Friday, October 28, 2016

வேகத்தடைகள் ஏன்?

வேகம் குறைப்பதற்கு வேகத் தடைபோட்டார்!
வேகத் தடைமீதே வேகமாய்ச்  செல்கின்றார்!
வேகத்தைக் கட்டுப் படுத்தாமல் செல்லவைக்கும்
வேகத் தடைகள் எதற்கு?

Sunday, October 23, 2016இதுதான் நான்!

வாழ்க்கைக் கடலுக்குள் நீர்நிறைந்த பானைநாம்!
நீரெல்லாம் என்சொந்தம் என்றே குதிக்கின்றோம்!
யாரங்கே? பானை உடைந்தது! நீரெங்கே?
நீரோ கடலான தே!

மதியாதார் மேல்!

மதியாதார் வாசல் மிதியாதே என்றார்!
மதிப்பவரை நாடி மதித்துத்தான் சென்றேன்!
துதிபாட வேண்டும்! தலையாட்ட வேண்டும்!
மதியாதோர் எவ்வளவோ மேல்.

Monday, October 17, 2016

க்
இக்கரைக்கு அக்கரை என்றும் அழகுதான்!
பக்கத்தில் சென்றால் அழுக்கு.
ங்
தங்குதடை கொண்டதுதான் வாழ்க்கை! தளராமல்
சந்தித்தால்  வாழலாம் நீ.
ச்
துச்சமாய் எண்ணிப் புறக்கணித்தால் நாளையே
நிற்போம் அவர்முன் சிரித்து.

ஞ்
அஞ்சவேண்டும் பொய்சொல்ல! மெய்சொல்ல அஞ்சாதே!
அஞ்சுவதற் கஞ்சவேண்டும் நீ.
ட்
தட்டி எழுப்புக் குறளுணர்வை வீட்டிலே!
வெற்றிக் கொடிநாட்டும் நாடு.
ண்
தண்ணீரில் கண்டம் தமிழனுக்கு!கேட்டாலும்
சென்றாலும்  தாக்குவார் பார்.
த்
செத்தாலும் உன்பெயரைச் சொல்லவேண்டும்! பண்புகளால்
வாழ்வமைத்து வாழ்வாங்கு வாழ்.
ந்
செந்தமிழாம் தாய்மொழியைக் கற்கத் தயங்குவோர்
எந்தமொழி கற்றாலும் வீண்.
ப்
முப்பால்  உரைக்கின்ற நல்லறத்தைப் பின்பற்று!
எப்போதும்  நிம்மதி உண்டு.
ம்
நம்பிக்கை தன்னை இழக்காமல் வாழ்பவர்க்கே
என்றும் விடியல் உணர்.
ய்
எய்தவரைப் போற்றுகின்றார்! அம்புகளைத்  தூற்றுகின்றார்!
இவ்வுலக மக்கள் இயல்பு.

ர்
கர்வம்,சுயநலம் மற்றும் மதியாமை
நல்ல குணங்களல்ல பார்.
ல்
நல்லவரின் வான்மீது வல்லூறு வட்டமிடும்!
நல்லவராய் வாழ்வதா தீது?
வ்
எவ்வழியில் சென்றாலும் இங்கே தடையென்றால்
எவ்வழியில் செல்வது? சொல்.
ழ்
வாழ்வை வளைத்தல் அரிது! வளைந்துகொடு
வாழலாம் என்றும் மகிழ்ந்து.
ள்
துள்ளும் இளமையில் நல்லொழுக்கப் பாதையைத்
தள்ளிவிட்டால் வாழ்வே இருள்.
ற்
முற்போக்கு நாட்டிலே! பிற்போக்கு வீட்டிலே!
எத்தனை வேடங்கள்? சொல்.
ன்
தன்னலத்தின் பின்னணியில் இங்கே பொதுநலத்தை
முன்னணியில் வைப்பது தப்பு.


மனம்போன போக்கிலே வாழ்ந்திடுவோ  மென்றால்
மனசாட்சி குத்தும் உணர்.
னா
இன்னாச்சொல் புண்படுத்தி வாடவைக்கும் !இன்சொற்கள்
ஒன்றே மதிப்புயர்த்தும் பார்.
னி
தனிமனித நல்லொழுக்கம் சீர்குலைந்து போனால்
மனிதன் நிலைகுலைவான் சொல்.
னீ
கானீனன் என்றசொல் கர்ணனாம்! வள்ளன்மை
வான்மழையைத் தோற்கடிக்கும் கூறு.
னு
மனுநீதிச் சோழனின் நீதி முறைக்கோ
இணையுண்டோ இவ்வுலகில்? சொல்.
னூ
நானூறு பாக்கள் அகவாழ்வைக்  காட்டுதம்மா!
நானூறோ கூறும்  புறம்.
னெ
என்னென்பேன் ஊடகத்தின் வன்முறை ஆபாசம்!
அம்மம்மா கண்டனம் செய்
னே
நானே அனைத்தும் எனச்சொன்னால் ஆணவம்!
நாமே எனச்சொல்  பணிவு.
னை
பானைக்குள் யானைபோல் கையளவு உள்ளத்தில்
யானைபோல் பேராசை பார்.

னொ
தானொன்றை மாதவி எண்ணி கவிபாட
கோவலன் நீங்கினான் சென்று.
னௌ
னௌவு என்றால் தெலுங்கில் சிரிப்பென்பார்!
னௌவே மனிதர்க் கழகு.


கவியரசர் நினைவுநாள் 17.10.2016

இலக்கியச் சொற்களை பாமரரும் வீட்டில்
வளமுடன் பாடுமாறு பாடலைத் தந்தார்!
வளமார் தமிழுக்கோர்  சான்றாகி வாழ்ந்தார்!
உளமார எண்ணி வணங்கு.


சிறப்புகளைத் தேடி அலைவதோ ஈனம்!
திறமைக்கு வந்தால் சிறப்பு.
றா
புறாவை சதைகொடுத்துக் காத்தான் சிபிதான்!
பறந்தது வானில் பருந்து.

றி
நெறிபிறழ்ந்த வாழ்க்கை உளைச்சலைக் கூட்டும்!
நெறிமுறைகள் நிம்மதிக்குத் தூது.
றீ
புற்றீசல் போல அரசியல் கட்சிகள்!
மக்கள் முணுமுணுப்பைக் கேள்.
று
குறுந்தொகை வேண்டாம்! பெருந்தொகை தந்தால்
விறுவிறுப்பாய்க் கோப்பு வரும்.
றூ
சிற்றூரும் பேரூரும் ஒன்றாய் வளர்ச்சிகண்டால்
ஒப்பற்ற நாடாகும் பார்.
றெ
பெற்றெடுத்த பிள்ளைகள் பெற்றோரைக் கைவிட்டால்
நட்ட  நடுத்தெருதான்  சொல்.
றே
சற்றே உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்தால்
குற்றம் தவிர்க்கலாம் கூறு.
றை
நிறைகளைக் கண்டு குறைகளைத்  தள்ளு!
நிறைவுடன்  வாழலாம் இங்கு.
றொ
ஒற்றொன்றை மற்றொரு ஒற்றையுடன் ஒப்பிட்டே
ஒற்றினது உண்மை அறி.

றோ
தோற்றோடிப் போனாலும் மீண்டும் முயற்சித்தால்
தோற்றவர்கள் வெல்லலாம் சொல்.
றௌ
(Router)
றௌட்டரில்  நாளும்  கணினிகளை நாமிணைத்து
வெற்றி பெறலாம் விரைந்து.

Sunday, October 16, 2016

மனக்குறள்

அகரவரிசைஉளந்தன்னில் மாசின்றி வாழ்ந்தால் உயர்வு!
களங்கம் சுமத்தலே தாழ்வு.

ளா

களாக்காய்க் கிடைத்ததில் இன்புறுவோம்! எட்டாப்
பலாக்காய்க் கேங்காதே நீ.

ளி

உளியின் ஒலியில்  சிலைகள் மலரும்!
மழையொலி கேட்டால் வளம்

ளீ

பளீர்பளீர் என்றேதான் மின்னல் அடிக்கும்!
திடீர்திடீர் அச்சத்தில் நாம்.

ளு

வெளுத்ததெல்லாம் பாலல்ல! இவ்வுலகில் கண்ணே!
கருத்ததெல்லாம் நீரல்ல பார்.

ளூ

உள்ளூரில் வாய்ப்பில்லை! எங்கே வருமானம்
உள்ளதோ நாடல் இயல்பு.

ளெ

சுள்ளெனச் சுட்டெரிக்கும் பாலையில் நீர்கண்டால்
துள்ளிக் களிக்கும மனம்

ளே

வெள்ளை வெளேரென்றே ஆடை அணிந்துகொண்( டு)
உள்ளம் கருப்பென்றால் வீண்.

ளை

களைகள் பயிருக்குக் கேடு! பகையோ
களைபோல் உறவுக்குக் கேடு.

ளொ

முள்ளொன்று சிங்கத்தைத் தைக்க  எலிவந்து
முள்ளை எடுத்ததாம் பார்.

ளோ

கோளோடு கோள்மோத வில்லை!  மனிதர்கள்
தோளோடு தோள்மோதல் ஏன்?

ளௌ

ளௌக்கியம் என்றால் தெலுங்கில் நடப்பறிந்து
நட்புடன் இங்கே பழகு.

Saturday, October 15, 2016

மனக்குறள்

அகரவரிசைழகரம்! தமிழின் சிகரம்! சிறப்பு
ழகரமென் றிதற்குப் பெயர்.

ழா

விழாநகரம் என்றே மதுரையைச் சொல்வார்!
விழாமணக்க வாழும் நகர்.

ழி

ஆழியின் ஆட்டம் சுனாமியாகும்! அத்தகைய
ஊழியே நாட்டுக்( கு) அழிவு.

ழீ

( கெழீஇய-- வளர்ந்தோங்கிய)

கெழீஇய நட்பாய்த் தொடர மனதால்
பழகிடும் பண்பே தளம்.

ழு

குழுஉணர்வின் கூட்டு முயற்சி இருந்தால்
குழுமம் வளரும் செழித்து.

ழூ

குழூவுக் குறியால் பொருள்விலை சொல்லும்
தெளிவு வணிகத்தில் உண்டு.

ழெ

கூழெனினும் நன்கு குளித்துக்  குடியென்றார்!
வாழ்வின் ஒழுக்கம் இது.

ழே

ஏழேழு வாழ்க்கை எடுத்தாலும் சான்றோரின்
தூயநட்பே நட்பாகும் பார்.

ழை

வாழை யடிவாழை யாய்மணக்கும் பண்புகள்
தேவை எனத்தெரிந்து போற்று.

ழொ

(ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாழ்)

தாழொன்று போட்டாள்! கூத்தனும் பாடிநின்றார்!
தாழிரண்டைப் போட்டாள் மறுத்து.

ழோ

பாழோ? வயலிலே பாடுபட்ட நம்முழைப்பு!
வாமழையே! வாழவைக்க வா.

ழௌ

ழௌவும் ழகரமும் நம்முதுமைப் பேச்சில்
குழறுவதைப் பார்ப்பார் சிரித்து.

மனக்குறள்

அகரவரிசைவரவுகளுக் குள்ளே செலவென்றால் நன்று!
வரவுகளை மீறினால் தீது.

வா

வான்மழை பொய்த்துவிட்டால் நாடே வறண்டுவிடும்!
வானத்தைப் பார்த்துவாழும் நாடு.

வி

வில்லம்பு குத்திய புண்ணாறும்! ஆறாதே
சொல்லம்பு  தைத்திட்ட புண்.

வீ

வீரமென்றால் போர்க்களப் போர்மட்டுமா? ஈவிரக்க
ஈரமுந்தான் வீரமாகும் பார்.

வு

தாவுகின்ற கங்காரு தன்வயிற்றுப் பைக்குள்ளே
காக்கிறது குட்டியைத் தான்.

வூ

கருவூரில் தோன்றி பருவவூர்கள் தாண்டி
கருகுவோம் சாவூரில் தான்.

வெ

வெங்கொடுமைத் துன்பங்கள் சுற்றி வளைத்தாலும்
நன்றி மறவாதே நீ.

வே

வேடமிட்டே ஏமாற்றும் வேடதாரிக் கும்பலுக்குப்
பாடம் புகட்டும் மனம்.

வை

வைதேகி மான்விழிகள் மைவண்ணன் கண்களைக்
கவ்வியதால்  மெய்மறந்தார் காண்.

வொ

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சிக்கல்தான்!
தொல்லை தொடர்கதைதான் சொல்.

வோ

வோல்கா நதியைத்தான் ஐரோப்பா கண்டத்தின்
நீள நதியென்பார் இங்கு.

வௌ

( வௌவம்-- தாமரை)

வௌவமும் நீரும்போல் ஒட்டியும் ஒட்டாமல்
இவ்வுலகில் வாழ்தல் சிறப்பு.

மதுரை பாபாராஜ்மனக்குறள்

அகரவரிசைலஞ்சமும் ஊழலும் நாட்டின் இயல்பானால்
கண்மணியே! கேவலமே வாழ்வு.

லா

லாபம், இழப்பு இரண்டும் வணிகத்தில்
பாடம் புகட்டும் உணர்.

லி

வலியோர்கள் வாழ்வார்! எளியோர்கள் தாழ்வார்!
புவியே உனக்கே இழிவு.

லீ

( நுண்ணோக்கி--MICROSCOPE)

லீவன்காக் நுண்ணோக்கி தன்னை அறிவியலில்
ஆவலுடன் கண்டறிந்தார் பார்.

லு

லுமும்பா !காங்கோவின் சிங்கந்தான்! கொன்றார்!
தினவில் உலகச் சதி.

லூ

லூயிபாஸ்ச் சர்தான் வெறிநாய்க் கடிமருந்தை
நேயமுடன் கண்டறிந்தார் சொல்.

லெ

லெமூரியா கண்டமோ ஆழிக்குள் மூழ்கி
அமிழ்ந்ததாய்ப் பாடமுண்டு பார்.

லே

லேசர்க் கதிர்கள் அறுவை சிகிச்சைக்கு
ஊடறுத்துப் பார்க்க எளிது.

லை

கலைத்துறை ஆபாச ஊடகமாய் மாறும்
நிலையேற்றால் நாட்டுக்குக் கேடு.

லொ

லொட்டு லொசுக்கெல்லாம் வேண்டாம் கழித்துவிடு
பட்டென்றே பாட்டிசொல்வார் அன்று.

லோ

லோலாக்கு காதுகளில் ஆட குதித்தாடி
மாலையில் ஆடுவார் மகிழ்ந்து.

லௌ

லௌகீக வாழ்வை ரசிப்போர்
துறவறத்தைக்
கவ்வுதல் என்றும் அரிது.

 இருப்பதில் நிறைவுகொள்!

கடமையைச் செய்வோம்! வருவதை ஏற்போம்!
தடம்புரண்ட வாழ்க்கை தலைகுனிய வைக்கும்!
அறவழியை ஏற்றே திருப்தியாக வாழ்வோம்!
பிறவழி நாடல் தவிர்


மனக்குறள்

அகரவரிசையவனர்,தமிழகம் வந்துபோன செய்தி
இலக்கியத்தில் நாம்படித்த துண்டு.

யா

யார்யாரோ சந்திப்பார் நண்பராக மாறுவார்!
கால  விளையாட்டைப் பார்.

யி

பயிர்பச்சை நீரின்றி காய்ந்துபோனால்  பாரில்
உயிரினங்கள்  தத்தளிக்கும் ! சாற்று

யீ

குறியீட்டெண் எல்லோர்க்கும் இன்றிங்கே வாழ்வில்
நெறிமுறை யானது பார்.

யு

யுத்தம் அணுயுத்தம் ஆகிவிட்டால் புல்பூண்டு
மக்களும் மிஞ்சமாட்டார் கூறு.

யூ

யூகங்கள் ஏமாற்றும்!  தப்பாய் வழிகாட்டும்!
யூகத்தின் மெய்ப்பொருள் காண்.

யெ

தாயென்ன  திட்டினாலும் சேய்கள்
மறந்துவிட்டுத்
தாயிடம் ஓடிவரும் பார்.

யே

ஈயேன் என்றெண்ணிச் சேர்த்துவைத்த செல்வங்கள்
போவேன்  என்றுபோகும் போ.

யை

மாயை எனத்தெரிந்தும் வீழ்ந்து துடிக்கின்றார்!
மாயைக்  கவர்ச்சி தவிர்.

யொ

காயொன்றே வன்சொல்! கனியொன்றே  இன்சொல்தான்!
காயைத் தவிர்ப்பதே பண்பு.

யோ

யோகிகள் போகவாழ்வைத் தள்ளமாட்டேன் என்றேதான்
போகிகளாய் வாழ்தல்  தவறு.

யௌ

யௌவனம்-- இளமை

யௌவனத்தில் ஆக்கபூர்வ ஆற்றலைப் பண்படுத்து!
அவனியில் முன்னேற்றம் உண்டு.


யவனர்,தமிழகம் வந்துபோன செய்தி
இலக்கியத்தில் நாம்படித்த துண்டு.

யா
யார்யாரோ சந்திப்பார் நண்பராக மாறுவார்!
கால  விளையாட்டைப் பார்.

யி
பயிர்பச்சை நீரின்றி காய்ந்துபோனால்  பாரில்
உயிரினங்கள்  தத்தளிக்கும் ! சாற்று.

யு
யுத்தம் அணுயுத்தம் ஆகிவிட்டால் புல்பூண்டு
மக்களும் மிஞ்சமாட்டார் கூறு.

யூ
யூகங்கள் ஏமாற்றும்!  தப்பாய் வழிகாட்டும்!
யூகத்தின் மெய்ப்பொருள் காண்.

யெ
தாயென்ன  திட்டினாலும் சேய்கள் மறந்துவிட்டுத்
தாயிடம் ஓடிவரும் பார்.

யே
ஈயேன் என்றெண்ணிச் சேர்த்துவைத்த செல்வங்கள்
போவேன்  என்றுபோகும் போ.

யை
மாயை எனத்தெரிந்தும் வீழ்ந்து துடிக்கின்றார்!
மாயைக்  கவர்ச்சி தவிர்.

யொ
காயென்றால் வன்சொல்! கனியென்றால்  இன்சொல்தான்!
காயைத் தவிர்ப்பதே பண்பு.

யோ
யோகிகள் போகவாழ்வைத் தள்ளமாட்டேன் என்றேதான்
போகிகளாய் வாழ்தல்  தவறு.

யௌ
யௌவனம்-- இளமை

யௌவனத்தில் ஆக்கபூர்வ ஆற்றலைப் பண்படுத்து!
அவனியில் முன்னேற்றம் உண்டு.

Wednesday, October 12, 2016

மனக்குறள்

அகரவரிசைமதுரை! தமிழ்வளர்க்கும் தூங்கா நகரம்!
நறுமண மல்லிகை ஊர்.

மா

மாசற்ற உள்ளம் அமைந்துவிட்டால் வாழ்விலே
ஈடற்ற செல்வம் அது.

மி

மிகைப்படுத்திச் சொல்லும் குணம்தான் வதந்தி!
புகைந்தால் அழிவைத்  தரும்.

மீ

மீன்விழியாள் தண்ணீரில் தன்விழியைப் பார்த்தபோது
மீன்தானோ என்றாள் வியந்து.

மு

முன்னணியின் பின்னணியில் ஆணுக்குப் பெண்ணிருப்பாள்!
பெண்ணுக்கோ ஆணிருப்பா னா?

மூ

மூக்குள்ள மட்டும் சளியிருக்கும்! இல்லறத்தில்
தாக்குவதும் தாங்குவதும் வாழ்வு.

மெ

மெட்டி ஒலிகேட்டால் உள்ளம் மயங்கிவிடும்!
அப்பப்பா! என்னமாயம்? சொல்.

மே

மேலோட்ட மாக எதையுமே நம்பாதே!
ஆழமாக ஆய்ந்தறிந்து நம்பு.

மை

மையிட்டால் கண்ணுக்குள் உள்ள தலைவனுக்கு
மைதான் இடையூறோ! சொல்.

மொ

மொட்டு, படிப்படியாய்த் தான்மலரும்! முன்னேற்றம்
அப்படித்தான் வாழ்விலே! சொல்

மோ

மோதலுக்கு மோதலோ வன்முறையைத் தூண்டிவிடும்!
மோதுகின்ற போக்கைத் தவிர்.

மௌ

மௌனம் மனதில் அமைதியை உண்டாக்கும்!
மௌனமே ஞானத்தின் வித்து.


மனக்குறள்

அகரவரிசைபயன்படும் நல்ல  பழமரம்போல் வாழ்ந்தால்
உலகமே வாழ்த்தும் மகிழ்ந்து.

பா

பாட்டியும் தாத்தாவும் பேரனுக்கும் பேத்திக்கும்
ஆட்டிவைக்கும் பொம்மைதான் பார்.

பி

பிடிமானம் இல்லாத வாழ்க்கையில் ஏக்கம்
நொடியை யுகமாக்கும்! சொல்.

பீ

பீடுநடை போட்டேதான் வாழ்வதற்கு நல்லொழுக்கம்
பாடுபொருள் ஆகவேண்டும் இங்கு.

பு

புகழ்ந்தாரா ?ஏற்போம்! இகழ்ந்தாரா? ஏற்போம்!
அகத்தில் சமநிலை கொள்.

பூ

பூட்டுகள் வீட்டிற்குப் போடாதே! நாவிற்குப்
பூட்டுபோடு! நிம்மதி உண்டு.

பெ

பெருந்தன்மை கோழைத் தனமல்ல! தாயே!
பெரும்புகழின் வீரம் அது.

பே

பேச்சிங்கே பேச்சாக உள்ளமட்டும் ஒன்றுமில்லை!
பேச்சுக்குப் பேச்சு பகை.

பை

பைங்கொடி கொம்பொன்றைத் தேடியது! பாரிவள்ளல்
தன்தேரைத் தந்தான் உவந்து.

பொ

பொன்பொருள் கொடுத்தால்தான் பெண்ணெடுப்பேன்  என்றுரைக்கும்
சண்டித் தனந்தன்னைச் சாடு.

போ

போதைக் கடிமையாய் மாறிவிட்டால் இல்லறப்
பாதை இருள்மயந் தான்.

பௌ

பௌர்ணமி வெண்ணிலவைக் காட்டித்தான் தாயிங்கே
தெள்ளமுதை ஊட்டுவாள் சேய்க்கு.உணர்ந்தால் நல்லது

நடைமுறை வேறு! திரைமுறை வேறு!
இடைவெளி என்ன? புரியாமல் வாழ்வைப்
படைக்கள மாக்கி பகடைக்கா யானார்!
நடைமுறையே உண்மை! உணர்.

துற!

விரும்புவதும்  இல்லை! விலகுவதும் இல்லை!
விருப்பத்தை நாளும் துறந்தாலே போதும்!
நெருங்காது துன்பம்! பிறழாதே உள்ளம்!
விருப்ப வெறிதானே நோய்!

Monday, October 10, 2016

மனக்குறள்

அகரவரிசைநடைமுறை வேறு! திரைமுறை வேறு!
நடைமுறைக்கு மாறு! திருந்து.

நா

நாடுகளைத் துண்டாடும் தீவிர வாதத்தைக்
கோடுபோட விட்டால் அழிவு.

நி

நிறைகளை ஏற்றுக் குறைகளைத் தள்ளி
நிறைவுடன் வாழ்தல் சிறப்பு.

நீ

நீலவானம் மேகம் நிலவு கடலலைகள்
பேரழகுச் சித்திரந்தான் பார்.

நு

நுங்கிரண்டைக் கம்பால் இணைத்துச் சிறுவர்கள்
வண்டி உருட்டுவார் இங்கு.

நூ

நூற்கடலின் கல்வி அமுதச்  சுவைமுன்னே
பாற்கடலின் தேனமுதம் வேம்பு.

நெ

நெற்றிப் பசலையோ ஏந்திழையாள் ஏக்கத்தை
எக்காளம் ஊதியது காண்.

நே

நேருக்கு நேரிங்கே பேசித் தெளிந்துவிட்டால்
தேருலாதான் ஒற்றுமைக்கு! செப்பு.

நை

நைல்நதிப் பேரழகி துன்பியல் வாழ்க்கையால்
நைல்நதியில் கண்ணீர்ப் பெருக்கு.

நொ

நொந்துபோகும் வண்ணம் புறணிபேசும் மாந்தர்கள்
பண்பிழந்து வாழும் பதர்.

நோ

நோயில் படுத்த படுக்கையாய் ஆகிவிட்டால்
பார்க்கத் தவிர்ப்பார் விளம்பு.

நௌ

( நௌவி--- மான்)

நௌவியைக் காட்டித்தான் சீதையோ வேண்டுமென்றாள்!
கௌவியது சோதனை! கூறு.

மனக்குறள்தன்னல வல்லூறாய் வட்டமிட்டு வாழ்ந்திருந்தால்
நிம்மதி கிட்டா துனக்கு.

தா

தாழ்வு மனப்பான்மை தங்க அனுமதித்தால்
வாழ்க்கை இருண்டுவிடும் பார்.

தி

திருக்குறளை வாழ்வின் பொதுமுறை யாக்கு!
இருள்மாசு நீங்கும் உணர்.

தீ

தீப்புண் குணமாகும் கண்மணியே! சொற்களால்
தாக்கியபுண் ஆனது பார்.

து

துப்பாதே மானிடனே கண்ட இடங்களிலே
அப்பப்பா நோய்தாக்கும் சொல்.
தூ

தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்
ஏற்றமுண்டு நேர்வழியில் செல்.

தெ

தென்னைக்கு நாமிங்கே என்னநீர் ஊற்றினாலும் நன்றியுடன்
தென்னை இளநீர் தரும்.


தே

தேக்கிவைக்கும் செல்வம் அறவழிக்கே! மறவழியா
காற்றில் சருகாகும் காண்.

தை

தைமாதம் பொங்கலிட்டு நன்றிசொல்வார் பைந்தமிழர்!
உய்வதற்கு ஏணி அது.
தொ

தொண்டுள்ளம் கொண்டவரை மண்ணகம் வாழ்த்திநிற்கும்!
பண்பின் சிகரம் இது.
தோ

தோல்வியும் வெற்றியும் வாழ்வின் இயல்புகள்!
தாயின் சமநிலை கொள்.
தௌ

(தௌவல்--- இளமை)

தௌவல் பருவத்தில் கற்றுத் தெளிந்துவிட்டால்
அல்லலின்றி வாழலாம் இங்கு.

Saturday, October 08, 2016

மனக்குறள்

அகரவரிசைபிணக்குகள் வந்தால் புறக்கணிக்க வேண்டும்!
இணக்கமே நிம்மதிக்குத் தூது.

ணா

மணாளனோ வாழ்வில் சரியில்லை என்றால்
குணவதி என்செய்வாள்?கூறு!

ணி

ஏணியாக மற்றவர்க்குத் தோள்கொடுத்தால் வாழ்துவார்கள்!
ஏணியாக வாழ்தல் சிறப்பு.

ணீ

தண்ணீரில் சென்றாலும் தண்ணீரைக் கேட்டாலும்
நம்மைத்தான் தாக்குகின்றார் பார்.
ணு

அணுவளவு நன்மையைச் செய்தாலும் அஃதைக்
மணங்களவாய் எண்ணி மகிழ்.

ணூ

கண்ணூறு (திருஷ்டி)

கண்ணூறு பட்டதென்று பூசணியைப் போட்டுடைப்பார்!
அங்கங்கே சாலை விபத்து.

ணெ

எண்ணெயைத் தேய்த்துச் சனிதோறும் நீராடச்
சொன்னவள் அவ்வைதான் அன்று.

ணே

கண்ணே! கலையழகே! என்றெல்லாம் தன்மழலைப்
பிஞ்சைத்தான் கொஞ்சிடுவாள் தாய்.

ணை

அணைகட்டி நீர்தடுப்பார்! வான்மழை கொட்டி
அணைதிறக்க வைத்துவிடும் பார்.

ணொ

கண்ணொடு கண்ணோக்கும் காதலர் மெய்மறப்பார்!
அந்தநேரம் வாய்ச்சொல் எதற்கு?

ணோ

மண்ணோடு மண்ணாக மக்கிவிடும் வாழ்விது!
கண்மணியே உட்பகை ஏன்?

ணௌ

ணௌவு! தெலுங்கில் சிரிப்பாம்! தமிழகரம்
ணௌவெழுத்தை ஏந்துதம்மா பார்.

மனக்குறள்

அகரவரிசைடம்ப மகுடிக் கேற்றவண்ணம் ஆடுவது
வம்பிலே சிக்குவதற் கே.

டா

டாடியென்றும் மம்மியென்றும் ஆங்கிலத்தில் கூப்பிடாதே!
ஈடில்லா செந்தமிழால் கூவு.

டி

Henry de Wick in 1368

டிக்டிக் கடிகாரம் தட்டி எழுப்பினாலும்
வெட்டியாகத் தூங்குகின்றார் பார்.

டீ

டீக்கடையில் உட்கார்ந்து நாழிதள்கள் செய்திகளை
டீக்குடித்(து) அலசிடுவார் பார்.

டு

டும்டும் திருமணம் இல்லற வாழ்க்கைக்கே
நன்னெறியைக் காட்டும் உணர்.

டூ

டூவிடுவார்! டூவை மறந்துவிட்டு பேசிடுவார்!
பாரில் குழந்தை இயல்பு.

டெ

டெங்கு, மலேரியா நோய்கள் கொசுக்களால்தான்!
தண்ணீரைத் தேங்காமல் பார்.

டே

டேய்டேய்! கணவனைக் கூப்பிடும் பண்பிதுவாய்ப்
போய்விட்ட சீரழிவைப் பார்.

டை

டைகட்டும் மேல்நாட்டுப் பண்பைத் தொடர்கின்றோம்!
டைநமக்குத் தேவையா? சொல்.

டொ

டொக்டொக்! ஒலியெழுப்பி அந்தகர் சென்றிருந்தார்!
கட்டையும் நம்பிக்கையும் கண்.

டோ

டோப்பா! மறைத்தாலும் இங்கே கழற்றிவிட்டால்
காட்டிவிடும் மெய்த்தோற்றம் காண்.

டௌ

டௌனிங் தெருவில்தான் இங்கிலாந்து நாட்டின்
பிரதமரின் இல்லம் இருக்கு.

மதுரை பாபாராஜ்

Friday, October 07, 2016

ஙே
ஙேஙே எனவிழித்து வாழாதே! அத்தகைய
ஙேஙே விழிப்பைத் தவிர்ஞமலியைப்போல் நன்றி யைக் காட்டலாம்! ஆனால்
மனதால் அடிமை, தவிர்.

ஞா

ஞானச்  செருக்கோ  இருக்கலாம்!  ஞாலத்தில்
ஈனச் செருக்கோ இழிவு.

ஞி

ஞிமிறு -- வண்டு

ஞிமிறு மலர்விட்டு வேறொன்றை நாடும்!
ஞிமிறுபோல்  நாமா?  திமிர்.

ஞீஞுஞூஞைஞோஞௌ

ஞிஞுஞூ  ஞைஞோஞௌ  என்றே  அகர
அணியில் திளைக்கிறது  காண்.

ஞெ( ஞெகிழம்--சிலம்பு)

ஞெகிழத்தால்  கோவலன்  மாண்டான்!  மதுரை
தகித்தது  கண்ணகி  யால்.

ஞே ( ஞேயம்--- அன்பு)

ஞேயம்  எலும்பையும்  இங்கே  உருக்கிவிடும்!
ஞேயமே  வாழ்வுக்கு  வேர்.


ஞொ ( ஞொள்ளுதல்-- அஞ்சுதல்)

ஞொள்ளுதல்  என்பதைத்  தீமைகள்  செய்வதற்(கு)
இவ்வுலகில்  பின்பற்று  நீ.

ஙே
ஙேஙே எனவிழித்து வாழாதே! அத்தகைய
ஙேஙே விழிப்பைத் தவிர்ஞமலியைப்போல் நன்றி யைக் காட்டலாம்! ஆனால்
மனதால் அடிமை, தவிர்.

ஞா

ஞானச்  செருக்கோ  இருக்கலாம்!  ஞாலத்தில்
ஈனச் செருக்கோ இழிவு.

ஞி

ஞிமிறு -- வண்டு

ஞிமிறு மலர்விட்டு வேறொன்றை நாடும்!
ஞிமிறுபோல்  நாமா?  திமிர்.

ஞீஞுஞூஞைஞோஞௌ

ஞிஞுஞூ  ஞைஞோஞௌ  என்றே  அகர
அணியில் திளைக்கிறது  காண்.

ஞெ( ஞெகிழம்--சிலம்பு)

ஞெகிழத்தால்  கோவலன்  மாண்டான்!  மதுரை
தகித்தது  கண்ணகி  யால்.

ஞே ( ஞேயம்--- அன்பு)

ஞேயம்  எலும்பையும்  இங்கே  உருக்கிவிடும்!
ஞேயமே  வாழ்வுக்கு  வேர்.


ஞொ ( ஞொள்ளுதல்-- அஞ்சுதல்)

ஞொள்ளுதல்  என்பதைத்  தீமைகள்  செய்வதற்(கு)
இவ்வுலகில்  பின்பற்று  நீ.

Thursday, October 06, 2016

அகரவரிசை

மனக்குறள்சலனமற்ற உள்ளம் சமநிலையின் ஊற்று!
களங்கமற்ற ஞானத்தின் கூடு்.


சா

சான்றோரைச் சீண்டுகின்ற ஈனமனப் பித்தரை
வீணரெனச் சாடு நிமிர்ந்து.

சி

சிரிப்பு ! மனிதனுக்கு மட்டுமுள்ள வாய்ப்பு!
சிரிப்பே முகத்தின் அழகு.
சீ

சீற்றமும் துள்ளும் சினமும் மனிதனைக்
காட்டு விலங்காக்கும் காண்.
சு

சுரவழி சென்றான்! வரும்வழி பார்த்துக்
கலங்கித் தவித்திருந்தாள் மாது.


சூ

சூசகமாய்த் தென்றலேநீ ஏக்கத்தை ஏந்தலிடம்
காதருகில் சொல்வாயா? கூறு.


செ

செம்மண்ணில் மாரி கலந்ததுபோல் காதலர்
அன்பில் கலந்திடுவார் இங்கு.

சே

சேர்க்கை சரியில்லை என்றால் குணம்மாறி
வாழ்க்கையும் பாழாகும் பார்.

சை

சைகை மொழியால் தகவல் தெரிவித்தார்
பைந்தமிழே! நம்முன்னோர் தான்.

சொ

சொத்தைக் குறிவைத்து வாழ்கின்ற வாழ்க்கையில்
முட்டப் பகைவளரும் கூறு.

சோ

சோதனையின் கொம்பொடித்தால் வேதனைகள் நீங்கிவிடும்!
சாதனையாய் மாற்றிடலாம் சாற்று.

சௌ

சௌந்தரம்! என்றால் புறஅழகா? உள்ளழகு!
பண்பின் ஒழுக்கம் அழகு.

Wednesday, October 05, 2016

மனக்குறள்

கு

குறுக்குவழி வாழ்க்கை உளைச்சலைத் தூண்டும்!
உறுத்தலில் ஆட்டுவிக்கும்! பார்.

கூ

கூழெனினும் தன்னுழைப்பால் வந்தால் அமுது!
பாலெனினும் மற்றவழி நஞ்சு.கெ

கெடுதிகள் செய்தால் கெடுதிகள்  நேரும்!
கெடுமதி நிம்மதிக்குக் கேடு.

கே

கேழ்வரகில்  நெய்யொழுகும்  என்றாலும்  நம்புவதா?
தோழா!  பகுத்தறிவை  நம்பு.

கை

கைகால்கள்  நன்றாக  உள்ளவரை  சூழ்ந்திருப்பார்!
வையகத்தில்  இயங்குமட்டும்  வாழ்வு.
கொ
கொக்கோ உறுமீன் வருமட்டும் காத்திருக்கும்!
அப்படித்தான் வாய்ப்புகளை நாடு


கோ

கோடி மயக்கும்! மயங்கித்தான் பண்பிழந்தால்
கோடிக்குச்  செல்வோம்  நசிந்து
கௌ

கௌரவமாய்  வாழ்ந்தவர்கள்  ஏழ்மையின்  நண்டுகள்
கௌவியதால்  பாழானார்  பார்.


ஙப்போல்  வளைந்து  பணிவுடன்  வாழ்ந்தால்
எப்போதும்  நன்மதிப்பு  தான்

Tuesday, October 04, 2016

மனக்குறள்

அகரவரிசை


அவமானந் தன்னை வெகுமான மாக்கும்
உயர்மனப் பக்குவத்தைப் போற்று.


ஆசை! வரம்புகளை மீறினால் பேராசை!
நீசனாக்கிப் பார்க்கும் நகைத்து.


இன்சொற்கள் உள்ளத்தைப் பண்படுத்தும் தென்றலாகும்!
வன்சொற்கள் வன்புயல்தான் பார்.


ஈன்றெடுத்த பெற்றோர் நடமாடும் தெய்வங்கள்!
தூண்டித் துலங்கவைப்பார்! சாற்று.


உறவில் விரிசலா? உட்பகையைத் தூண்டும்!
உறவுகளைத் தக்கவைக்கப் பார்.எழுசீர்க் குறள்கள் பொதுமுறை யாகும்!
வழுவாமல் பின்பற்றி வாழ்.

ஏற்றமா?துள்ளாதே! தாழ்வா? துவளாதே!
மாற்றத்தில் பக்குவம் கொள்.

ஐம்புலனை எண்சான்தான் ஆளவேண்டும்! எண்சானை
ஐம்புலன்கள் ஆள்தல் இழிவு.ஒழுக்கமற்ற கல்வி உழவற்ற தேசம்
இருந்தும் பயனென்ன? செப்பு.


ஓட்டை விழுந்த மரக்கலமும் சோம்பேறிக்
கூட்டமுள்ள இல்லறமும் ஒன்று.


ஔவியம் பேசும் இழிகுணம் கொண்டவர்கள்
இவ்வுலக வாழ்வின் பதர்.

எஃகுவாளா? புல்கட்டா? வல்லவ னாயிருந்தால்
எப்படியும் வென்றிடலாம் இங்கு.கண்டபடி வாழ்வதை விட்டுவிட்டு நல்லொழுக்கப்
பண்புடன் வாழ்தல் சிறப்பு.
கா

காசுபணம் நல்வழியில் வந்தால் நிலைத்திருக்கும்!
மாசுவழி என்றால் இழிவு.

கி

கிளைகளென்னும் சுற்றம் படரவைத்துப் போற்று!
களைகளென்னும் வன்பகையை நீக்கு.
கீ

கீழ்த்தர எண்ணங்கள் உள்ளத்தைப் பாழாக்கும்!
போர்க்கள மாக்கும் உணர்.

கு

குறுக்குவழி வாழ்க்கை உளைச்சலைத் தூண்டும்!
உறுத்தலில் ஆட்டுவிக்கும்! பார்.
கூ

கூழெனினும் தன்னுழைப்பால் வந்தால் அமுது!
பாலெனினும் மற்றவழி நஞ்சு.

Sunday, October 02, 2016

குழந்தை மனம்

பாட்டியும்  தாத்தாவும் என்னதான்  நாள்தோறும்
ஊட்டி  வளர்த்தாலும் பெற்றோரைப்  பார்த்ததும்
பிள்ளைகள்  பாய்ந்தோடிக் கட் டி  உறவாடும்!
கள்ளமற்ற  அன்பினைப்  பார்.

உன்னைத் திருத்து!

உனது நிழலைத் திருத்து முதலில்!
மனமே! உலக உருவைத் திருத்தும்
நினைவெதற்கு? உன்னுள்ளே ஓட்டைகள்! நீயேன்
கணைதொடுத்தாய் மற்றவர் மேல்?


கல்கத்தாவில் நடந்த
உண்மை நிகழ்வு
1947 ஆகஸ்டு 13 ஆம் தேதி

" நீங்கள் எனது ஒரு மனித இராணுவப்படை! தயவு செய்து
கல்கத்தாவுக்குச் செல்லுங்கள்" என்று கூறினார் மவுண்ட்பேட்டன் .
 ஷகீத் சுஹ்ரவர்த்தியும்கேட்டுக் கொண்டார்.

குண்டு துளைக்காத மேடை! துணிச்சலாக
இன்று  முழங்கும் தலைவரின் வீர உரை!
அன்றோ ஒருமனித ராணுவமாய் காந்தியண்ணல்
வன்முறையைக் கட்டவிழ்த்த கும்பலுக்கு மத்தியிலே
தன்னந் தனியாகத் தானே நடந்துசென்றார்!
வன்சொற்கள் கூச்சல்! எறிந்தனர் கற்களை!
அன்பென்னும் ஆயுதம் ஏந்தி  மனவலிமை
ஒன்றே துணையாக சென்றார்!! உரைகேட்டு
தங்களது ஆயுதத்தை போட்டனர் மண்மீது!
அண்ணலைப்போல் யாருளார்? இன்று.


நல்லது!

மறதி, பெருந்தன்மை இவ்விரண்டும் வாழ்வில்
சிறகடிக்கும் உட்பகையை நீர்த்துவிடச் செய்யும்!
உறவாடும் பண்பைப் புறக்கணித்தால் நம்மை
பதறவைத்துப் பார்த்திருக்கும் பார்.


வள்ளுவமே வாழ்வு!

வள்ளுவம் கூறும் அறம்பொருள் இன்பத்தைத்
தெள்ளத் தெளிவாய்க் கடைப்பிடித்தால் என்றென்றும்
இல்லறம் நிம்மதியைக் கண்டு நிலைத்திருக்கும்!
உள்ளம் மகிழும் திளைத்து.


கடமையே இலக்கு!

புகழ்ந்தாலும் நம்மை இகழ்ந்தாலும் என்றும்
அகத்திலே ஏற்கின்ற பக்குவத்தைப் பெற்றே
கடமையை இங்கே இலக்காக்கி வாழ்வோம்!
படைபோல முன்னேறப் பார்.


மனமே காரணம்

எல்லாம் இருக்கிறதே! ஆனால் எதுவுமில்லை
நாளையென்( று)ஏங்கியே எங்கெங்கோ தேடுகிறான்!
எதுவுமே இங்கில்லை! வாழ்வை நகர்த்துகிறான்!
இன்றில்  மகிழ்ச்சியாக ஒன்றித் திளைக்கின்றான்!நிம்மதி எங்கே?

அடுக்கக வீடுகளில் நள்ளிரவு நேரத்தில்
படுத்தாலும் தூக்கமின்றி வாழ்கின்ற மாந்தர்கள்!
அடுக்கக சாளரத்தில் விளக்கொளி அங்கங்கே!
துடுப்புண்டு! ஓடமுண்டு! நிம்மதி ஆழியில்லை!

நிம்மதி இங்கே

ஓலைக் குடிசையிலே படுக்க இடமில்லை
காலை மடக்கித்தான் கைகளைத் தலையணையாய்
ஆக்கித்தான் நிம்மதியாயத் தூங்குகின்றார்! கண்மணியே!
ஏக்கமில்லை தாக்கமில்லை நிம்மதிக்குப் பஞ்சமில்லை!

தீவிர வாதிகளுக்குப் பதிலடி!

இந்தியரின்  இன்னுயிரைப் பந்தாடிப் பார்க்கின்றாய்!
இன்னுமா கைகட்டி வேடிக்கை பார்க்கவேண்டும்?
எங்கள் பதிலடி தாக்குதலைப் பார்த்தாயா!
உன்னை,பகைப்புலத்தைத் தூசியாக ஊதிடுவோம்!
இந்தியர்கள் எல்லாம் இமயம்போல்  நின்றெழுவோம்!
இந்தியாவைக் காப்போம் திரண்டு.