ஆய்வாளர்-- ஆர்வலர்!
ஆய்வாளர்.!
ஆய்வாளர் என்பவர் சொல்லுக்குச் சொல்லெடுத்தே
ஆய்ந்து கருத்தைச் செறிவூட்டி வாதத்தால்
தேர்ந்து தெளிவாக்கி பல்வேறு கோணத்தில்
சீர்படுத்தும் சிந்தனைக்கு வித்து.
ஆர்வலர்!
ஆர்வலர் என்பவர் பல்வேறு ஆய்வாளர்
தேர்ந்து தெளிவாக்கிச் சொன்ன கருத்துகளில்
தன்னுடைய சிற்றறிவுக் கெட்டியதை
ஏற்பவராம்!
பன்முக ஆய்வில் ஒருமுகத்தைத் தேர்ந்தெடுத்துத்
தன்னகம் கொள்வார் இவர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home