Sunday, March 29, 2026

குறுந்தொகை 100

 குறுந்தொகை

பாடல் 100

பாடலாசிரியர்: கபிலர்


அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்

பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்

காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்

கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும்

வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்

பாவையின் மடவந் தனளே

மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே.

------------------------------------------------------------------------------------------------------

ஓரியின் கொல்லிமலைப் பாவையின் சாயலில்

பேரழகு கொண்டே குடவரைச் சிற்பம்போல்

தேரழகு ஏந்திவரும் ஏந்திழைச் சித்திரம்!

 ஊரக கொல்லிமலைக் காந்தள் வனத்திலே

நீரருவி சார்ந்த நிலத்திலே நெல்விதைத்தே

சீராய் அறுவடை செய்வார்கள் மக்களங்கே!

பாரில் பசியாலே வாடும் நிலைவந்தால்

யானைகளின்  தந்தத்தை விற்றுதான் உண்பாராம்.

தேனக வாழ்விது செப்பு.

0 Comments:

Post a Comment

<< Home