குறுந்தொகை 23
குறுந்தொகை
பாடல் 23
பாடியவர் அவ்வையார்
அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக்கோப்பு அன்ன நல்நெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே;
இன்னும் பாடுக;பாட்டே-அவர்
நல்நெடுங் குன்றம் பாடிய பாட்டே.- .
தலைவியிடம் மாற்றம்! உறவினர் கண்டார்!
அழைத்தார் அகவன் மகளை! குறிகேட்டார்!
அவளும் இசைப்பாடல் பாடத் தொடங்கினாள்!
தலைவியின் தோழி அவளைத்
தொடர்ந்து
பலவாறாய் குன்றத்தை வைத்துப் பாடு!
நலமுடன் பாடென்றாள்! நாயகன்
குன்றம்
வளம்பாட நாயகனே இத்தலைவி நெஞ்சில்
நிலைகொண்டான் என்றே உணரட்டும் மக்கள்!
சளைக்காமல் பாடென்றாள் பார்த்து.

0 Comments:
Post a Comment
<< Home