Wednesday, January 06, 2021

63 இடுக்கண் அழியாமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

63 இடுக்கண் அழியாமை

குறள் 621:

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வ தஃதொப்ப தில்.


துன்பங்கள் வந்தால் கலங்காமல் சந்தித்தால்

அந்தநிலை வெற்றியே மெய்.

குறள் 622:

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.


வெள்ளம்போல் துன்பமா? இங்கே அறிவுடையோர் 

உள்ளத்தால் வெல்வதற்குச் சிந்தித்தால் ஓடிவிடும்!

உள்ளத் துணிவே துணை.

குறள் 623:

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்

கிடும்பை படாஅ தவர்.


இன்னலைக் கண்டிங்கே அஞ்சாதோர் இன்னலுக்கே

இன்னலைத் தந்திடுவார் சொல்.

குறள் 624:

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பா டுடைத்து.


சுமையைச் சுமக்கும் எருதாய் முயன்றால்

சுமைத்துன்பம் துன்பப் படும்.

குறள் 625:

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

இடுக்கண் இடுக்கட் படும்.


தொடர்ந்துவரும் துன்பத்தால் அஞ்சாதோர் கண்டே

பறந்தோடும் துன்பம் விரைந்து.

குறள் 626:

அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்

றோம்புதல் தேற்றா தவர்.


வளமிருந்த போது கொடுத்தவர்கள் இல்லா

நிலையிலே ஏழையானோம்  என்றே வருந்தி

உளம்நொந்து போவாரோ இங்கு?

குறள் 627:

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்

கையாறாக் கொள்ளாதா மேல்.


உடலுக்குத் துன்பம் இயல்பென்பார், துன்பம்

முடக்கினால் தாங்குவார் சாற்று.

குறள் 628:

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்ப முறுதல் இலன்.


இன்பத்தில் துள்ளாதோர் வாழ்க்கையில் 

துன்பத்தை

என்றும் இயல்பென்பார் சொல்.

குறள் 629:

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்ப முறுதல் இலன்.


இன்பத்தை ஏற்று மகிழாதோன் துன்பத்தைக்

கண்டே துவளமாட்டான்  சொல்.

குறள் 630:

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்

ஒன்னார் விழையுஞ் சிறப்பு.


துன்பத்தை இன்பமாய் எண்ணுவோரை

வன்பகைவர்

என்றும்  மதிப்பார் விளம்பு.






























0 Comments:

Post a Comment

<< Home