Sunday, May 31, 2026

மகள் சுபஸ்ரீ வாழ்க!


 மகள் சுபஸ்ரீக்கு வாழ்த்து!


இனிப்பான பால்கோவா தந்தேதான்

 உள்ளம்

கனிந்திருக்க அன்புடன் வாழ்த்தினாய்

 வாழ்க!

அனைவரும் ஏற்றே மகிழ்ந்தோம்!

ரசித்தோம்!

மனங்கனிந்து வாழ்த்துகிறோம் நாம்.


மதுரை பாபாராஜ்

வசந்தா

Saturday, May 30, 2026

நாடும் காடும்

 நாடும் காடும்!


என்னநேரும் ஏதுநேரும் எப்பநேரும்

 என்றேதான்

ஒன்றும் புரியாமல் நாட்டிலே

 வாழ்வதைப்போல்

தங்களுக்கு எப்பகை எப்படித்

 தாக்குமென்றே

ஒன்றும் புரியாமல் வாழ்கிறது

 பார்க்கின்றோம்!

என்றென்றும் காட்டில் விலங்கு.


மதுரை பாபாராஜ்

தளமற்ற வீடு!


 

Friday, May 29, 2026

புரிந்தே நட!


 

திருமண வாழ்த்து




தங்கை திருமதி. ராஜபாக்யம் 

தெய்வத்திரு.ஜோதிகுமார்

மணவாழ்க்கை 51!

மணநாள் 29.05.75--29.05.2026

மதுரையில் தஞ்சையில் சென்னைபெங்க ளூரில் 

விதவிதமாய் வாழ்கின்ற இல்லறம் ஏற்றே

நிறைவாக ஐம்பத்து ஒன்றினைக் காணும்

முறையான பொன்னாளாம்! பாவாவை  எண்ணிக்

கடமைகளை என்தங்கை பாங்குடனே செய்து

தடம்பதித்து வாழ்வதை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா 

குடும்பத்தார்.

Prabakar Padma family

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ...மாமா மற்றும் அத்தைக்கு,

🙏🙏

நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ உளமார வாழ்த்தும் உங்கள் அன்பு தம்பி சந்திரசேகரன் தெய்வ லட்சுமி மற்றும் என் அருமை மகள் சுபஸ்ரீ

LRC Family


அருமை
மணநாள் நூற்றாண்டு கண்டு மகிழ்ந்திட வாழ்த்துகின்றேன்.

மனிதத்தேனீ
JVP FAMILY
[29/05, 09:06] Rajaramperiakanna: 💐💐

Happy wedding anniversary. Wish you many more happy returns of the day. 
God bless you with good health and happiness🙏🙏

[29/05, 11:21] Jeyasaraswathysethuraman2

: Congratulations!! May Gos bless youwith many more healthy and happy anniversaries
[29/05, 12:04] Jeyasaraswathysethuraman2: Nice picture.
To 
Mrs Raja bhagyamMay God bless you Ankamma,with good health and happiness  cherishing your wdding anniversary💐💐
👏👏😊

தம்பதியர்கள் இருவருக்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.மேலும் இதுபோல் ஒவ்வொரு வருடமும் திருமணநாள் கொண்டாட நீண்ட ஆயுளுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டுமென எல்லாம்வல்ல வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும்.இந்த திருமணநாளில் (ஐம்பது வருட பூர்த்தியடைந்த)உங்களுடைய ஆசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் 💐💐🎂🤝
திரு முரளி கேந்திரியவிகார்

[29/05, 09:20] Mythuamma: Iniya thirumanal vazthukal happy wedding anniversary many many more Happy returns of the day 🥳🎉🤝🎂🌹
[29/05, 09:21] Mythuamma: Engaluku unga blessings appavum Venum aunty uncle 🙏
[29/05, 09:21] Mythuamma: Eppavum

Happy  51 th Anniversary thatha.🙏💐
Gayathri prasad

கதிரும் கிழக்கும் போல.... நிலவும் ஒளியும் போல.. என்றும் ஒற்றுமையாய் வாழ வாழ்த்துகிறோம்! இனிய திருமண வாழ்த்துக்கள்
உதயகுமார்

Such a delight to know this Graceful occasion. God will Bless more and more. Many more to come.
Praying earnestly for you Both🎉💕💖
Jebaraj

Hello Thatha!

Happy happy wedding anniversary❤️✨
Please convey my wishes to paati as well✨
Nikhil friend karthik

வாழ்க வளமுடன் நலமுடன்
வாழ்க பல்லாண்டு
பாவா&பிண்ணி
மனோகர்

 

Tuesday, May 26, 2026

தலைவர் S. கொண்டல் இயற்கை எய்தினார்!


 தலைவர் S. கொண்டல் இயற்கை எய்தினார்!

வருந்துகிறோம்!

27.05.26

இன்பமும் இன்னலும் சோதனையும்

 சாதனையும்

ஒன்றாய்க் கலந்திருக்கும் வாழ்வை

 நிறைவுசெய்தார்!

புன்னகை ஏந்தும் முகமும் கனிவான

இன்சொல்லும் பண்பும் நிறைந்திருக்கும்

 கொண்டலோ

இன்றில்லை வெற்றிடந் தான்.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


கோடி கோடி!

 கோடி கோடி!


கோடியில் உள்ளவரோ கோடிகளைப்

 பார்த்ததில்லை!

கோடிகளை வைத்திருப்போர்

 கோடிகளைத் தேடுகின்றார்!

கோடிகோடி யாக வருவதைப்

 பெற்றேதான்

சேர்த்துவைப்ப தெவ்வாறு? சொல்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Millions Upon Millions!


Those among the millions

have never beheld true millions!

Those who already own vast fortunes

still wander, seeking more and more!

Crores upon crores keep flowing in—

yet how do they gather and guard them so?

Tell me, what secret lies behind

such endless heaps of wealth?


Sunday, May 24, 2026

பதற்றமின்றி வாழப் பழகு!

 பதற்றமின்றி வாழப் பழகு!


எதையுமே நேர்மறையாய்க் காணுகின்ற 

 உள்ளம்

பதற்றமின்றி வாழ்வை ரசித்தேதான்

 வாழும்!

எதையும் எதிர்மறையாய்க் காணுகின்ற

 உள்ளம்

பதற்றமுடன் வாழும்! பரிதவித்து வாழும்!

பதற்றமின்றி வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Learn to Live Without Anxiety!


A heart that sees all things in hopeful light

Will taste life’s sweetness, calm and shining bright.

A heart that sees the world through shades of fear

Will live in restless pain and trembling tears.

So train your soul in peace from day to day —

Learn to live without anxiety’s sway.


— Madurai Babaraj 


உலகை மதி


 

Saturday, May 23, 2026

இசைஞானி


 இசைஞானி இளையராஜா

 அவர்களுக்கு 

1540 ஆம் படம்!

இயக்குநர் கார்த்திக் அவர்களுக்குப் 

பத்தாவது படம்!


வெற்றிபெற வாழ்த்து!


ஆயிரத் தைநூற்று நாற்பதைக்

 காணுகின்றார்!

ஏழிசை வேந்தன் இளையராஜா 

 வாழியவே!

ஆயிரம் ஆயிரம் பண்ணமைத்து

 வாழியவே!

காவியம் கண்ட இசைஞானி வாழியவே!

வீடுதோறும் உன்னிசையைக் கேட்டே

 மகிழ்கின்றோம்!

நாடுபோற்ற வாழியவே நீடு.


இசைபட வாழும் இசைஞானி ஆசி

அகங்குளிரத் தந்தே மகிழ்ந்திருப்பார்

 கார்த்திக்!

திரைப்படம் பத்தை இயக்குகின்ற உந்தன்

அருமையான ஆற்றலைக் காட்டுகின்ற

 வாய்ப்பைப்

பெருமையுடன் ஏற்கின்றாய் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

Wednesday, May 20, 2026

பொய்கள் நிலைக்காது


 

Monday, May 18, 2026

CR மடல்


 [18/05, 11:43] Madurai Babaraj: 

எனது பழைய மடல் 

2015 ல் எழுதியது.

தங்களை அறிமுகப்படுத்திய நண்பர் சோம வீரப்பன் அவர்களை மறவேன். அந்த மரியாதை தங்களிடம்  என்றும் உண்டு சி.ஆர். நாங்கள் வாழ்க்கைப் பயணத்தில் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் சந்தித்தது வரமே.

என்றும் நன்றியுடன்

மதுரை பாபாராஜ.

[18/05, 11:46] VOVRAJENDIRAN: 

அப்போது விசாகப்பட்டினம் பாபா...

[18/05, 11:49] Madurai Babaraj: திருக்குறளின் 785-வது குறள்,

 "புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்"

Sunday, May 17, 2026

நிலாச்சோறு Professional courier



 Professional courier அனுப்பியதற்குக்கவிதை!


நிலாச்சோறு வீடுகளில் வட்டமாக

 நாங்கள்

அமர்ந்தேதான் சாப்பிட்டோம் அன்றுதான்!

 இன்றோ

தனித்தனி யாக அறைகளின் உள்ளே

தொலைக்காட்சி காட்டும் நிலவை ரசித்தே

லபக்கென்றே சாப்பிடு வோம்.

மதுரை பாபாராஜ்

Chat GPT

Moonlit Meals — A Poetic Rendering


In moonlit courtyards, once we sat

In cheerful circles, side by side,

Sharing our supper with laughter warm

Beneath the gentle gaze of night.

But now, within secluded rooms,

Apart we sit in silent glow,

Watching the moon through television screens,

And hurriedly swallow our meals alone.

— Madurai Babaraj

Yes Sir we enjoyed at my grandfathers house, grandma telling stories and feed us. Mother used to tell how remember the names of specific stars.

Love those and yapping for the same, unattainable.

Jebaraj

Saturday, May 16, 2026

மருமகள் சத்யபாமா


 மருமகள் 

திருமதி சத்யபாமாவுக்குப் பிறந்தநாள்

 வாழ்த்து!


அகவைத் திருநாள்: 17.05.26


இல்லற முத்துக்கள்:


மகன் :         B.எழிலரசன்

பேரன்கள்: E.S. நிக்கில் அபிசேக்

                       E.S. வருண் ஆதித்யா


குறள்நெறி போற்றிக் குடும்பத்தார் சூழ

சிறப்புடன் வாழ்க! நலமுடன் வாழ்க!

நிறைவுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

VOVKRISHNAMOORTHY RAMANUJAM

 நண்பர் திரு கிருஷ்ணமூர்த்தி

 இராமாநுஜம் அவர்களுக்குப் பிறந்தநாள்

 வாழ்ழ்த்து. (AS PER TELEGRAM APP)


அகவைத்திருநாள் : 17.05.26

மாங்கனியைப் பார்க்கும்

 பொழுதெல்லாம் உள்ளத்தில்

நீங்காத உங்கள் நினைவுதான்

 வந்துபோகும்!

அன்பர் கிருஷ்ணமூர்த்தி

 வள்ளுவம்போல் பல்லாண்டு

வண்டமிழ்போல் வாழிய நீடு.

மதுரை பாபாராஜ்

வசந்தா

Thursday, May 14, 2026

பேரன் வருண்

 பேரன் வருண்!

விடியல் பொழுதில் விழிக்கவே இல்லை!

குடிக்கத்தான் கோக்கைத்தான் வாங்கிவா என்றே

பிடிவாத மாகத்தான் பேரன் வருணோ

துடிக்கின்றான் தாத்தாவைக் கேட்டு.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Grandson Varun!

At break of dawn my eyes still not open

Yet pleads, “Bring Coke!” with sparkling eyes.

Stubborn little Varun stands,

Pulling at Grandpa with eager hands.


நிறம்- சாதி-மதம்

 நிறம்--சாதி--மதம்-

நிறங்களில் ஏதுமில்லை! சாதிகளில்

 இல்லை!

மதங்களில் ஏதுமில்லை! மாந்தர்கள்

 வாழ்வில்

நிறைகுறைகள் எல்லாமே நேர்மறைப்

 பண்பின்

நிறைவில்தான் உள்ளதெனச் சொல்.


மதுரை பாபாராஜ்

வாழவழி காட்டு!

 நிம்மதியாய் வாழவழி காட்டு!

நிம்மதியைத் தேடி அலைகின்றேன்

 நாள்தோறும்!

நிம்மதியோ கானல்நீர் போலவே

 தோன்றித்தான்

கண்முன்னே காட்டி மறைகின்ற

 விந்தைதான்!

நிம்மதியாய் வாழவழி காட்டு.


மதுரை பாபாராஜ்


Wednesday, May 13, 2026

குளோப் ஜாமுன்


குளோப் ஜாமுன்!

பண்புடன் தந்தார் இனிக்கும் குளோப்ஜாமுன் 
அன்புடன் நண்பராம் பாலுதான் இப்போது!
புன்னகை போல இனிமைதான்! வாழ்த்துவோம்!
நன்றி நவில்கின்றோம் இன்று.

மதுரை பாபாராஜ்
வசந்தா
 

வெள்ளாமை


 

Tuesday, May 12, 2026

போற்றுவாரோ? தூற்றுவாரோ?

 போற்றுவாரோ? தூற்றுவாரோ?


மாற்றமோ ஏமாற்ற மாயின்றி நேர்மறை

மாற்றமாய் சாதித்தால் மக்கள் வரவேற்பார்!

மாற்றம் எதிர்மறை யாகிவிட்டால் தூற்றுவார்!

போற்றுவாரோ? தூற்றுவாரோ? இங்கு.


மதுரை பாபாராஜ்

Monday, May 11, 2026

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்கு

 கவிதை!

வண்ணப் பறவைகள் காலை

 வணக்கத்தைச்

சொல்லி மகிழவைத்த நண்பருக்கு

 நன்றிதனைச்

சொல்லுகின்றேன் வாழ்கநம் நட்பு.

மதுரை பாபாராஜ்

Saturday, May 09, 2026

அன்னையர் நாள்


 HAPPY MOTHER DAY

10.05.26

GIFTED BY SUSHANT AND RAVI

நம்பிக்கையோடு் நடைபோடு


 

நட்பு


 

Friday, May 08, 2026

தூயசக்தி தீயசக்தி


 

Monday, May 04, 2026

இருவர் ஆனால் ஒன்று!

 இருவர் ஆனால்  ஒன்று!

அருகில் படுத்தாள்! வருடிக் கொடுத்தேன்!

நெருங்கிப் படுத்தாள் நெகிழ்ந்து

 கொடுத்தேன்!

உருகிக் களித்தாள்! உணர்ச்சியில்

 வீழ்ந்தேன்!

இருவரும் ஒன்றானோம் இங்கு.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Two, Yet One!

She lay beside me — I gently traced her near,

She drew closer still — I melted, drawing dear.

She lingered in joy — I fell into feeling’s tide,

And there we became one… no more two, side by side.

உட்பகை தீது


 உட்பகை தீது!

(முதல்வரி சொன்னவர் மு.ராஜ்குமார்)

கட்சிகள் தோற்றுவிடும்! சித்தாந்தம்

 வெல்லலாம்!

பட்சிகள் தோற்றாலும் வான்பரப்பு

 வெல்லலாம்!

முட்களை நீக்கினால் பூக்கள் தெரியலாம்!

உட்பகை வேர்விட்டால் தீது.

மதுரை பாபாராஜ்

ChatGPT

The Evil of Inner Strife!

Parties may fall, yet principles can rise;

Birds may falter, yet the vast sky survives.

Clear away thorns, and blossoms appear—

But when inner discord takes root, it brings ruin.

Sunday, May 03, 2026

பண்பாட்டைச் சீரழிக்க வேண்டாம்


 

Saturday, May 02, 2026

நல்லாட்சி அமையட்டும்


 

Friday, May 01, 2026

முத்திரை ஈட்டும் புகழ்

 முத்திரை ஈட்டும் புகழ்!


பத்தோட ஒன்று பதினொன்று அத்தோட

வெற்றாய் இதுஒன்று என்றே இருப்பது

வெற்றியல்ல! நம்முடைய ஆற்றல் தனித்திறமை

முத்திரை ஈட்டும் புகழ்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Fame that leaves its mark!


Not one among ten, nor the eleventh beside—

Not a hollow “one more” in a counted line;

That is no victory. True worth is this:

Our strength, our singular skill—

Carving a mark the world remembers.


— Madurai Babaraj

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

புத்தபூர்ணி மாநாளில் நீங்களும்

 உங்களது

அன்புக் குடும்பமும் நல்லமைதி அன்புடன்

என்றும்  கருணை வளமுடன் புத்தரின் 

நல்லாசி பெற்றேதான் வாழியவே

 புத்தரின்

ஆசிகள்  வாழ்வை மகிழ்ச்சியுடன்

 உள்ளொளி

நாளும் பெருகவும் வாழ்க்கை முழுவதும் 

ஆர்வமுடன் இங்கே தொடர்ந்து

 ஒளிபடர்ந்தே 

வாழ்வின் இருளகற்ற வாழ்த்து.

மதுரை பாபாராஜ்