Sunday, March 29, 2026

குறித்தொகை 36-38

 குறுந்தொகை 36-38

பாடல் 36

எழுத்தாளர்: பரணர்


துறுகல் அயலது மாணை மாக்கொடி

துஞ்சுகளிறு இவரும் குன்ற நாடன்,

நெஞ்சுகளன் ஆ,க 'நீயலென் யான்,என

நற்றோள் மணந்த ஞான்றை மற்று- அவன்

தாவா வஞ்சினம் உரைத்தது,

நோயோ தோழி!நின்வயி னானே?

------------------------------------------------------------------------------------------------

தோழி! மாணைப் பசுங்கொடி தான்படர்ந்து

தாவும் உருண்டைக்கல் மீது படராமல்

தூங்கும் களிற்றையே கல்லென்றே எண்ணித்தான்

பாங்காய்ப் படர்கின்ற குன்றநாடன் நம்தலைவன்!

ஆங்கே நெஞ்சறிய "உன்னைப் பிரியமாட்டேன்!"

சூளுரைத்துக் கூறி இதுவரை காணவில்லை!

தோள்களுக்கு நோய்தந்தான் அந்தோ! இருவருக்கும்!

நோயில் துடிக்கின்றோம் பார்.



 தூண்டுகின்ற அன்பு


பாடியவர் :பாலை பாடிய பெருங்கடுக்கோ


பாடல் 37


நசைபெரிது உடையர் நல்கலும் நல்குவர்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின தோழி அவர் சென்ற ஆறே.

-----------------------------------------------------------

தோழி! தலைவரின் அன்போ மிகப்பெரிது! 

கானகத்தில் செல்கின்ற நேரத்தில் பெண்யானை

ஊன்பசியைப் போக்க  துதிக்கைகொண்டே வேகமாக்

ஆண்யானை மாமரத்தின் பூங்கிளைப் பட்டையை

ஆங்கே உரித்தேதான்

அன்பை வெளிப்படுத்தும்!

காண்பார்! உடனே பெருவிருப்பு கொண்டேதான்

காண வருவார் விரைந்தேதான்! பாரம்மா!

தேனின்ப ஊஞ்சலாடும் பார்.

------------------------------------------------------------

 எல்லாம் நன்மைக்கே! 


பாடியவர்: கபிலர்


பாடல்  38


கான மஞ்ஞை அறையீன் முட்டை

வெயில்ஆடு முசுவின் குருளை உருட்டும்

குன்ற நாடன் கேண்மை என்றும்

நன்றுமன் வாழி தோழி உண்கண்

நீரொடு ராங்குத் தணப்ப

உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.

----------------------------------------------------------------------------------------

தலைவியே! உன்னைப் பிரிந்தவரை எண்ணிக்

கலங்காதே! கானகப் பாறையிலே மஞ்ஞை

உலர்முட்டை தன்னைக் கருங்குரங்குக் குட்டியோ

பரபர  வென்றே உருட்டி ஆடும்

மலைநாடன் நம்தலைவன்  நன்மைதான் மாதே!

அலைபாயும் கண்களோ நீரைப் பெருக்க

கலைந்தே பிரிந்த பிரிவை நினைத்து

குலையாமல் உள்ளவர்க்கே நன்மையாம் தோழி! 

உளைச்சலில் ஏங்குகிறேன் நான்.

0 Comments:

Post a Comment

<< Home