Saturday, March 28, 2026

குறுந்தொகை 25

 குறுந்தொகை

பாடல் 25

பாடியவர் கபிலர்

 

யாரும் இல்லைத் தானே கள்வன்

தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால

ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்

குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.

--------------------------------------------------------------------

அன்பான தோழி! தலைவன் களவொழுக்கம்

கொண்டான்! இன்புற்றோம்!ஆனாலும் சாட்சியாக

அங்கே அவன்மட்டும்  இருந்தான்!

விரைந்துவந்து 

என்னை மணம்புரிவேன் என்றான்!

புரியவில்லை 

என்றாலோ நானென்ன  செய்வேன்?

ஏதுசெய்வேன்?

அந்தத் தினைப்பயிரின் தாள்போலக் காட்சியுடன்

நின்றிருக்கும் கால்கொண்ட நாரையோ

நீர்நிலையில் 

அங்குவரும் ஆரல்மீன் தன்னையே

உண்பதற்கு

கண்களால் பார்த்துப் பொறுமையாய்க் காத்திருந்த

அந்நிலைபோல் நின்றே அவர்வரவை எண்ணியெண்ணி

நெஞ்சம் கலங்குவ தேன்?

------------------------------------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home