Sunday, March 29, 2026

குறுந்தொகை 56

 குறுந்தொகை 56

தலைவனின் அக்கறை

பாடலாசிரியர்: 

சிறைக்குடி ஆந்தையார்


வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்

குளவி மொய்த்த அழுகற் சின்னீர்

வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்

வருகதில் அம்ம தானே

அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே.

------------------------------------------------------------------

அன்பரே! உங்கள் துணையாக நான்வருவேன்!

என்னை அனுமதிக்க வேண்டுகிறேன் என்றவளை

அன்பரசி வந்தால் அனுபவிக்கும் வெங்கொடுமை

எண்ணுகின்றான்! காட்டிலே செந்நாய்கள் உண்டபின்

மிஞ்சியதை கூட்டுக் குளவிகள் மொய்த்து

விண்டு கிடக்கும் இறைச்சி மிதந்துவரும்

தண்ணீர் பருகவேண்டும் கைவளைக் காரிகை!

என்நெஞ்சம் தாங்குமா? நன்றே! வரவில்லை!

அன்பனின் அக்கறை பார்

பூஅளவு பிரிவையும் வெறுக்கின்றேன்!

0 Comments:

Post a Comment

<< Home