குறுந்தொகை 88
குறுந்தொகை
நாணமாட்டேன்!
பாடல் 88
தலைவி்தோழியிடம்
பாடலாசிரியர் :
மதுரைக் கதக்கண்ணனார்
ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன்
சிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
தொல்முரண் சோருந் துன்னருஞ் சாரல்
நடுநாள் வருதலும் வரூஉம்
வடுநா ணலமே தோழி நாமே.
-----------------------------------------------------------------------------------------
வெள்ளருவி வீழ்கின்ற நாடன் தலைவன்தான்!
துள்ளும் புலியோ களிறொன்றைத் தாக்குவதால்
வல்லமை தேய்ந்தேதான் சோர்வுற்றே நின்றிருக்கும்!
அவ்வழியே நம்தலைவன் நாடி வருகின்றான்!
நள்ளிரவு நேரம்! பயப்படாமல் தேடிவந்து
நல்லின்பம் ஈவான்! பழிநமக்கு வந்தாலும்
எள்ளளவும் நாணமாட்டேன் நான்.

0 Comments:
Post a Comment
<< Home