Saturday, March 28, 2026

குறுந்தொகை 15

குறுந்தொகை

 பாடல் 15

பாடியவர் ஔவையார்


பறை படப், பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு

தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய

நால் ஊர்க் கோசர் நல் மொழி போல,

வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல்

சேயிலை வெள் வேல் விடலையொடு

தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

--------------------------------------------------------------------

அருமைத் தலைவியே! தலைவனோ வீரன்!

கழலணிந்து வெண்ணிற வேலேந்தி செல்ல

அவளோ வளையல் அணிந்த மடந்தை!

இவர்களின் கண்கள் கலந்தன! நட்பு

மலர்ந்ததே உள்ளத்தில்!  ஊரார்கள் எல்லாம்

அலர்தனை, கோசர் குலத்தார் நாலூர்

விரைந்தே பறையடித்து மன்னனுக்குத் தண்டம்

வசூலிக்க சங்கொலி கூவுதல்போல், ஆல

மரத்தடியில் நாலுபேர் பேசுகின்றார் பாராய்!

உவர்ப்புக்காய் கனிந்துவிட்டால் நன்று.

0 Comments:

Post a Comment

<< Home