குறுந்தொகை 12
குறுந்தொகை
பாடல்: 12
பாடியவர்ஓதலாந்தையார்
பாலை - தலைவி கூற்று
எறும்பி அளையின் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறிக் கொடுவில் எயினர்,பகழி மாய்க்கும்
கவலைத்து அவலம் கவள்ளாது,
நொதுமல் கழறும்இவ் அழுங்கல் ஊரே!
--------------------------------------------------------------------------------
தோழியே! என்தலைவன் விட்டுப் பிரிந்ததில்
ஆவி துடிக்கின்றேன் என்றே நினைக்கின்றார்!
ஈவிரக்க மற்ற வழிக்கொடுமை யெல்லாம்
ஊரிலே பேசுவதை எண்ணிக் கலங்குகிறேன்!
தோழி! கறையானின் புற்றைப்போல் ஆழமுள்ள
பாறைச் சுனைகள் இருக்குமாம்! கொல்லர்கள்
வேலை புரியும் உலையில் இரும்படிக்கத்
தாங்கும் பணைக்கல்லைப் போன்றிருக்கும் பாறைமேல்
ஏறி எயினர் கொடியவில் அம்பெய்யும்
கோடி மலைப்பிளவு உண்டாம்! சுனையிலே
ஈடில்லா என்தலைவன் வீழ்வாரோ! அம்புகள்
தேடிவந்து தைத்திடுமோ! என்றே கவலைகள்
கூடிவந்து சூழுதடி கேள்!

0 Comments:
Post a Comment
<< Home