குறுந்தொகை 16
குறுந்தொகை
பாடல் 16
பாடியவர் சேர மன்னன் பாலை பாடிய பெருங்கடுங்கோ –
உள்ளார் கொல்லோ தோழி, கள்வர்
பொன் புனை பகழி செப்பம் கொண்மார்
உகிர் நுதி புரட்டும் ஓசை போலச்
செங்கால் பல்லி தன் துணை பயிரும்,
அம் கால் கள்ளியங் காடு இறந்தோரே?
---------------------------------------------------------------------------------------------
தலைவியே!
தலைவர் உன்னை நினைப்பாரோ!
இரும்பினால் செய்த அம்புகளின்
கூர் முனையை
கள்வர்கள் தங்கள்
நகமுனையால் உரசும்பொழுது
உண்டாகும் ஓசையைப்போல
பல்லி
தன் துணையை அழைக்கும்
ஒலியெழுப்பும்
கள்ளிச்செடி நிறைந்த
காட்டுவழி சென்ற தலைவர்
உன்னை நினைப்பாரோ?
நாணாமல் சொல்!

0 Comments:
Post a Comment
<< Home