Saturday, March 28, 2026

குறுந்தொகை 10

 

குறுந்தொகை

பாடல்: 10  

பாடியவர்ஓரம்போகியார்

தோழி கூற்று.


யாய் ஆகியளே விழவுமுத லாட்டி;

பயறுபோல் இதர பைந்தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழம்பூ மென்சினைக் 

காஞ்சி ஊரன் கொடுமை

கரந்தனள் ஆகலின்,நாணிய வருமே!

---------------------------------------------------------------------------------------

மனமாசு கொண்டவளை நீங்கித் தலைவன்

மனையாளை நோக்கி மனைக்குள்ளே வந்தான்!

இணக்கத் தோழியோ காஞ்சிமரம் கொண்டு

வணங்குகின்ற ஊருந்தன் ஊராகும் !அன்றோ

மணவிழா தன்னைத் தலைவியுடன் கண்டாய்!

 மனைவியோ பண்புடன்  உன்கொடுமை தன்னை

மனதில் புதைத்தாள்! பெருந்தன்மை கொண்டாள்!

 இணையற்ற  காஞ்சிமரப் பூக்களின் தாதோ

தினமும்  உழவர் தலைமீது கொட்டும்!

மனஅன்பை நீயோ தலைவியிடம் கொட்டு!

மனமுவந்தே ஏற்பதால் தாயானாள் பண்பில்!

 மனமாசை நீக்கிடுவாய் நீ.



 

0 Comments:

Post a Comment

<< Home