Saturday, February 28, 2015

சட்டென மற!
---------------
சொற்களால் புண்படுத்திப் பார்த்தால் செந்தமிழே!
சட்டையின் தூசியைத் தட்டிவிட்டுச் செல்வதுபோல்
சற்றும் சுமக்காமல் நீயும் உதறிவிடு!
எப்போதும் நிம்மதி உண்டு.

தப்ப முடியாது!
-----------------------
பொறுப்போ கடமையோ இங்கே எதையும்
ஒதுக்கி ஒதுங்க முடியாது! நாமோ
ஒதுங்கினால் வேறொரு சூழ்நிலை தோன்றும்!
பொறுப்பைச் சுமந்திருப்போம் அங்கு.

வீரமல்ல!
------------
பாரா முகமாக நாள்தோறும் உள்ளத்தில்
வீராப்பாய் வாழ்வது வீரமல்ல---தாரணியில்
இப்பிறவி வாய்ப்பைப் பயன்படுத்திச் சேர்ந்துவாழ
கற்பதே வீரம் உணர்.

Wednesday, February 25, 2015

துணிந்து நில்!
------------------
வாழ்க்கையின் சிக்கல்கள் வேகத் தடையாகும்!
வாழ்க்கை தடையின்றி வேகமாகச் செல்லுமென்றால்
நாளும் விபத்து நடப்பது நிச்சயம்!
வாழ்க்கைத் தடைகளைத் தாண்டு.

காக்கும் கரம்!
---------------------
பிறந்தவர் கோடிகோடி! வாழ்ந்தவர் கோடி!
இறந்தவர் கோடிகோடி! வாழ்பவர் கோடி!
பிறப்பவர் கோடி! இறப்பவர் கோடி!
இடங்கொடுக்கும் தன்னலமற்ற தொண்டை மட்டும்
தொடர்கின்ற மண்ணகமே! காக்கும் கரமே!
அகங்குளிரப் போற்றுகின்றோம் இங்கு.

காக்கும் கரம்!
---------------------
பிறந்தவர் கோடிகோடி! வாழ்ந்தவர் கோடி!
இறந்தவர் கோடிகோடி! வாழ்பவர் கோடி!
பிறப்பவர் கோடி! இறப்பவர் கோடி!
இடங்கொடுக்கும் தன்னலமற்ற தொண்டை மட்டும்
தொடர்கின்ற மண்ணகமே! காக்கும் கரமே!
அகங்குளிரப் போற்றுகின்றோம் இங்கு.

பொறுமையே வெற்றி!
---------------------------
இடிவிழுந்த போதும் சலனப் படாதே!
அடிவிழுந்த போதும் சலனப் படாதே!
நதிவெள்ளம்  சூழ்ந்தும் சலனப் படாதே!
எதிர்கொள்! பொறுமையே தீர்வு.

உணர்ந்து நட!
-----------------
தவளையைப் பாம்பு பிடித்தது! பாம்பை
விரல்களால் வான்பருந்து பற்றியது! பூனை
துரத்தி எலியைப் பிடித்திருக்க நாயோ
விரட்டியது பூனையை! இப்படித்தான் வாழ்க்கை!
உலகின் நடைமுறை இஃது.

பாதுகாப்புக் கவசம்!
---------------------
ஆழிக்குள் சிப்பிக்கும் சிப்பிக்குள் முத்துக்கும்
வேலிக்குள் பூக்களுக்கும் தாய்மைக்குள் பிள்ளைக்கும்
ஏரிக்குள் நீருக்கும் பாதுகாப்(பு) உள்ளதுபோல்
வாழ்க்கைக்குப் பாதுகாப்பு பண்பு.

தென்றல் எங்கே?
----------------------
அண்ணனும் தம்பியும் அக்காவும் தங்கையும்
என்றேதான் தாய்தந்தைப் பேரன்புக் கூட்டுக்குள்
ஒன்றாக வாழ்ந்திருந்தோம்! தென்றல்தான்  வீசியது!
இன்றிங்கே வெவ்வேறு வாழ்க்கைப் பயணங்கள்!
தென்றலைத் தேடுகின்றோம் நாம்.

மகிழ்ச்சி மகிழுந்தில்
இல்லை!
------------------------
பேருந்தில் சென்றோம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருந்தோம்!
நாளும் மகிழுந்தில் சென்றும் மகிழ்ச்சியின்றி
வாழ்க்கை நகர்கிறது! கோலமாற்றம் வந்தாலும்
வாழ்க்கையில் ஏமாற்றந் தான்.

முகநூல் நட்பு!
-----------------
கோப்பெருஞ் சோழன் பிசிராந்தை யாரது
வேட்கை தணியாத நட்பாய் முகநூலில்
ஏற்படும் நட்புதான் மாறிடுமோ? நண்பர்கள்
காட்சி கிடைக்காதோ? கூறு.

தேர்தல் கலை
கற்பது அரிது!
---------------------
ஆய கலைகள் அறுபத்து நான்கையும்
காலத்தே கற்பதோ எளிதம்மா---தேயத்தில்
தேர்தல் கலையின் எதிர்மறை நுட்பத்தைத்
தேர்ந்து தெளிதல் அரிது.

உறவால் இணைந்திருக்கும் நாமோ நமக்குள்
உறவில் விரிசலை ஏற்படுத்திக் கொண்டால்
உடலுறுப்பை நாமே இழப்பது போல
விபத்தாகும் வாழ்வில் உணர்.

மொழியாக்கம்
மதுரை பாபாராஜ்

உறவால் இணைந்திருக்கும் நாமோ நமக்குள்
உறவில் விரிசலை ஏற்படுத்திக் கொண்டால்
உடலுறுப்பை நாமே இழப்பது போல
விபத்தாகும் வாழ்வில் உணர்.

மொழியாக்கம்
மதுரை பாபாராஜ்

நீரூற்றல்ல!
--------------------
பேராசை சேகரிக்கும் நீர்க்குமிழிக் கூட்டத்தை
நீரூற்றாய் எண்ணித்தான் பக்கத்தில் செல்வதற்குள்
நீர்க்குமிழிக் கூட்டமோ காற்றில் மறைந்துவிடும்!
பேராசை பேரிழப்பு! பார்.

உன்னை நெறிப்படுத்து!
-------------------------
நம்முடைய எண்சாண் உடலை முதலிலே
நம்கொள்கைக் கேற்றவண்ணம் கேட்கவைப்போம்! பின்பிங்கே
அன்றாடம் மற்றவர்கள் கேட்பதற்குச் சொல்லவேண்டும்!
உன்னை நெறிப்படுத்திச் சொல்

Wednesday, February 18, 2015

நகர வாழ்க்கை!
--------------------
பரபரப்பு மற்றும் படபடப்பை ஏந்திச்
சுழன்று நகரும் நகரத்து வாழ்க்கைக்
களத்தில் நெரிசல் உளைச்சல் மனதைக்
கலங்கவைத்துப் பார்க்கும் நிதம்.

மதுரை பாபாராஜ்

Monday, February 16, 2015

மற்றவர் கருத்தை மதி
-----------------------------------------
மற்றவர்கள் தப்பென்றும் தான்தான் சரியென்றும்
அற்பத் தனமாய் நினைக்காமல் இவ்வுலகில்
மற்றவர்கள் சொல்லை மதிக்கும் மனமிருந்தால்
அற்புதந்தான் வாழ்க்கை உணர்.

உலகம் உள்ளங்கையில்
------------------------------------------
கணினித் துறையின் வியத்தகு மாற்றம்
மணித்துளிக் குள்ளே உலகம் அறியும்
பணிகளில் சாதனை செய்து தினமும்
நிமிர்ந்து நிற்கிறது காண்.

தூண்டில் மீன்!
-------------------
கேள்விக் குறியாக இங்கே பலருக்கு
வாழ்க்கை இருக்கினற கோலத்தில்--வாழ்க்கையை
வேண்டுமென்றே கேள்விக் குறியாக்கி வாழ்பவர்கள்
தூண்டிலில் சிக்கிய மீன்.

மதுரை பாபாராஜ்

Sunday, February 15, 2015

கேள்விக் குறி?
------------------
சொந்த உறவுகளைத் தொட்டுத் தொடர்ந்ததோ
சென்ற தலைமுறை!
கொஞ்சம் தொடர்வதோ
இந்தத் தலைமுறை!
ஆனால் அடுத்ததோ
தண்ணீரும் தாமரையுந் தான்.

மதுரை பாபாராஜ்

தேன்கூடு! பாத்துங்க!
-----------------------
வேகமாகத் தோன்றி மறையும் குமிழியல்ல!
வேகமாகத் தோன்றி மறைகின்ற மின்னலல்ல!
ஏடவிழ்ந்து மாலை உதிரும் மலரல்ல!
நாடறிய நல்லோர்கள் வாழ்த்துகின்ற இல்லறம்
ஏகமன நேயத்தில் கட்டுகின்ற தேன்கூடு!
வேகம் விவேகமல்ல! இங்கு.

மதுரை பாபாராஜ்

Saturday, February 14, 2015

தாழ்த்தினால் உயர்வோம்!
--------------------------
நம்மைநாம் பூஜ்யம் எனநினைத்து வாழ்ந்தால்தான்
என்றுமே மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள்!
மண்ணில் நமக்கு நிகராக யாருளார்?
என்றெண்ணி வாழ்தல் செருக்கு

கோழைத்தனம்!
--------------------
மதவாத சக்தி படமெடுத் தாடி
நடமாட விட்டுவிட்டால் நாசந்தான் நாடு!
கடவுள் பெயரால் வெறியாட்டம் எல்லாம்
கடைந்தெடுத்த கோழைத் தனம்.

விலங்கினும் கீழோர்!
-----------------------
மஞ்சள் தொடங்கி மழலையர் பால்வரை
எந்தப் பொருளில் கலப்படம் செய்யவில்லை?
அந்தக் கொடியவர்க் கெல்லாம் கடுமையான
தண்டனை நிச்சயம் உண்டு.

கேஜ்ரிவால் வாழ்க!
----------------------
நாட்டுக்குத் தேவை மதவாதம் இல்லையென்றே
வாக்களித்தார் கேஜ்ரிவால் கட்சிக்கே டில்லிமக்கள்!
ஆக்கபூர்வ மக்களாட்சி சிந்தனை வென்றது!
நாட்டில் மதவெறி கேடு.

மூட்டணி!
-------------
எட்டுசாண் கூட்டுக்குள் எத்தனை மூட்டணிகள்!
அத்தனை மூட்டணியின் கூட்டணியும் வேறுபட்டே
எட்டுதிக்கும் செல்வதற்கே எண்ணிச் செயல்பட்டால்
முட்டிக்கு முட்டி வலி.

முடிவு முடிவல்ல!
----------------------
எந்த முடிவையும் சிந்தித்(து) எடுக்கவேண்டும்!
அந்த முடிவைச் செயலாக்கிப் பார்க்கவேண்டும்!
கொஞ்சம் தவறெனினும் சொந்தபந்தம் பார்க்காமல்
கண்டித்து நிர்வகித்தல் நன்று.

செம்புலப் பெயல்நீர்!
----------------------
உன்னுடைய தாய்தந்தை யார்யாரோ? கண்மணியே!
என்னுடைய தாய்தந்தை யார்யாரோ? நானும்நீயும்
இன்றோ உரியவ ரானதும் எவ்வழியில்?
செம்மண்ணில் வான்மழை நீர்கலந்த  தைப்போல
நெஞ்சம் கலந்தன வாம்.

மதுரை பாபாராஜ்
குறுந்தொகை
பாடல் 40

கடமைப் பண்பு!
---------+----------
தண்ணீரில் தாமரை வாழ்ந்தாலும் தாமரையோ
தண்ணீரை ஏற்காமல் வாழ்ந்திருக்கும்! ஆனாலும்
தண்ணீர் தொடர்ந்து கடமையைச் செய்கிறது!
தண்ணீர்போல் நம்கடமை நாம்செய்வோம் நாள்தோறும்!
பண்பின் நிழலில் நின்று.

மொழியாக்கம்

வாழ்க்கை என்பது புல்லாங் குழல்போல
மேலே துளைகளும் வெற்றிடமும் கொண்டதுதான்!
வாழ்வை கவனமாகக் கையாண்டால் அற்புதமான
ஏழிசையை மீட்டலாம் இங்கு.

மொழியாக்கம்
மதுரை பாபாராஜ்

Monday, February 09, 2015

அணுகுமுறையே வாழ்க்கை!
----------------------------
குறைகளே இல்லாத வாழ்க்கையே இல்லை!
குறைகளைப் பார்க்கும் நிலைகளை விட்டு
நிறைகளைப் பார்க்கும் கலைகளைக் கற்றால்
குறைகள் மறையும் உணர்.

பயமுறுத்தாதே!
-------------------------------------
பயமுறுத்தும் சூழ்நிலையில் நாள்தோறும் இங்கே
வளரும் குழந்தை மனஉளைச்சல் தாக்க
தளர்ச்சி அடைந்துத் தடம்மாறிப் போகும்!
வளர்ச்சி தடைபடும் பார்.

கள்ளமனம் வேண்டாம்!
----------------------------------------------
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்ற
கள்ளமன மாந்தர்கள் நல்லவர்கள் இல்லையென்பேன்!
உள்ளதைச் சொல்லும் பகைவர்கள் மேலென்பேன்!
உள்ளதை உள்ளபடி சொல்.

Sunday, February 08, 2015

QUOTATION
------------------
"IF WEE SLEEP ON FLOWERS ITS CALLED
OUR FIRST NIGHT"
"IF FLOWERS SLEEP ON US, ITS CALLED
OUR LAST NIGHT"
REALITY OF LIFE.......
----------------------------------------------------------
பூக்களின் மீதிங்கே நாம்படுத்துத் தூங்கினால்
தூக்கம் முதலிரவுத் தூக்கமாம்-- பூக்களோ
நம்மீது தூங்கினால் அந்த இரவுதான்
நம்கடைசித் தூக்க இரவு.

மொழியாக்கம்
மதுரை பாபாராஜ்

தேடிக்கொண்ட வம்பு!
--------------------------------------------
தானாகத் தேடிவரும் வம்புள்ள வாழ்க்கையில்
தானாக வம்புகளைத் தேடிவர வைப்பவர்கள்
வீணாக வம்பை விலைகொடுத்து வாங்குகின்றார்!
வீண்வம்பை நாளும் தவிர்.

சைகையே பேச்சானது!
---------------------------------------------
செல்லில் கதைத்தவண்னம் நண்பரைப் பார்க்கவந்தார்!
செல்லில் கதத்தவண்ணம் நண்பரும் அங்கிருந்தார்!
பல்தெரிய நண்பர் சிரித்தார் தலையாட்டி!
பல்தெரிய நண்பர் பதிலாய் கரமசைத்தார்!
செல்லில் பரபரப்பு! நண்பர்கள் பேசவில்லை!
செல்லாலே பேச்செல்லாம் போச்சு.

தேடிவரும் தெய்வங்கள்!
------------------------------------------------
கோயிலுக்குப் போகவேண்டாம்! வீட்டுக் கடமையும்
தாய்தந்தை பேணலும் நாளும் நிறைவேற்று!
கோயிலில் உள்ல கடவுள்கள் எல்லாம்உன்
வாயிலைத் தேடிவரும் பார்.

Saturday, February 07, 2015

நடுத்தரக் குடும்பம்
        இன்று
--------------------
படிதாண்டா விட்டால்தான் பத்தினி! அன்று!
படிதாண்டா விட்டாலோ பட்டினி! இன்று!
வறிஞராய் மாறாமல் வாழ இணையர்
நெறியுடன் செல்கின்றார் கூறு.

Wednesday, February 04, 2015

இதுதான் நட்பு
-------------------
நீர்வற்றிப் போனால் பறவை பறந்துவிடும்!
வாழ்விலே இத்தகையோர் நட்பெல்லாம் நட்பல்ல!
நீர்வற்றிப் போனாலும் தாமரை சேர்ந்தழியும்!
வாழ்விலும் இத்தகையோர் நட்பொன்றே நட்பாகும்!

வடமிழந்த தேர்!
----------------------
உடலிலே நோய்வந்து மொய்க்கின்ற நேரம்
உடலே நம்மைத்தான் எள்ளிநகை யாடும்!
அடங்காமல் ஆடிய மானிடனே! நீயோ
வடமிழந்த தேரானாய் பார்.

ஏழையை வாழவை!
-----------------------
எண்ணற்ற செல்வங்கள் எப்படித்தான் சேர்த்தாலும்
உண்பதோ என்றும் ஒருசாண் வயிறளவே!
பொங்கிவரும் செல்வத்தை உண்ண முடியுமா?
மண்ணுலகை விட்டே இறுதியில் சென்றிடுவோம்!
அங்குலமும் வாராது காண்.

வாழ்கின்ற காலத்தில் சேர்த்துவைத்த செல்வத்தை
வாழவழி இன்றித் தவிக்கின்ற ஏழைகள்
வாழ்வதற்கு நாளும் அறப்பணிகள் செய்திருந்தால்
வாழ்ந்ததை வாழ்த்துவார் பார்.

வீண்முயற்சி
----------------
கானல்நீர் தன்னைக் குடிக்க முடியாது!
வானத்து விண்மீனை எண்ண  முடியாது!
யானையைப் பானைக்குள் வைக்க  முடியாது!
வீண்முயற்சி நேரமெல்லாம் வீண்.

நகைச்சுவையை ரசிப்போம்!
---------------------------
நகைச்சுவை தன்னைப் பகைச்சுவை என்றே
புகைச்சல் மனமே நினைக்கத் துடிக்கும்!
நகைச்சுவையை அச்சுவையில் ஒன்றி உணர்ந்தே
நகைத்து மகிழ்ந்தால் நலம்.

வடிகால்
--------------
என்னதான் தத்துவங்கள் எப்படித்தான் பேசினாலும்
கண்ணீரைச் சிந்தும் உணர்ச்சிமட்டும் இல்லையென்றால்
மண்ணக மாந்தர்கள் பைத்திய மாகிடுவார்!
கண்ணீர் வடிகால் உணர்.

இப்படிப் பேசு
---------------------
வில்லங்கப் பேச்சாக இல்லாமல் சிந்னைக்கு
நல்விருந்தைத் தந்து சுவைக்கின்ற பேச்சானால்
உள்ளம் தெளிவாகும்! மாசெல்லாம் நீங்கிவிடும்!
கள்ளமற்ற நற்பேச்சே பேச்சு.

முடிவு முடிவல்ல!
-----------------------------------
எந்த முடிவையும் சிந்தித்(து) எடுக்கவேண்டும்!
அந்த முடிவைச் செயலாக்கிப் பார்க்கவேண்டும்!
கொஞ்சம் தவறெனினும் சொந்தபந்தம் பார்க்காமல்
கண்டித்து நிர்வகித்தல் நன்று.

Tuesday, February 03, 2015

பயமுறுத்தாதே!
-------------------------------------
பயமுறுத்தும் சூழ்நிலையில் நாள்தோறும் இங்கே
வளரும் குழந்தை மனஉளைச்சல் தாக்க
தளர்ச்சி அடைந்துத் தடம்மாறிப் போகும்!
வளர்ச்சி தடைபடும் பார்.

கள்ளமனம் வேண்டாம்!
----------------------------------------------
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்ற
கள்ளமன மாந்தர்கள் நல்லவர்கள் இல்லையென்பேன்!
உள்ளதைச் சொல்லும் பகைவர்கள் மேலென்பேன்!
உள்ளதை உள்ளபடி சொல்.

Sunday, February 01, 2015

கணினி பாவம்!
--------------------------------------------------------------------------------------------
உள்ளீடைத் தெள்ளத் தெளிவாகத் தந்துவிட்டால்
துல்லியமாய்த் தானே வெளியீடும் வந்துவிடும்!
உள்ளீடே தப்பென்றால் பாவம் கணினியைச்
சொல்லாலே சாடுவது தப்பு.

மதுரை பாபாராஜ்

மழைபோல் பெரியோர்
------------------------------------------
எந்த எதிர்பார்ப்பும் இன்றித்தான் வான்மழை
இங்கே கடமையைச் செய்தே உயிரினத்தைத்
தங்குதடை இல்லாமல் காப்பதுபோல் வாழ்விலே
என்றும் பெரியவர்கள் தங்கள் கடமைகளை
முன்வந்தே செய்திருப்பார்! பார்.

மழைமனம் கொள்வோம்!
-------------------------------------------------
வானகம் பெய்யும் வைரத் துளிகளோ
கானகம் பாலைவனம் சோலைவனம் மேடுபள்ளம்
ஈனத்தனம் இன்றியே ஈகை மனத்துடன்
கானம் இசைத்தே பெருக்கெடுத்தே ஓடிவந்து
தானமாக ஆறு குளங்கள் அருவிகளில்
பூமணம் வீசவே மக்களுக்கு நாள்தோறும்
பூமியில் வாழ மகிழ்ந்தே உயிர்கொடுக்கும்
தானாக முன்வந்து தான்.

திறமைக்கே மதிப்பு
---------------------
திறமையே இன்றி விளம்பரத்தால் மட்டும்
கடைவிரித்து விற்பதற்குப் பார்த்திருந்தால் கொள்வார்
கடைதாண்டிச் சென்றே நடைப்பயணம் கொள்வார்!
கடைவிரித்தும் விற்காது காண்.

மதுரை பாபாராஜ்