Saturday, March 28, 2026

குறுந்தொகை 20

 குறுந்தொகை

பாடல் 20

பாடியவர்  கோப்பெருஞ்சோழன்


அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து,

பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,

உரவோர் உரவோர் ஆக!

மடவம் ஆக,மடந்தை,நாமோ!

------------------------------------------------------------------------------------------------------

தோழி!

இரக்கம் சுரந்துவரும் எனது

அருளையும்

எலும்பையும் உருக்கும் உயிர்நிகர்

அன்பையும் நினையாது

ஏங்கவிட்டுப்

பொருள்நிமித்தம்

பிரிந்து செல்வதே அறிவுடைமை

என்றால் அறிவுடையவர் ஆகட்டும்.

பிரிவுத்துயரில் துடிக்கும் நானோ

அறிவற்றவள் என்றால்

அப்படியே ஆகட்டும்!


.

0 Comments:

Post a Comment

<< Home