Thursday, January 07, 2021

65 சொல்வன்மை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

65 சொல்வன்மை

குறள் 641:

நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத் துள்ளதூஉம் அன்று.


நாநயமே வாழ்வில் சிறப்பான செல்வமாகும்!

வேறுசெல்வம் இல்லையதற்( கு) ஈடு.

குறள் 642:

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்

காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.


நன்மையும் தீமையும் சொற்களால் ஏற்படும்!

பண்பற்ற சொல்லைத் தவிர்.

குறள் 643:

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.


வேண்டியவர் நாடிவந்தும், வேண்டாதோர்

கேட்டிருக்க

வேண்டுமென்றும் பேசுவதே  பேச்சு.

குறள் 644:

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனினூஉங் கில்.


திறனறிந்து சொல்வதே சொல்வன்மை! அந்த 

அறம்பொருளுக் கில்லையே ஈடு.

குறள் 645:

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.


சொல்கின்ற சொல்லைவெல்ல வேறுசோல் இல்லையென

நன்கறிந்து சொல்லவேண்டும் பார்த்து.

குறள் 646:

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள்.


மற்றவர்கள் கேட்குமாறு பேசுவதும், மற்றவரின்

நற்கருத்தை ஏற்கின்ற பக்குவமும் பெற்றவர்கள்

பண்பான சான்றோராம் சாற்று.

குறள் 647:

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.


சொல்வன்மை, சோர்விலாமை, அஞ்சாமை கொண்டிருக்கும்

வல்லவரை வெல்தல் அரிது.

குறள் 648:

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்.


சொல்வதைக் கோர்வையாக நேர்த்தியாக சொல்பவரின்

சொல்கேட்பார் மக்கள் விழைந்து.

குறள் 649:

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்றா தவர்.

சிலசொற்கள் குற்றமின்றிப் பேசுமாற்றல் அற்றோர்

பலசொற்கள் பேசுவார் சோர்ந்து.

குறள் 650:

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற

துணர விரிந்துரையா தார்

கற்றதை  ஏற்குமாறு பேசத் தெரியாதோர்  

முற்றும் மணமற்ற கொத்துமலர் போலாவார்!

கற்றும் பயனில்லை சாற்று.
























0 Comments:

Post a Comment

<< Home