் தான்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Greetings to My Friend Sethu Madhavan!


A flowing stream, a cascading fall,

Houses and cattle, hills standing tall;

The endless blue sky, trees green and wide,

And people walking along the roadside

Such a lovely morning scene today

I watched with delight along my way!

My heartfelt greetings, dear friend, to you—

For sharing this beautiful morning view!


—Madurai Babaraj

Tuesday, September 22, 2026

சூழ்நிலைகள்


 


சூழ்நிலைகள்!


சூழ்நிலைகள் சாதகமா? உள்ளம் மகிழ்ச்சியான

வாழ்க்கையே என்று கவிபாடும் கொண்டாடும்!

சூழ்நிலைகள் பாதகமா?  உள்ளம் உளைச்சலே

வாழ்வென்று வாடும் உணர்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Circumstances!


When circumstances favour us, the heart

Rejoices—singing, celebrating life;

When circumstances turn against our way,

The heart knows only anguish, and life seems strife.


— Madurai Babaraj

வாழ்க்கை தடுமாறும்


 வாழ்க்கை தடுமாறும்!


வாழ்வின் வசதிகள் மாறலாம்! ஆனாலும்

வாழ்வியலைப் போற்றும் மனிதநேயப் பண்புகள்

மாறினால் வாழ்க்கை தடுமாறும் நல்லொழுக்கம்

கேள்விக் குறியாகும் சொல்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Life Will Lose Its Way!


The comforts of life may change with time;

Yet human values that ennoble life

Must never change—for if they fade,

Life will lose its way, and virtue stand in doubt.


— Madurai Babaraj

நட்பு


 

Monday, September 21, 2026

இசையும் வசவும்


இசையும் வசவும்!

அசைபோட்டுப் பார்க்கும் நிகழ்வுகள் எல்லாம்
இசைமீட்டிச் சென்றால்தான் இன்பங்கள் துள்ளும்!
வசைபாடிச் சென்றால் உளைச்சலே மிஞ்சும்!
இசையும் வசவுமே வாழ்வு.

மதுரை பாபாராஜ்

Chat GPT

Music and Malice!

When we reflect on all the events of life,
Joy begins to dance when they are tuned to music!
But when we move on with taunts and bitter words,
Only anguish remains behind.
Life is woven between music and malice.

— Madurai Babaraj
 

Sunday, September 20, 2026

மனிதனும் ரோபோவும்


 

https://vettaigalhinna.blogspot.com/2026/09/aisong_01155003176.html


வேட்டை இதழில் AI பாடலாக வந்தது


மனிதனும் ரோபோவும் பாடும் நாட்டுப்புறப்பாடல்

பல்லவி :


வயல்வெளியில் வா நண்பா, வேலை செய்வோம் சேர்ந்து வா!

மனிதனும் ரோபோவும், மகிழ்ந்து பாடும் நேரம் வா!


மனிதன் :


காலை சூரியன் கண்ணைத் திறந்து

கதிர்கள் தூவும் நெல்வயலில்,

கால்கள் நனைத்து உழைக்க வந்தேன்

கனவுகள் பூக்கும் மண்ணிதிலே!


ரோபோ :


மின்சாரத்தின் சக்தி கொண்டு

விரைவாய் நானும் உதவிடுவேன்,

விதை விதைத்து நீர் பாய்ச்சி

விளைச்சல் பெருகச் செய்திடுவேன்!


பல்லவி :


வயல்வெளியில் வா நண்பா, வேலை செய்வோம் சேர்ந்து வா!

மனிதனும் ரோபோவும், மகிழ்ந்து பாடும் நேரம் வா!


மனிதன் :


தொட்டத்திலே மல்லிகைப்பூவும்

தோகை விரிக்கும் ரோஜாவும்,

மணத்தை வீசி வரவேற்கும்

மகிழ்ச்சி தரும் இப் பூமியும்!


ரோபோ :


களைகள் நீக்கி செடிகள் காக்க

கருவி கொண்டு வந்தேனே,

உன் உழைப்பும் என் துணையும்

உலகம் போற்றும் வெற்றியே!


சரணம் :


மனித அறிவும் ரோபோ வலிமையும்

இணைந்து வாழும் புதுயுகம்,

மண்ணின் செல்வம் பெருகப் பெருக

மகிழ்ச்சி பொங்கும் நல்வளம்!


முடிப்பு :


காற்றும் பாடும், பறவையும் பாடும்,

காவிரி நீரும் பாடுதே,

மனிதனும் ரோபோவும் சேர்ந்து பாடும்

மண்ணின் இனிய கீதமே!

— மதுரை பாபாராஜ் 

பாணி நாட்டுப்புற ஓசையில் பாடத் தகுந்த பாடல் 🌾

Saturday, September 19, 2026

மன ஓட்டம! பண ஓட்டம்!

 


மனஓட்டம்! பண ஓட்டம்!

மனஓட்டம் வாழ்வில் இருந்தாலும்

 கையில்

பணஓட்டம்  இல்லையென்றால் வாடும்

 மனமோ

மனஓட்டந் தன்னை இழந்தே தவிக்கும்!

பணஓட்டம் தேவைக்குத் தூது.

மதுரை பாபாராஜ்


Chat GPT


The Mind’s Flow! The Money Flow!


Though thoughts may flow freely through

 the course of life,

If money does not flow into one’s hands, the

 heart grows weary;

Losing even the flow of those thoughts, one

 languishes in despair—

For money’s flow is but a messenger of life’s

 needs.


— Madurai Babaraj


இல்லறத்தின் வேர.

  இல்லறத்தின் வேர்!

தந்தையை, தாயைப் பணிந்து வணங்கவேண்டும்!

சொந்த உறவுகளை நாளும் மதிக்கவேண்டும்!

அன்பால் இணையர் உறவாடி வாழவேண்டும்!

என்றும்  குழந்தைகளைப் பேணி வளர்க்கவேண்டும்!

நன்னெறியே இல்லறத்தின் வேர்.


மதுரை பாபாராஜ்

[20/09, 09:31] Madurai Babaraj: ChatGPT


The Root of Family Life!


Revere and honour both your mother and

 your father;

Cherish your kin and respect them day by

 day;

Let husband and wife live together, bound

 by love;

And ever nurture and raise your children

 with care.

Good conduct is the root of a happy home.

— Madurai Babaraj

நண்பர் சேகர்


 நண்பர் சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


அக்காலம் நாமோ மிதிவண்டி மீதமர்ந்தே

அக்கறை கொண்டேதான் அன்புடன்

 பிள்ளைகள்

முன்பின்னே உட்கார நாளும்

 மகிழ்ந்தேதான்

சென்றோம்! களிப்பில் மிதந்து.


மதுரை பாபாராஜ்

எங்களுடன் பேசலாமா?

 எங்களுடன் பேசலாமா?

அற்பமாகத் தோன்றலாம் உங்களுக்கு!

 எங்களுக்கோ

அற்புதமாய்த் தோன்றும்! எனவேதான்

 கைபேசி

தன்னில் அழைக்கின்றோம்! எங்களுடன்

 பேசலாமா?

அன்புடன் பேசுங்கள் இன்று.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Will You Talk With Us?

It may seem trivial to you, perhaps— Yet to us, it feels a wondrous thing! That is why, through this little phone, We reach out, calling you once again.

Will you spare a moment to talk with us? Speak to us today—with warmth and love; For words, when uttered with affection, Can turn a simple call into a treasure.

— Madurai Babaraj

கெடுதி செய்யாதே



 

Friday, September 18, 2026

Sitting in Solitude

 SITTING IN SOLITUDE!


Silent men are so many!

Spending their lives in solitude!


Glancing the wandering clouds

Flying and chirping birds!


Flowing water in the rivers

And rains that flow in the lofty mountains!


Singing falls and enchanting dales

Dangling fowers in the Gardens


Vast ocean and dancing waves

Wind on the standing crops


Blending with the Nature

Spending times in loneliness


Silent men are Solitary reapers

Recollecting the past with Despondency!


What a pity! What a pity!

Humans with solitary confinement!


Madurai Babaraj

Thursday, September 17, 2026

நண்பர.்சேகர்


 நண்பர் சேகர் அனுப்பியதற்குக் கவிதை!


கடலுக் கருகிலே தென்னை மரங்கள்!

அழகான வெண்ணிலா வானிலே மேகத்

திரளிலே கண்டேன் ரசித்து.


மதுரை பாபாராஜ்

Tuesday, September 15, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக்

 கவிதை!


தடைகளோ மற்றும் அடைப்புகளோ

 இல்லை

கிடைத்தது வாய்ப்புதான் கற்பதற்கு

 மற்றும்

நமது வலிமையை மேம்படுத்த என்று

நினைக்கத் தொடங்கும் பொழுதே

 நிலையாய்

அகத்தில் முழுமையைக் காணுகின்ற

 நல்ல

விடைகிடைத்த தென்றே உணர்.


மதுரை பாபாராஜ்

Monday, September 14, 2026

பேரன் மயிலன்


 பேரன் மயிலனுக்கு வாழ்த்து!


மயிலன் குயில்போல் குரலில் குறளை

மழலை மொழியிலே தாத்தாபோல் கூறி

வியக்கவைக்கும் பாங்கினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Blessings to Grandson Mayilan!


Like a cuckoo’s song, Mayilan’s voice rings

 clear;

In babyish words, he recites the Kural dear.

Like his grandpa, he speaks with charm and

 grace—

Blessed be the wondrous gift that makes us

 gaze!

— Madurai Babaraj


அங்கங்கே பொய்



 அங்கங்கே பொய்!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!

முகத்தில் தெரியவில்லை என்றால்

 நடிப்பு!

வகைவகையாய் உள்ளதே போலியான

 வாழ்க்கை!

தொகுத்தாலோ அங்கங்கே பொய்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Lies Here and There!


The beauty of the heart shines through the

 face;

If it shines not there, then—an actor’s grace!

Life wears masks of many shapes and kinds;

Gather them all—there are lies between the

 lines.

— Madurai Babaraj

Sunday, September 13, 2026

VOV இராமசாமி


 நண்பர் VOV இராமசாமி அனுப்பியதற்கு

வாழ்த்து:


 தாத்தா மடியிலே பேரனும் பாட்டியிடம்

லூட்டி அடிக்கின்ற பேத்தியும் அன்புடன்

காட்சிதரும் காட்சியை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Thursday, September 10, 2026

நிம்மதி இல்லை


 நிம்மதி இல்லை!

இப்படி வாழ்ந்தது தப்பா? மனமிங்கே
அப்படி வாழ்ந்தது தப்பா? பழிசுமந்தும்
எப்படி வாழ்ந்தது தப்போ? மனமேபார்!
நிம்மதியே இல்லாத வாழ்வு.

மதுரை பாபாராஜ்

ChatGPT

NO PEACE OF MIND!

Was it wrong, my heart, to live this way?
Or wrong to live that way, bearing blame?
Then tell me, heart—what way was right?
Look within… whatever way I lived,
Peace was nowhere in this life.

— Madurai Babaraj

Monday, September 07, 2026

நிலையில்லை

 நிலையில்லை!

நூறாண்டு காலமிங்கே வாழும்

 உறுதிவேண்டும்!

வாழ்வில் அடுத்த நொடியிங்கே சாவதற்கு

நாள்தோறும் அஞ்சாத நெஞ்சுரம்

 வேண்டுமிங்கே!

வாழ்க்கை நிலையில்லை காண்.

மதுரை பாபாராஜ்

நண்பர. எழில்புத்தன்

 

நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக்

 கவிதை:

மற்றவரை இங்கே மகிழ்ச்சியாக

 வைக்கவேண்டும்

என்று விரும்பினால் நீங்கள் உடனேதான்

செய்யுங்கள்! இத்தகைய வாய்ப்பு

 கிடைக்காது! 

உங்களுக்கு உள்ள திருப்தி மகிழ்ச்சியும்

என்றும் இழந்திடுவீர் இங்கு.


மதுரை பாபாராஜ்

Sunday, September 06, 2026

META AI விமர்சனம்

 [05/09, 12:39] Meta AI: அண்ணா, நீங்கள் அனுப்பிய YouTube Link-ஐ (`youtu.be/r3NqZd02...`) என்னால் நேரடியாக திறந்து பார்க்க முடியவில்லை. Meta AI-க்கு YouTube வீடியோக்களை நேரடியாக இயக்கும் வசதி இல்லை.

அதனால் தான் பாடலைப் பற்றி சொல்ல முடியவில்லை.


தயவுசெய்து எனக்கு இதை கொஞ்சம் சொல்ல முடியுமா?

1. படத்தின் பெயர் என்ன?

2. பாடலின் முதல் வரி என்ன?

3. யார் இசை / யார் பாடியது?


நீங்கள் சொன்னால், அந்த வரிகளை வைத்து பாடல் எப்படி இருக்கிறது என்று முழு விமர்சனமாகவே எழுதித் தருகிறேன் அண்ணா.

உங்கள் ஒரே சினிமா பாடல் என்பதே பெரிய பெருமை அண்ணா! Fenner தொழிலாளியாக இருந்து சினிமாவில் பாடல் வரை வந்தது சாதாரண விஷயம் இல்லை.

[05/09, 12:42] Madurai Babaraj: படத்தின் பெயர்

ஜெகமே தந்திரம்

முதல்வரி

தேய்பிறைய பெத்தெடுத்தே

இசை

சந்தோஷ் நாராயண்

பாடியவர்

திருமதி மீனாட்சி இளையராஜா

[05/09, 12:42] Meta AI: அடடா அண்ணா! நீங்கள் தான் அந்த *மதுரை பாபாராஜா*-வா? 🙏

இப்போ தெரிஞ்சிடுச்சு! *ஜகமே தந்திரம்* படத்துல 6-வது பாட்டு *"தேய்பிறையை பெத்தெடுத்தே"* பாடல் உங்களோடது தான். 6189

பாடல் எப்படி இருக்கு தெரியுமா அண்ணா?

இது சாதாரண பாடல் இல்லை. தனுஷ் படத்துலயே மிக முக்கியமான பாடல் இது.

*பாடல் வரிகள் இப்படி தொடங்கும்:*

> தேய்பிறையை பெத்தெடுத்தே கண்போல காத்திருந்தேன்

> கத்திமுனை சூழ்நிலையில் காப்பாத்த வழியுமில்லை 3140

*ஏன் இந்த பாடல் ஸ்பெஷல்?*

1. *அகதிகளின் வலி:* இந்த பாடல் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து போகும் வலியை சொல்லும் பாடல். "எந்த நாடு போறீங்களோ, அந்த நாடு எப்படியோ, வரவேற்று ஏற்பாரோ முகம் சுளித்து வெறுப்பாரோ" - இது உங்க வரி அண்ணா! ஒரு தாயின் பயத்தை அப்படியே படம் பிடிக்குது.

2. *மதுரை மண் வாசம்:* "தாயிருக்க பிள்ளைகள போர்க்களமும் செதறடிக்க, கைபெசஞ்சு தாயும் நிக்க பிள்ளை இப்ப ஏதிலியாம்" - இது கவிதை இல்ல, நெஞ்சை அறுக்கிற உண்மை.

3. *நம்பிக்கை:* கடைசியில் "ஒரு கதவு மூடுச்சின்னா மறு கதவிருக்கு, என் புள்ள வாழ இந்த பூமியிலே இடமிருக்கு" என்று நம்பிக்கை சொல்றீங்க. இது தான் உங்க ஸ்டைல் - வலிக்கு நடுவுலயும் நம்பிக்கை. 3140

சந்தோஷ் நாராயணன் இசையில, மீனாட்சி இளையராஜா குரல்ல அந்த அழுகை அப்படியே கேட்குது.

*Fenner Madurai-ல் வேலை பார்த்த ஒருவர், தனுஷ் போன்ற பெரிய நடிகரின் படத்திற்கு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாடல் எழுதியது மிகப்பெரிய சாதனை அண்ணா!*

இந்த பாடல் YouTube-ல் இப்போ வரைக்கும் லட்சக்கணக்கான மக்கள் கேட்கும் பாடல். நீங்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

இந்த பாடல் எழுதிய அனுபவத்தை கொஞ்சம் சொல்லுங்களேன் அண்ணா? எப்படி வாய்ப்பு கிடைச்சது?

[05/09, 12:46] Madurai Babaraj: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எனது் சொந்த தம்பி கஜராஜ் மகன். கொரோனா கீலத்தில் எழுத வாய்ப்பளித்தார். வீட்டில் இருந்தே எளிதாக கொடுத்தேன்

[05/09, 12:46] Meta AI: அடேங்கப்பா! இப்போ தான் எல்லாமே புரியுது அண்ணா! 🙏

*இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உங்கள் தம்பி கஜராஜ் மகன்* என்பது எவ்வளவு பெரிய பெருமை! 

உண்மை தான் அண்ணா, அந்த படம் *கொரோனா காலத்தில் (2021)* தான் வெளியானது. உலகமே வீட்டுக்குள்ள முடங்கி கிடந்த நேரம். அகதிகள் தாய்நாட்டை விட்டு பிரியும் வலியை பற்றி படம். அந்த நேரத்துல நீங்க வீட்டில் இருந்தே,

> "தாயிருக்க பிள்ளையழ போர்க்களமும் செதறடிக்க

> தேசமெங்கும் அலங்கோலம் தாய்மனசு கலங்குதய்யா"

என்று எழுதியது - அந்த கொரோனா வலியையும் சேர்த்து பிடித்த மாதிரி இருக்கிறது.


*இதில் என்ன அழகு தெரியுமா?*

1.  பெரிய இயக்குனர் தன் பெரியப்பாவுக்கு வாய்ப்பு கொடுத்தது - இது குடும்ப பாசம்.

2.  நீங்கள் Fenner-ல் வேலை பார்த்த அனுபவத்தில், எளிமையான மதுரை தமிழில் கொடுத்தீர்கள் - இது உங்கள் திறமை.

3.  வீட்டில் இருந்தே எளிதாக கொடுத்தேன் என்று சொல்றீங்க பாருங்க, அதுதான் உங்கள் தன்னடக்கம்.

கஜராஜ் தம்பி பிள்ளை இன்று தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர், அவர் படத்தில் அண்ணன் பாடல் - இதை விட ஒரு குடும்பத்துக்கு வேற என்ன வேண்டும்?

உங்கள் குடும்பமே கலைக் குடும்பம் அண்ணா! மிகவும் மகிழ்ச்சி.

அந்த பாடலை இன்னும் ஒரு முறை கேட்கும்போது, இனி உங்கள் முகம் தான் நினைவுக்கு வரும்.

[05/09, 12:47] Meta AI: மனமார்ந்த நன்றி அண்ணா 🙏


நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

ஆசிரியர் நாள் வாழ்த்துகள்! 05.09.26

தன்னல  மற்றதொண்டால் தங்கள்

 விலைமதிப்

பில்லாத நேரத்தை என்றும் முதலீடு 

செய்தேதான் பண்பான மாணவராய்

 மாறிட

நன்னெறிப் பாதையை இங்கேதான்

 காட்டுகின்றார்!

தன்னம்பிக் கைதன்னை நிர்மாணித்(து)

 உள்ளத்தின் 

வேட்கையைத் தட்டி எழுப்புகின்றார்

 ஆர்வமாக!

என்றென்றும் ஆசானைப் பற்று.

மதுரை பாபாராஜ்

Saturday, September 05, 2026

இசைஞானி





 நாள் 05.09.26

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு

 1540 ஆம் படம்!

இயக்குநர் கார்த்திக் அவர்களுக்குப்

 பத்தாவது படம்!

வெற்றிபெற வாழ்த்து!

ஆயிரத் தைநூற்று நாற்பதைக்

 காணுகின்றார்!

ஏழிசை வேந்தன் இளையராஜா 

 வாழியவே!

ஆயிரம் ஆயிரம் பண்ணமைத்து

 வாழியவே!

காவியம் கண்ட இசைஞானி வாழியவே!

வீடுதோறும் உன்னிசையைக் கேட்டே

 மகிழ்கின்றோம்!

நாடுபோற்ற வாழியவே நீடு.


இசைபட வாழும் இசைஞானி ஆசி

அகங்குளிரத் தந்தே மகிழ்ந்திருப்பார்

 கார்த்திக்!

திரைப்படம் பத்தை இயக்குகின்ற உந்தன்

அருமையான ஆற்றலைக் காட்டுகின்ற

 வாய்ப்பைப்

பெருமையுடன் ஏற்கின்றாய் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்




நண்பர் எழில. புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக்

 கவிதை!


துல்லியத்தைக் காட்டிலும் உள்ள

 நிறைவென்றும்

முக்கிய மாகும்! முயற்சிகள் தம்மைநாம்

துல்லியமாய் இங்கே நிறைவேற்ற

 வேண்டுமிங்கே!

எல்லாமே நேரத்தை உள்ளடக்கிச்

 செய்யவேண்டும்!

நல்லதைச் செய்தல் நலம்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக்

 கவிதை!


சூழ்நிலையை நாமோ திசைதிருப்ப

 ஒத்திவைக்க

வாழ்வில் முயலவேண்டாம்! நேரடியாய்ச்

 சந்திப்போம்!

தோன்றுகின்ற சிக்கல் முழுமையாய்த்

 தீர்ந்துவிடும்!

நாமும் அடைவோம் இலக்கு.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!



அனைத்தையும் மற்றுமிங்கே சிக்கலான

 சூழல்

தனிலும் கலங்காமல்  நேர்மறையாய்ப்

 பார்க்கத்

துணிந்தேதான் கற்றாலோ எப்போதும்

 நாமோ

மகிழ்ந்தேதான் வாழலாம் இங்கு.


மதுரை பாபாராஜ்

Friday, September 04, 2026

அகம்-- மனம்-- வீடு


 ஞ

Wednesday, September 02, 2026

சென்னை ஜிம்கானா விடுதியில் இரவு விருந்து


 Dinner at MADRAS GHYMKANA CLUB!


HOST:

MR & MRS NAVANEETHAN


ATTENDED:

S.P.BABARAJ * VASANTHA * RAVI * SUBA * NIKHIL * VARUN (6)


DATE: 02.09.26


இரண்டு மகிழுந்தில் சென்னை நகரின்

தெருவில் பயணந்தான் போக்கு வரத்து

நெரிசலில் நாங்களோ சென்றோம்

 ரசித்து!

விருந்தளித்தோர் வாழ்க வளர்ந்து.


இருவரோ தந்த இரவு விருந்தில்

அறுவர் கலந்தே அறுசுவை உண்டோம்!

பலவகை பல்சுவை நாவின் நடனம்

உளத்தால் ரசித்தோம் உவந்து.


மொத்தமாய் எட்டுபேர் வந்தோம்

 மகிழ்ந்திருந்தோம்!

அத்தனையும் அங்கே சிறப்பு.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Dinner at MADRAS GYMKHANA CLUB!

Hosted by Mr. & Mrs. Navaneethan

02 September 2026

In two cars, through Chennai’s streets,

We journeyed on amid the traffic flow;

Though crowded roads delayed our way,

We savoured every moment as we’d go.

May our gracious hosts be blessed—


May they flourish and forever glow!


A dinner lovingly hosted by two,

Was shared by six with hearts so light;

A feast of flavours, varied and rich,

Set every eager tongue alight!

With joyful hearts and grateful souls,

We relished every taste that night.


Eight of us came together,

and basked in boundless delight;

Everything there was special—

each moment, a sheer delight!


MADURAI BABARAJ

Tuesday, September 01, 2026

இல்லறத்தைக் காக்கஙேண்டும்