குறுந்தொகை 22
குறுந்தொகை
பாடல் 22
பாடியவர்: சேரமான் எந்தை
நீர்வார் கண்ணை நீ இவண் ஒழிய
யாரோ பிரிகிற் பவரே?-சாரற்
சிலம்பு அணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனில் அம்சினை கமழும்
ஊர் ஒண்ணுதல்!நின்னொடும், செலவே.
--------------------------------------------------------------------
தலைவன் பிரிந்துசெல்ல எண்ணும் கருத்தை
தலைவி குறிப்பால் அறிந்து தவிக்க
தலைவியைத் தோழி தேற்றுகிறாள தலைவி!
அவருன்னை நீங்கியதும் உன்கண்கள்
அருவிப்
பெருக்காக கொட்டும்!தலைவர் அறிவார்!
மலைப்புறம் வளங்கொழித் தாடுகின்ற வண்ணம்
வலப்புறம் காட்டில் வதங்கிய கடம்ப மரத்தின் அழகிய கொம்புகளைப் போல
மணங்கமழும் வண்டுகள் சுற்றிவரும்
உந்தன்
அழகான நெற்றியைப் பார்த்த தலைவர்!
உளம்விரும்பி உன்னைப் பிரிவாரோ
இங்கு?
கலங்கித் தவிக்கா திரு.

0 Comments:
Post a Comment
<< Home