குறுந்தொகை 99
குறுந்தொகை
என்ன செய்வேன்?
பாடல் 99
பாடலாசிரியர்: ஔவையார்
உள்ளினென் அல்லனோ யானே உள்ளி
நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து
மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்துணச் சென்றற் றாஅங்கு
அனைப்பெருங் காமம் மீண்டுகடைக் கொளவே.
------------------------------------------------------------------------------------------------------
பழைய நினைவுகளை எண்ணித்தான் பார்த்தேன்!
அலையலையாய்த் தூண்ட
வியந்தேன் நினைந்து!
உலகின் இயல்பிதுதான்
என்றே அமைதியுற்றேன்!
மராமரத்தின் தாழ்ந்த கிளைகளைத் தொட்டே
அளாவிய வெள்ளமோ
பாய்ந்துசெல்தல் போல
அளவின்றி ஏக்க உணர்ச்சிப்
பரவி
நலங்கெட என்செய்வேன்? நானோ கடமைக்
களத்திலே ஈடுபட்டேன் இங்கு.

0 Comments:
Post a Comment
<< Home