குறுந்தொகை 8
குறுந்தொகை
பாடல். 8 ஆலங்குடி வங்கனார்
கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்,
எம்இல் பெருமொழி கூறித், தம்இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.
--------------------------------------------------------------------------------------------------
நான்பரத்தை! தோழியே!உன்தலைவி சீறுகின்றாள்!
தேன்மொழியாள் உள்ளம் கவர்ந்த தலைவனோ
வான்நோக்கும் பொன்வயல் மண்கரையில் நிற்கின்ற
கான்மரம் ஈந்துவக்கும் நற்கனியை நீர்க்குளத்தில்
வாழ்கின்ற வாளைமீன் உண்ணும் வளநாடன்!
பாழ்மனம் தேடிவந்தே இங்கிருக்கும் நேரத்தில்
பாராட்டி மெய்மறந்தே இன்புறுவான்! இல்லாளை
நாடிப்போய் அங்கிருக்கும் நேரத்தில் ஆடிமுன்னே
கால்கையை ஆட்டி அசைக்கின்ற பொம்மைபோல்
இல்லாளின் கட்டளைக்கே ஆடிடுவான்!தன்மகனைத்
தோள்சுமந்து பெற்றவளாம்!அந்தப் பெருமகள்!
ஊசலாட்டம் தானே மனது.

0 Comments:
Post a Comment
<< Home