Tuesday, June 30, 2026
Monday, June 29, 2026
Saturday, June 27, 2026
Thursday, June 25, 2026
மு சரவணன் Architect
[25/06, 20:52] Saravananddl:
Today marks a special milestone in my life.
I am proud to celebrate 40 years of my professional journey in the construction industry. From my early days on site to spending the last 25 years as a designer, this journey has been filled with learning, challenges, innovation, and the trust of countless clients and well-wishers.
I sincerely thank my family, clients, colleagues, mentors, friends, and everyone who has been part of this journey. Your support and encouragement have made these four decades meaningful.
As I celebrate this milestone, I look forward to continuing to learn, create, and contribute with the same passion in the years ahead.
Thank you all for being part of my 40-year journey.
– M. Saravana Perumal
Thejaswiniy Constructions – Design Lab
[25/06, 21:50] Madurai Babaraj:
கட்டிடக் கலை வல்லுநர் மு.சரவணப்
பெருமாள் தொண்டு வளர்கவே!
நாற்பதாண்டு தொண்டுகள்! கட்டிடம்
கட்டுகின்ற
ஆற்றல் கலையிலே விற்பன்னர் !
வல்லுநர் !
நற்றமிழ்போல் பல்லாண்டு வாழ்க
வளர்கவே !
அற்புதமாய் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
Tuesday, June 23, 2026
பெற்றோரை வணங்கு
பெற்றோரை வணங்கு!
அப்பாவும் அம்மாவும் வாழ்வின்
வழித்துணையாய்
எப்போதும் வந்தே துணைநிற்பார்!
மற்றவர்கள்
எல்லோரும் வாழ்க்கைப் பயணத்தில்
வந்திருப்பார்!
தங்கள் நிறுத்தத்தில் இங்கே
இறங்கிடுவார்!
பெற்றோரை என்றும் வணங்கு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Honor Your Parents!
Father and mother, steadfast guides of life,
Walk beside us through every joy and strife.
Others may journey with us for a while,
Sharing a season, a road, or a smile.
Yet all who travel life's winding way
Will reach their own stop and depart one day.
Only parents remain with unfailing care,
Their love and blessings forever there.
Therefore, honor your parents always.
— Madurai Babaraj
Monday, June 22, 2026
Saturday, June 20, 2026
Thursday, June 18, 2026
ஸ்டாலின் இராமகிருஷ்ணன் வெண்பீ
[18/06, 15:29] VovstalinRamakrishnan:
வெண்பா புனைவதிலே வல்லவராம்
நல்லோசை
வெண்பாவை வாரி வழங்குவார் –
பண்பால்
உயர்ந்தவராம் நம்மதுரை மைந்தனான
பாபா
உயர்கவி நற்திறத்தைப் போற்று -இரு விகற்ப நேரிசை வெண்பா , ஒழுகிசைச் செப்பலோசை
ஸ்டாலின் இராமகிருஷ்ணன்
[18/06, 15:48] Madurai Babaraj:
வெண்பாப் புலி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து!
வெண்பாப் புலியான ஸ்டாலினோ என்மீது
வெண்பா உடனடியாய் யாத்தளித்தார் வாழ்த்துகிறேன்!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
Wednesday, June 17, 2026
Tuesday, June 16, 2026
Monday, June 15, 2026
பொம்மி திருமணநாள்
திரு S.கார்த்திகேயன் --
திருமதி K.தேவிகாராணி அவர்களுக்குத் திருமணநாள் வாழ்த்து!
திருமணநாள்:
16.06.26 - 20/21
இன்று உங்களுக்குத் திருமணநாள்!
வாழ்வில் மணக்கும் சிறந்தநாள்!
அம்மா அப்பா அத்தை மாமனார்
உற்றார் உறவினர் நண்பர்கள்
சேர்ந்தே நாங்கள் வாழ்த்துகின்றோம்!
வாழ்க வாழ்க வாழியவே!
வண்டமிழ் போல வாழியவே.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
வீண்
வீண்!
நேரமும் காலமும் பார்த்தே உறவுகள்
வீட்டுக்குச் செல்லவேண்டும்! கண்டநேரம்
நாம்சென்றால்
வீட்டார் பரபரப்பில் மூழ்கி இருப்பார்கள்!
வீட்டாரைக் கோபித்தல் வீண்.
மதுரை பாபாராஜ்
MetaAI
*In Vain!*
Even for kin, we must respect the time and day,
If you drop in unannounced, they’re swept away
In rush and work and endless disarray.
To blame the host for that — it’s vain to say.
— _Madurai Babaraj_
இளமை முதுமை வேறுபாடு
இளமை முதுமை வேறுபாடு!
வயதான தாலே மகிழுந்தில் சென்றும்
மெதுவாய் இறங்கித் தடுமாறி நின்றேன்!
தளர்நடை போட்டே நடந்தேதான்
சென்றேன்!
இளமைக்கும் இன்று முதுமைக்கும் ஆகா!
மலைக்கவைக்கும் வேறுபாடு் தான்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Youth and Old Age!
Once I leapt from journeys without a care;
Now, age makes every movement rare.
Though a car has carried me all the way,
I descend with caution, slow and gray.
My steps are frail, my pace restrained,
By years that time has gently ordained.
Between youth's vigor and age's claim
Lies a chasm none can truly tame—
A staggering truth for all to see:
How greatly time can alter me.
— Madurai Babaraj
Friday, June 12, 2026
உயரும் மதிப்பு!
உயரும் மதிப்பு!
ஆழ்மனம் ஒன்றாக மேல்மனம் ஒன்றாக
வாழ்தல் இரட்டை நிலைப்பாடு!
உன்மனதில்
தோன்றுகின்ற எண்ணமே செய்யும்
செயலானால்
பாரில் உயரும் மதிப்பு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
True Worth Rises!
To think one way deep within,
Yet live another life above—
Is but a state of double mind.
When every deed reflects the thought
That springs sincere from heart and soul,
Your worth shall rise in all the world,
And earn respect that shall endure.
— Madurai Babaraj (Poetic English Rendering)
மாறு
மாறு!
வாழ்வில் சலிப்படையக் கூடாது!
உள்ளத்தில்
தாழ்வு மனப்பான்மை உண்டாக்கும்!
கோழையாய்
மாற்றித் தயக்கத்தைச் சூழ்நிலை
யாக்கிவிடும்!
மாற்றத்திற் கேற்பவே மாறு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Adapt and Evolve!
Never grow weary of life’s unfolding way;
For boredom breeds a shrinking, doubtful
mind.
It turns the heart timid, wrapped in
hesitation,
And makes uncertainty a constant
companion.
So learn to change with every changing tide—
Adapt, and rise with life’s transforming flow.
— Madurai Babaraj (மதுரை பாபாராஜ்)
Sunday, June 07, 2026
உணர்வதே மெய்!
மெய்யறிவு!
நம்பென்று சொல்வது ஆத்திகம்!
சொன்னதை
நம்பாமல் யார்சொன்ன போதும்
பகுத்தறிவால்
மெய்ப்பொருள் காண்பதே நாத்திகம்
என்றறிவோம்!
என்றும் உணர்வதே மெய்.
----மதுரை பாபாராஜ்
வீண்
வீண்!
ஆள்வதற்கு வாய்ப்பளித்தால்
ஆள்பிடிக்கும் காட்சியில்
நாள்போகும்! நேரமெல்லாம் வீணாக்கிப்
பார்க்கின்றார்!
மாற்றங்கள் வேண்டுமென்றார் ஏமாற்றம்
ஒன்றுதான்
மாற்றமோ? என்னமோ? சொல்.
மதுரை பாபாராஜ்
Saturday, June 06, 2026
Friday, June 05, 2026
Tuesday, June 02, 2026
தம்பி இணையருக்கு மணநாள் வாழ்த்து
திருமணநாள் வாழ்த்து!
மணநாள் 03.06.2026
இணையர்
திரு S.P. கெஜராஜ்
திருமதி. G.மல்லிகா
கலைத்துறையில் ஆற்றலை
நாள்தோறும் காட்டி
மலைக்கவைக்கும் தம்பியோ நல்ல
நடிகர்!
வகைவகையாய் இங்கே குணச்சித்ர
வேடம்!
புகழ்பெற்று வாழ்கபல் லாண்டு.
நல்ல குடும்பமே பல்கலைக் கூடமென்ற
நல்லோரின் ஆசிகளுடன் நாள்தோறும்
வாழியவே!
அன்புடன் பண்பு மிளிரும் இணையரோ
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்



























