குறுந்தொகை 11
குறுந்தொகை
பாடல்: 11
பாடியவர் :மாமூலனார்
தலைவி கூற்று
கோடுஈர் இலங்கு வளைநெகிழ நாடொறும்
பாடுஇல கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்குஇவண் உறைதலும் உய்குவம் ;ஆங்கே
எழுஇனி வாழி,என் னெஞ்சே! முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நல்நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே!
-----------------------------------------------------------------
நெஞ்சமே! என்னவர் கட்டியெனும் வேல்வீரன்
அங்கே வடுகருடன் போரிடும் நாட்டிற்குச்
சென்றுளான்! நாட்டின் மொழியும் தெரியாது!
அந்தநாட்டுப் போரோ முடிவடைய வேண்டுமென்றே
என்நெஞ்சே! நீயோ வழிபடு! சங்கறுத்துக்
கண்கவர செய்த வளையல் கழன்றுவிழ
முன்வந்தே நிற்கிறது! கண்களும் தூங்கவில்லை!
எண்ணிப் புலம்பவேண்டாம்! இன்றே புறப்படு!
அந்தநாட்டை நன்றாய் வழிபடு! துன்பங்கள்
உன்னை நெருங்கா துணர்
-----------------------------------------------------------------

0 Comments:
Post a Comment
<< Home