குறுந்தொகை 13
குறுந்தொகை 13
பாடல்: 13 (மாசறக்)தொகு
பாடியவர்:கபிலர்
மாசு அறக்கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே- தோழி!
பசலை ஆர்ந்தன குவளைஅம் கண்ணே.
----------------------------------------------------------------------------------------------
தோழி!
குளித்தக் களிப்பில் இருக்கும்
யானைகள் அடுத்தடுத்துப்
படுத்திருப்பதைப்போல
மழையில் நனைந்த மலைப்பாறையில்
பைதல் நடைபோடும் மான்கள்
நடமாடும் ஊரே என் தலைவன் ஊர்!
என்னருகில் அவனிருந்தான்!
கொஞ்சுமொழி பேசி
சிலிர்க்கவைத்தான்!
இன்றோ ஏங்கவைத்துப் பிரிந்து
சென்றுவிட்டான்!
கொஞ்சுமொழி பேசியவனைப் பார்க்க
குவளை மலர்போன்ற என் கண்கள்
இங்குமங்கும் அவனைத் தேடிக்
கெஞ்சுகின்றன!
கண்ணீரை அருவியெனக் கொட்டுகின்றன! பாவம்!

0 Comments:
Post a Comment
<< Home