Sunday, March 29, 2026

குறுந்தொகை 91

 குறுந்தொகை

பாடல் 91  கற்பறம்

பாடலாசிரியர்:ஔவையார்


அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி

குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம்

தண்டுறை ஊரன் பெண்டினை யாயிற்

பலவா குகநின் நெஞ்சிற் படரே

ஓவா தீயு மாரி வண்கைக்

கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி

கொன்முனை இரவூர் போலச்

சிலவா குகநீ துஞ்சு நாளே.

---------------------------------------------------------------------------------------------------

பிரப்பங் கொடியின் கனியைக் குளமீன்

விருப்புடன் பற்றியுண்ணும் நீர்த்துறை ஊரில்

செழுப்பமுடன் வாழும் தலைவன் மனைவி

அருமைத் தலைவியே கற்பறத் தோடே

இருக்கின்றாய்! வேறுபட்டால் மீண்டும் தலைவன்

இருமனப் பெண்டிரை நாடுவான்! உன்னை

இருள்போல் துயரமே பலவாறாய்ச் சூழும்!

கருநிற யானைப் படையுடன் தேரும்

இருக்கும் அதியமான் அஞ்சியை எண்ணி

இரவூரில் தூக்கமின்றி உள்ளாரைப் போல

இரவுறக்கம் இன்றித் தவிக்கின்ற நாள்கள்

தலைவி உனக்குந்தான் உண்டு.


0 Comments:

Post a Comment

<< Home