Wednesday, September 21, 2011

பெருமையும் சிறுமையும்

============================
அன்பே நமக்குப் பெருமை!
அகந்தை நமக்குச் சிறுமை!

ஆற்றல் நமக்குப் பெருமை!
ஆத்திரம் நமக்குச் சிறுமை!

இனிமை நமக்குப் பெருமை!
இகழ்தல் நமக்குச் சிறுமை!

ஈகை நமக்குப் பெருமை!
ஈனம் நமக்குச் சிறுமை!

உழைப்பே நமக்குப் பெருமை!
உட்பகை நமக்குச் சிறுமை!

ஊக்கம் நமக்குப் பெருமை!
ஊழல் நமக்குச் சிறுமை!

எளிமை நமக்குப் பெருமை!
எள்ளல் நமக்குச் சிறுமை!

ஏற்றம் நமக்குப் பெருமை!
ஏய்த்தல் நமக்குச் சிறுமை!

ஐம்புலன் நமக்குப் பெருமை!
ஐயம் நமக்குச் சிறுமை!

ஒழுக்கம் நமக்குப் பெருமை!
ஒழுங்கீனம் நமக்குச் சிறுமை!

ஔவை நமக்குப் பெருமை!
ஔவியம் நமக்குச் சிறுமை!

பெருமை வளர்த்தல் கடமை!
சிறுமை வளர்த்தல் மடமை!

Sunday, September 18, 2011

எதற்கும் தீர்வுண்டு!

======================
சிக்கல்கள் வந்து கதவை இடித்தாலும்
அச்சமின்றி ஞானியைப்போல் நல்லமைதிக் கோலத்தில்
துச்சமென்றே சந்தித்தால் இங்கே எரிமலையும்
பட்டென்று நீர்த்துவிடும் பார்.

எரிமலையா! நீயோ அருவியாக மாறு!
அழிக்கவரும் காற்றா? பொறுமைக்கு மாறு!
தவிக்கவைகும் வெள்ளமா? நீச்சலுக்கு மாறு!
வழியுண்டு! தீர்வுண்டு! சொல்.

Wednesday, September 07, 2011

திருப்புமுனையா?நெருப்புமுனையா?

========================================
திருமணம் என்பது வீட்டுக்கு வீடு
திருப்பு முனையா? நெருப்பு முனையா?
திருப்புமுனை யாக்கல், நெருப்புமுனை யாக்கல்
இரண்டுமே நம்கையில் தான்.