குறுந்தொகை 18
குறுந்தொகை
பாடல் 18
பாடியவர்: கபிலர்
வேரல் வேலி வேர்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார்அஃது அறிந்திசி னோரே? -- சாரல்
சிறுகோட்னுப் பெரும்பழம் தூங்கு யாங்குஇவள்
உயிர்தவச் சிறிது; காமமோ பெரிதே.
------------------------------------------------------------------------------------------
களவொழுக்கம் போற்றும்
தலைவனே!
மூங்கிலை வேலியாகக்
கொண்டு
வேரில் குலைகள் கொண்ட
பலாமரங்கள் செழித்த
மலைச்சாரல் நாடனே!
கொம்பில் பற்றுக்கோடின்றி
பலாக்கனி தொங்குதல் போல
தலைவியின் உயிர்
மெலிந்த தன்மையுடையது!
அவளது காம உணர்வோ பெரியது!
சுமை தாங்காமல் உயிர்க்கொம்பு
முறியும் நேரத்தை யாரறிவார்?
நீ விரைவில் வந்து
மணந்துகொள்!

0 Comments:
Post a Comment
<< Home