Wednesday, February 20, 2008

ஊழ்தான்!

வாழ்வில் மனித அறிவெல்லைக் கெட்டாத
சூழ்நிலைகள் சுற்றி வளைத்தேதான்--பாழ்மனதைப்
பந்தாடிப் பார்க்கின்ற நேரத்தில் கேள்விகளுக்
கென்னவிடை?ஊழ்தான் உணர்.

Wednesday, February 13, 2008

குறளுக்கு வெண்பா வடிவில் விளக்கம்

குறிப்பு:அறத்துப்பால் நூல்வடிவில் தயாராக உள்ளது.
பொருட்பால் அச்சில் உள்ளது.
இன்பத்துப்பால் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
வாசகர் கருத்துக்களை வரவேற்கின்றேன்.
=============================================

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவளன் முதற்றே உலகு.

எழுத்தின் தொடக்கம் எழுச்சி அகரம்!
கழனி கவிபாடும் காட்சி--தழைக்கும்
உலகின் தொடக்கமே உண்மைக் கடவுள்!
விளம்பிய வள்ளுவமே வேர்
================================================
விசும்பின் துளிவீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

மேகம் மழைத்துளியைத் தூவாமல் சென்றால்
ராகம் இசைத்து ரசித்திருக்கும்--தாகமுடன்
நிற்கும் பசும்புல்லின் கூர்மை நுனிகளைச்
சுற்றிலும் காண்ப தரிது.
===================================================
உரன் என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து.

மனஉறுதி அங்குசத்தால் அய்ம்புலனை நாளும்
துணிவாய் அடக்கியாளும் தூயோன்--புனிதமான
வீட்டுலகைக் காணும் விதையாவான்!மண்ணகமே
போற்றிப் புகழும் புரிந்து.
======================================================
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொறாமை,புவியாசை,பொங்கிவரும் கோபம்
அடாதடி வன்சொற்கள் அம்மா!--நடுக்கும்
இவைநான்கும் இல்லாத பண்பே அறங்கள்!
புவியே வணங்கும் புகழ்ந்து.
=====================================================

Tuesday, February 12, 2008

விழிபிதுங்கும் கோலமேன்?

உயரமான கட்டடத்தைத் தங்கள் உழைப்பால்
உயர்த்தும் திறன்படைத்த மக்கள்--துயரம்
பிழிந்தெடுக்க வாழ்க்கைத் தரத்திலே தாழ்ந்தே
விழிபிதுங்கும் கோலமேன்?செப்பு.

Wednesday, February 06, 2008

ஆணவ அழுக்கு!

கூட்டைப் பிரித்தெறியும் கூனி மனப்பான்மை
ஆட்டிப் படைக்கும் அகத்திலே--மூட்டை
அழுக்கோ குவிந்திருக்கும்!ஆணவம் என்னும்
இழுக்கைச் சுமந்தலையும் இங்கு.

அழுகையும் சிரிப்பும்!

பிறக்கும் பொழுதிலோ நாமோ அழுவோம்!
உறவினர் எல்லாம் மகிழ்வார்--இறப்பிலே
நிம்மதியாய் நாம்செல்லும் போதோ உலகம்
குமுறி அழுதுநிற்கும் கூறு.

TRANSLATION OF:
WHEN YOU WERE BORN, YOU CRIED WHEN THE WORLD REJOICED.
LIVE YOUR LIFE IN SUCH A WAY THAT WHEN YOU DIE THE WORLD
CRIES WHILE YOU REJOICE.

விடையேது?

வாழ்விலே சிக்கலென்றால் வாழ விடைகிடைக்கும்!
நாள்தோறும் சிக்கலே வாழ்வெனில்--வாழ்வில்
விடையேது?காணும் வழியேது?ஏக்கம்
உடைப்பெடுக்கத் தத்தளிப்பார் பார்.

HUMAN ASTEROIDS!

SOME BEHAVE LIKE
FALLING ASTEROIDS!
WHEN THEY WILL DASH?
AND WITH WHOM?
WHEN THEY WILLSKIP
AND TRAVEL TOWARDS
WHICH DIRECTION?
NOBODY KNOWS!
IF THEY DASH
WE FEEL
THOUSAND SCORPIONS
GNAWING AT OUR HEARTS!
IF THEY SKIP
A BIG BIG SIGH SAVES THE DAY!

நீருயர நெல்லுயரும்!

நீரென்னும் நற்பண்பை ஊற்றி உயரவைத்தால்
தாயெடுத்துத் தந்த விதைநெல்லாய்--ஊரெல்லாம்
சீருடனே மக்களோ வாழ்வில் உயர்ந்திடுவார்!
நீருயர நெல்லுயரும் சொல்.

பிறப்பின் பயன்!

பேரன்கள் என்மார்பில் துள்ளி விளையாடும்
நேரத்தில் கண்மூடும் வாய்ப்பெனக்கு--பாரில்
கிடைத்தால் மகிழ்வேன்!பிறப்பின் பயனை
அடைந்ததில் நிம்மதிதான் காண்.

குடும்பம் தாங்காது

போட்டி பொறாமை புகைச்சல் இவைமூன்றும்
கூட்டுக் குடும்பத்தில் வேரூன்றும் -- போக்கைப்
படரவிட்டால் உட்பகையோ பந்தாடிப் பார்க்கும்!
அகத்திலே சூளும் இருள்.