Monday, April 29, 2024

மனைமாட்சி

 மனைமாட்சி!


கணவன் மனைவி இருவேறு திக்கில்

தினமும் பயணம்! குழந்தைகள் பாவம்

அனலில் புழுவாய்த் துடித்தேதான் வாழ்வார்!

இணையர் பொறுப்பை உணர்ந்தே நடந்தால்

மனையில் குழப்பமில்லை சாற்று.


மதுரை பாபாராஜ்


குரோவ் அடுக்ககம்


 

Sunday, April 28, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நீங்கள் தயாராக இல்லாத போதிங்கே
பார்த்தால் இயல்பான சூழல் கடினமாகத்
தோன்றும்! எனவேதான் நீங்கள் தயாராக
நாளும் இருக்கவேண்டும் சொல்.

மதுரை பாபாராஜ்

Saturday, April 27, 2024

வாழ்க்கை


 வாழ்க்கை!


பழகிக் களிப்போம்! விலகித் தவிப்போம்!

இரண்டும் கலந்ததே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

வேலையோ வேலை

 வேலையோ வேலை!


23.04.24


மேல்வேலை செய்பவர் இன்று வரவில்லை!

நான்பார்த்துக் கொள்கிறேன் என்றே தொடங்கினேன்!

மாடிக்கு  மெத்தை உறைகளோ மூன்றையும்

கொண்டுசென்றேன்! அங்கே  கொடியில்  மிதியடிகள்!

மற்றும் பழைய துணிகளும் துண்டுகளும்

தொங்க அதையெல்லாம் வாளியிலே போட்டேதான்

மெத்தை உறைகளைக் காய்வதற்குப் போட்டுவந்தேன்!

அப்பப்பா வேலையைப் பார்.


துண்டுகள் மற்றும் துணிகளை நன்றாக

அங்கே அடுக்கினேன்! பார்த்தேன் மலைத்திருந்தேன்!

இங்கேதான் இப்படி! பானுதான்  வந்தாரோ!

பல்வலி என்று வரவில்லை! பாவமென்றே

என்னால் முடிந்த கரண்டிகள் பாத்திரத்தை

நன்றாய்க் கழுவியே வைத்துவிட்டேன்! அப்பாடா!

என்றேதான் மூச்சுவாங்க நின்று.


மதுரை பாபாராஜ்

Friday, April 26, 2024

கீழே விழுந்தேன்

 தள்ளிவிட்டார் விழுந்தேன்!


கல்லெறிந்தார் நான்பொறுத்தேன்! சொல்லெறிந்தார் நான்பொறுத்தேன்!

வில்லால் கணையெறிந்தார் நான்பொறுத்தேன்! உள்ளத்தை

முள்ளெனுத்துக் கீறுகின்றார் நான்பொறுத்தேன்! இன்னுமென்ன?

தள்ளிவிட்டார் நான்விழுந்தேன் இங்கு.


மதுரை பாபாராஜ்

From friend BSNL RAMASAMY


 TOM AND JERRY

ALWAYS HAPPY

CHASING EACHOTHER

WITH HIDE AND SEEK

PRANKS AND BECOME LAUGHING STOCK!

CHILDREN TO ELDERS

USED TO ENJOY ALWAYS!


BABA

Thursday, April 25, 2024

பிறன் இல் விழையாமை


 

அடக்கம் உடைமை குழந்தைப் பாடல்


 

ஒழுக்கம் உடைமை குழந்தைப்பாடல்


 

Tuesday, April 23, 2024

நண்பர் சுந்தரம்


 நண்பர் சுந்தரம் அனுப்பியதற்குக் கவிதை!


குழந்தையைக் கொஞ்சுகின்ற தாயின் சிலையால்

அழகாக காலை வணக்கத்தைக் கூறும்

உளங்கவர் நண்பரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

நண்பர. எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மனதில் எவைகள் இருக்கின் றனவோ
அவைகளோ நம்முடைய கட்டுப்பாட் டில்தான்
இருக்கிறது! எண்ணங்கள் எப்படி இங்கே
மனதையே கட்டுப் படுத்துதோ அந்த
நிலைகளும் நம்வசந்தான் பார்.

மதுரை பாபாராஜ்

Monday, April 22, 2024

தனிமை

நண்பர் தென்காசி கிருஷ்ணன் கைவண்ணம்

 வாழ்வே தனிமைதான்!


வானொலி வந்தது! கேட்டு மகிழ்ந்திருந்தோம்!

வானொலி சென்று தொலைக்காட்சி வந்தது!

காணக் கிடைக்காத காட்சிகளைக் கண்டிருந்தோம்!

வாழ்க்கைப் பரபரப்பில் கைபேசி வந்தது!

ஆள்களின் கைகளில் கைபேசி! மூழ்கிவிட்டோம்!

ஆளுக் கொருமூலை நின்றேதான் பேசுகின்றோம்!

வீட்டில் இருந்தாலும் கைபேசி கையுமாய்

பாட்டிமுதல் இங்கே குழந்தைவரை இன்றிங்கே

வாழ்வே தனிமைதான் பார்.


மதுரை பாபாராஜ்

KRS KARAIKUDI:

தனிமையில் இனிமை காண முடியுமா என்ற கேள்விக்கு பதில் கை பேசி

நண்பர் இசக்கிராஜன் திருச்சி

கைபேசியும் போய் முகம் பார்த்து

வாயால் பேசும் வசந்தநாள் மீண்டும் வந்திடும் பார் ஒரு நாள்.


நண்பர் அன்பு வரைந்த ஓவியத்திற்குக் கவிதை


 👌🙏

நண்பர் அன்பு வரைந்த ஓவியத்திற்குக் கவிதை!


நூல்களைக் கற்றால் அறியாமை நீங்கிவிடும்!

நூலோர் அவையில் துணிந்தேதான் பேசலாம்!

நாலுதிக்கு சென்றே சிறப்புகள் சேர்க்கலாம்!

நூல்களே வாழ்வின் ஒளி.


மதுரை பாபாராஜ்

அழகர் திருவிழா பழைய நினைவு


மருமகள் சத்யாவின் கைவண்ணம் இன்று


 [23/04, 06:48] Madurai Babaraj: அழகர் திருவிழாவுக்குச் சென்றுவந்த நினைவு!

பாக்யம் பாட்டி--எங்கள் குடும்பம்-- அழகர்சித்தப்பா குடும்பம்--பத்மா சித்தப்பா குடும்பம்!

அந்தக்காலத்தில் மதுரை மோதிலால் இரண்டாம் தெருவில் இருந்து பாக்யம் பாட்டி தலைமையில் நாங்களும்,பத்மா சித்தப்பா குடும்பமும்,அழகர் சித்தப்பா குடும்பமும் சேர்ந்து அதிகாலையில் சிம்மக்கல் நோக்கி நடப்போம். கூட்டத்துடன் கூட்டமாக செல்வதே மகிழ்ச்சிதான். வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை் பார்த்துவிட்டு நடந்தே திரும்புவோம். வரும் வழியில் மாடர்ன் கபேயில் ஆளுக்கொரு காபி குடிப்போம். நீர்ப்பந்தல் மோர்ப்பந்தல் என்று ஒரே அமர்க்களந்தான்.

இன்று நினைத்தாலும் இனிக்கிறது.

மீண்டும் வருமா?

மதுரை பாபாராஜ்

[23/04, 06:59] Saravananddl: இனிய நினைவுகள் மட்டுமே மிஞ்சுகிறது. ஆளுக்கொரு பாதையிலே பயணம். ஒரு குடும்பம் ஒன்று சேருவதே பெரும் பிரயத்தனம். சேர்ந்தாலும் செல்லிடப்பேசியே பிரதானம். மீண்டும் வாய்ப்பு வருவது கனவுதான்.

Sunday, April 21, 2024

நண்பர் மொகலீஸ்வரன்


 நண்பர் மொகலீஸ்வரன் வீட்டு மரத்தில் மாங்காய்கள்!


நண்பரின் வீட்டில் கிளிமூக்கு மாங்காய்கள்

கண்கவரத் தொங்குகின்ற காட்சி ரசித்திருந்தோம்!

கண்டதே நன்றாய்ச் சுவைக்கிறதே! நாமணக்க

உண்டால் சுவைக்கில்லை ஈடு


மதுரை பாபாராஜ்

குறள்மணம் விருதாளர் சீனி வரதராசன்


 நண்பருக்குக் குறள்மணம்  விருது வழங்கும் விழா!

ஞாயிறு 21.04.24

வாழ்த்தி மகிழ்கின்றேன்!

சீனி வரதராஜன் ஆற்றும் திருக்குறள்

வான்புகழ்த் தொண்டுகளைப் பாராட்டிக் கொண்டாடும்

கல்லைத் தமிழ்ச்சங்கம் தேர்ந்தளிக்கும் நல்விருதை

முல்லைக் குறுநகை வேந்தர் பெறுகின்றார்!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்

 

நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

கிடைக்கின்ற நேரத்தில் நீங்கள் பணியை
கடமையில் மூழ்கி முடிப்பது நன்று!
மகிழ்தலும் ஏற்பதுமே நன்று! உணர்வோம்!
அகமகிழ்ந்து வேலையைச் செய்.

மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நாள்தோறும் இப்போதும் அப்போது மாகத்தான்
ஏதேனும் இங்கே நடந்துகொண்டே உள்ளது!
வாழ்வின் செயலைக் கவரும்! சிலநேரம்
வாரிவிடும்! அந்தப் பதற்றத்தைக் கண்டுணர்ந்தே
ஏற்ற பணிமுடிக்கப் பார்.

மதுரை பாபாராஜ்

Saturday, April 20, 2024

தம்பியின் நடிப்புத் திறமைக்கு வாழ்த்து

நண்பர் தென்காசி கிருஷ்ணன் கைவண்ணம்

 தம்பி கெஜராஜ் நடிப்புத் திறமைக்கு வாழ்த்து!


பிறந்தநாள் தொட்டுப் படிப்படியாய்த் தம்பி

சிறப்புகளைக் கண்டு மகிழ்கின்ற. அண்ணன்!

சிறகன் படத்தில் திறமையைக் காட்டும்

உடன்பிறப்பு வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

Friday, April 19, 2024

புளோரா குடும்பத்தினருக்கு வாழ்த்து


  Flora: எங்கள் குடும்ப புகைப்படம் கடைசி தங்கை வளைகாப்பிற்கு போன மாதம் எடுத்தது ஐயா

 Flora: நால்வருமே இறைவன் அருளால் ஆசிரியப்பணியை தொடர்கிறோம்.... 

Madurai Babaraj: 

நால்வருக்கும் வாழ்த்து!

அகத்தில் அறிவைப் புகட்டியே நாளும்

அகத்தில் அறிவொளி யேற்றுகின்ற தொண்டை

மகத்தாக செய்தே மனமுவந்து வாழும்

சிறப்பான தொண்டுதனை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

புறாக்கூண்டும் அடுக்ககமும்



 புறாக்கூண்டும் அடுக்ககமும்!


புறாக்கூட்டம் தங்கித்தான் மண்ணகத்தில் வாழ

புறாக்கூண்டு வைப்பதுபோல் மாந்தர்கள் வாழ

அடுக்ககம் கட்டித்தான் வாழ்கின்றார் இங்கே!

புறாக்கூட்டம் தங்கள் அறைகளை விட்டே

பறப்பதுபோல் மக்களும் வீடுகளை விட்டே

புறப்பட்டுச் செல்கின்றார் இங்கு.


மதுரை பாபாராஜ்

Wednesday, April 17, 2024

காலையில் குரோவ் வளாகம்


 காலைப் பொழுதில் குரோவ் வளாகத்தில் கண்ட காட்சி!


காக்கைகள் மற்றும் புறாக்களும் பூனைகளும்

வீட்டுக்கு வீடிங்கே பாலுறைகள் போடுவோரும்

நாட்டமுடன் செல்லும் நடைப்பயிற்சி மேற்கொள்வோர்

வீட்டில் அலுவலகம் பள்ளி பரபரப்பும்

காற்றிலே சீறிவரும் வண்டிகள் போட்டியிட

காவலர்கள் மற்றும் பணியாளர் எல்லோரும்

ஆட்டிப் படைக்கின்ற கோலத்தில் காலைதான்

லூட்டி அடிப்பதைப் பார்.


மதுரை பாபாராஜ்


Monday, April 15, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


சேருமிடம் மட்டுமல்ல எப்போதும் நம்குறி!
போகும் பயணம் அதன்மகிழ்ச்சி
எல்லாமே
வாழ்க்கையின் சாரம் உணர்.

மதுரை பாபாராஜ்

Sunday, April 14, 2024

பேரன் வருணுக்கு வாழ்த்து


 பேரன் வருணுக்கு வாழ்த்து!


ஆர்வமுடன் பேரன் வருணிங்கே பாடுகிறான்!

கேட்க செவிப்பொறியை மாட்டி ஒலிப்பொறியில்

பாடுகின்ற காட்சியைக் கண்டே ரசிக்கின்றோம்!

பேரன் வருணைத்தான் வாழ்த்து.


பாபா தாத்தா

Friday, April 12, 2024

நண்பர் ஜெயச்சந்திரன்


 நண்பர் ஜெயச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்து!


நாளும் ஒருகுறளைப் பாடல் மணக்கவே
ஆர்வமுடன் இந்தக் குழுவில் பதிவுசெய்யும்
ஆர்வலர் நண்பர் ஜெயச்சந்ரன் நற்றமிழ்போல்
பார்போற்ற வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நேரம் வரும்பொழுது எல்லாம் நடந்துவிடும்!
யாரும் முயற்சிசெய்யக் கூடாது  என்றதற்கோ
அர்த்தமல்ல! நாமோ முயற்சிகள் செய்யவேண்டும்!
நம்மிலக்கை நோக்கி! உணர்.

மதுரை பாபாராஜ்

Thursday, April 11, 2024

நண்பர் பன்னீர் செல்வம்


 நண்பர் பன்னீர் செல்வத்திற்கு வாழ்த்து!


வெள்ளைக் கிளியனுப்பிக் காலை வணக்கத்தை

உள்ளத்தால் கூறுவதை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Monday, April 08, 2024

தலைமுறையின் நடைமுறை


 இன்றைய தலைமுறையின் நடைமுறை !


சிற்றுண்டி நேரம் மதியமாக, சாப்பாடு

உட்கொள்ளும் நேரம் மாலையாய் மாறிட

சுற்றில் இரவுநேர சாப்பாடோ நள்ளிரவாய்

முற்றும் மாறியதே இன்று.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஆயிர மாயிரம் வாய்ப்பும் வளங்களும்
நூற்றுக் கணக்கிலே உள்ளீடு தந்துதவ
தேடிவந்த போதும் செயல்களை நாமிங்கே
நாடி எடுக்கவேண்டும்! அந்த முயற்சிதான்
வாழ்வையே தீர்மானம் செய்யும்! உணர்ந்திங்கே
நாளும் செயல்படு நீ.

மதுரை பாபாராஜ்

Friday, April 05, 2024

ஐயா துரைசாமி திருவாசகம்


 ஐயா துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


வண்ணமலர் கீழே அணிவகுக்க வானவில்

வண்ணத்தை வானிலே சிந்திநிற்க வெண்மேகம்

நின்றே ரசித்திருக்க காலை வணக்கத்தை

நண்பர் அனுப்பினார் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Thursday, April 04, 2024

குறளும் என்குறளும்

 குறள் 1049: 

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பா டரிது

மு.வ உரை:

ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

என் குறள்:

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் உளைச்சல்

நெருக்கிடின் கண்பா டரிது.

மதுரை பாபாராஜ்

Wednesday, April 03, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மகிழ்ச்சி அமைதியை நாமே நமது
அகத்தில் உருவாக்கக் கூடும்! அதற்கு
நடைமுறை மூலமே நீங்கள்தான் என்று
உணர்ந்து விழிப்புணர்வு கொண்டால் மகிழ்ச்சி
அணையுடைத்த வெள்ளம்போல் வந்துசேரும் இங்கே!
மனதால் உணர்வாய் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

Tuesday, April 02, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

நம்மிடம் நேரம் இருக்கும் பொழுதிலே
அந்தநேரந் தன்னைச் சரியாய்ப் பயன்படுத்தும்
பக்குவம் வேண்டும்! தவறவிட்டால் கைவசம்
உள்ள செயலை முடிக்கத் திணறுவோம்!
என்றுமே நேரத்தை ஆள்.

மதுரை பாபாராஜ்

Monday, April 01, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


சாதனை யாளனுக்கோ ஓய்வுநாள் என்பதில்லை!
நாளும் இலக்குநோக்கி சாதிக்க
ஓடுவார்!
நாள்கள் அதிகமான உற்பத்தி அல்லது
சூழல் குறைவான உற்பத்தி யோடிருக்கும்!
தாரணியில் அவ்வளவே பார்.

மதுரை பாபாராஜ்