Saturday, March 28, 2026

குறுந்தொகை 14

 குறுந்தொகை

பாடல்: 14 

பாடியவர் தொல்கபிலர்


அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த

வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப்

பெறுகதில் லம்ம யானே பெற்றாங்க

றிகதில் லம்மவிவ் வூரே மறுகில்

நல்லோள் கணவ னிவனெனப்

பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே. 

----------------------------------------------------------------------------------------


தோழியே!

தலைவியின் இதழ்களோ அமுதப் பூ!

அவளது நா செம்மை படைத்தது!

மெய் கலந்த சின்ன சொற்களைப்

பேசும்!

பேசும்பொழுது வரிசையான

பற்கள் தெரியும்!

அவளுடன் ஒருநாள் இருந்தேன்! 

மீண்டும் சந்திக்க வைப்பாயா தோழி?

தலைவனே முடியாது!

என்றே மறுக்கின்றாள்!

சரி! வேறு வழியே இல்லை!

பனைமட்டை மடல்மேல் ஏறி

உன் ஊருக்கே வருவேன்!

அனைவரும் சாடையாகப் 

பேசுவார்!

எனக்கே நாணம்வரும்!

உங்கள் நிலையை சிந்தித்துக் கொள்ளுங்கள்!

0 Comments:

Post a Comment

<< Home