Saturday, March 28, 2026

குறுந்தொகை 09

 

குறுந்தொகை

பாடல்: 09 –கயமனார் 

தோழி கூற்று

யாய் ஆகியளே மாஅ யோளே

மடைமாண் செப்பில் தமிய வைகிய

பெய்யாப் பூவின் மெய்சா யினளே;

பாசடை நிவந்த  கணைக்கால் நெய்தல்

இனமீன் இருங்கழி ஓதம் மல்குதொறும்

கயம்மூழ்கு மகளிர் கண்ணின் மானும்

தண்ணம் துறைவன் கொடுமை

நம்முன் நாணிக் கரப்பா டும்மே.

---------------------------------------------------------------------

தோழியே! நம்தலைவி என்மேல் சினந்தாளோ?

பூவிதழாள் என்னை இசைவுடன் ஏற்பதற்குத்

தூதுசெல்லேன்! என்றான்! தலைவி பெருமையைப்

பாடுகின்றாள் தோழிதான்!   வண்ணமேனி மாமைநிறம்

வாடும் நிலையில் வெளுத்ததே! பூமொட்டு

சூடாமல்  செப்புவண்ணப் பாத்திரத்தில் உள்ளது!

சூடாத பூமலர்ந்த வண்ண உடல்கொண்டாள்! 

நாணத்தாள் பேதை மறைக்கின்றாள்! நீர்த்துறையில்

நீரலைகள் மீன்களுடன் துள்ளும்  குவளைமலர்

மூழ்கித் தலைதூக்கும் கோலம்போல் கண்களை

மூடித் திறக்கின்றாள் நாணத்தால் மாதரசி!

பூவிதழின் செந்நிறம்போல் மற்ற மகளிரின்

பூவிழிகள் அங்கே சிவந்தது போலவே

பாமகளின் கண்களும் நீசெய்த பாதகத்தால்

தாமாகக் கண்கள் சிவந்தன பாராய்நீ!

பூமகள் இந்த இளமையிலே தாய்போல

பேசுகின்ற பக்குவத்தைப் பார்.

---------------------------------------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home