Saturday, March 28, 2026

குறுந்தொகை 24

 குறுந்தொகை

பாடல் 24  

பாடியவர் பரணர்


கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்

என்னை இன்றியும் கழிவது கொல்லோ?

ஆற்றுஅயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து

எழுகுளிறு  ஒருபழம் போலக்

குழைய, கொடியோர் நாவே,

காதலர் அகலக் கல்லென் றவ்வே.


வேம்பு மலர்ந்தது!கார்காலம் வந்தது!

வேப்பம்பூ தன்னைத் தலைவன் அணியாமல்

வேப்பமரம் அஃதை உதிர்ப்பதோ! மங்கையரின்

கூற்றொத்த நாவிங்கே

கூர்முனையாய் மாறிவிட

 ஆற்றோரம் அத்தியினை நண்டேழு பற்றித்தான்

போட்டுச் சிதைத்த பழம்போல நான்நலிந்தேன்!

வாட்டி வறுக்கின்றார் சொற்கணையால் அம்மம்மா!

ஈட்டிமுனை மேல்தான் போ.


0 Comments:

Post a Comment

<< Home