குறுந்தொகை 17
குறுந்தொகை
பாடல் 17
பாடலாசிரியர்
பேரெயின் முறுவலார்
மாஎன மடலும் ஊர்ப்ப;பூஎனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப -காமம் காழ்க் கொளினே.
--------------------------------------------------------------------------------------------
தோழியே!
அகத்தில் ஊற்றெடுக்கும்
அன்புக் காதலைத்
தலைவியிடம் எடுத்துச்சொல்வாயா?
மறுக்காதே! மறுத்தால்
காதல்வலையில்
சிக்கியவர்கள்
பனைமடலில் குதிரைசெய்து
மடலூர்வார்களாம்!
குவிந்த மொட்டுக்களுடைய
எருக்கமலர் மாலையைத்
தலையில் அணிந்துகொள்வார்களாம்!
அதைப்பார்த்து
தெருவில் போவோர் வருவோர்
கேலிசெய்வார்களாம்!
மனம்நொந்து
வரைபாய்தல் எனும்
முயற்சியில் சாவதற்கும் துணிந்திடுவார்களாம்!
இவற்றிற்கெல்லாம்
நானும் சளைத்தவனல்ல!
நானும் முற்படுவேன் என்றே
சொல்வாயா தோழி?

0 Comments:
Post a Comment
<< Home