Saturday, March 28, 2026

குறுந்தொகை 19

 குறுந்தொகை 

பாடல் 19

பாடியவர் பரணர்


எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்

பூவில் வறுந்தலை போலப் புல்லென்

றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்

தெல்லுறு மௌவல் நாறும்

பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.

-------------------------------------------------------------------------------

அருமை மனமே!

மனையில் மலர்ந்து மணம்பரப்பும்

ஒளிவீசும் முல்லைப்பூ

அணிசெய்யும்  கூந்தல்மணக்கும்

தலைவி மாறுபட்டு நடக்கின்றாள்!

மூன்றாம் மனிதிபோல

 கண்டும் காணாதவளாக

இருக்கின்றாள்!

எவ்வி என்ற வள்ளல்

வறுமையில் சிக்கியதால் 

யாழ்ப்பாணரும் வறுமையுற்றார்!

சூடவேண்டிய பொற்பூ இல்லாமல்

அவர்களது கூந்தலும்

பொலிவிழந்ததைப் போல

நீயும் வருந்தித் துடிப்பாயாக.

0 Comments:

Post a Comment

<< Home